La Fate Ignorati

பெயர் La Fate Ignorati
மொழி Italian
வெளியான வருடம் 2021
வகை Webseries
Seasons 1
தளம் Disney Plus
YouTube-ல் கிடைக்கிறதா? இல்லை
நடிகர்கள் Cristiana Capotondi, Eduardo Scarpetta, Luca Argentero
இயக்குநர் Ferzan Ozpetek
கதைச்சுருக்கம்

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

ஓரினச்சேர்க்கையாள பாத்திரங்கள் mainstream movies தற்போது பரவலாக வர தொடங்கி இருந்தாலும் அந்த கதாபாத்திரங்கள் – ஓரினச்சேர்க்கையாளர்கள் எல்லாம் கொடூரமான சைக்கோக்கள் அல்லது கஷ்டப்பட்டு தன்பாலின ஈர்ப்பை வெளிப்படுத்துபவர்கள் என்ற இரண்டு வகைகளுக்குள்ளேயே அடைபடுகிறது. ஒரினச்சேர்க்கையாளர்கள் குறித்த “சராசரி” மனிதர்களின் பார்வையில் இருந்து சொல்லும் கதைகள் மிக குறைவே. அப்படிப்பட்ட ஒரு கதையை சில மாதங்களுக்கு முன்பு காண நேர்ந்தது. “La fate Ignoranti (The ignorant angels)” அதாவது அறியாத தேவதைகள் என்ற இத்தாலிய தொடர் ஒன்றை டிஸ்னி ப்ளஸ்ஸில் காண கிடைத்தபோது எனக்கு அதுவும் ஒரு தணிக்கை செய்யப்படாத ஆண்களின் முத்தக்காட்சிகளும், படுக்கை அறை காட்சிகள் நிறைந்த கில்மா கதையாக இருக்கும் என்று தான் முதலில் தோன்றியது. ஆனால் கதை செல்ல செல்ல நான் என்னையும் அறியாமல் அதனுள் இழுக்கப்பட்டதில் ஆச்சரியம் இல்லை.

“La fate Ignoranti” – இதன் கதை மாஸ்ஸிமோ என்ற அன்பான கணவன் சாலை விபத்தில் இறக்க, அந்த செய்தி அவன் மனைவியான ஆண்டோனியாவுக்கு சொல்வதாக ஆரம்பிக்கிறது. கணவனின் அலுவலகத்தில் இருந்து அவனது பொருட்களை எடுத்து வரும் ஆண்டோனியாவின் கவனத்தை அதில் “அறியாத தேவதைகள்” என்ற பெயரில் கையெழுத்திடப்பட்ட ஒரு காதல் கவிதையுடன் கூடிய ஓவியம் ஈர்க்கிறது. Michelle என்ற பெயர் கொண்ட நபரிடம் இருந்து வந்திருப்பதாகவும், அதற்கு மேல் எந்த விவரமும் தெரியாது என்று மாஸ்ஸிமோவின் உதவியாளர் சொல்கிறாள். ஆனால் ஆண்டோனியா துருவி துருவி விசாரித்து அவளிடம் இருந்து ஒரு flat-ன் சாவியையும், அதன் முகவரியையும் பெறும் ஆண்டோனியா, அந்த ஓவியத்தை கொடுக்கும் சாக்கில் அங்கே செல்கிறாள். மைக்கேல் என்னும் நடுத்தர ஆண் ஒருவன் கதவை திறந்து அவள் தேடுவது போல மிஷல் என்ற பெயரில் யாரும் இல்லை என்று அவளை திரும்பி போக சொல்கிறான். கசகசவென்று கும்பலாக இருக்கும் அந்த flat-ல் ஆண்டோனியாவின் கண்கள் ஒரு நடுத்தர வயது பெண்ணை தேடுகிறது. முதலில் கடுகடுவென்று இருக்கும் மைக்கேல் பின்னர் ஆண்டோனியா தேடி வந்த நபர் மிஷெல் இல்லை, மைக்கேல் என்னும் நான் தான் என்று சொல்ல, அதிர்ச்சியில் ஆண்டோனியா அவனை அறைந்துவிட்டு வந்துவிடுகிறாள்.

