| முன் கதை சுருக்கம்... |
|---|
| அர்ணாப் என் தந்தையை பார்க்க என் வீட்டுக்கு வருகிறான். இங்கே நான் அவனை என் முன்னாள் காதலனான விஷ்வாவை அறிமுகம் செய்து வைக்க, இருவரும் நன்றாக bond ஆகிறார்கள். நான் என்னை கைவிட்ட விஷ்வாவை பழிவாங்குவதாக வேண்டுமென்றே அவன் கண் முன்னாலேயே அர்ணாபை பாலியல் ரீதியாக சீண்டுகிறேன். அர்ணாப் அதை தடுத்ததால் அதை carry forward செய்து, எங்கள் வீட்டில் உடலுறவு கொள்ள முயற்சிக்க, என் அப்பா அதை பார்த்துவிடுகிறார். கையும் களவுமாக மாட்டிய குற்ற உணர்ச்சியில் நிற்க, என் அப்பாவின் verbal assault-ல் இருந்து காப்பாற்றிக்கொள்ள நான் களத்தில் குதிக்கிறேன். |
வீட்டில் எனக்கு சுயநினைவு வரும் முன்பே என்னவனின் நினைவு வந்துவிடும். இயல்பாகவே எனக்கு அவன் என்னோடு துணையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஆதங்கத்தோடு, அர்ணாப்புடன் கழித்த நெருக்கமான நிமிடங்களும் நினைவுக்கு வரும். உடனே என் உடம்பும் தன்னாலேயே நடுங்கும். சில சமயம் எனக்கு எங்கள் sex sessions நினைப்பு வந்தால் மூச்சுத்திணறல் வரும். ஆரம்பத்தில் நான் இந்த நிலையை எதிர்க்கவேண்டும் என்று ஓரளவுக்கு முயற்சித்தாலும், அடுத்தடுத்த Convulsive Electric Therapy session-கள் காரணமாக, தனிமையில் இருக்கும்போது பதற்றத்தில் நான் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை கூட உணரமுடியாத அளவுக்கு என் உடம்பு பலவீனமாகிவிட்டது.
| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
|---|
வெளியே ஏதோ பேச்சு குரல் கேட்கிறது. விஷ்வா தான் என் அப்பாவிடம் ஏதோ கத்திக்கொண்டிருக்கிறான். “அங்கிள்! நீங்க என்னவோ மறைக்கிறீங்க… எனக்கு இப்பவே கார்த்தியை பார்க்கனும்…” என்று உரத்த குரலில் சொல்கிறான். அப்பா “விஷ்வா! சும்மா கத்தி கலாட்டா பண்ணாத… அவன் சாமியார் மடத்துல இருக்கான்… உன் friend கேடுகெட்ட வழியில இருந்து திருந்தி வர்றதுக்கு இந்த சிகிச்சை எல்லாம் அவசியம்…” என்று வாய் கூசாமல் பொய் சொல்கிறார். நான் எழுந்து வெளியே போகவேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் உடம்பு அசைய மாட்டேன் என்கிறது. வெளியே விஷ்வா அப்பாவிடம் சண்டை போட, அந்த ஆவேசம் லேசாக என் உடம்பில் நுழைந்தது போல. நான் என் கைக்கு அருகே இருந்த bedpan-ஐ தட்டிவிட முயற்சிக்க, என்னால் வெறுமனே அதை லேசாக நகர்த்தும் அளவுக்கே என் உடம்பில் பலம் இருந்தது. நான் என் அதிர்ஷ்டத்தை நொந்துக்கொண்டு விரக்தியாக சிரிக்க, சிறிது நேரத்தில் அது மெல்ல மெல்ல சரிந்து தரையில் “டிங்க்” என்று பெரும் சத்தத்தோடு தரையில் விழுந்து உருண்டது.
