கா.ஒ.கா 10 – Conversion Therapy

கா.ஒ.கா 10. எனக்கு Conversion Therapy…

இது காத்துவாக்குல ஒரு காதல் தொடர்கதையின் 10-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
அர்ணாப் என் தந்தையை பார்க்க என் வீட்டுக்கு வருகிறான். இங்கே நான் அவனை என் முன்னாள் காதலனான விஷ்வாவை அறிமுகம் செய்து வைக்க, இருவரும் நன்றாக bond ஆகிறார்கள். நான் என்னை கைவிட்ட விஷ்வாவை பழிவாங்குவதாக வேண்டுமென்றே அவன் கண் முன்னாலேயே அர்ணாபை பாலியல் ரீதியாக சீண்டுகிறேன். அர்ணாப் அதை தடுத்ததால் அதை carry forward செய்து, எங்கள் வீட்டில் உடலுறவு கொள்ள முயற்சிக்க, என் அப்பா அதை பார்த்துவிடுகிறார். கையும் களவுமாக மாட்டிய குற்ற உணர்ச்சியில் நிற்க, என் அப்பாவின் verbal assault-ல் இருந்து காப்பாற்றிக்கொள்ள நான் களத்தில் குதிக்கிறேன்.

கா.ஒ.கா 10. எனக்கு Conversion Therapy…
இரவின் இருட்டை சாலையோர ஹாலோஜன் விளக்குகளின் ஆரஞ்சு நிற ஒளி விரட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் எங்கள் மனதில் இப்போது தான் இருள் படர ஆரம்பிக்கிறது. காதலித்தபோது உலகம் பெரிதாக தெரியவில்லை. ஆனால் எதிர்பாராத பிரச்சனை வரும்போது சிறு தூசி கூட இமயமலையாக தெரிகிறது. என் Royal Enfield என்னையும் என்னவனையும் சுமந்துக்கொண்டு சீராக விமான நிலையத்தை நோக்கி போகிறது. வீட்டில் இருந்து அப்பாவின் கோபத்தை அதிகரிக்க வேண்டாம் என்று நள்ளிரவு என்று கூட பாராமல் உடனே கிளம்பிய அர்ணாபை நானே திருப்பி அனுப்ப ஏர்போர்ட்டுக்கு அழைத்துக்கொண்டு போகிறேன். நான் என்னை அவன் வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு கேட்டபோது ஒருவேளை அவன் பெற்றோர்கள் என்னை அவமதித்துவிட்டால் அது எங்கள் உறவை பாதிக்கும் என்று தயங்கினான். ஆனால் அதுவே இங்கு நடந்ததும் எனக்கு அர்ணாப் என்னை விட்டு போய்விடுவானோ என்று பயம் பிடித்துக்கொண்டது.

Airport parking-ல் அர்ணாப் என் கையை பிடித்துக்கொண்டு “பயப்படாதே கார்த்தி! இப்படி பிரச்சனையே இல்லாம நமக்கு acceptance கிடைச்சிடுச்சுன்னா நாளைக்கு நம்ம குழந்தைங்க கிட்டே சொல்றதுக்கு சுவாரசியமான கதை இருக்காது. எவ்வளவு வருஷமானாலும் நான் உனக்காக காத்திருப்பேன்… அப்பாவோட கோபம் குறையுற வரைக்கும் அவர் முன்னாடி என் கிட்டே phone-ல பேசாதே… நம்மளோட உறவு வார்த்தைகளால தான் வாழனும்ங்குற நிலைமையை தாண்டி அடுத்த stage-க்கு போயிடுச்சு” என்று என் விரல்களை எடுத்து முத்தமிட்டபோது வார்த்தைகள் வராத அளவுக்கு துக்கம் என் தொண்டையை அடைத்தது. வெளியே எனக்கு தைரியம் சொன்னாலும் உள்ளுக்குள்ளே அவனும் உடைந்து போயிருப்பதை கஷ்டப்பட்டு மறைக்க முயற்சிக்கும் அர்ணாப் எனக்குள் பிரமாண்டமாக விஸ்வரூபம் எடுத்தான்.