15 ஆண்டுகள் தன்னுடன் குடும்பம் நடத்திய அன்பான கணவன் ஒரு ரகசிய ஓரினச்சேர்க்கையாளன் என்பதை ஏற்றுக்கொள்ல முடியாமல் தவிக்கும் ஆண்டோனியா தன் தாயிடம் கணவனுக்கு வெளித்தொடர்பு இருந்திருக்கிறது என்று பொதுவாக சொல்கிறாள். அதற்கு அவள் தாய் அந்த “பெண்ணை” சென்று சந்திக்குமாறு கூறும் போது ஆண்டோனியா இன்னும் கோபமாகிறாள். அதற்கு அவள் தாய் தான் ஒரு ராணுவ தளபதிக்கு வைப்பாட்டியாக இருந்ததால் ஒரு அங்கீகரிக்கப்படாத காதலிக்கு தன் காதலனின் சாவினால் வரும் துக்கத்தை உலகத்துக்கு தெரியாமல் தவிக்கும் வலி தனக்கு தெரியும் என்கிறார். மாஸ்ஸிமோவின் “காதலி”யும் அப்படி தவிக்கலாம் என்பதால் தான் அப்படி சொல்வதாக சமாதானப்படுத்துகிறார். அரை மனதோடு ஆண்டோனியா மீண்டும் மைக்கேலை சந்திக்க செல்கிறாள்.

Random கதைகள்

ஆரம்பத்தில் தன் கணவனை வசியம் செய்யும் அளவுக்கு மைக்கேலிடம் என்ன இருக்கிறது, அவர்களுக்கு இடையேயான உறவு எப்படி இருந்தது என்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் செல்லும் ஆண்டோனியாவுக்கு அங்கே இருக்கும் மனிதர்களை பார்த்து வியக்கிறாள். திகட்ட திகட்ட காதலில் இருக்கும் ஒரு கே தம்பதி, நல்ல பொறுப்பான வேலையில் இருக்கும் ஒரு லெஸ்பியன் இணை, transgender-ஆக மாறியதால் பெற்றோர்கள் ஒதுக்கிய “பெண்”, ஒரு வயது முதிர்ந்த பாலியல் தொழிலாளி என்று அந்த வீடு வேறு உலகமாக இருப்பதையும், அதில் தன் கணவன் ஈர்க்கப்பட்டிருப்பதையும் காணும் ஆண்டோனியா அவர்களுடன் நிறைய நேரம் செலவழிக்கிறாள். அந்த நேரங்களில் எப்படி ஆண்டோனியாவுக்கு தன்பால் ஈர்ப்பை குறித்த பார்வை மாறுகிறது என்பதை அழகாக, கொஞ்சம் நீளமாக சொல்கிறது இந்த தொடர். அதற்காக கடைசியில் ஆண்டோனியாவும் லெஸ்பியன் ஆகிவிடுகிறாள் என்று பயப்படாதீர்கள். தொடருக்கு இயல்பான முடிவு தான். ஹி! ஹி!

பொதுவாக “சராசரி” உலகத்தினருக்கு தன்பால் ஈர்ப்பு என்பது வெறும் உடற்கவர்ச்சியும் உடலுறவும் மட்டுமே, செக்ஸ் அலுத்து போனதும் அவர்கள் சர்வ சாதாரணமாக அடுத்த துணையை தேடிக்கொள்வார்கள் என்பது போன்ற பிம்பங்கள் உடைந்து, அவர்களுக்கும் சராசரி தம்பதிகளை போல காதலும், பொறாமையும், இதய முறிவுகளும் இருக்கும் என்பதை அழகாக சொல்லியிருந்தார்கள். குறிப்பாக lesbian couple-ன் கதையில் இந்த குழப்பங்கள் பெரும்பங்கு வகித்தது என்றால் ஆண் gay couple கதையில் அவர்களது துறுதுறுப்பான விளையாட்டுத்தனமாக காதல் எப்படி முதிர்ச்சி அடைந்து திருமண பந்த்தத்தில் இணைகிறது என்று அழகாக முடித்திருந்தார்கள். பாலியல் தொழிலாளியின் மீது காதல் கொள்ளும் transgender பெண்ணின் அண்ணனை அவள் “பிடிச்சிருக்குன்னு சொல்லவே இவ்வளவு நேரம் எடுத்துக்குறியே… முத்தம் வைக்க எவ்வளவு நாள் எடுப்பியோ? என்னால அவ்வளவு காளம் காத்திருக்க முடியாது” என்று லந்து செய்யும் காட்சிகள் எல்லாம் சந்தோஷ கணங்கள்.

