ஜெய்யும் ஜெஃப்பும் – போயிட்டு “வா”ங்க..

ஜெய்யும் ஜெஃப்பும் – போயிட்டு “வா”ங்க..

இது ஜெய்யும் ஜெஃப்பும் தொடர்கதையின் 5-வது அத்தியாயம்.

ரியோ டி ஜெனிரோவின் கலியோ விமான நிலையம்… ஜெய் தனது baggage-ஐ check-in செய்துவிட்டு ஜெஃப்புடைய கையை கோர்த்துக்கொண்டு லாபியில் உட்கார்ந்திருந்தான். ஃப்ளைட்டுக்கு இன்னும் 2.5 மணி நேரம் இருந்தது. எதிர்பார்த்ததை விட சீக்கிரமாக check-in முடிந்து விட்டதால் இருவருக்கும் ஒன்றாக செலவழிக்க கூடுதல் நேரம் கிடைத்தது. ஜெஃப் ஜெய்யின் கையை கோர்த்துக்கொண்டு மறு கையை ஜெய்யின் தோளை சுற்றி போட்டுக்கொண்டு ஜெய்யின் தோளில் கன்னத்தை சாய்த்தவாறு அமர்ந்திருந்தான். ஜெய் தன்னுடைய தலையை ஜெஃப்பின் தலை மீது சாய்த்திருந்தான்.

ஜெஃப் மெதுவான குரலில் “சீக்கிரம் வந்துடு ஜெய்…” என்றான்.

ஜெய் “எவ்வளவு சீக்கிரம் முடியுதோ அவ்வளவு சீக்கிரம் வந்துடுறேண்டா..” என்றான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

ஜெஃப் “ஊருக்கு போனதும் மாமா போகவேண்டாம்னு சொன்னாங்க… அவங்க சொன்னாங்க.. இவங்க சொன்னாங்கன்னு மனசை மாத்திக்கிட்டு எனக்கு அதிர்ச்சி குடுக்காதே ஜெய்… ஏன்னு தெரியலை.. ஏதோ மனசு பாரமா இருக்கு” என்றான். அதை சொல்லும்போதே அவன் கண்ணில் ரெண்டு சொட்டு தண்ணீர் எட்டிப்பார்த்தது.

Jai Jeff Kiss

ஜெய் அவன் கண்ணீரை துடைத்தவாறே பொது இடம் என்ற பிரக்ஞை இல்லாமல் ஜெய்யின் உதடுகளை கவ்வினான். எவ்வளவு நேரம் கிஸ்ஸடித்தானோ தெரியவில்லை… சுற்றிலும் உள்ள உலகத்தை பற்றி இருவருக்கும் கவலை இல்லை… முத்தமிட்டு முடித்ததும் ஜெய் ஜெஃப்பின் கண்களை ஊடுருவி பார்த்து, ஜெய்யின் கன்னங்களை தன் உள்ளங்கைகளில் ஏந்தியவாறே “நான் என்னோட உயிரை உன் கிட்டே விட்டுட்டு போறேன்… என்னாலயும் ரொம்ப நாளெல்லாம் தாங்க முடியாது… Class IV visa கிடைச்ச உடனேயே அடுத்த நாளே கிளம்பி வந்திடுறேன்..” என்றான்.

ரொம்ப நேரம் கழித்து கலியோ விமான நிலைய ஒலிபெருக்கியில் அறிவிப்புகள் வர, ஜெய் தன்னுடைய passport-ஐயும், immigration form-ஐயும் எடுத்து சரிபார்த்துக்கொண்டு “ஜெஃப்.. நான் immigration counter-க்கு போகட்டுமா?” என்றான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

ரொம்ப கஷ்டப்பட்டு உஸார் பண்ணுன ஆண் நண்பர் கூட வெறியோட படுக்க போறீங்க... அவர் உதட்டு முத்தம் கூடாது, வாய் போடனும்னு அடம் பிடிக்கிறார்... என்ன பண்ணுவீங்க?

View Results

Loading ... Loading ...

