தொடர்கதைகள்

அ. அ 06 ஏடாகூட அன்பு

 1. அ.அ 01. அயலான் வருகை
 2. அ.அ 02 இவன் யாரோ…
 3. அ.அ 03 நல்லதா போச்சு… 🙂
 4. அ.அ 04. நூல் விட்டு பார்த்து…
 5. அ.அ 05. நூல் நுழைய ஊசி இடம் கொடுத்தது
 6. அ. அ 06 ஏடாகூட அன்பு
 7. அ. அ. 07 கடல் காற்றில் காதல் முத்தம்
 8. அ. ஆ 08 இருட்டு அறை, முரட்டு முத்தம்
 9. அ. அ 09 கிஸ்ஸடிக்க இப்படி களேபரமா?
 10. அ. அ 10 முழுசா முதல் தடவை
 11. அ.அ 11. Emoji வேணாம்… நேர்ல தான் வேணும்
 12. அ.அ 12. புறாவுக்கு அக்கப்போரா?
 13. அ. அ 13. நிலா அது வானத்து மேலே… பலானது பார்க் பெஞ்சுக்கு கீழே
 14. அ. அ 14 விண்ணை தாண்டி வருவாயா?
 15. அ. அ 15 “பள்ளி”ப்பாடம்
 16. அ. அ 16 நாம Bi இல்லை… Gays
 17. அ. அ 17 பழக்கணக்கு
 18. அ. அ 18 கன்னி கழித்தவன் கன்னி கழிந்தபோது…
 19. அ. அ 19 ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது
 20. அ.அ 20 அரிப்பெடுத்தா இப்படி தான்…
 21. அ. அ 21 Rebound Sex
 22. அ. அ 22 புதிய பறவை
 23. அ. அ 23 (ஓரினக்)காதலும் கற்று மற… (நிறைவு பகுதி)

முன்குறிப்பு: இது கிட்டத்தட்ட ஒரு சொந்தக்கதை. அதனால கொஞ்சம் personal-ஆ இருக்குறதால மத்த Gay கதைகள்ல வர்ற மாதிரி ஒவ்வொரு கதையிலேயும் / பகுதியிலேயும் sex நடக்கும்னு எதிர்பார்க்காதீங்க. அது மாதிரி அடிக்கடி இந்த தொடர்ல அடுத்தடுத்த அத்தியாயங்கள் வரும்னும் எதிர்பார்க்கவேண்டாம். என் வாழ்க்கையிலே ஏதாவது சுவாரசியமா நடந்தா அதை இதுல எழுதுறேன்.

ஆரம்பத்தில் அசோக் General shift வேலைக்கு சேர்ந்தது எனக்கு சந்தோஷம் கொடுத்த விஷயமாக இருந்தாலும் நாள்பட அது எனக்கு ஒரு வித அவஸ்தையாக மாறியது. அசோக்கும் தீபாவும் எங்கள் வீட்டில் நிறைய நேரம் செலவழித்தார்கள். எனக்கு அசோக் மீது வேறு விதமான ஈர்ப்பு இல்லாதிருந்தால் அவர்களது அருகாமை, சொந்தங்கள் சுற்றத்தார் இல்லமல் தனியாக இருக்கும் என்னை போன்ற வெளிநாட்டில் இருக்கும் குடும்பத்துக்கு, மிகவும் இதமாக இருக்கும். ஆனால் இந்த பாழா போன மனசு இப்படி ஏதாவது ஏடாகூடமாக காதல் வசப்பட்டு இடியாப்ப சிக்கலில் மாட்டிவிடுகிறது. அசோக் என் அருகில் இருக்கும்போதெல்லாம் ஒரு எட்டாக்கனியாக தோன்றினான். ஒருவேளை அவன் குடும்பஸ்தனாக இல்லாமல் இருந்தால் துணிந்து “ஏதாவது” செய்திருப்பேன். ஆனால் அவன் ஒரு சிறிய குழந்தைக்கு தகப்பனாகியுள்ள கிட்டத்தட்ட புது சம்சாரி. அவனும் என் மீது ஈர்க்கப்பட்டுள்ளான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெளிவாக இருந்தாலும் இது வயதுக்கு வந்த இரண்டு மனிதர்களின் முடிவு என்று அவனோடு இணைய முடியாததற்கு சமீபத்திய நிகழ்வு ஒன்றை உதாரணமாக சொல்லலாம்.

