Sugar Daddy 09. Gerontophile

Sugar Daddy 09. Gerontophile

இது Sugar Daddy தொடர்கதையின் 9-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் நரேனும், விக்கியும் நெருக்கமாகிறார்கள், மற்றவர்கள் அறியாதபடிக்கு தங்களுக்கு பிடித்த sofa-வில் mid night-ல் உடலுறவு கொள்கிறார்கள். விக்கிக்கு அவன் தந்தை கல்யாண பேச்சை ஆரம்பிக்க, விக்கி லாவகமாக அதை தடுத்துவிடுகிறான். இதை அறிந்த நரேன் தான் விக்கியின் மணவாழ்க்கைக்கு குறுக்கே நிற்பதாக குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார். அதை நீக்க என்ன செய்தார்?

நரேனுக்கு விக்னேஷ் திரும்பிவரும் வரைக்கும் இருப்பு கொள்ளவில்லை. விக்னேஷின் தந்தையை சந்தித்த பிறகு அவருடைய நியாயமான ஆசைக்கு குறுக்கே, அதாவது விக்னேஷிடம் தான் நெருக்கமாக இருப்பது தான் காரணமா என்ற குற்ற உணர்ச்சி அவரை வாட்டியது. இன்று விக்னேஷ் வந்ததும் அவனிடம் இருந்து தான் பிரியப்போவதாக சொல்லவேண்டும் என்று ஒருபக்கம் மனசாட்சி கூறினாலும், மறுபக்கம் அவரது மூளை அவனே தெளிவாக இருக்கும்போது இதற்கு என்ன அவசியம் என்று தடைபோட முயற்சித்தது. வயதான காலத்தில் இப்படி ஒரு இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொள்ளவேண்டிய அவசியம் என்ன என்று அவரது நடுநிலை மனது கேள்வி கேட்க, அவருக்கு பதில் சொல்ல தெரியவில்லை. இந்த குழப்பத்தில் எவ்வளவு நேரம் கடந்தது என்று நரேனுக்கு தெரியவில்லை. வாசல் கதவு தட்டப்பட்டு, சாவி போடும் சத்தம் கேட்டபோது மணி இரவு 11:00-ஐ காட்டியது. நரேன் எழுந்து வாசலுக்கு போக, விக்னேஷ் கதவை திறந்துக்கொண்டு வந்தான்.

“மாமா! தூங்கலையா?”

“இல்ல… அப்பாவை வண்டி ஏத்திட்டியா?”

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

“ம்ம்… ஆண்ட்டி என்ன பண்றாங்க?”

“அருந்ததி தூங்கப்போய் அரை மணி நேரம் ஆகுது… நான் உனக்காக தான் காத்திட்டிருக்கேன்”

“அப்போ சரி!” விக்னேஷ் கொஞ்சலாக நரேனின் கழுத்தில் கையை மாலையாக போட்டு கட்டிப்பிடித்தான். “தூங்கப்போறதுக்கு முன்னாடி ஒரு Goodnight Kiss தர்றீங்களா மாமா?” கண்களை மூடியபடி தலையை ஒரு angle-ல் சாய்த்து வாயை லேசாக திறந்தபடி நரேனின் உதட்டை கவ்வப்போனான். நரேன் அவன் நெஞ்சில் கைவைத்து பின்னாடி தள்ளி நிறுத்தினார்.

“விக்கி! நான் உன் கிட்டே கொஞ்சம் பேசனும்” நரேனின் குரல் கடுமையாக இருந்தது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

இங்கே பதியப்படும் சுட்டகதைகளில் நீங்கள் வித்தியாசத்தை உணர்கிறீர்களா?

View Results

Loading ... Loading ...

“என்னாச்சுங்க மாமா?” விக்னேஷ் புரியாதது போல நடித்தான்.

