அ.அ 13. நிலா அது வானத்து மேலே… பலானது பார்க் பெஞ்சுக்கு கீழே

அ.அ 13. நிலா அது வானத்து மேலே… பலானது பார்க் பெஞ்சுக்கு கீழே

இது அயலான் அன்பு தொடர்கதையின் 13-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
முதல் முறையாக எனக்கும் அசோக்கிற்கும் சண்டை வந்தது. நான் அவன் மீது கொண்ட காதல் அவனை உரிமை கொண்டாட தூண்டுகிறது. ஆனால் அசோக் என்னை அவன் மீது உரிமை கொண்டாட நான் யார் என்று கேட்க, நான் காயமானேன். என் காதல் அவ்வளவு தானா...?

“ஏங்க… சாயங்காலத்துல இருந்து மூணு நாலு தடவை அசோக் call பண்ணிட்டாப்படி… அவன் கூப்பிட்டா phone call-ஐ attend பண்ணுங்களேன். நீங்க எடுக்கலைன்னதும் எனக்கு வேற call பண்றான். Embarassing-ஆ இருக்கு. சின்னப்பையன் அவன் புத்தி அவ்வளவு தான்னு விட்டுட்டு போங்களேன்… இப்படி சொந்தங்களை விட்டுட்டு தனியா வந்து இருக்குற இடத்துல இப்படி பக்கத்து வீட்டுக்காரங்களை எல்லாம் அனுசரிச்சு தான் போகனும்” ரோகிணி கையில் இருந்த என்னுடைய mobile phone மீண்டும் சிணுங்க AMOLED screen-ல் அசோக் அழகாக சிரித்துக்கொண்டிருந்தான். இதுவே முன்பு போல இருந்தால் நான் அவன் முகம் தெரியும் mobile phone screen-க்கே கிஸ்ஸடித்திருப்பேன். ஆனால் மனது காயப்பட்டதால் விரக்தியாக சிரித்தபடி mobile phone-ஐ வாங்க தவிர்க்க, ரோகிணி அசோக்கின் அழைப்பை ஏற்றாள். எதிர்ப்பக்கம் அசோக் பேச ஆரம்பிக்கும் முன்பு சட்டென்று ரோகிணி சொன்னாள் “அசோக்! அவர் குளிச்சிட்டு இருக்கார். Bathroom-ல இருந்து வந்ததும் உன்னை கூப்பிட சொல்லட்டுமா?” நான் அப்படியே கட்டிலில் குப்புறடித்து படுத்தேன்.

அ.அ 13. நிலா அது வானத்து மேலே… பலானது பார்க் பெஞ்சுக்கு கீழே
நாம் யாரை உயிருக்கு உயிராக நேசிக்கிறோமோ அவர்கள் நம்மை உதாசீனப்படுத்தும் போது மனது ரொம்ப வலிக்கிறது. அன்று அவன் நான் சொல்லியும் கேட்காமல் Jamoon-ஐ பிடுங்கி தின்றிருந்தால் கூட எனக்கு வருத்தம் இருந்திருக்காது. ஆனால் நீங்க யார் என்னை மேலாளித்தனம் செய்வது என்று கேட்ட அந்த ஒரு வாக்கியத்தில் என் வாயிலிருந்து வார்த்தைகளை அடைத்து ஊமையாக்கியது. நான் என் Car-ஐ எடுத்துக்கொண்டு மனம்போன போக்கில் இலக்கில்லாமல் ஓட்டி நெடுஞ்சாலைகளை சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்தபோது அசோக்கும் தீபாவும் போயிருந்தார்கள்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

அடுத்த சில நாட்களுக்கு அசோக்கிடம் இருந்து எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பது என்னை இன்னும் காயப்படுத்தி இருந்தது. நான் மெல்ல மெல்ல என்னை தேற்றிக்கொண்டு மீண்டு வரும் சமயத்தில் ஒரு நாள் வேலை பொழுதில் அசோக்கின் எண்ணும், சிரிப்பும் பளிச்சிட என் mobile phone சிணுங்கியது.

எனக்கு அந்த phone call-ஐ எடுக்கவும் மனசில்லை. ஆனால் எடுக்காமல் போனால் அதை தொடர்ந்து அசோக் அழைக்காமலேயே இருந்துவிட்டால்…? கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பது போல திண்டாடிவிட்டு கடைசியில் நான் “Accept”-ல் விரல் வைத்து இழுத்தேன்.

அ.அ 13. நிலா அது வானத்து மேலே… பலானது பார்க் பெஞ்சுக்கு கீழே
“ஐயாவோட phone call-ஐ attend பண்ண முடியாத அளவுக்கு சார் ரொம்ப busy போல…” கடமைக்காகவாச்சும் மன்னிப்பு கேட்பான் என்று எதிர்பார்த்த எனக்கு எதிர்பக்கம் அசோக்கின் குரலில் இருந்த கேலியை கேட்டதும் கோபம் ஜிவ்வென்று தலைக்கேறியது. நான் அலுவலகத்தில் இருப்பதால் மற்றவர்களின் கவனம் என் மீது விழுந்துவிடக்கூடாது என்று “நான் meeting-ல இருக்கேன்… அப்புறம் கூப்பிடுறேன்” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தேன்.