கா.ஒ.கா 10. எனக்கு Conversion Therapy…
வீட்டுக்கு வந்ததும் கேட்ட என் அப்பாவின் ஏச்சும் பேச்சை எழுதி ஜாலியாக கதை படிக்க வந்த உங்களை கடுப்படிக்க வேண்டாமென்று அவற்றை எழுதாமல் தவிர்க்கிறேன். வார இறுதி முடிந்ததும் நான் அலுவலகத்துக்கு கிளம்பினேன். அப்பா “வழக்கமா வீட்டுல இருந்து தானே வேலை செய்வே? திடீர்னு ஆஃபீஸுக்கு எதுக்கு போறே?” என்று கேட்டதற்கு பதில் சொல்லாமல் நான் ஷூ மாட்டினேன். என் மௌனம் அப்பாவை கடுப்பேற்றியிருக்கும் போல… “ஆஃபீஸுக்கு தான் போறியா இல்லை அந்த தேவடியாப் பையன் கூட ஏதாவது லாட்ஜ் ரூம்ல கும்மாளம் போடப்போறியா?” என்று கேட்க நான் அவரை சுட்டெரிப்பது போல பார்த்துவிட்டு என் ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டு படியிறங்கினேன். அப்பா மீதான கோபத்தை வண்டியின் கிக்கரில் உதைத்து காட்டி அதை கதறலுடன் சாலையில் ஓடவிட்டேன்.

வீட்டின் இறுக்கத்தை விட பாதி காலியான அலுவலகத்தின் அமைதி கொஞ்சம் நிம்மதி கொடுத்தது. அலைபேசியில் அர்ணாப்பின் குரல் கேட்ட சமயத்தில் எல்லாம் என் மனசுக்கு மருந்து போட்டது போல இதமாக இருந்தது. என் நிலையை அர்ணாப் நன்றாக புரிந்துக்கொண்டிருந்ததால் முடிந்த வரைக்கும் அவன் உரையாடலை light-ஆக கொண்டுபோனான். மாலை வீட்டுக்கு வந்தபோது வாசலில் கூடுதல் செருப்புகள் கண்டு தயக்கத்தோடு living room-க்குள் நுழைந்தேன். காவி சால்வை, காவி வேட்டி, வெள்ளை சட்டை அணிந்த இரண்டு பேர் என் அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னை பார்த்த பார்வையில் “இவன் தானா?” என்ற தொனி இருந்தது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

கா.ஒ.கா 10. எனக்கு Conversion Therapy…
ஒரு வயதான சாமியார் “பயப்படாதீங்க சார்! நேரமும் சகவாசமும் சரியில்லைன்னா இப்படி தான் ஆகும். அதை நிவர்த்தி பண்ண தானே நாங்க எல்லாம் இருக்கோம்… ஒரு மண்டலம் பூஜை பண்ணினா எல்லாம் சரியாயிடும்… பையனை நம்ம ஆசிரமத்துல முழுசா வச்சிருக்கனும்… உங்களை தவிர யாரையும் பார்க்க அனுமதிக்க மாட்டோம்…” என்று சொன்னபோது எனக்கு கொஞ்சம் திகீரென்று இருந்தது. என் அப்பாவுக்கும் ஏதோ யோசனை வந்தது போல… நெற்றியை சுருக்கியபடி தரையை பார்த்தார்.

ஒரு காவி வேட்டி “கவலை படாதீங்க! சிகிச்சை அப்போ நீங்க அந்த session-ல இருக்கலாம்” என்றதும் என் அப்பா ஆறுதல் அடைந்தார். எனக்கு வியப்பாக இருந்தது. அர்ணாபின் அப்பா படிக்காதவர். அவர் தன் மகன் Gay என்று தெரிந்து அவனை குடும்பத்தோடு சேர்க்காமல் ஒதுக்கி விட்டார். அவனை இப்படி corrective therapy-க்கு ஆளாக்கவில்லை. ஆனால் மெத்த படித்து உயர்ந்த வேலையில் இருந்த என் அப்பா தன் மகனின் sexual orientation-ஐ இந்த Therapy-கள் மூலம் மாற்ற முடியும் என்று எங்கள் இருவரையும் துன்பத்துக்கு ஆளாக்க துணிந்துவிட்டார். ஒருவகையில் Ignorance is a bliss என்பது இது தானோ?

கா.ஒ.கா 10. எனக்கு Conversion Therapy…
To cut the long story short… என் அப்பாவின் emotional blackmail-க்காக இல்லை என்றாலும், எனது காதலை எந்த பூஜை சமாச்சாரத்தாலும் மாற்றமுடியாது என்பதை நிரூபிப்பதற்காக நான் அந்த “மண்டல பூஜை”க்கு ஒத்துக்கொண்டு Loss of pay-ல் leave போட்டேன். திரும்பி சென்ற மூன்றாவது நாள் நான் எதிர்பாராத விதமாக அர்ணாப் என் அலுவலகத்து வாசலில் வந்து நின்றதும், எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவன் முகத்தில் கோபம், குழப்பம், அன்பு, அனுதாபம் என எல்லா உணர்ச்சிகளும் வந்து போயின.

