கா.ஒ.கா 4 – காமம் தாண்டி காதல்…

கா.ஒ.கா 04. அதையும் தாண்டி புனிதமானது…

இது காத்துவாக்குல ஒரு காதல் தொடர்கதையின் 4-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
KT வாங்குறதுக்காக போன இடத்தில் அர்ணாபை பார்த்த நான், கொல்கத்தாவில் இருக்கும் வரைக்கும், சும்மா ஜாலிக்காக casual sex என்று ஆரம்பித்த எங்கள் காம விளையாட்டு நாங்களே எதிர்பாராத விதமாக எங்களுக்குள் காதல் உணர்ச்சிகளை உசுப்பிவிடுகிறது. நான் அர்ணாபிடம் என் காதலை தெரிவிக்கிறேன். ஆனால் என்னை soulmate ஆக ஏற்றுக்கொண்டாலும், என் காதலை ஒத்துக்கொள்ள என் அர்ணாப் ஒரு நிபந்தனை விதிக்கிறான். நான் Openly Gay-ஆக come out செய்தால் மட்டுமே வாழ்க்கை முழுவதும் இணைந்து வாழமுடியும் என்று அர்ணாப் திட்டவட்டமாக சொல்லிவிடுகிறான். அவ்வளவு தைரியம் எனக்கு இல்லாததால் நான் என் செய்து என்று குழப்பத்தில் ஆழ்கிறேன். என்ன செய்ய போகிறேன்..?
I hate porn that starts off fucking... I need to know why they are fucking
சேரும் இடத்தை போல போகும் பயணமும் சுவாரசியமே...

கா.ஒ.கா 04. அதையும் தாண்டி புனிதமானது…
Click for large image
மங்கலான மஞ்சள் வெளிச்சம், பின்னணியில் jazz music உறுத்தாத அளவுக்கு மென்மையாக ஒலிக்க, விஷ்வா அந்த கூட்டமில்லாத Bar-ஐ சுற்றும் முற்றும் பார்த்தபடி “என்ன மச்சான்! விஷயம் ஏதோ பெருசா இருக்கு போல…” என்று சொன்னபோது நான் table-ல் என் mobile phone மற்றும் கார் சாவிக்கொத்தை வைத்துவிட்டு நிமிர்ந்தேன். விஷ்வா நக்கல் சிரிப்புடன் “இல்லை… தண்ணியடிக்கலாமான்னு கெஞ்சி கெஞ்சி கேட்டா கூட TASMAC-ல வாங்கி தெருவுல நின்னு குடிக்க வச்சு கணக்கு முடிச்சுடுவே… ஆனா இன்னைக்கு இப்படி High end Restaurant bar-க்கு கூட்டிட்டு வந்திருக்கேன்னா என்னவோ பெருசா அடிபோடுறேன்னு தோணுது… அதனால தான் கேட்டேன்” என்று தனது துப்பறியும் திறமைக்கு தானே சான்றிதழ் கொடுத்துக்கொண்டு பெருமையாக பார்த்தான். நான் வெட்கத்தோடு சிரித்தேன். அவன் கண்டுபிடிப்பும் சரி தான் என்பதை நான் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். எனக்கு சில நாட்களாக பசலை நோய் வந்து மசமசவென்று இருக்கிறேன்.

கா.ஒ.கா 04. அதையும் தாண்டி புனிதமானது…
Click for large image
எதுவும் பதில் சொல்லாமல் சுற்றி பார்த்து கையை உயர்த்த, அதற்காகவே காத்திருந்தது போல ஒரு இளைஞன் எங்கள் அருகே வந்து “Good evening sir…” என்று பணிவு காட்டினான். என்னை எதிர்பார்க்காமல் விஷ்வா தனக்கு தேவையானதை order செய்ய, அதை தொடர்ந்து நானும் எனது தேவைகளை சொன்னேன். அவன் போகும் முன்பு அவனிடம் எங்களை ஒரு 20 நிமிடங்களுக்கு தொந்தரவு செய்யவேண்டாம் என்றபோது அவன் அழகாக புன்னகைத்து தலையசைத்தான். அந்த அழகான சிரிப்பில் என் மனது சலனப்பட்டது உண்மையே. இதுவே மற்ற சமயமாக இருந்தால் நான் நிச்சயம் அவனிடம் mobile number கேட்டிருப்பேன் அல்லது வீட்டில் drop செய்வதாக சொல்லி pickup பண்ண முயற்சித்திருப்பேன். ஆனால் இன்று நான் வழக்கமான நானாக இல்லை. விஷ்வா தொண்டையை செருமி காட்ட, நான் மீண்டும் நிஜத்துக்கு வந்து அவனை நேரிட்டு பார்த்தேன்.

