Daddy Hunt – A cute love story

Format: Webseries
Platform: YouTube
Language: ஆங்கிலம்
No. of seasons: 3
Cast: Jim Newman, BJ Grubber, David M. Farrington, Michael Snipe Jr, David J Cork
Directed by:
Synopsis:
சமீபத்தில் நான் கண்ட மிக அழகான ஓரினச்சேர்க்கை “காதல்” கதை. குறிப்பிடத்தகுந்த வயது வித்தியாசம் கொண்ட இரு ஆண்களுக்கிடையே ஏற்படும் கவர்ச்சியும், அது எப்படி உறவாக மாறுகிறது என்பது தான் கதை. ஐம்பதுகளில் இருக்கும் ஒரு “Daddy”-ஐ பக்கத்து வீட்டில் வசிக்கும் “Boy” அவரை ஒரு Plumber என்று நினைத்து வேலை கொடுக்கிறான். பின்னர் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க, அவர்களிடையே அழகான நட்பு உருவாகிறது.
ஒரு கட்டத்தில் அந்த நட்பு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிட, இருவரும் உடலுறவு கொள்ள முயற்சிக்கிறார்கள். அதில் ஏற்படும் பிணக்கு அவர்களிடையே பிளவை ஏற்படுத்த, இருவரும் அடுத்தவர்கள் மீது கொண்டுள்ள காதலை உணர வாய்ப்பாக அந்த பிரிவு அமைகிறது. மொட்டை மாடியில் தங்கள் மன உணர்வுகளை வெளிப்படுத்தி கிஸ்ஸடித்து ஒன்றாக கலப்பதில் முதல் சீசன் முடிகிறது.
ஒவ்வொரு episode-ம் 2-3 மூன்று நிமிடங்கள் மட்டுமே என்று மொத்த கதையும் 17 நிமிடங்களில் முடிந்துவிடுவது அழகு.
Daddyhunt என்னும் Gay Dating app-ஐ விளம்பர படுத்துவதற்காக எடுக்கப்பட்ட தொடர், அதன் வரவேற்பினால் வெறும் விளம்பரம் என்பதை தாண்டி ஓரினச்சேர்க்கையாளர்களின் வாழ்வியலை ஆவணப்படுத்தும் முயற்சியில் அடுத்த சீசன்கள் மேலும் உணர்ச்சிபூர்வமாக எடுக்கப்பட்டுள்ளன.
முதல் சந்திப்பு, முதல் ஈர்ப்பு, முதல் உடலுறவு முயற்சி, முதல் தவறான புரிதல் பின்னர் மனம் எப்படி மீண்டும் நாடுகிறது என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்கள். நான் கிட்டத்தட்ட நூறு முறைக்கு மேலே பார்த்திருக்கிறேன். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத ஓரினகாதல் கதை.
Trailer