“உனக்கு நான் என்ன கேட்க வர்றேன்னு தெரியும் விக்கி… நீ மொட்டைமாடிக்கு போக Elevator Button-ஐ அழுத்து, நான் வீட்டை lock பண்ணிட்டு வர்றேன்”

மொட்டைமாடியில் கடற்காற்று இனிமையாக வீசிக்கொண்டிருக்க, தூரத்தில் இருந்த Sodium Vapour விளக்குகள் இருட்டை விரட்டுவதில் தோற்றுப்போய் மெல்லிய ஆரஞ்சு வண்ணத்தை தூவியிருந்தது. இதே மற்ற நேரமாக இருந்திருந்தால் விக்னேஷ் நரேனின் உதட்டை பிரித்து மேய்ந்திருப்பான்… ஆனால் இன்று நரேன் normal mood-ல் இல்லாததால் விக்னேஷ் கொஞ்சம் அடக்கிவாசித்தான்.

நரேன் கைகளை இறுக்கி கட்டிக்கொண்டு ஒரு closed-ஆன hostile body language-ல் மாடி கைப்பிடி சுவற்றில் சாய்ந்து நின்றுக்கொண்டு “அப்பா என்ன சொல்லிட்டு போறார் விக்கி?” என்று கேட்டபோது அவர் குரலில் இருந்த கண்டிப்பு விக்னேஷை சற்றே கலக்கமடைய வைத்தது.

“எதை பத்திங்க மாமா?” விக்னேஷ் தன் குரலில் அப்பாவித்தனத்தை கொண்டுவர முயன்றான்.

“நீ அவர் கிட்டே நீ தாம்பத்தியத்துக்கு லாயக்கில்லாதவன்னு சொன்னதை பத்தி….”

“Machine breakdown ஆயிடுச்சுன்னு சொன்னேன்…”

“புரியலை… exact-ஆ என்ன சொன்னே? Please சொல்லு” நரேந்திரன் படபடத்தார்.

“மாமா! எனக்கு சாமான் டெம்பர் அடிக்காதுன்னு சொன்னேன்… நான் காலேஜ் படிக்கிறப்போ ஒரு accident ஆகியிருந்துச்சு… அதை சாக்கா வச்சு எனக்கு ‘அது’ எழுந்திருக்கதுன்னு அடிச்சுவிட்டேன்… ஆளு பயந்துட்டாரு… இன்னும் கொஞ்ச நாளைக்கு கல்யாண பேச்சே எடுக்கமாட்டார்”

“விக்கி! உன்னோட erection & stamina பத்தி எனக்கு நல்லா தெரியும்… ஏன் அப்படி சொன்னே? நாளை பின்னாடி நீ பொய் சொல்லிட்டேன்னு தெரிஞ்சுதுன்னா?”

“மாமா! அப்படி சொன்னா தான் அவர் கல்யாண பேச்சை நிறுத்துவார்…”

“ஆனா விக்கி அதுக்குன்னு…. நீ சொன்னது harsh-ஆ இருக்கு… எந்த அப்பாவுக்கும் தன் பையனுக்கு impotency-னு கேட்கக்கூடாததை நீ சொல்லியிருக்கே… ஒரு பையனை பெத்தவனா அவரோட வலியை என்னால உணர முடியுது” நரேன் குரலில் லேசான நடுக்கம் எட்டிப்பார்த்தது.

“மாமா! எனக்கும் புரியுது… ஆனா தன் பையன் ஒரு Gay-ன்னு கேள்விப்பட்டா பின்விளைவுகள் இதை விட பயங்கரமா இருக்கும்… காரணம் அவங்களுக்கு Gay-ன்னா என்னான்னு புரியாது. சாமிகிட்டே கூட்டிட்டு போய் பேய் ஓட்டினா, இல்லை மந்திரிச்சு விட்டா, தாயத்து கட்டுனா சரியாயிடும்னு கோவில் குளம்னு சுத்திட்டிருப்பாங்க… இல்லைன்னா emotional blackmail பண்ணி யாரோ ஒரு அப்பாவி பொண்ணு கழுத்துல தாலி கட்ட வச்சிடுவாங்க… பாவம்! அந்த பொண்ணு என்ன கனவு கண்டிருப்பாளோ அவளை நான் மானசீகமா கொல்லனுமா?”

“But விக்கி… You can’t escape it. Try to live with a girl… Who knows you might even become homophobic… இந்த சமுதாயத்துல நீ உன்னோட orientation-ஐ வச்சிக்கிட்டு இருக்கமுடியுமா? நாளைக்கு குழந்தைங்க, துணைன்னு support system-ம் வேணும் இல்லை?”

