Sublet (2020) – மனசுக்குள் குடி புகுந்து…

Sublet (2020) – மனசுக்குள் குடி புகுந்து…

தலைப்பு Sublet
மொழி English
வெளியான வருடம் 2020
வகை Feature film
எங்கு பார்க்கலாம்? Netflix
இலவசமாக பார்க்கலாமா? இல்லை
நடிகர்கள் John Benjamin Hickey (Michael), Niv Nissim (Tomer), Peter Spears (David), Miki Kam (Tomer's mother)
இயக்குனர் Eytan Fox
கதைச்சுருக்கம்

முற்றிலும் எதிர் எதிர் அலைவரிசையை கொண்ட இரு ஆண்கள், முதலில் கருத்து மோதலில் தொடங்கி பின்னர் நட்பில் முடிவது என்பது நமக்கு புதிது அல்ல. அன்பே சிவம் முதல் மெய்யழகன் வரை நாம் இது போன்ற கதைகளை பார்த்திருக்கிறோம். ஆனால் அவர்கள் எந்த விஷயத்தில் மாறுபடுகிறார்கள், எந்த புள்ளியில் இணைகிறார்கள் என்பது தான் அந்த கதையை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது. “அன்பே சிவம்”-ல் materialistic அன்பரசு, அன்பை மட்டும் நம்பும் நல்லசிவத்தை சந்தித்த பிறகு அவனது எண்ணப்போக்கில் ஏற்படும் மாற்றமும், மெய்யழகனில் சொந்தங்களை வெறுக்கும் அருள்மொழி, அனைவரையும் நேசிக்கும் மெய்யழகனை சந்தித்த பிறகு ஏற்படும் மாற்றமும் இதன் உதாரணங்கள். அப்படிப்பட்ட ஒரு இரு துருவங்கள் சந்தித்து உரையாடும் அனுபவமாக “Sublet” என்னும் Israeli படம் அமைந்துள்ளது.

இஸ்ரேலின் Tel Aviv நகரத்துக்கு வரும் ஓரினச்சேர்க்கையாளரான Columnist மைக்கேல் AirBnB மூலம் அங்கு வசிக்கும் தோமரின் வீட்டை Sublet-க்கு (உள்வாடகை) எடுக்கிறார். இருவரிடையே முதலில் Check-in தேதி குழப்பம் காரணமாக ஏற்படும் முரண்பாடு, தோமருக்கு மைக்கேல் தரும் வாடகையின் அவசியத்தை உணர்ந்து அவர் விட்டுக்கொடுப்பதன் மூலம் சரி செய்யப்படுகிறது. தோமர் மைக்கேலை அனைத்து சுற்றுலா பயணிகளும் போகும் cliched tourist spot-ளை தவிர்த்து புது இடங்களுக்கு அழைத்து சென்று மைக்கேலின் பயணத்தை அழகாக்குகிறான். தான் வாடகைக்கு இருக்கும் நாட்களில் எல்லாம் தோமர் வெளியே பூங்காவில் தூங்குகிறான் என்பதை அறிந்த மைக்கேல், அவன் தனக்கு guide-ஆக வேலை செய்வதற்கு பதிலுதவியாக அவன் அவருடனேயே தங்கிக்கொள்ள அனுமதிக்கிறார். இப்படியாக இருவரும் நெருங்கி பழகும் வாய்ப்பு உருவாகிறது.

இளமையும், கவர்ச்சியும் நிறைந்த தோமருக்கு monogamy எனப்படும் ஒற்றை துணையுடன் வாழ்வதில் நம்பிக்கை இல்லை. ஆனால் அதற்கு நேர்மாறாக வயது முதிர்ந்த மைக்கேல் தினம் இரவு தூங்கப்போகும் முன்பு தனது கணவரான டேவிட்டுடன் Skype video அழைப்பின் மூலம் பேசுகிறார். டேவிட்டுக்கும் மைக்கேலுக்கும் இடையே வாடகை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதில் ஒரு முரண்பாடு நிலவிக்கொண்டிருக்கிறது. தோமர் மைக்கேலின் “ஓய்ந்துப்போன” செக்ஸ் வாழ்க்கையை பற்றி கேலி செய்கிறான். அதற்கு மைக்கேல் செக்ஸை மட்டும் பிரதானப்படுத்தி, காதலிக்கும் / காதலிக்கப்படும் இனிமையை அவன் இழப்பதாக சுட்டிக்காட்டுகிறார். இரண்டு தலைமுறைகளுக்கு நடுவே இருக்கும் செக்ஸ் பிரதானத்தை குறித்த பார்வைகள் அழகாக விவாதிக்கப்படுகிறது.

