Sugar Daddy 10. In the Heart beat

Sugar Daddy 10. In the Heart beat

இது Sugar Daddy தொடர்கதையின் 10-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
நரேன் விக்கியிடம் ஒரு பெண்ணை கல்யாணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்த விக்கி-நரேன் நடுவே மீண்டும் மனஸ்தாபம் உருவாகிறது. இம்முறை இருவரும் மனநல மருத்துவரிடம் counselling-க்கு செல்கிறார்கள். விக்கி அவருடைய அறிவுரையை நிராகரித்து தன் வாழ்க்கையை தன் விருப்பப்படி வாழ உரிமை இருப்பதாக சீறுகிறான். குழம்பிப்போன psychiatrist விக்கியையும் நரேனையும் இனி சந்திக்க வேண்டாம் என்று அறிவுரை சொல்லி அனுப்புகிறார். நம் காதலர்கள் இம்முறையேனும் முழுசாக பிரிந்தார்களா?

அடுத்த வீட்டில் விக்னேஷ் ஷூவை உதறிவிட்டு, சாக்ஸ் கால்களோடு கட்டிலில் மல்லாந்து விழுந்தான். அவன் மனதில் கோபம், ஏமாற்றம், ஆதங்கம் என எல்லா உணர்ச்சிகளும் கலந்துகட்டியிருந்தது. ஒருவகையில் நரேனின் முடிவில் நியாயம் இருந்தாலும் அதை பற்றி அவனுக்கு ஒரு disagreement இருந்தது. மாமா நாளை நாளை என இன்றை கோட்டைவிடுவதாக தோன்றியது. யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் சாவு வரலாம். அதற்காக அதை காரணம் காட்டி இன்றைய வாழ்க்கையை வாழாமல் இருப்பது என்ன நியாயம் என்று விக்னேஷுக்கு புரியவில்லை. அதுமட்டுமில்லாமல் தான் எதிர்பார்ப்பது என்ன? அவர் மீது தான் கொண்டுள்ள காதலுக்கான அங்கீகாரம் மட்டும் தானே? நான் என்ன அவர் கிட்டே சொத்து பத்தை எதிர்பார்க்கிறேனா இல்லை அவர் வீட்டில் வாரத்துக்கு என் கூட நாலு நாள், அருந்ததி ஆண்ட்டி கூட மூணு நாளுன்னு பங்கா கேட்கிறேன்?

ஆமாம் விக்கி… I too love you. என் வாழ்க்கையிலே நீயும் ஒரு அங்கம் தான்னு சொல்றதுல என்ன குறைஞ்சிடப்போறார்? அவரும் என் மேலே அவ்வளவு லவ்வா தானே இருக்கிறார்? என்னை பார்க்கும் போதெல்லாம் அவர் முகத்துல வர்ற பொலிவு, the happiness he radiates… எனக்காக இல்லைன்னாலும் அவருடைய சொந்த emotions-க்காகவாச்சும் உண்மையா இருக்கலாம் இல்ல? அப்படியென்ன practical practical-ன்னு தானும் வாழாம, என்னையும் வாழவிடாம?

“டேய்! அவரும் உன் மேலே அவ்வளவு லவ்வா இருக்காருன்னு உனக்கே தெரியுது இல்லை? அப்படியும் அவர் பயப்படுறார்ன்னா அதுக்கு ஏதோ ஒரு நியாயமான காரணம் இருக்குமில்லே? அவர் என்ன உன்னை அவரோட lust-க்கு use பண்ணிட்டு கழற்றிவிடுறதுக்கா பிடிவாதம் பிடிக்கிறார்? இல்லை தானே? அப்போ அவரோட முடிவுக்கும் மரியாதை குடுக்கவேண்டியது உன்னோட கடமை இல்லையா? Grow up Viggi…. நாம நினைச்சது கைகூடலைன்னு ஏமாற்றங்கள் இருக்க தான் செய்யும். அதை பிடிச்சிட்டு தொங்கிட்டு நிக்காம we have to just move on. மாமா மேலே வெறுப்பு கொள்ளாதே… அவருடைய நிலைமையிலே இருந்து நீ யோசிச்சாலும் ஒருவேளை இதே முடிவை தான் எடுத்திருப்பே..” விக்னேஷின் அன்பான மனது நரேனுக்காக வாதாடியது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

“விக்னேஷ் பாய்! என்ன ஆச்சு? ஒரு மாதிரி இருக்கே?” குணால் விக்னேஷின் கட்டிலில் உட்கார்ந்து அவன் நெஞ்சில் கைவைத்து கண்ணை பார்த்து கேட்டான்.

