கா.ஒ.கா 16 கஞ்சியில் கையெழுத்து

கா.ஒ.கா 16 கஞ்சியில் கையெழுத்து

இது காத்துவாக்குல ஒரு காதல் தொடர்கதையின் 16-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
ஒரு வழியாக எனக்கும் விசா கிடைத்து நான் கனடா போய் இறங்குகிறேன். அர்ணாப் என்னை கட்டித்தழுவி வரவேற்று தான் தங்கி இருக்கும் அறைக்கு கூட்டிப்போகிறான். எங்களை யாரும் பிரிக்க முடியாத தூரத்தில் நாங்கள் மீண்டும் இணைந்து எங்கள் வாழ்க்கையை துவக்குகிறோம். ஆரம்பத்தில் இனித்த என் கனடா வாழ்க்கை நாட்கள் செல்ல செல்ல எனக்கு வேலை கிடைக்காத காரணத்தால் கசக்க ஆரம்பிக்கிறது. அர்ணாப் என்னை பொறுமையாக இருக்குமாறு சமாதானம் செய்கிறான்.
I hate porn that starts off fucking... I need to know why they are fucking
சேரும் இடத்தை போல போகும் பயணமும் சுவாரசியமே...

கா.ஒ.கா 16 கஞ்சியில் கையெழுத்து
Click for large image
மாலை… நான் ஜன்னல் வழியே தெருவில் அர்ணாப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து வருவதை பார்த்துக்கொண்டிருக்கிறேன். அர்ணாபின் முகத்தில் ஏதோ ஒரு குழப்பம், மனதில் ஏதோ ஒரு சிந்தனை ஓடிக்கொண்டிருப்பதை என்னால் உணரமுடிந்தது. உள்ளிருப்பதை அவன் முகம் எளிதாக காட்டி கொடுத்துவிடும். ஜன்னலில் என்னை பார்த்ததும் அவன் முகத்தில் ஒரு அழகான புன்னகை பூக்கிறது. ஆனால் அது இயல்பானதா இல்லை வலிந்து திணிக்கப்படும் புன்னகையா என்று எனக்கு தெரியவில்லை. என்னவன் என்னிடம் எந்த ஒரு சூழலிலும் தன் office tension-களை எங்கள் நடுவே கொண்டுவருவதே இல்லை.

கா.ஒ.கா 16 கஞ்சியில் கையெழுத்து
Click for large image
எனக்கு அவனிடம் மிகப்பிடித்த விஷயம், அதே சமயம் கவலைக்குறிய விஷயமும் அது தான். சந்தோஷத்தை என்னிடம் ஆர்வத்தோடு பங்கிட்டுக்கொள்ளும் அவன் கவலையை மட்டும் தனக்குள் வைத்துக்கொள்வது என்னை காப்பாற்ற என்று புரிந்தாலும், எனக்கு அந்த உரிமை இல்லையா என்று எனக்கு கோபமும் வரும். இன்று வந்த உடனேயே அர்ணாப் என்னிடம் “நாம வெளியே park-ல walking போயிட்டு, அப்படியே restaurant-ல dinner சாப்பிட்டுவிட்டு வரலாம்” என்று சொல்லிவிட்டு முகம் கழுவ குளியலறைக்கு போய்விட்டான். நான் குழப்பத்துடன் உடை மாற்றினேன்.

நாங்கள் Salaam Bombay போய் எங்களது Order-ஐ கொடுத்துவிட்டு காத்திருக்கும்போது அர்ணாபிடம் “என்னாச்சு அர்ணாப் பாபு? Office-ல ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டேன். அர்ணாப் “ப்ச்ச்…” என்று தோளை குலுக்கிவிட்டு “அதெல்லாம் ஒன்னும் இல்லை… லேசான தலைவலி அவ்வளவு தான். உன் கூட வெளியே வந்தா சரியாயிடும்னு தோணுச்சு… அவ்வளவு தான்” என்று என் கையை எடுத்து முத்தம் வைத்தான். Toronto-க்கு வந்த புதிதில் அர்ணாப் என்னை முத்தமிட்ட போதெல்லாம் நான் தன்னிச்சையாக எங்களை யாராவது பார்த்தார்களா என்று சுற்றும் முற்றும் பார்ப்பேன். ஆனால் இப்போதெல்லாம் அதை செய்வதில்லை. நான் அர்ணாபின் கையை இழுத்து என் கன்னத்தில் வைத்துக்கொள்ள, waiter-ன் வருகை எங்களை “பிரித்து” வைத்தது.