அது போல தோமர் pizza order செய்துவிட்டு, கூடவே dating app-ல் ஒரு கட்டழகனை hookup sex-க்கு அழைக்கிறான். மைக்கேல் பார்க்கையில் அவர் முன்பு உடலுறவு கொண்டு, அவரையும் threesome-ல் இணையுமாறு அழைக்க, மைக்கேல் அதை நிராகரித்துவிட்டுகிறார். அடுத்த நாள் அறையை காலி செய்யும் மைக்கேலை தோமர் சமாதானம் செய்து தங்க வைக்கிறான். அன்று மாலை தோமர் மைக்கேலை கிராமத்தில் இருக்கும் தனது தாயை காண அழைத்து செல்கிறான். அங்கே ஒற்றை பெற்றோராக தோமரை விந்தணு தானம் மூலம் கருவுற்று வளர்த்துவதை சொல்கிறார். இறுக்கம் தளரும் மைக்கேலுக்கு தனக்கு தந்தையாவதில் இருக்கும் தயக்கத்தை உடைக்கிறார். மைக்கேலும், தோமரும் மீண்டும் Tel Aviv நகரத்துக்கு செல்கின்றனர். அடுத்த நாள் காலை மைக்கேல் மீண்டும் நியூயார்க் நகரத்துக்கு பறக்க தயாராகிறார்.

அதற்கு முன்பு அவர் “குரங்கு நாசம் செய்த பழத்தோட்டம்” போல இருக்கும் தோமரின் wardrobe-ஐ அழகாக அடுக்குகிறார். தோமரிடம் “chaotic வாழ்க்கையின் thrill போல organised வாழ்க்கையும் இனிமையானதே” என்று சொல்கிறார். இருவருக்கும் பிரியப்போகும் நெகிழ்ச்சி unplanned sex-ல் முடிகிறது. அடுத்த நாள் மைக்கேல் கிளம்பும்போது relationship-களில் நம்பிக்கை இல்லாத தோமர் அவரை கட்டிக்கொண்டு அழுகிறான். விமானத்தில் ஏறும் மைக்கேல் தன் கணவரிடம் தான் தந்தை ஆவதற்கு தயாராக இருப்பதாக செய்தி அனுப்புகிறார். தோமர் மற்றும் மைக்கேல் இருவரின் எண்ணங்களிலும், வாழ்க்கை குறித்த பார்வையிலும் இந்த பயணம் மாற்றத்தை ஏற்படுத்துவதாக படம் முடிகிறது.

படம் மைக்கேலின் பார்வையில் நகர்வதால், Tel Aviv-ஐ travelogue போல அழகாக காட்டுகிறது. வழக்கமான LGBT படங்கள் போல dark ஆக இல்லாமல் பார்க்கவும், ரசிக்கவும் மிக இனிமையாக feel good ஆக இருந்தது. என்னை போன்ற நடுத்தர வயது gay-க்களையும், இளவயது gay-க்களையும் ஒரு சேர கொண்டு வந்து ஓரினக்காதல் மற்றும் casual sex குறித்த அவர்களது பார்வைகளை விவாதிக்கும் நிகழ்ச்சி போல இரு தரப்பையும் ஈர்க்கிறது. அவர்களிடையே நடக்கும் உரையாடல்களும், organic-ஆக உருவாகும் நெருக்கமும் படம் நகர்வதை தெரியாமலே நாமும் மைக்கேல் மற்றும் தோமருடன் கலந்துவிடுகிறோம்.