இந்த கதை 2001-ன் ஆண்டில் “The Ignorant Fairies” என்ற பெயரில் Sweden மொழியிலும், அதுவே ஆங்கிலத்தில் His Secret Life” என்ற பெயரில் dub செய்யப்பட்டு ஏற்கனவே திரைப்படமாக வந்திருந்தது என்று கேள்விப்பட்டு நான் அதையும் பதிவிறக்கம் செய்து பார்த்தேன். படத்துக்கும் webseries-க்கும் கதை அளவில் பல வித்தியாங்கள் இருந்தன. மேலும் திரைப்படத்தில் 1:50 மணி நேரத்தில் கதை சொல்லவேண்டும் என்பதற்காக நிறைய சம்பவங்கள் சட்டென்று வந்து மறைந்துவிடுகின்றது. அது மறைவதற்குள் நம் மனது அவற்றை கிரகித்து இருக்குமா என்பது சந்தேகம் தான்.

எனக்கு webseries- வடிவம் தான் பிடித்திருந்தது. ஏனென்றால் இதில் ஒவ்வொரு கிளைக்கதைகளும் நிதானமாக சொல்லப்பட்டிருந்தது. நீட்டி முழக்கி சொல்லவேண்டும் என்பதால் சில சமயம் நம் பொறுமையை சோதித்தாலும் சொல்ல வந்த விஷயம் அழகாக இருந்தது. ஒவ்வொரு பாகத்தின் ஆரம்பத்திலும் இறந்த மாஸ்ஸிமோ தோன்றி அந்த அத்தியாயத்தில் என்ன விஷயம் சொல்லப்போகிறார்கள் என்று சொல்லும் விதம் நம்மை அதற்கு தயாராக்குகிறது. அதை விட மாஸ்ஸிமோ சிரித்த முகத்துடன் முன்னுரை சொல்லும் அழகே தனி தான். நிச்சயம் அந்த நடிகரின் சிரிப்பு “straight” ஆட்களுக்கும் கவர்ச்சிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மாஸ்ஸிமோவும் மைக்கேலும் சந்தொஷமாக அரட்டை அடிக்கும் போது இயல்பாக முத்தமிட்டுக் கொள்ளும் காட்சி ஒன்றிரண்டு முறை தான் சுருக்கமாக வருகிறது. மாஸ்ஸிமோவை நினைத்து ஆண்டோனியாவும், மைக்கேலும் தனித்தனியாக ஏங்கும் பாடலில் வரும் காட்சிகள் நிஜமாகவே ஓரினக்காதலும் அழகு தான் என்பதை நிச்சயம் உணர்த்தும்.

சைட்டிக்க கவர்ச்சி ஆண்கள்

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

பொதுவா இங்கே கதைகளில் பேச்சு அதிகமாகவும், sex action கம்மியாகவும் இருக்குன்னு நினைக்கிறீங்களா?

View Results

Loading ... Loading ...

பார்த்து முடித்து இத்தனை நாட்களுக்கு பிறகு ஏன் இதை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன் என்றால் – இந்த தொடர் closet gay-யாக இருக்கும் என் மீதிருந்த குற்ற உணர்ச்சிக்கு, நான் ‘சராசரி‘யாக இல்லை என்ற தாழ்வுணர்ச்சிக்கு இதமாக மருந்து போட்டு வலியை குறைத்தது என்றால் மிகையில்லை. வெளியே சொல்ல முடியாவிட்டாலும் கூட என் உலகமும் அழகு தான் என்று சந்தோஷமாக இருந்தது. இந்த கதையை நான் வீட்டுக்கு தெரியாமல் தான் பார்க்க முடிந்தது. ஏனென்று உங்களுக்கே புரியும். நீங்கள் பார்க்க விரும்பினால் நான் webseries வடிவத்தை பார்க்க பரிந்துரை செய்வேன். நேரம் குறைவாக இருக்கும் என்றால் படத்தை பார்க்கலாம்.

La Fate Ignoranti-ன் title track அவ்வளவு இனிமையாக இருக்கிறது. அந்த வீடியோவை கீழே இணைத்துள்ளேன். ஒருமுறை கேட்டு பாருங்கள்.

முன்னோட்டம்


  • கதை எப்படி இருக்கு?

    0 / 5 Results 0 Votes 0

    Your page rank:

    நீங்க செக்ஸ் கதாநாயகர்களை பத்தி படிக்கிறதால அதை பற்றின கேள்விகளுக்கு உங்க பதில் என்ன?

    யார் குறித்த படங்களும் தகவல்களும் எதிர்பார்க்கிறீர்கள்?

    எந்த அம்சம் உங்களை கூடுதல் கிளுகிளுப்பு ஏற்படுத்துகிறது?


    அனைத்து பதிவுகளையும் ஒரே table-ல் காண, இங்கே click செய்யவும்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Back to top button
    Free Sitemap Generator

    Adblock Detected

    Please disable the adblocker for this site (not only the page) to render the in-line related posts blocks effectively and reload the page.