ஜெஃப்பும் ஜெய்யும் எழுந்து Departure Gate-ஐ நோக்கி கைகளை இறுக்க கோர்த்துக்கொண்டு நடந்தனர். இருவருக்கும் கேட்டுக்கு இருக்கும் இடைவெளி ஒவ்வொரு அடியும் நூறடிகளாக நீளக்கூடாதா.. அப்போதாவது ஒன்றாக நடக்கும் நேரம் அதிகரிக்குமே என்று தோன்றியது. ஆனால் என்ன செய்வது? டிபார்ச்சர் கேட்டுக்கு அருகில் வந்ததும் ஜெஃப் ஜெய்யை கடைசி முறை இறுக்க கட்டிக்கொள்ள, ஜெய் உணர்ச்சிப்பெருக்கை கட்டுப்படுத்த முடியாமல் ஜெஃப்பின் உதடுகளை தன் உதடுகளால் அடைத்து தன் நாக்கை ஜெஃப்பின் வாய்க்குள் விட்டு சுழற்றினான். ஜெய்யின் கைகள் hand luggage-ஐ விடுத்து ஜெஃப்பின் இடுப்பை இறுக்க கட்டிக்கொண்டு முத்தமிட்டவாறே மெலிதாக மேலே தூக்க, ஜெஃப்பும் தன் நுணிவிரலால் நின்று முத்தத்தை தொடர்ந்தான்.

Jai Jeff Airport Kiss

ஜெய் தன்னை விடுவித்துக்கொண்டு ஜெஃப்பின் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு “போயிடு வர்றேன்” என்றான்.

ஜெஃப் “போயிட்டு வா.. ஜெய்” என்று “வா”வை மட்டும் அழுத்தமாக சொன்னான்.

ஜெய் கண்களில் கண்ணிரும், உதட்டில் மெல்லிய புன்னகையுமாக, டிபார்ச்சர் கேட்டில் மறைந்தான். ஜெஃப் திரும்பி திரும்பி பார்த்தவாறே car parking-ஐ நோக்கி நடந்தான்.

காலிங் பெல் சத்தம் கேட்டதும் ஜெஃப்பின் அம்மா கதவை திறந்தார். ஜெஃப் தரையை பார்த்தபடியே உள்ளே நுழைந்தான்.

ஜெய் பத்திரமா ஃப்ளைட் ஏறிட்டானா?

“ம்ம்…”

“check-in-லயோ இல்லை immigration-லயோ எதுவும் பிரச்சனை இல்லையே”..

“ம்ம்.. இல்லை” என்று சொன்னபடியே ஜெஃப் தன் அறைக்கு செல்ல முயன்றான்.

“ஜெஃப்… இருந்து காஃபி குடிச்சுட்டு அப்புறம் போ” என்று அம்மா கொஞ்சம் கண்டிப்பான குரலில் சொல்ல, ஜெஃப் சோஃபாவில் உட்கார்ந்தான். அம்மா இரு கோப்பைகளில் காஃபி எடுத்துக்கொண்டு அவன் அருகில் அமர்ந்து ஜெஃப்பின் கைகளில் ஒரு கப்பை திணித்தார்.

ஜெஃப் கப்பை வாங்கி ஒரே மொடக்கில் குடிக்க போனான்.

“ஜெஃப்… ஜெய் இன்னும் 1 மாசத்தில் திரும்ப வந்துட போறான்… அவன் இங்கேயே நிரந்தரமா இருக்க தானே இப்போ போறான். நீ ஏன் இவ்வளவு கஷ்டப்படுறே?” என்றார்.

“தெரியலைம்மா…” என்று சொல்லும்போதே ஜெஃப் கிட்டத்தட்ட உடையும் நிலைமைக்கு வந்துவிட்டான். “என் புத்திக்கு தெரியுது… ஆனா மனசு ஏனோ கஷ்டப்படுது” என்றான்.

“என் பையன் நல்லா muscles எல்லாம் வச்சு பயங்கரமா macho-ஆ இருக்கான்னு பார்த்தா உள்ளே மனசு இவ்வளவு பலவீனமானதான்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு” என்றார்.

“அம்மா… நான் உன் கிட்டே ஒன்னு சொல்லனும்..”

“சொல்லு..” என்று சொல்லி ஜெஃப்பின் முகத்தை தீர்க்கமாக பார்த்தார்.

ஜெஃப் அம்மாவின் கண்களை சந்திக்க முடியாமல் பார்வையை கீழே தாழ்த்தி “அம்மா… நான் ஜெய்யை சீரியஸா லவ் பண்றேன்னு தோணுது”

“What???”