கா.ஒ.கா 04. அதையும் தாண்டி புனிதமானது…
Click for large image
“சொல்லு மச்சான்… ரொம்ப நேரம் உள்ளுக்குள்ளேயே வச்சு புழுங்காதே” விஷ்வா நேரடியாக விஷயத்துக்கு வந்தான். நான் என் புறங்கையை தாடைக்கு முட்டு கொடுத்து அவனை பார்த்தேன். எச்சில் முழிங்கியபடி “விஷ்வா! I think I am in love…” என்றேன். விஷ்வா பெரிதாக எதிர்வினை காட்டவில்லை. “அதுக்கென்னா மச்சி! வாழ்க்கையே காதலிக்கிறதுக்கு தானே? Glad that you are moving on… யார் அந்த அதிர்ஷ்டசாலி?” விஷ்வா நான் எதிர்பாராத விதமாக குஷியானான்.

“போன மாசம் கொல்கத்தாவுக்கு KT வாங்க போயிருந்தேன் இல்லை… அப்போ தான் முதல் தடவையா பார்த்தேன். அந்த 3 நாள்ல நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நெருங்கிட்டோம்…” நான் விஷ்வாவின் கண்ணை வெறித்து பார்த்தபடி உணர்ச்சியில்லாமல் சொன்னேன்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

கா.ஒ.கா 04. அதையும் தாண்டி புனிதமானது…
Click for large image
“யாருடா? பெங்காளி பொண்ணா இல்லை நம்ம ஊரா?” நான் பதில் சொல்லும் முன்பு “இந்த new generation-ல யாரு குலம் கோத்திரம் பாக்குறாங்க…” என்று சொல்லிவிட்டு மேலே கை நீட்டி என் விரல்களை பிடித்தான். “சொல்லு மச்சி! நான் எந்த வகையிலே help பண்ணனும்? உங்க அப்பா கிட்டே பேசனுமா?”

நான் கோபத்துடன் அவன் கையை உதறி தள்ளினேன். “என்னையும் உன்னை மாதிரின்னு நெனச்சியா விஷ்வா? நாம எவ்வளவு deep-ஆ லவ் பண்ணினோம். ஆனா சட்டுன்னு நீ gay-ங்குற விஷயத்தை மறைச்சு காயத்ரியை கல்யாணம் பண்ணிக்கிட்டு ஊருக்கு முன்னாடி straight மாதிரி நடிச்சிட்டு இருக்கே…. ஆனா என்னால என்னோட sexuality-ஐ மறைச்சிட்டு உன்னை மாதிரி போலி வாழ்க்கை வாழ முடியாது”. கோபத்தில் என் தாடை இறுக, என் பெருமூச்சு வேகமாகவும் சூடாகவும் வந்ததில் என் நெஞ்சு விம்மியது.

கா.ஒ.கா 04. அதையும் தாண்டி புனிதமானது…
Click for large image
“கார்த்தி! நீ இன்னுமா என்னை புரிஞ்சுக்கலை? என் வீட்டுல பெத்தவங்க தற்கொலை பண்ணிக்குவேன்னு என்னை corner பண்றப்போ நான் வேற என்ன முடிவு தான் எடுக்க முடியும்? இப்போ கூட நான் காயத்ரி கூட சந்தோஷமா இருக்கேன்னு நினைச்சிட்டு இருக்கியா? எவ்வளவு நாள் நடிக்கிறதுக்கு மூச்சு முட்டி புழுங்கி தினம் தினம் செத்துட்டு இருக்கேண்டா…” விஷ்வா கெஞ்சினான். நான் தயவு தாட்சன்யம் பார்க்காமல் “ஆனா கடைசி வரைக்கும் நம்ம லவ்வை உங்க வீட்டுல சொல்லவே இல்லை… சொல்லப்போனா அவங்க முடிவை நீ எதிர்க்குறதுகான எந்த முயற்சியையும் எடுக்கலை… அதை விட என்னை கழற்றிவிடுறது உனக்கு ரொம்ப ஈஸியா இருந்துச்சு…” என்று விஷ்வாவை விஷ வார்த்தைகளால் கீறினேன். ஆவேசத்தால் என் கண்ணின் ஓரத்தில் துளிர்த்த கண்ணீரை நாசூக்காக துடைத்தபடி “Leave it… நான் அர்ணாப்ன்னு ஒரு பெங்காலி பையனை பார்த்தேன்… சொல்லப்போனா கடைசி மூணு நாளும் we had lots of passionate sex… எங்க ரெண்டு பேர் மனசுலயும் அவ்வளவு ஆசை” என்று விஷ்வாவை பார்த்தேன்.