அ. அ 06 ஏடாகூட அன்பு
Sofa-வில் நீட்டி படுத்துக்கொண்டு YuppTV-யில் “நீயா நானா” பார்த்துக்கொண்டிருந்த நான் வாசலில் calling bell சத்தத்தை தொடர்ந்து கதவு திறக்கப்படும் சத்தமும் அதை தொடர்ந்து தீபாவின் கொஞ்சல் குரல் கேட்டதும் எழுந்து உட்கார்ந்தேன். தீபாவும் அசோக்கும் living room-க்கு வர, தீபா என்னை பார்த்து “ஹாய் அண்ணா… அக்கா எங்கே?” என்று கேட்டாள்.
.

... Slide-க்கு கீழே பதிவு தொடர்கிறது

ஜில் ஜில் படங்கள்

பதிவு தொடர்கிறது...

“உங்க அக்கா என்னவோ புது dish செய்யனும்னு காலையிலே இருந்து அந்த microwave oven கூட சண்டை போட்டுட்டு இருக்கா…” என்று சிரிக்க, அசோக் அமைதியாக என் பக்கத்தில் வந்து ஒரு அடி இடைவெளி விட்டு உட்கார்ந்தான்.

நான் அசோக்கை பார்த்து புன்னகைக்க, அவனும் பதில் புன்னகை புரிய, தீபா ஸ்வேதாவை அசோக்கின் மடியில் உட்கார வைத்துவிட்டு கிச்சனுக்கு நடந்தாள். அவள் கிச்சனுக்கு சென்றதும் அசோக் என்னை நெருங்கி என் தொடையோடு உரசியபடி அமர்ந்தான். ஸ்வேதா குட்டி அவன் தொடையில் உட்கார்ந்து அவள் கால்கள் என் தொடையில் போட்டுக்கொண்டு உட்கார்ந்துக்கொண்டாள்.

“என்ன கார்த்தி… நீயா நானா-வுல நீங்க யார் பக்கம்?” என்று பேச்சை ஆரம்பித்தான். நானும் மெல்ல மெல்ல தயக்கங்கள் நீங்க, இருவரிடையே ஒரு உரையாடல் போய்க்கொண்டிருந்தது.

அ. அ 06 ஏடாகூட அன்பு
தீபா கிச்சனில் இருந்து ஒரு சிறிய கரண்டியில் சுடச்சுட ஆவி பறக்க பாயசத்தை எடுத்து வந்து அசோக்கிடம் நீட்டி “அசோக்! இதுல இனிப்பு போதுமான்னு taste பண்ணி பார்த்து சொல்லேன்” என்று அவனிடம் நீட்டினாள். அசோக் ஸ்வேதா குட்டியை என்னிடம் மாற்றிவிட்டு அதை வாங்கி ஊதிவிட்டு உறிஞ்சினான்.
.

“இனிப்பு அளவா இருக்கு… இதுக்கு மேலே போட்டுடாதே” என்று தீபாவிடம் திருப்பி கொடுத்தான்.

தீபா அசோக்கை ஒரு மாதிரி பார்த்தபடி அவன் கொடுத்த கரண்டியில் இருந்த மீதி பாயசத்தை கொஞ்சம் சத்ததோடு உறிஞ்சி குடித்தாள். இதை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு தீபாவின் எண்ண ஓட்டம் தெளிவாக தெரிந்தது. நான் வேண்டுமென்றே ஸ்வேதாவை கொஞ்சுவதால் அதை கவனிக்காதது போல பாவ்லா பண்ண, தீபா அசோக்கின் தலையில் செல்லமாக தட்டினாள்.

“என்ன அசோக்… இனிப்பு தூக்கலா இருக்கு. இதை போய் சரியா இருக்குன்னு சொல்றே. கொஞ்சம் பால் ஊத்தனும் இல்லைன்னா கொஞ்சம் macroni வேகவைச்சு போடனும்” அலுத்துக்கொண்டாள்.

“இல்ல தீபா… எனக்கென்னவோ சரியா இருக்குற மாதிரி தான் இருக்கு…” அசோக் நிதானமாக சொன்னான்.