கா.ஒ.கா 16 கஞ்சியில் கையெழுத்து
Click for large image
நாங்கள் வீட்டுக்கு வரும்போது மிகவும் late ஆகியிருந்தது. அர்ணாபுக்கு நாளை Office-க்கு late ஆகிவிடாதா என்று நான் தான் கவலைப்பட்டேன். விளக்கை அணைத்துவிட்டு என் அருகே படுத்ததும் அர்ணாப் என்னை மிக மிக இறுக்கமாக, என மூச்சு முட்டும் அளவுக்கு கட்டிப்பிடித்தான். சத்தமாக நீண்ட பெருமூச்சுகளை வெளியேற்றினான். மொச்சு மொச்சுவென்று என் முகமெங்கும் முத்தம் வைத்தான். என் உதட்டை நீண்ட நேரம் கவ்வினான். நான் அவனுக்கு எதிர்வினையாற்ற தோன்றாத அளவுக்கு திகைத்திருந்தேன். என் அர்ணாப் எதையோ மனதுக்குள் போட்டு அலைக்கழித்துக்கொண்டிருக்கிறான் என்று மட்டும் உணர்ந்தேன். ஆனால் என்ன அது, ஏன் என்று தெரியவில்லை. சரி! அவனாக சொல்லட்டும் என்று நானும் அவனை இறுக்கி கட்டிக்கொண்டு என் காலை அவன் காலோடு சுற்றினேன். Sex இல்லாமல் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உறங்கிப்போனோம்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

அடுத்த நாள் காலை, அர்ணாப் எழுந்து குளிக்க போனபோது நானும் எழுந்துவிட்டேன். அர்ணாபிடம் என்ன நடந்தது என்று இவ்வளவு காலையிலேயே கேட்டு அவனுடைய பொழுதை கெடுக்கவேண்டாமே என்று கனத்த மனதோடு வெளியே சென்று Coffee கலந்தேன். இரண்டு Coffee cup-களுடன் எங்கள் அறைக்குள் வந்தபோது அர்ணாப் jeans, T Shirt-ல் இருந்தான். “பிரணயி! குளிச்சிட்டு கிளம்புறியா? நாம ஒரு இடத்துக்கு போகனும்” என்று என்னிடம் இருந்து ஒரு கோப்பையை வாங்கி உறிஞ்சினான். நான் மௌனமாக Coffee-யை காலி செய்துவிட்டு குளிக்க போனேன்.

கா.ஒ.கா 16 கஞ்சியில் கையெழுத்து
Click for large image
நானும் அர்ணாபும் பேருந்தில் போய்க்கொண்டிருக்கிறோம். அர்ணாப் என் கையை கோர்த்துக்கொண்டு “பிரணயி! இங்கே Toronto-ல தமிழ் மக்கள் நிறைய இருக்காங்க… நிறைய பேர் இலங்கை போர்ல அகதிங்களா வந்தவங்க… இப்போ சமீப காலமா இந்தியா தமிழ் ஆளுங்களும் நிறைய வர்றாங்க… பெரிய தமிழ் சங்கம் கூட இருக்கு…” என்று என்னிடம் சொன்னபோது எனக்கு “ஏன் இதை சொல்றான்?” என்று குழப்பம் அதிகரித்தது. Bust எங்களை Oakville Bus Terminal-ல் உதிர்த்துவிட்டு அதுவும் ஓய்வெடுத்தது. நான் குழப்பத்தோடு அர்ணாபின் கையை கோர்த்துக்கொண்டு அவனுடன் நடந்துக்கொண்டிருக்கிறேன்.