சில நாட்கள் கழித்த ஒரு மாலை… வாசல் கதவு தட்டப்படும் விதத்திலேயே அது பக்கத்து வீட்டுக்காரர்கள் தான் என்று தெளிவாக தெரிந்தது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

Point of View எனப்படும் என்னுடைய பார்வையில் நான் gay sex-ல் ஈடுபடுவதாக எழுதும் கதைகள் உங்களை ஈர்க்கிறதா?

View Results

Loading ... Loading ...

ரோகிணி “ஏங்க… நான் kitchen-ல கொஞ்சம் Busy-ஆ இருக்கேன்… கதவை திறங்களேன்” என்று சத்தம் கொடுக்க, நான் படுத்தபடியே “நீ போய் கதவை திற ரோகிணி… நான் தலைவலியிலே மாத்திரை போட்டுட்டு தூங்கிட்டேன்னு சொல்லிடு” என்று அவளுக்கு choice-ஏ கொடுக்காமல் குப்புற படுத்துக்கொள்ள, ரோகிணி முனகிக்கொண்டே வாசலை நோக்கி நடப்பதை என்னால் உணரமுடிந்தது.

அ.அ 13. நிலா அது வானத்து மேலே… பலானது பார்க் பெஞ்சுக்கு கீழே
நான் யூகித்தது போலவே அசோக்கும், தீபாவும் வந்திருக்கிறார்கள். ஸ்வேதா குட்டியின் மழலை குரல் என் பெண்களை பார்த்ததும் சந்தோஷத்தில் சத்தமாக ஒலிக்க, ஓடிச்சென்று அவளை தூக்கி கொஞ்ச வேண்டும் என்ற ஆர்வத்தை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்.

“வாங்க… அவர் தலைவலின்னு Paracetamol மாத்திரை போட்டுட்டு தூங்கிட்டிருக்கார்… அதனால தான் கதவு திறக்க late ஆயிடுச்சு” என் தர்மபத்தினி உண்மையிலேயே நிலைமையை நன்றாக சமாளித்தாள்.

“என்னாச்சு கார்த்திக்கு?” அசோக் லேசான பதற்றத்துடன் கேட்டான்.

“இன்னைக்கு அவருக்கு Shop floor-ல வேலை போலிருக்கு… Noisy-ஆ இருக்கும் போல… ரொம்ப tired-ஆ வந்தார். வந்த உடனே படுத்துட்டார்…” அடுப்படியில் pressure cooker சீட்டியடிக்க, “ஹேய்! நீங்க ரெண்டு பேரும் முதல்ல உட்காருங்க… நான் அடுப்பை நிறுத்திட்டு வந்துடுறேன்” என்று அங்கிருந்து அகன்றாள்.

அ.அ 13. நிலா அது வானத்து மேலே… பலானது பார்க் பெஞ்சுக்கு கீழே
கொஞ்ச நேரம் Living room-ல் அமைதி நிலவியது. நான் காதை கூர்மையாக தீட்டி வைத்துக்கொண்டு என்ன பேசுகிறார்கள் என்று கேட்க தயாராக இருக்க, அசோக் எழுந்து என் படுக்கைக்கு வந்து என் நெற்றியை தொட்டுப்பார்த்தான். நான் இளகிப்போனேன். அவன் என் தலைமுடியை செல்லமாக கலைக்க, என் மனசு கலைந்துபோனது. நான் யதேச்சையாக தூக்கத்தில் திரும்பி படுப்பது போல கண்ணை மூடிய நிலையிலேயே திரும்ப, அசோக் என் கன்னத்தை தன் உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு, கட்டைவிரலால் என் உதட்டை தடவி கொடுத்துவிட்டு அறையில் இருந்து வெளியேறினான். அந்த தீண்டலில், உதட்டு தடவலில் என் கோபம் வைராக்கியம் எல்லாம் தூள் தூளாக உடைந்துபோயிருந்தது.

“நான் கார்த்தி முழிக்கிற வரைக்கும் இங்கேயே இருந்து அவர் கிட்டே Sorry சொல்லிட்டு போறேனே…” அசோக் சொல்ல, ரோகிணி பதற்றத்துடன் “ஹேய்! நீ எவ்வளவு நேரம் வேணும்னாலும் இரு. அது பிரச்சனை இல்லை… Sorry எல்லாம் எதுக்கு? இது என்ன school பசங்க மாதிரி…” என்று அவனை சமாதானப்படுத்தினாள்.