“அம்மா… எனக்கு அவன் மேலே நட்பை தாண்டி ஒரு ஈர்ப்பு… நான் ஒரு…. I am a …” என்று வார்த்தை தடுமாறியது.

“நீ Gay-யா இருப்பேன்னு எனக்கு சில வருஷங்களுக்கு முன்னாடியே ஒரு சந்தேகம் இருந்துச்சு… சில சந்தர்ப்பங்கள்லே அது உறுதியும் ஆச்சு… ஆனா அது நான் உன் மேலே வச்சிருக்குற அன்பை பாதிக்கலை.. உன்னோட sexuality எப்படியா இருந்தாலும், நீ நல்ல மனுஷனா, சந்தோஷமா இருந்தா அதுவே போதும்.. நீ ரொம்ப நல்ல பையன் ஜெஃப்… You are such a sweetheart. உன்னுடைய sexual orientation ஒரு குறையே இல்லை” என்று சொல்லிவிட்டு அவன் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டார்.

ஜெஃப் அம்மாவின் தோளில் முகம் புதைத்தான். அவன் கண்ணில் அவனை அறியாமலேயே கண்ணீர் பெருகி அம்மாவின் தோளை நனைத்தது.

“ஜெஃப்… நீ Gay-ங்குறது எனக்கு ஒரு விஷயமே இல்லை… ஆனா ஒரு நல்ல partner கூட நீ சந்தோஷமா இருக்குறது தான் எனக்கு முக்கியம். ஏன்னா ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டா உனக்குன்னு பிறக்குற குழந்தை, அதோட எதிர்காலம்னு உன்னுடைய வாழ்க்கையோட perspective மாறும். ஆனால் இந்த ஓரினச்சேர்க்கையில குழந்தை பிறக்குறதுங்குற விஷயம் இல்லாததால கே-க்களுக்கு தங்கள் உறவில கொஞ்ச நாளுக்கு பரஸ்பர ஈர்ப்பு குறைஞ்சதுக்கப்புறம் சலிப்பு வந்திடும். திசைமாறி தறிகெட்டு போயிடுறாங்க… பொதுவாகவே gay-க்கள் எல்லாம் மாசத்துக்கு ஒரு boyfriend வச்சுக்குறவங்க, வெறுமனே செக்ஸுக்காக அலையுறவங்கங்குற பிம்பம் இருக்கு.. என் பையன் அப்படி இருக்க கூடாதுன்னு விரும்புறேன்.”..

ஜெஃப் பக்கம் கணத்த மௌனம்.

“நீ ஒத்த பையனா போயிட்டே ஜெஃப்… நான் உயிரோட இருக்குற வரைக்கும் உனக்கு வாழ்க்கையிலே ஒரு பிடிப்பு இருக்கும்.. என் காலம் முடிஞ்சதும் நீ ஒரு துணை இல்லைன்னா தனியா, குறிக்கோள் இல்லாத வாழ்க்கைக்கு போயிடுவே… அது உன்னை டிப்ரெஸ் பண்ணிடும்.. என்னோட ஒரே கவலை அது தான்.. உன்னோட செக்சுவாலிட்டி இல்லை… அதனால நீ கல்யாணம் மாதிரி சந்தோஷமோ துக்கமோ ஒரே பார்ட்னர் கூட எப்பவும் துணை நின்னு வாழ்ந்து காட்டனும்.. நீ தேர்ந்தெடுக்குற பார்ட்னர் அப்படிப்பட்டவனா இருக்கனும்… நீயும் உன்னோட பார்ட்னரும் கடைசி வரைக்கும் சந்தோஷமா இருப்பீங்கன்னு தீர்மானம் பண்ணுனீங்கன்னா ஒரு குழந்தையை தத்தெடுத்துக்குட்டு உங்க வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் குடுங்க..”.

ஜெஃப் மெதுவாக “ம்ம்..” என்றான்.