அர்ணாப் “பிரணயி! இந்த Conversion therapy எல்லாம் உன்னால தாங்க முடியாது… எனக்கு ஏற்கனவே அந்த அனுபவம் இருக்கு. நீ எதுவும் யோசிக்காம, பேசாம என் கூட கொல்கத்தாவுக்கு வந்துடு… அப்பாவோட கோபம் கொஞ்ச நாளுக்கு அப்புறம் தணிஞ்சிடும். Meanwhile we’ll think of alternatives” என்ற போது நான் அவன் விரல்களை எடுத்து முத்தமிட்டேன். “இல்லை அர்ணாப் பாபு… அப்பாவுக்கு என் love-வோட intensity-ஐ நிரூபிக்க எனக்கு இந்த therapy-யை தோற்கடிச்சு காட்டனும்… அவ்ளோ தான்” என்று நான் சொன்னதற்கு “உன் love இல்லை.. நம்ம love..” என்று என் தலையில் செல்லமாக தட்டினான். நான் சிகிச்சைக்கு செல்லவேண்டிய அந்த நாளும் வந்தது. என் அப்பா என் mobile phone-ஐ தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டார்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

இங்குள்ள 425+ கதைகளை navigate, explore செய்ய எந்தெந்த features-களை உபயோகிக்கிறீர்கள்?

View Results

Loading ... Loading ...

நாங்கள் நகரத்தை தாண்டி பெரிய மதில் சுவர்கள் கொண்ட அந்த ஆசிரமத்துக்குள் நுழைந்தபோது எனக்கு திக் திக்கென்று இருந்தது. புலனாய்வு செய்யும் investigative journalist சமூகவிரோதி குகைக்குள் செல்வது போல இருந்தது. பார்க்க சாதாரண ஆசிரமம் போல இருந்தாலும், அந்த பக்த தன்னார்வலர்கள் ஒரு மார்க்கமாக இருந்தார்கள். முரட்டுத்தனமாக குண்டர்கள் போல இருந்த அவர்களை பார்த்ததும் எனக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது. ஆனாலும் இவை வேலைக்கு ஆகாது என்பதை என் தந்தைக்கு நிரூபிக்கவும், என் காதலின் உறுதியை சோதிக்கவும் தான் நான் இந்த சோதனை முயற்சிக்கு என்னை ஆட்படுத்திக்கொள்கிறேன். ஒரு நீண்ட அறைக்குள் என்னை போல இன்னும் சில ஆண்களையும் பெண்களையும் அழைத்துச்சென்றார்கள்.

கா.ஒ.கா 10. எனக்கு Conversion Therapy…
இரண்டு “தன்னார்வலர்களுக்கு” அங்கே வந்திருக்கும் ஆண்களை விட பெண்கள் மீது ஆர்வம் என்பதை அவர்களது body language-ஏ சொன்னது. அவர்கள் அந்த பெண்களை பார்த்த பார்வையில் காமவெறி இருந்ததென்றால், அந்த பெண்கள் மிரண்டு பயந்து பார்த்தார்கள். சாமியார் வந்து எங்கள் அனைவருக்கும் ஒரு தீர்த்தம் கொடுத்தார். நான் அதை உறிஞ்சிய சில நொடிகளில் என் மண்டைக்குள் மப்பு ஏற ஆரம்பித்தது. ஆண்களை விட்டுவிட்டு மற்ற இரண்டு பெண்களையும் கொஞ்ச தூரத்தில் உள்ள அறைக்கு போகுமாறு சொன்னார். அந்த பெண்கள் முரண்டு பிடிக்க, அவர்களுக்கு சரமாரியாக அறைகள் விழுந்தன. அதுவும் அவர்களது பெற்றோர்களின் கண் முன்பே. சிறிது நேரத்தில் அந்த பெண்களை அந்த “தன்னார்வலர்கள்” அறைக்குள் இழுத்துச்சென்றதும் கதவுகள் மூடப்பட்டன. இங்கே அந்த lesbian பெண்களின் அம்மாக்கள் முந்தானையால் வாயை பொத்திக்கொண்டு குலுங்கி குலுங்கி அழுதனர்.

கா.ஒ.கா 10. எனக்கு Conversion Therapy…
“அந்த பொண்ணுங்க உடம்புக்குள்ள ஆம்பள ஆவி இருந்துட்டு இவங்க மூலமா பொம்பளை உடம்பு தேடுது.. அதனால சாமியாருங்க அந்த பொண்ணுங்களை கன்னி கழிக்குறப்போ உள்ள இருக்குற ஆம்பளை பிசாசு ஓடிப்போயிடும்… அதனால அந்த பொண்ணுங்கள “corrective rape” பண்றாங்க… அந்த ஆம்பள பேய்ங்க வெளியேறுற வரைக்கும் நிறைய தடவை கூட இந்த correction rape நடக்கும்” என் பின்னால் உட்கார்ந்திருந்த ஆண்களின் பெற்றோர்களில் ஒருவர் அடுத்தவரிடம் சொன்னபோது அந்த மந்தகாச நிலையிலும் என் முதுகு தண்டு பயத்தில் சிலிர்த்தது. சிகிச்சை என்ற பெயரில் பெற்றவர்களின் கண் முன்னே பாலியல் பலாத்காரம் என்பது எத்தகைய கொடுமை? அதை அந்த பெற்றோர்கள் நம்புவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?