அ. அ 06 ஏடாகூட அன்பு
“ஒருவேளை நீ வாய் வச்சு தந்ததால இன்னும் அதிக இனிப்பாயிடுச்சோ என்னவோ….” தீபா சிரித்தபடி என் பக்கம் திரும்பி “அண்ணா… வேற Spoon-ல எடுத்துட்டு வர்றேன்… நீங்க taste பண்ணிட்டு இனிப்பு போதுமா இல்லை கூடவான்னு சொல்லுங்க” என்று சொல்ல, நான் லேசான பதற்றத்தோடு “இல்லம்மா… எனக்கும் ரோகிணிக்கும் ஒரே taste.. அவ என்ன சொல்றாளோ அதே தான் எனக்கும் தோணும். நீ அவ கிட்டயே கேளு” என்றேன்.
.

அதற்கப்புறம் எனக்கு அசோக்கிடம் பேசவே தோன்றவில்லை. என் Mobile phone-ல் ஏதோ குறுஞ்செய்தி வந்ததாக மெல்லிய சத்தம் கொடுக்க, அதை பார்க்கும் சாக்கில் அசோக்கிடம் இருந்து விலகி எழுந்து சென்றேன். அது ஏதோ ஒரு SPAM செய்தி தான். ஆனால் நான் அதை முக்கியமான செய்தி போல முகபாவங்களை மாற்றிக்கொண்டு “ரோகிணி! Richards Sir கூப்பிடுறார்… Something important. நான் போயிட்டு வந்திடுறேன்” என்று குரல் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன். அசோக்கின் முகத்தில் எதுவும் மாறுதல் தெரிகிறதா என்று கவனிக்க கூட தோன்றவில்லை.

அந்த National Highway-யில் நான் காரை இலக்கில்லாமல் ஓட்டிக்கொண்டிருக்க என் மனசு புயலில் சிக்கிய இலை போல துடித்துக்கொண்டிருந்தது.

“அசோக் மீதான எனது ஆசை ஒருவேளை ஒருதலைபட்சமான ஈடுபாடாக இருந்தது என்றால் அது காலப்போக்கில் தன்னாலேயே சரியாகிவிடும். ஆனால் அசோக்குக்கும் என் மீது ஈர்ப்பு உள்ளது. அதை அவன் வெளிப்படுத்தவும் செய்கிறான். அதே சமயம் தீபா அசோக்கை பார்க்கும் ஒவ்வொரு பார்வையிலும், அசைவிலும் அசோக்கின் மீது அப்படி ஒரு காதல் இருக்கிறது. நான் என் ஈர்ப்பின் காரணமாக அசோக்கிடம் physical advancements செய்தால் அவன் நிச்சயம் positive-ஆக reciprocate செய்வான். அதனால் நிச்சயம் அசோக்க்குக்கு தீபாவின் மீது ஈடுபாடு குறைந்து… ஏதாவது ஏடாகூடமாக நடப்பதற்கு என் கவர்ச்சி காரணமாக இருந்தால்… என்னை நானே மன்னிக்கமாட்டேன்”

பின்னால் வந்த Truck-ன் Honk சத்தம் நான் அந்த highway lane-ல் நிர்ணயிக்கப்பட்டதை விட குறைவான வேகத்தில் செல்வதால் அவனுக்கு இடைஞ்சலாக இருப்பதால் horn அடித்து என்னை திட்டுகிறான். நான் வண்டியின் accelerator-ஐ மிதித்து வேகத்தை கூட்டினேன்.

இப்படி குழம்பிப்போயிருப்பதால் நான் கல்யாணம் ஆன ஆண்களோடு “தொடுப்பு” வைத்ததில்லை என்று சொல்லமுடியாது. அடிக்கடி இல்லையென்றாலும் எப்போதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக அவர்களோடு படுத்திருக்கிறேன். ஆனால் அவர்களிடத்தில் எனக்கு இப்படி மனது லயித்தது கிடையாது. ஆனால் அசோக் விஷயத்தில் என் பூளை விட மனசு தான் தவியாய் தவிக்கிறது. அவனது அருகாமையை வேண்டி துடிக்கிறது. மனசையும் உடம்பையும் ஒன்றாக கலக்கவிடக்கூடாது என்ற பாடம் மிக தாமதமாக கற்றுக்கொண்டேனோ என்று தோன்றியது. நான் சென்றுக்கொண்டிருக்கும் சாலையில் வந்த முதல் Driver Rest Area-வில் வண்டியை நிறுத்தி Steering wheel-ல் அயாசத்தில் சரிந்தேன்.