“ஹேய்! ஒன்னுமில்ல… சரி! உன் Girlfriend இன்னைக்கு வர்றாளா?”

“இல்லை பாய்! நாங்க Breakup பண்ணிக்கிட்டோம்… ரெண்டு பேரோட wavelength-ம் match ஆகலை…”

“ஐயோ பாவம்…”

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

இந்த Gilmastories-ஐ உங்கள் நண்பர்களுக்கு recommend செய்திருக்கிறீர்களா?

View Results

Loading ... Loading ...

“அத விடுங்க பாய்… நான் இப்போ ஹவிஷா-வை date பண்ணிட்டு இருக்கேன். நாங்க Tinder-ல மீட் பண்ணினோம்.”

“அப்போ நான் சீக்கிரம் இன்னொரு நாள் உனக்கு ரூம் விட்டுக்குடுக்கவேண்டி இருக்குங்குறே…” விக்னேஷ் சிரித்தான்.

“ஹி! ஹி! பாய்! Sexual Compatibility-ம் relationship-ல முக்கியம் இல்ல? அதனால தான் அதையும் test பண்ணிக்கிறோம்” விக்னேஷின் நெஞ்சில் வைத்திருந்த கையால் அவன் நெஞ்சை தேய்த்தபடி குணால் 32 பற்களும் தெரிய சிரித்தான்.

குணாலின் கைகள் “இயல்பாக” மெல்ல மெல்ல விக்னேஷின் அடிவயிற்றை அடைந்தது. விக்னேஷ் உணரும்முன்பு குணாலின் கைகள் விக்னேஷின் சுன்னி மேட்டின் மீது அழுத்தாதபடிக்கு அடைந்தது.

“குணால்… என்ன பண்றே?”

“பாய்! நம்ம friendship-போட compatibility-ஐ check பண்ணலாமா?”

விக்னேஷ் புது hookup கிடைக்கும் சந்தோஷத்தில் கிளர்ச்சியடையவில்லை… தன் அனுமதி இல்லாமல் குணால் தன் ஆணுறுப்பில் கை வைத்ததற்கு கோபப்படவில்லை. அமைதியாக “இப்படி தான் பண்ணனுமா?”

“நீ Gay-ன்னு தெரியும்… நான் bisexual… எனக்கு ஆம்பள பொம்பளன்னு வித்தியாசம் கிடையாது. Sex பண்ணலாமா? I promise you a loads of fun… you’ll never forget my performance” குணாலின் கண்ணில் காமம் கொப்பளித்தது.

விக்னேஷ் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவில்லை. குணாலை தீர்க்கமாக பார்த்தபடி “குணால்! நான் Gay தான். ஆனா Gay-ன்னா பாக்குறவன் கூட எல்லாம் படுக்குறவங்கன்னு எப்படி முடிவு பண்ணிக்கிறே? Gay-ங்குறது sexual orientation. அரிப்பெடுத்தா பாக்குறவங்க கூட எல்லாம் படுக்குறதுங்குறது lust. அதுக்கும் sexual orientation-க்கும் சம்பந்தம் இல்லை. ஆனா ஏன் Gays-ன்னா எங்கேயும் எப்போவும் யார்கூடவும் sexual encounter-க்கு தயாரா இருப்பாங்கன்னு பரப்புறீங்க? எனக்கு உன் மேலே attraction இல்லை குணால். அதனால உன்னோட physical advancements-ஐ நான் reject பண்றேன். That doesn’t mean I hate you. போய் self அடிச்சுட்டு தூங்கு”