படத்தில் மெல்லிய நகைச்சுவையும் உண்டு… தான் மைக்கேல் கண் முன்னால் வந்தவனுடன் செக்ஸ் வைத்துக்கொண்டதால் அசௌகரியமாக அவர் நகர்ந்துவிட்டதால், தோமர் மைக்கேலை சமாதானப்படுத்த அவருக்கு pasteries வாங்க செல்லும் காட்சி நம் முகத்தில் புன்னகையை வைக்கும். மைக்கேலும் தோமரும் ஆரம்பத்தில் பேசிக் கொள்ளும்போது “எங்கள் ஊரில் எது நல்ல pastery shop என்பதை கடல் கடந்து வரும் சுற்றுலா பயணி மூலம் தெரிந்துக்கொள்கிறோம்”… “நாங்கள் மத்திய கிழக்கு நாடாக இருந்தாலும், எங்களை மேற்கத்தியர்களாக காட்டிக்கொள்ள ஆங்கிலம் பேசுகிறோம்” போன்ற வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் நக்கல் ஆங்காங்கே தெளிக்கப்பட்டுள்ளது. தோமர் மைக்கேலை “தாத்தா தலைமுறை” என ஏகத்துக்கும் நக்கலடிப்பதும், அதற்கு மைக்கேல் பொறுமையாக பதில் சொல்வதும்…

இது போன்ற படங்களில் முதன்மை நடிகர்கள் / lead actors நடுவே தேவையான chemistry இல்லையென்றால் படம் படுத்துவிடும். இங்கே மைக்கேலாக வரும் ஜான் பெஞ்சமின் ஹிக்கியும், தோமராக நடித்திருக்கும் நிவ் நிஸ்ஸிமும் செம பொருத்தம். நிவ் நிஸிம் (Niv Nissim) போல அழகன் மீது யாருக்கு தான் காதல் வராது? அந்த அப்பாவி முகத்தை straight face-ஆக வைத்துக்கொண்டு black humour செய்வதென்ன, மெலிதான தேகத்தில் வெறும் ஜட்டியோடு நிற்கும்போது தெரியும் sex appeal என்ன… கடைசியில் தோமரும் மைக்கேலும் படுக்கையில் உதடுகள் கவ்வும்போது ஜிவ்வென்று இருந்தது. கடைசியில் விமான நிலையத்தில் தோமர் அழும்போது, மைக்கேல் அவனை இறுக்கமாக கட்டிப்பிடித்து சமாதானம் செய்யும்போது எனக்கு தொண்டை அடைத்தது.

இந்த படம் நான் முதல் தடவை பார்த்ததற்கு பிறகு, எனக்கு போரடித்தால் இந்த படத்தை போட்டுவிடுவேன். நேரம் போவதே தெரியாது. பலமுறை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் மைக்கேலும் தோமரும் என் உதட்டில் புன்னகையை ஒட்ட வைக்கிறார்கள். கண்ணில் கண்ணீர் கசிய வைக்கிறார்கள். அவர்கள் உடலுறவு கொள்ளும்போது கோபம் வரவில்லை. பிரியும் போது வருத்தம் இல்லை. அவர்கள் தங்களை புதுப்பித்துக் கொண்டது போல பார்க்கும் என்னையும் ஒவ்வொரு முறையும் புதுப்பிக்கிறார்கள்.

பி.கு: நிவ் நிஸ்ஸிம் நிஜ வாழ்க்கையிலும் ஒரு gay. அவன் legalised same sex marriage செய்து தன் கணவனுடன் வசித்து வருகிறான். பார்ப்பவர்கள் கண் திருஷ்டி படும் அளவுக்கு பாந்தமாக இருக்கிறார்கள். அவர்களது கல்யாண வீடியோ (https://www.instagram.com/reel/C_xxOBetsl-/?hl=en )


இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா?


* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 2026-02-28
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 4 Votes 1

Your page rank:

முன்னோட்டம்
YouTube video
விமர்சனம்
YouTube video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top