அ. அ 06 ஏடாகூட அன்பு
தமிழ்நாட்டை விட வெளிநாடுகளில் தான் தமிழ் கலாச்சாரமும் அதை சார்ந்த கொண்டாட்டங்களும் அர்த்தத்தோடு பின்பற்றபடுகிரது என்பது எனது எண்ணம். ஏனென்றால் தமிழ்நாட்டில் பண்டிகை என்பது “இந்திய தொலைகாட்சிகளில் முதன்முறையாக” போடப்படும் திரைப்படங்களிலும் அல்லது விஜய்யா அஜித்தா என்ற ரசிகர்கள் சண்டை மட்டுமே. ஆனால் இங்கே நாங்கள் பொங்கல் என்றால் பொங்கல் வைப்பது, தமிழ் பேச்சுப்போட்டிகள், கோலப்போட்டி, ஒயிலாட்டம் என்று கலாச்சாரம் சார்ந்த கொண்டாட்டங்கள் செய்வோம். இந்த வருஷமும் அப்படி தான் பொங்கலுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறோம்.
.

எங்கள் நண்பர் கோபால் வீடு பெரிது என்பது மட்டுமல்லாது பின்பக்கம் பரந்த மைதானம் இருப்பதால் எங்கள் Dance rehearsal-ஐயும், பிள்ளைகளின் நாடக ஒத்திகையையும் அவர் வீட்டிலேயே வைத்துக்கொண்டோம். பின்பக்க மைதானத்தில் குழந்தைகள் எல்லாம் விளையாடிக்கொண்டிருக்க, என் போன்ற ஒரு நிகழ்ச்சியிலும் பங்கு கொள்ளாத வெட்டி பார்வையாளர்கள் Sofa-வில் சரிந்து புதுப்படம் ஒன்றை பார்த்துக்கொண்டிருந்தோம். என் பக்கத்தில் வெங்கடேஷ் உட்கார்ந்திருந்ததால் அசோக் வேறொரு Sofa-வில் உட்கார்ந்து விஜய்யின் அரசியல் வசனத்தை ரசித்துக்கொண்டிருந்தான். அவன் என்னை பார்க்க முயற்சிக்கவில்லை என்பது அவனை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்த எனக்கு தெரிந்தது. ஒரு கட்டத்தில் எனக்கு அந்த படம் அலுப்பு தட்ட, நான் வெங்கடேஷின் தோளில் சரிந்தேன்.

இதை பார்த்த கோபால் “கார்த்தி! எனக்கு தெரியும் உன் ரசனைக்கு இந்த படம் புடிக்காது… ஆனா இது நேயர் விருப்பங்குறதால உனக்கு choice இல்லை. பேசாம மேலே Guest room-ல போய் படு” என்று என்னிடம் சொல்லிவிட்டு, அவருடைய் பெண்ணை அழைத்து “கார்த்தி மாமாவை மாடியிலே Guest room-ல படுக்க வச்சிட்டு வா” என்று சொன்னார். அவளும் எந்த சுணக்கமும் காட்டாமல் எழுந்து “வாங்க மாமா” என்று அழைத்தபடி முன்னே செல்ல, நான் அவளை பின்தொடர்ந்தேன்.

நான் கட்டிலில் படுத்து போர்வையை போர்த்திக்கொண்டதும் அவள் புன்னகைத்தபடி அறையின் விளக்கை அணைத்துவிட்டு கதவை சார்த்திவிட்டு சென்றாள். சில நிமிடங்களில் எல்லாம் என்னை தூக்கம் ஆட்கொண்டது. ஆனால் அது முழுதாக என்னை ஆக்கிரமிக்கவில்லை என்பது அறைக்குள்ளே யாரோ வருவதை என்னால் உணரமுடிந்தது. வந்தது அசோக்.