“அங்கிள்! உள்ளாற என்ன சத்தம் கேட்குது?” விஷ்வாவின் குரல் கதவுக்கு அருகில் கேட்டது. அப்பா “விஷ்வா.. அது ஏதாவது பாத்திரம் விழுந்திருக்கும்… நான் பார்த்துக்குறேன்… முதல்ல நீ வெளியே போ” என்று சொன்னபோது அவர் குரலில் பயம் தெரிந்தது. விஷ்வா “அங்கிள்! நீங்க பொய் சொல்றீங்க… முதல்ல கார்த்தி ரூம் கதவை திறங்க..” என்று என் அறை கதவை திறக்க முயற்சிப்பதும், அதை தொடர்ந்து ஒரு தள்ளுமுள்ளும் கேட்டது. என் அப்பா “விஷ்வா! நீ இப்போ வெளியே போகலைன்னா நான் போலீஸை கூப்பிடுவேன்” என்று மிரட்ட, விஷ்வா “முதல்ல போலீஸை கூப்பிடுங்க… எனக்கும் அது தான் வேணும். அவங்க வந்து வீட்டுல கார்த்தி இல்லைன்னு சொல்லட்டும்” என்று மல்லுகட்டினான். என் அப்பா மாட்டிக்கொண்ட திருடன் போல “விஷ்வா! முதல்ல வெளிய போ… ப்ளீஸ்” என்று கெஞ்சுகிறார்.விஷ்வா யாரிடமோ மொபைலில் பேசுகிறான். ஒரு பத்து நிமிஷத்துக்கு என் அப்பா விஷ்வாவை கொஞ்சி, கெஞ்சி, பயமுறுத்தி பார்க்கிறார் ஆனால் அவன் மசிவதாக இல்லை. சிறிய அமைதிக்கு பிறகு இன்னொரு பேச்சுக்குரல் கேட்கிறது. அது ஆதர்ஷ் – வழக்கறிஞராக வேலை பார்க்கும் எங்கள் நண்பன். வக்கீல் என்பதால் அவன் குரலில் கண்டிப்பு இருந்தது. “சார்! நீங்க சொல்ற மாதிரி இப்போ வெளியே போறோம். ஆனால் Court-ல ஒரு Habeus Corpus (ஆட்கொணர்வு மனு) போட்டா நீங்க சொல்ற அதே போலீஸ் கார்த்தியை தேடிப்பிடிச்சு கோர்ட்ல வந்து நிறுத்தும். நீங்க ஏற்கனவே illegal practise-ன்னு தெரிஞ்சும் கார்த்தியை வலுக்கட்டாயமா conversion therapy-க்கு கூட்டிட்டு போயிருக்கீங்க… அதுக்கும் சேர்த்து நீங்க காலத்துக்கும் கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலையவேண்டி இருக்கும்” என்று ஆதர்ஷ் போட்ட போட்டில், என் அப்பா பயந்து அறைக்கதவை திறந்துவிட்டார்.
என்னை பார்த்ததும் விஷ்வா பதறியபடி மலமும், மூத்திரம் ஊறி நாறிக்கொண்டிருக்கும் என் கட்டிலில் முகம் சுளிக்காமல் உட்கார்ந்து என் தலையை தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டான். “கார்த்தி… என்னை பாருடா” என்று அவன் உடம்பு குலுங்கியதில் அவன் கண்ணில் இருந்து கண்ணீர் என் முகத்தில் சொட்டு சொட்டாக விழுந்தது. விஷ்வாவுக்கு என் மீது இன்னும் இருக்கும் காதல் இதை கூட செய்ய வைக்காதா? விஷ்வா என் அப்பாவை பார்த்து “யோவ்! நீயெல்லாம் படிச்ச மனுஷன்னு…” அதற்கு மேலே வார்த்தை வராமல் “த்த்தூ…” என்று காறி உமிழ்ந்தான். “எப்படி துறுதுறுன்னு இருந்த பையனை இப்படி நடைபிணமா மாத்தி வச்சிருக்கே… அதுக்கு நீயே உன் கையால அவனை கொன்னு போட்டிருக்கலாமே” என்று வார்த்தைக்கு வார்த்தை மரியாதையை cut செய்தான்.| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
|---|
“விஷ்வா… ஒரு அப்பனா என் நிலைமையில இருந்து பார்த்தீன்னா நான் செய்யுறது தப்பு இல்லைன்னு உனக்கே புரியும்…. இருக்குறது ஒரே பையன். அவன் இப்படி தடம் மாறி போனா அப்படியே விட்டுட முடியுமா? சரி பண்ணி கொண்டு வரனும்… அதை தான் நானும் பண்றேன்… சிகிச்சையில அப்படி இப்படி ஆகத்தான் செய்யும். அதுக்காக…” என்று அவர் என்னை நெருங்கினார். விஷ்வா அவரை தள்ளிவிட்டான். “பக்கத்துல வராதீங்க…” விஷ்வா கண்ணை உருட்டி பார்த்ததில் அப்பா கொஞ்சம் வெலவெலத்து போனார்.