கா.ஒ.கா 04. அதையும் தாண்டி புனிதமானது…
Click for large image
“Sex is fine மச்சி… You are young, hot… நிறைய பசங்களோட attention கிடைக்கும். Also you are single and ready to mingle… ஆனா அதுக்காக flings-ஐ எல்லாம் love-ன்னு எடுத்துக்காதே… உங்களுக்குள்ளே இருக்குறது love-ன்னு எந்த அடிப்படையிலே முடிவு பண்ணினே? அவனை அடுத்து எப்போ பார்ப்பே? நம்ம கேஸ்ல நாம ரெண்டு பேரும் ஒரே office-ல இருந்தோம்… physically ஒன்னா ரொம்ப நேரம் செலவழிச்சோம்… initial attraction-க்கு பிறகு casual sex-ஐயும் தாண்டி நல்ல friends ஆனோம்… நாம கூட முதல்ல நம்மளோட sex-ஐ serious-ஆ எடுத்துக்கலை… இதெல்லாம் வெறும் fun-ன்னு தான் நினைச்சோம்… அப்புறம் eventually it developed into a beautiful relationship… நம்மளோட first sex-க்கும் நீ “நாம எங்கேயாச்சும் வெளிநாட்டுக்கு போய் கல்யாணம் பண்ணிகலாமான்னு” கேட்டதுக்கும் நடுவுல கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் ஓடிப்போயிருந்துச்சு…” விஷ்வா பேச பேச, நான் கோபத்துடன் “அப்படி இருந்தும் உன் வீட்டுல நீ எனக்காக பேசலை விஷ்வா” என்று அவனை துண்டித்தேன்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

கல்யாணம் ஆன மற்றும் boyfriend இருக்கும் / உறவில் இருக்கும் Gay ஆண்களே - நீங்கள் உங்கள் partner தவிர மற்றொருவருடன் casual sex- ல் ஈடுபடும்போது குற்ற உணர்ச்சி தோன்றுமா?

View Results

Loading ... Loading ...

கா.ஒ.கா 04. அதையும் தாண்டி புனிதமானது…
Click for large image
விஷ்வா “Thats what I mean exactly…. Develop ஆக ஒன்னரை வருஷம் எடுத்துக்கிட்ட நம்ம relationship-ஏ வேலைக்கு ஆகலை. ஆனா ஒரு நாலு நாள் உன் கூட படுத்தவன்… சாரி! இருந்தவன் அதை serious relationship-ஆ எடுத்துக்குவானா? அதுவுமில்லாம அவன் கொல்கத்தாவுல இருக்கான்னும் சொல்றே… உங்களுக்கு நடுவுல Long distance relationship எல்லாம் work ஆகுமா?அவனை பார்க்கனும்னா ஒவ்வொரு தடவையும் கொல்கட்டா போவியா? இல்லை அவன் தான் இங்கே வருவானா? அப்படியே இருந்தாலும் எத்தனை நாளுக்கு? ஒரு கட்டத்துக்கு மேலே இந்த travel-ஏ அலுப்பா இருக்கும். உலகத்துக்கு முன்னாடி நான் உன்னை love பண்றதா சொல்ல முடியலைன்னாலும், deep down I genuinely care for you. உனக்கும் அது தெரியும்” விஷ்வா மீண்டும் என் கையை பற்றினான். இம்முறை நான் அவன் கையை உதறவில்லை. அங்கே நிலவிய நீண்ட மௌனத்தை அந்த அழகான bearer பையன் கொண்டு வந்த வந்து வைத்த glasses சரசரப்பு கலைத்தது.

நாங்கள் எங்கள் சீட்களில் சரிந்து உட்கார, அவன் தட்டை எடுத்துக்கொண்டு “If you need anything let me know” என்று சிரித்தான். அந்த சிரிப்புக்கே அவனை இழுத்து கிஸ்ஸடிக்கவேண்டும் போல தோன்றிய ஆர்வத்தை அடக்கிக்கொண்டு “Thanks… nothing for now” என்று சொன்னேன். “Alright! Enjoy your drinks” என்று அவன் நகர, நான் அவனை sight அடிப்பதை விஷ்வா புருவத்தை அசைத்து தெரிவித்தான்.

கா.ஒ.கா 04. அதையும் தாண்டி புனிதமானது…
Click for large image
விஷ்வா “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் நீ love-ல விழுந்துட்டதா சொன்னே… இப்போ அப்பட்டமா அந்த பையனை sight அடிக்கிறே… மச்சி! இதெல்லாம் just ஒரு phase தான். Go out and date someone… இல்லைன்னா have some mindless sex to clear up that guy’s memories… சிலரோட sex performances செம்மையா இருந்துச்சுன்னா அவங்களோட தாக்கம் கொஞ்ச நாள் இருக்குறது சகஜம் தான். அடுத்த partner bed-ல செம்மையா perform பண்ணும்போது முன்னாடி கிறங்க அடிச்சவங்களோட effect மெல்ல மெல்ல வலுவிழந்து, அவங்க நினைவுகள்ல இருந்து காணாம போயிடுவாங்க… அவ்வளவு தான்!” என்று சொன்னபோது அவன் கன்னத்தில் கொஞ்சம் பலமாகவே அறைந்தேன்.

நான் வேகமான, சத்தமான பெருமூச்சுடன் “You haven’t got me…” ஒரு இடைவெளி விட்டு “still…” என்று லேசாக இரைந்தபோது, விஷ்வா எங்களை யாராவது கவனித்தார்களா என்ற மிரட்சியுடன் சுற்றும் முற்றும் பார்த்தான். கோபம் மற்றும் பதற்றத்தில் நான் இன்னும் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top