“நான் அன்னைக்கு அப்படி harsh-ஆ பேசியிருக்க கூடாது. கார்த்தி என் health மேலே இருக்குற அக்கறையில தானே சொன்னார். ஆனா நான் என்னவோ அவர் என்னை control பண்றார்னு சட்டுன்னு வார்த்தையை விட்டுட்டேன்… சொல்லப்போனா எனக்கு ஏன் இந்த உலகத்துல எல்லாரும் என்னை கட்டுப்படுத்த முயற்சி பண்றாங்கன்னு ஒரு inferiority complex வருதுன்னு தெரியலை…. எல்லார் முன்னாடியும் அவர் கிட்டே rude-ஆ சொன்னேன்… அதுபோலவே மன்னிப்பும் எல்லார் முன்னாடியும் கேட்கனும்” அசோக் பேச பேச நான் உருகிப்போனேன். இப்போது எப்படி என் “தூக்க” நடிப்பை முடிப்பது? கட்டிலில் restless-ஆக புரண்டு புரண்டு படுத்தேன்.

அ.அ 13. நிலா அது வானத்து மேலே… பலானது பார்க் பெஞ்சுக்கு கீழே
“வந்தவுடனே படுத்துட்டார்ன்னு ரோகிணி சொன்னா… அப்படி பார்த்த இந்நேரத்துக்கு நான் படுத்து 1:30-1:45 மணி நேரம் ஆகியிருக்கனும்… மாத்திரை போட்டா இவ்வளவு நேரம் தான் தூக்கம் வரும்.. சரி! நம்ம நடிப்பை இத்தோட முடிச்சுக்கலாம்” என்று எழுந்தேன். கஷ்டப்பட்டு கண்ணில் தூக்கக்கலக்கத்தையும் உடம்பில் சோர்வையும் கொண்டுவந்து அதை நடையில் காட்டி தத்தி தத்தி கண்ணை கசக்கியபடி Living room-க்கு வந்தேன்.

“அப்போது தான்” நான் அசோக்கையும் தீபாவையும் பார்க்கிறேன். அவர்கள் வந்திருப்பது எனக்கு “தெரியவில்லை”. இந்த சூழலுக்கு முகத்தில் என்ன expression கொடுப்பது என்ற குழப்பத்தோடு நான் அவர்களை பார்த்து சம்பிரதாயமாக புன்னகைத்தேன்.

“ஹாய் அண்ணா…” தீபா கையசைக்க, அசோக் எழுந்து என் அருகே வந்தான். நானே எதிர்பார்க்காத விதமாக என்னை இறுக்க கட்டிப்பிடித்தான். அசோக்கின் கைகள் என் வயிற்றை சுற்றிக்கொள்ள, அவன் கன்னம் என் மார்பில் பதியும்படியாக கட்டிக்கொண்டான். நான் நெகிழ்ந்த நிலையில் அவன் முதுகை தட்டிக்கொடுக்க, அசோக் நிமிர்ந்து என் முகத்தை பார்த்தான். “I am really sorry Karthi… நான் உங்க கிட்டே அப்படி பேசியிருக்க கூடாது… truly sorry” அசோக் பேச பேச நான் அவனை அப்படியே கிஸ்ஸடிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை பக்கத்தில் தீபா, ரோகிணி மற்றும் குழந்தைகள் இருப்பதால் அப்படியே உள்ளுக்குள் ஆழமாக புதைத்துக்கொண்டேன். ரோகிணி எங்கள் அருகே வந்து அசோக்கின் முதுகை தட்டிக்கொடுத்தபடி என் தோளில் கை வைத்து அழுத்தினாள்.

அ.அ 13. நிலா அது வானத்து மேலே… பலானது பார்க் பெஞ்சுக்கு கீழே
இரவு சாப்பாடு அனைவரும் ஒன்றாக சாப்பிடுவது என்று ரோகிணி முடிவெடுத்துவிட, தீபா ரோகிணிக்கு சமையலறையில் உதவி செய்வதற்காக சேர்ந்துக்கொண்டாள். Living room-ல் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்க, நானும் அசோக்கும் Sofa-வில் உட்கார்ந்து TV “பார்த்து”க்கொண்டிருந்தோம். ஆனால் எங்கள் கண்களும், கைகளும் அடுத்தவர்களுக்கு மட்டுமே என்று சும்மா பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தோம். எங்களுக்கிடையே Sofa-வின் மீதிருந்த எங்கள் கைவிரல்கள் திருட்டுத்தனமாக பின்னிக்கொள்ள சுற்றுப்புற சூழலை மறந்த நிலையில் ஒருவரை ஒருவர் அப்பட்டமாக sight அடித்துக்கொண்டோம்.

3 thoughts on “அ.அ 13. நிலா அது வானத்து மேலே… பலானது பார்க் பெஞ்சுக்கு கீழே”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top