“யோவ்! படிச்சவன் தானே நீ… முதல்ல ஒரு psychiatrist-ஐ பார்த்து இந்த sexual orientations பத்தி தெரிஞ்சுக்கிட்டு அதுக்கப்புறம் இந்த கருமத்தை எல்லாம் நம்பலாமா வேணாமான்னு யோசிச்சிருப்பே…. இப்போ சொல்றேன் கேட்டுக்கோ…. இந்த தன்பாலீர்ப்புங்குறது மனசு சம்பந்தப்பட்டது… மனசை இப்படி சித்ரவதை பண்ணி மாத்தமுடியாது….” ஒரு பெருமூச்சு வாங்கிட்டு “ஐயோ! என் கார்த்தியை இப்படி பண்ணிட்டியே…” என்று பெருங்குரலெடுத்து அழுதபடி என் முகத்தை தன் கன்னத்தில் ஏந்திக்கொண்டு அழுத விஷ்வாவை, நானும் விஷ்வாவும் காதலித்தபோது எங்கள் காதலை வீட்டில் சொல்லமுடியாத கோழை என்று அவன் மீது கடுங்கோபத்தில் இருந்த நான், அவனை அந்த நொடி முழு மனதாக மன்னித்தேன்.“ஆதர்ஷ்… ஒரு ஆம்புலன்ஸ் கூப்பிடு… முதல்ல கார்த்திய ஒரு hospital-க்கு கொண்டு போகலாம்… அதுக்கப்புறம் இந்த ஆளை என்ன பண்றதுன்னு யோசிக்கிறேன்” என்று விஷ்வா சொல்லி முடிக்கும் முன்பு ஆதர்ஷ் தன் mobile phone-ல் 108-ஐ அழைத்தான். “வேண்டாம் விஷ்வா…. பிரச்சனை ஆயிடப்போகுது… நான் எனக்கு தெரிஞ்ச doctor-ஐ வீட்டுக்கு வர சொல்லி பாக்கலாம்” என்று கெஞ்சிய என் அப்பாவை விஷ்வா பார்வையாலேயே சுட்டெரித்தான். “யோவ்! பக்கத்துல வந்தே…” என்று கைக்கு கிடைத்த கண்ணாடி டம்ப்ளர்-ஐ உடைத்து அவரை நோக்கி நீட்டி மிரட்டினான்.
சில நிமிடங்களில் எல்லாம் நான் பச்சை உடை அணிந்த இரண்டு பேர்களால் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு, அடுத்த சில நிமிடங்களில் நகரும் stretcher-ல் ஹாஸ்பிடல் விளக்குகளின் வெளிச்சம் தாங்கமுடியாமல் கண்களை மூடினேன். அந்த இருட்டு இதமாக இருக்க, கண்ணை திறக்காமல் அப்படியே மெல்ல மெல்ல மயக்க நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறேன். Hospital Corridor-ல் விஷ்வா பதற்றத்துடன் “மச்சான்…. தூங்காத….” என்று குரல் கொடுத்தபடி stretcher கூடவே ஓடிவந்தான். அப்படியும் நான் கண்ணை திறக்கவில்லை. விஷ்வாவின் அறை பளீரென்று என் கன்னத்தில் இடியாக இறங்கியபோது நான் திடுக்கிட்டு கண் விழித்தேன். ICU-வின் கதவுகள் அவனுக்கு மூடும் முன்பு விஷ்வா என் தாடையை பிடித்து “கார்த்தி! கொஞ்ச நேரம்… ப்ளீஸ்… கண்ணை மூடாத…” என்று என் கன்னத்தில் முத்தம் வைத்தான். விஷ்வாவின் முத்தம் எனக்கு ஆறுதலாக இருந்தது. மெல்ல புன்னகைத்தேன். நான் படுத்திருந்த stretcher ICU-வுக்குள் சென்றதும் கதவு மூடப்பட்டது.