குணால் பொருமாமல், கத்தி கலாட்டா பண்ணாமல் எழுந்து போனான். விக்னேஷ் குப்புற அடித்து படுத்தான். அவனுக்கு அலுப்பாக வந்தது. வாழ்க்கையில் Sex-ம் முக்கியம் தான். ஆனால் அதை மட்டுமே முக்கியமான காரணியாக வைத்து குணால் இயங்குவதற்கும் நரேன் மாமாவின் முடிவுக்கும் பெரிய வித்தியாசம் தோன்றவில்லை. குணால் அதை present-ல் வைத்து இயங்குகிறான். மாமா நாளைக்கு future-ல் நான் தனியாக என்ன பண்ணுவேன் என்று யோசிக்கிறார். இதையெல்லாம் தாண்டி மனசு என்று ஒன்று இருப்பதை யாரும் கண்டுகொள்வதாக தோன்றவில்லை. அப்படியே அயற்சியில் தூங்கிப்போனான்.

திடீரென்று குணால் விக்னேஷ்-ஐ உலுக்கியபடி “பாய்! உடோ… ஜல்தி” என்று பரபரப்பாக எழுப்பியதால் விக்னேஷ் பதறியபடி எழுந்து “என்ன ஆச்சு குணால்?” என்று கேட்க, அவன் வார்த்தை வராமல் வாசலை கை காட்டினான். விக்னேஷ் எழுந்து ஹாலுக்கு விரைய, அங்கே அருந்ததி ஆண்ட்டி சரிந்த மாராப்பை மேலே இழுத்துக்கொண்டு “விக்கி! உங்க மாமா… மாமா…” என்று அதற்கு மேல் வார்த்தை வராமல் தடுமாற, விக்கி அவரை விலக்கிக்கொண்டு நரேனின் வீட்டுக்குள் ஓடினான். அங்கே பெட் ரூம்-ல் நரேன் கண்கள் விட்டத்தை வெறிக்க, வாய் பிளந்து கிட்டத்தட்ட பிணம் போல கிடந்தார். விக்னேஷ் அவரது நெஞ்சில் காது வைத்து கேட்க, இதய துடிப்பு இருந்தது.

“குணால்…. கார் கி சாபி லாவோ” விக்னேஷின் குரல் உச்சஸ்தாயியில் ஒலிக்க, அது திறந்த கதவின் வாயிலாக காரிடார் எங்கும் ஒலித்தது.

விக்னேஷும் குணாலும் நரேனை பெட்ஷீட்டை stretcher போல செய்து அதை வைத்து தூக்கிக்கொண்டு வேகமாக காரை நோக்கி நடக்க, அருந்ததி கூடவே ஓட்டமும் நடையுமாக வந்தார். “உங்க மாமா நீங்க டாக்டர் கிட்டே இருந்து வந்ததுல இருந்தே ஒரு மாதிரி இருந்தார்… என்னவோ புதுசா என் மடியிலே தலை வைச்சு தூங்குனார். அவரை படுக்க வச்ச கொஞ்ச நேரத்துல எல்லாம் அருந்ததி நெஞ்சுல யாரோ அழுத்துற மாதிரி இருக்குன்னு முனகுனார்… அப்படியே சரிஞ்சுட்டார். அவருக்கு ஒன்னும் ஆகக்கூடாது கடவுளே!” அருந்ததி அழுததில் ஆச்சரியம் இல்லை.

விக்னேஷுக்கு நரேனுடைய collapse-க்கான காரணம் புரிந்தது. பின் சீட்டில் அருந்ததியின் மடியில் நரேன் கிடக்க, முன் சீட்டில் குணால் துணைக்கு வர, விக்னேஷின் கார் நகரத்து போக்குவரத்தை கிழித்துக்கொண்டு லாவகமாக வேகமாக முன்னேறி hospital-ஐ நோக்கி சீறிப்பறந்தது.

இந்த Sugar Daddy இன்னும் தொடரும்...

* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 25/12/2016
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2016/12/sugar-daddy-10-in-heart-beat.html
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day
Sugar Daddy 10. In the Heart beat

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top