அசோக் நான் படுத்திருந்த கட்டிலில் உட்கார்ந்து என்னை பார்த்தான். அந்த அரை தூக்கத்திலும் அவன் கைகள் என் தலை முடியை கோதுவதை உணரமுடிந்தது. கொஞ்ச நேரம் அசோக் என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்தான். பின்னர் மீதமிருந்த கொஞ்சூண்டு இடத்தில் அவன் நீட்டிப்படுத்தான். என் இடுப்பை சுற்றி கைபோட்டுக்கொண்டு என் தொடை மீது தன் காலை போட்டான். அப்படி என் மேலே கால் போட்டபோது அசோக்கின் முட்டி என் சுன்னிமேட்டை உரசிவிட, என்னை ஆட்கொண்டிருந்த அரைத்தூக்கம் சூரிய ஒளி கண்ட பனித்துளி போல மறைந்தது. இருந்தாலும் நான் கண்ணை மூடிக்கொண்டு தூங்குவது போல படுத்திருந்தேன். கொஞ்ச நேரம் என் இடுப்பை சுற்றி தன் கையை தேய்த்துக்கொண்டிருந்த அசோக் தன் தலையை என் கழுத்துக்கும் தோளுக்குமான இணைப்பில் வைத்துக்கொண்டான். அந்த அறையின் அமைதியை அவனது பெருமூச்சு சத்தம் கலைத்தது.

கொஞ்ச நேரம் அசோக்கின் உடம்பில் அசைவு தெரிந்தது. மெல்ல மெல்ல அது அடங்கியது. ஒருவேளை தூங்கிவிட்டானோ என்று நான் நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில் அசோக் தலையை தூக்கினான். அவன் முகம் என் முகத்துக்கு மிக நெருக்கத்தில் இருந்தது. நான் கண்ணை மூடிக்கொண்டிருந்தாலும் அவன் மூச்சு என் முகத்தில் அடித்த விதத்தில் அசோக் அமைதியாக என் முகத்தை பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதை உணரமுடிந்தது. அசோக் குணிந்து என் உதட்டில் அழுத்தமாக முத்தம் வைத்தான். போர்வைக்கு உள்ளே என் உடம்பு சிலிர்த்தது அவனுக்கு தெரியவில்லை போல. மீண்டும் என் நெஞ்சில் தலை வைத்து படுத்த அசோக் கொஞ்ச நேரம் கழித்து எழுந்து அறையில் இருந்து வெளியேறினான்.

நான் அப்படியே அசைவின்றி சிலை போல படுத்திருந்தேன். ஒருவேளை அசோக் என் தூக்கத்தை கலைத்து என்னை ஆக்கிரமித்திருந்தாலும் நான் தடுத்திருக்க மாட்டேன் என்றாலும் அவன் என்னுடைய கவனத்தை ஈர்க்க முயற்ச்சிக்காமல் தன்னுடைய அன்பை தனக்கு மட்டும் வெளிப்படுத்திய விதத்தில் குழம்பியிருந்த மனது மெல்ல மெல்ல தெளிவடைந்தது. Love is love… Simple. சமுதாயம், சுற்றார் என்று complicate செய்யாமல் நான் அசோக்கின் அன்பை பூரணமாக ஏற்றுக்கொள்ளப்போகிறேன்.

Picture of the day


அ. அ 06 ஏடாகூட அன்பு

காதல்ரசிகன்

காதலுக்கும் காமத்துக்கும் பால் (Gender) தேவையில்லை என்று கருதும் கூட்டத்தில் ஒருத்தன். அழகு எங்கிருந்தாலும், யாரிடமிருந்தாலும் ரசிக்கும் கலாரசிகன். அன்பு எங்கிருந்து கிடைத்தாலும் பால் நோக்காமல் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொண்டவன். கட்டிலில் கட்டியவளோடு புணர்ந்தாலும் நான் ஓரினச்சேர்கையாளனும் கூட என்று சொல்லிக்கொள்வதில் வெட்கமில்லை.

3 Comments

  1. நன்றி… நான் முன்பே சொன்னது போல அது சொந்த கதை என்பதால் உங்களுக்கு அது இயல்பாக தோறியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Free Sitemap Generator
error: Alert: Content is protected !!