பெயர் | From Beginning to End (Do Começo ao Fim) | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
மொழி | Portuguese | ||||||||
வெளியான வருடம் | 2009 | ||||||||
வகை | Feature film | ||||||||
தளம் | Theatrical Release | ||||||||
YouTube-ல் கிடைக்கிறதா? | ஆம் | ||||||||
நடிகர்கள் | Rafael Cardoso; João Gabriel Vasconcellos; Júlia Lemmertz; Fábio Assunção | ||||||||
இயக்குநர் | Aluizio Abranches | ||||||||
கதைச்சுருக்கம் | |||||||||
கதை எப்படி இருக்கு?எழுதப்பட்ட புராணங்களில் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் இருந்த நெருக்கம், கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே இருந்த ஈர்ப்பு என்று இலைமறை காயாக ஓரினக்காதலின் இருப்பை பதிவு செய்திருந்தாலும் இந்த 21ம் நூற்றாண்டிலும் ஓரினக்காதலையோ இல்லை ஓரினச்சேர்க்கையையோ இந்த சமூகம் இன்னும் முழுசாக ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படிப்பட்ட நிலையில் ஒரு ஓரினக்காதல் கதையில் incest-ம் சேர்ந்துக்கொண்டால்? இவை இரண்டும் இணைந்த திரைப்படம் கழுவி கழுவி ஊற்றப்படும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் ஒரு இன்ப அதிர்ச்சிக்கு ஆளாவீர்கள். சகோதரர்கள் இருவரும் ஓரினக்காதலர்களாக மாறும் இந்த பிரேசில் நாட்டில் எடுக்கப்பட்ட போர்ச்சுகீஸ் மொழிப்படம் எந்த ஒரு straight காதல் கதைக்கும் சளைத்தது இல்லை என்று தோன்றும்.
தாமஸ் இல்லாமல் பிரான்சிஸ்கோ தனிமையில் போராடுகிறான். பிரான்ஸிஸ்கோ கிளப்பில் சந்தித்த ஒரு பெண்ணுடன் உறவை ஏற்படுத்திக்கொள்ள முயற்சித்தாலும், அவனால் தாமஸை தவிர வேறொருவருக்கும் தன்னை கொடுக்க முடியாது என்று உணர்கிறான். அங்கே ரஷ்யாவில் வசிக்கும் தாமஸும் பிரான்ஸிஸ்கோவின் பிரிவில் அவன் தான் தன் உயிர் என்று கண்டுக்கொள்கிறான். இருவரும் videocam வாயிலாக virtual sex-ன் மூலம் தங்கள் விரகத்திற்கு வடிகால தேட முயற்சிக்கிறார்கள். ஆனாலும் உடல்ரீதியான பிரிவு தாங்க முடியாமல் பிரான்சிஸ்கோ ரஷ்யாவிற்கு செல்கிறான். சகோதரர்கள் மகிழ்ச்சியுடன் மீண்டும் இணைகிறார்கள்.
இந்த படத்தை தேடி நீங்கள் அலைய வேண்டாம் என்பதால் படத்தின் முழுநீள வீடியோவை கீழே பகிர்ந்துள்ளேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும். | |||||||||
முன்னோட்டம் | |||||||||
முழு நீள வீடியோ | |||||||||
பகுதி 2 |
3.9K
previous post