“மாமா! அப்போ நீங்க இதையெல்லாம் calculate பண்ணி தான் அருந்ததி ஆண்ட்டியை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா?”

“அது வந்து….” நரேன் தடுமாறினார். “நான் உன் கிட்டே ஏற்கனவே சொல்லியிருக்கேன்… என்னை பத்தின சுய புரிதல் வர்றதுக்கு முன்னாடியே எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு… நான் உன் மேலே இருக்குற அன்புல, அக்கறையிலே சொல்றேன்…”

“அப்படியே என்னையும் கழற்றிவிட்டா மாதிரியும் ஆச்சு… இல்லை?” விக்னேஷின் குரலில் எகத்தாளம் தொனித்தது.

“விக்கி! நீ என்னை தப்பா புரிஞ்சுட்டு இருக்கே… நமக்கு பிடிச்சவங்களை பொத்தி பொத்தி வச்சு காப்பாத்துறது மட்டும் காதல் இல்லை… தன் காலத்தை தாண்டியும் அவங்கள யாராச்சும் நல்லபடியா பாத்துக்குவாங்கன்னா சந்தோஷமா அவங்களை ஒப்படைக்கிறதும் தான் காதல்… நான் என் காலத்துக்கு அப்புறம் உன்னை பத்தி யோசிக்கிறதால தான் இதை சொல்றேன்…” விக்னேஷ் பந்தை அவரிடமே திருப்பி அடித்ததை அவர் எதிர்பார்க்கவில்லை.

“மாமா! நீங்க என்னோட காதலை ஏத்துக்கோங்க இல்லை reject பண்ணுங்க… ஆனா நான் என்னால எந்த ஒரு பொண்ணு கூடவும் மனசாட்சிக்கு விரோதமா வாழமுடியாதுன்னு நல்லா தெரியும்… உலகமே சேர்ந்து என்னை pressurise பண்ணினாலும் நான் எந்த பொண்ணுக்கும் அந்த துரோகத்தை செய்யமாட்டேன்…. நான் என்னோட அப்பா கிட்டே எனக்கு impotency-ன்னு பொய் சொன்னதுக்கு நீங்க காரணம் இல்லை… போதுமா? Take a guilt free trip மாமா… You are no way connected to my lie”

“ஆனா விக்கி… நீ சொன்னது கல்யாண பேச்சை தவிர்க்குறதுக்காகன்னு தெரியுற பட்சத்துல நாளைக்கு பிரச்சனைகள் வரலாம்…”

“சரி மாமா! நான் இப்போ மாடியிலே இருந்து குதிச்சுடுறேன்… எனக்கு முதுகு தண்டுல அடிபட்டுச்சுன்னா நான் சொன்னது உண்மையாகுறதுக்கு நிறைய சான்ஸ் இருக்குல்ல?” விக்கி கைப்பிடி சுவற்றில் தாவி உட்கார, நரேன் பதறியடித்துக்கொண்டு விக்ணேஷின் கால்களிடையே வந்து அவனை பிடித்தார்.

விக்னேஷ் நரேனின் கழுத்தை சுற்றி கையை போட்டுக்கொண்டு “யோவ் மாமா! உனக்கு சாமி நம்பிக்கை இருந்துச்சுன்னா இனிமே உன்னை நூறு வருஷம் வாழவைக்கனும்னு வேண்டிக்கோ… கூடவே நானும் இருக்கனும்னு வேண்டிக்கோ… அதுக்கெல்லாம் முதல்ல என்னை உன்னோட துணையா ஏத்துக்குறதா இல்லையான்னு முடிவு பண்ணிக்கோ”… விக்னேஷ் நரேனின் முகத்தில் தன் உதட்டை ஓடவிட்டபோது நரேனின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரின் கரிப்பு உறைக்க, விக்னேஷ் சட்டென்று திடுக்கிட்டான்.

“மாமா… இந்த வயசுல over-ஆ உணர்ச்சிவசப்படுறது உடம்புக்கு நல்லது இல்லை… வாங்க! வீட்டுக்கு போகலாம்… நல்லா தூங்குங்க… காலையிலே fresh-ஆ எழுந்திருச்சு என்னை எப்படி surprise பண்றதுன்னு யோசிங்க”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top