அம்மா மேலும் தொடர்ந்தார் “ஜெய் நல்ல பையன்னு தான் எனக்கும் தோணுது. ஆனா அவன் இந்தியன்.. நீ பிரேஸிலியன். அவங்க கலாச்சாரம் வாழ்க்கை முறைகள் எல்லாம் வேற.. நீ பிறந்து வளர்ந்த கலாச்சாரம் வேற… ரெண்டு பேரும் நல்லவங்களா இருந்தாலுமே கலாச்சார, வாழ்க்கை முறைகள் எல்லாம் சில சமயத்தில் உறவிலே சிக்கல்களை ஏற்படுத்தும். அந்த சிக்கல்களுக்கு யாரையும் குறை சொல்லவும் முடியாத அளவுக்கு ரெண்டு பேருமே சரியா இருக்கலாம்… உறவுங்குறது ரெண்டு பேர் சேர்ந்தது. நீ ஜெய்யை நினைக்கிற மாதிரி அவன் உன்னை காதலனா நினைக்கிறானான்னு கன்ஃபர்ம் பண்ணிக்கோ. அவன் உன் கூட உண்மையாலுமே உறவில இணைய விரும்பினாலும், அதை சமுதாயத்துக்கு முன்னாடி சொல்ற பக்குவமும், தைரியமும் இருக்கான்னு தெரிஞ்சுக்கோ. எந்த உறவும் திருட்டுத்தனமா இருட்டுல இருக்கக்கூடாது. அதே சமயம் உங்க உறவு வெறும் செக்ஸுக்கான உறவா இருக்ககூடாது.. அதனால நீ ஜெய்யை பத்தி ஒரு தீர்மானத்துக்கு வர்றதுக்கு முன்னாடி எல்லா விஷயங்களையும் ஆயிரம் வாட்டியாச்சும் யோசிச்சுக்கோ…. அவனும் உன்னை மாதிரி சீரியஸா யோசிக்கிற வரைக்கும் நீ இந்த relationship-ஐ ரொம்ப தீவிரமா எடுத்துக்கிட்டு எந்த முடிவுகளும் எடுக்காதே… நாளைக்கு அவன் சமுதாயத்துக்கு பயந்துட்டு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு திரும்ப போயிட்டா நீ உடைஞ்சிடுவே… ஒருதலை காதல்ல வாழ்ற வலி ரொம்ப கொடுமையானது. என் பையன் தன் காலத்தை அந்த வலியோட வாழுறதை பாக்குற கொடுமை எனக்கு மட்டுமில்ல வேற எந்த தாய்க்கும் வர கூடாது. ” என்றார்.

ஜெஃப் முனகலாக “சரிம்மா..” என்றான்.

“சரி! உன் ரூமுக்கு போ… ரெஸ்ட் எடுத்துக்கோ. தூங்கி எழுந்தினா மனசு கொஞ்சம் தெளிவா இருக்கும்.. இனிமேல் ஜெய்யோடு பழகும்போது உங்க உறவு எந்த திசையிலே போகுதுன்னு அப்பப்போ ஒரு ரியாலிட்டி செக் பண்ணிக்கோ.. அதுக்காக எல்லாத்தையும் சந்தேகத்தோட பார்த்து உங்க நட்பை பாழாக்கிக்காதே… Have fun… அடுத்த தடவை அவன் கூட WhatsApp chat பண்ணும்போது நான் அவனை ரொம்ப கேட்டதா சொல்லு..” என்று சொல்லிவிட்டு ஜெஃப்பின் காலி கப்பையும் எடுத்துக்கொண்டு கிச்சன் மேடைக்கு சென்றார்.

ஜெஃப் தன் அறைக்கு சென்று கட்டிலில் பொத்தென்று விழுந்தான். கட்டிலில் கிடந்த ஜெய்யின் பஜாமா நைட் டிரெஸ்ஸை கட்டிக்கொண்டு முகம் புதைத்தான். ஃப்ளைட் சத்தம் கேட்டு ஜெஃப் ஜன்னல் வழியே பார்த்தான். வானில் ஏர் ஃபிரான்ஸ் விமானம் ஜெய்யை சுமந்துக்கொண்டு பறந்தது. ஜெஃப் மனதில் ஒரு தெளிவு பிறந்தது. ஜெஃப் ஃப்ளைட்டுக்குள் இருக்கும் தன் உயிர் ஜெய்க்கு டாட்டா காட்டினான்.

இந்த ஜெய்யும் ஜெஃப்பும் இன்னும் தொடரும்...

* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 02/08/2013
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2013/08/blog-post.html
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day
ஜெய்யும் ஜெஃப்பும் – போயிட்டு “வா”ங்க..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top