கா.ஒ.கா 10. எனக்கு Conversion Therapy…
“அப்போ ஆம்பளைங்களுக்கு?” என்ற அடுத்தவரின் கேள்விக்கு, “அவங்களுக்கு கிட்டத்தட்ட அதே treatment தான்…” என்று பதில் வந்தது. சில நிமிடங்களில் எங்கள் உடைகள் உறிக்கப்பட்டு அனைவரும் நிர்வாணமாக மல்லாக்க படுக்கவைக்கப்பட்டோம். எங்களுக்கு கொடுக்கப்பட்ட தீர்த்தம் நன்றாக வேலை செய்கிறது. எங்களுக்கு என்ன நடக்கிறது என்று ஓரளவுக்கு சுயநினைவு இருந்தாலும், எங்களால் எதிர்வினை ஆற்ற முடியாத அளவுக்கு அந்த போதை மருந்து எங்களை கட்டுபடுத்தி வைத்திருந்தது. ஒரு பெண் வந்தாள்… ஜாக்கெட் இல்லாமல் வெறும் புடவை முந்தானையால் தன் மேலுடம்பை மூடியிருந்தாள். முந்தானையை விசிறிவிட்டு தன் வெற்று மார்பகங்களால் ஆண்களின் உடம்புகளை தேய்த்து காம சுகம் காண வைக்க முயற்சித்தாள். அவளுடைய கருத்த பெரிய முலைகள் என் உடையில்லா மேலுடம்பில் தேய்த்த போது நான் அந்த நிலையிலும் குமட்டி வாந்தி எடுத்தேன்.

கா.ஒ.கா 10. எனக்கு Conversion Therapy…
அந்த சாமியார் என் அப்பாவிடம் “உங்க பையனை ஆட்டி வைக்கிற மோகினி ரொம்ப powerful-ஆ இருக்கா… அதனால தான் அவ ஆம்பளை தவிர வேற எந்த தீண்டலையும் ஏத்துக்க மாட்டேங்குறா… அதனால இன்னும் கூடுதலா மெனக்கெடனும்” என்று சொன்னபோது எனது (அப்)பாவி அப்பா “நீங்க என்ன வேணும்னாலும் செய்யுங்க சாமி! எனக்கு என் பையன் குணமாகனும்.. அவ்வளவு தான்” என்று அவர் கையை பிடித்துக்கொண்டு தழுதழுத்தார். அடுத்த சில நாட்களில் எனக்கு அந்த ‘தீர்த்தம்’ நிறைய கொடுக்கப்பட்டு எப்போது போதை நிலையிலேயே வைக்கப்பட்டேன். சாம தான பேத தண்ட என எல்லா வழிமுறைகளும் எங்கள் மீது பிரயோகப்படுத்தி எங்களை “மீட்டெடுக்கும்” முயற்சிகள் நடந்தன.

ஓரளவுக்கு சுயநினைவில் இருக்கும்போது எங்களை சொற்பொழிவுக்கு அழைத்து இந்த ஓரினச்சேர்க்கை சமுதாயத்துக்கு எதிரானது என்பதால் “மாறாவிட்டால்” சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படுவோம் என்று பயமுறுத்தப்பட்டோம். நான் “போதையில்” இருக்கும் போது என் காதுக்கு அருகில் “இந்த ஹோமோ நாய்ங்களை எல்லாம் தூக்குல போடனும்… நடுத்தெருவுல ஓடவிட்டு நாயை சுடுற மாதிரி சுட்டு தள்ளனும்” என்கிற ரீதியில் மணிக்கணக்காக “அர்ச்சனைகள்” speaker-ன் மூலம் ஓடவிட்டு மனசில் தன்பாலீர்ப்பை பற்றி அருவெறுப்பான எண்ணங்களை ஏற்படுத்த முயற்சி நடந்தது. அது போதாதென்று இந்த மாதிரி இயற்கைக்கு மாறாக இருப்பதால் LGBTQ-க்கள் இந்த உலகத்தில் வாழ தகுதியற்றவர்கள், அவர்கள் மறைந்தால் தான் உலகம் “சுத்தமாகும்” என்பதால் அவர்கள் தற்கொலை செய்து இறந்தால் தியாக செம்மலாக சொர்க்கத்துக்கு போவார்கள் என்று மறைமுகமாக தற்கொலைக்கு தூண்டப்பட்டோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top