Turban கட்டின ஒரு பஞ்சாபி சிங் எங்களை பார்த்து புன்னகைத்தான். “I’m Jaspreet Gill” என்று எங்கள் கையை சினேகமாக குலுக்கினான். அவன் கையில் இருந்த IPad Cover-ல் “Gill Realty” என்று பொறித்திருந்தது. அர்ணாப் என்னை வீடு பார்க்க அழைத்து வந்திருக்கிறான் என்று புரிந்தது. “ஏன் இப்போ?” என்று குழம்பினேன். ஏனென்றால் இப்போதுள்ள ஒற்றை வருமானத்துக்கு நாங்கள் இருக்கும் அறை சிக்கனமாக உள்ளது. எனக்கு வேலை கிடைத்ததும் வாடகைக்கு வேறு வீடு பார்த்துக்கொள்ளலாம் என்று பேசி வைத்திருந்தோம். ஆனால் இப்போது வீடு வாடகைக்கு எடுத்தால் அர்ணாபின் சம்பளத்தில் பாதிக்கும் மேல் வாடகைக்கு போய்விடும். அது தவிர மின்சாரம், தண்ணீர், Broadband Connection, வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவது, இத்யாதி இத்யாதி என்று கையில் காசு மிச்சம் இருக்காதே…

கா.ஒ.கா 16 கஞ்சியில் கையெழுத்து
Click for large image
ஜஸ்பிரீத் ஒரு வீட்டுக்கு எங்களை அழைத்துச்சென்றான். நல்ல வெளிச்சமாக, எனக்கு பார்த்த உடனே பிடித்துவிட்டது. ஆனால் மனது affordability-ஐ கணக்கு செய்துக்கொண்டிருக்கிறது. “We have a vibrant Tamil community here…” என்று ஜஸ்பிரீத் என்னை பார்த்து சொன்னபோது “டேய்! நான் love-ஐயே மொழி பார்க்காம, மனசுக்கு புடிச்ச பெங்காலி பையன் கூட இருக்கேன். என் கிட்டே language card-ஐ இறக்குறியா?” என்று முனுமுனுத்துக்கொண்டேன். நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் ஜஸ்பிரீத்தின் mobile phone சிணுங்கியது.”Excuse me… I have to take this call!” என்று அழைப்பை ஏற்றுக்கொண்டு அவன் அந்த இடத்தில் இருந்து அகன்றதும் நான் அர்ணாபிடம் “அர்ணாப் பாபு! என்ன நடக்குது இங்கே?” என்று அவனை உலுக்கினேன்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

உங்கள் gay sex partner உங்களை நண்பராக அங்கீகரிக்காமல் வெறும் sex-க்கு மட்டுமே பயன்படுத்துகிறார் என்று தோன்றுகிறது. என்ன செய்கிறீர்கள்?.

View Results

Loading ... Loading ...

என்னவன் அழகான புன்னகையுடன் “நாம நமக்காக வாடகைக்கு வீடு பார்த்துட்டு இருக்கோம்… இந்த ஏரியாவுல தமிழ் population அதிகம். அதனால் you will feel at home-ன்னு இங்கே flat பார்க்குறேன். எனக்கும் அந்த terminal பஸ் ஏறினா 1 மணி நேரத்துல Brampton-ல என் office-க்கு போயிடலாம்” என்று சிரித்தான். ஆனால் நான் இப்போது அந்த புன்னகையில் கறைந்து கிஸ்ஸடிக்கும் மனநிலையில் இல்லை. “ஆனா அர்ணாப்… ஏன் இவ்வளவு அவசரம் அவசரமா? எனக்கு வேலை கிடைக்கிற வரைக்கும் நம்மளால wait பண்ண முடியாதா?” என்றபோது அவன் மீண்டும் தோளை குலுக்கினான்.

கா.ஒ.கா 16 கஞ்சியில் கையெழுத்து
Click for large image
“நீ இருக்குறப்போ நான் கிரேக், ஹீப்ரியூன்னு எந்த community crowd நடுவுல கூட இருந்துக்குவேன்… தமிழ் ஆளுங்க கூட தான் நான் இருப்பேன்னு எப்போ சொன்னேன்… நீ என்னவோ மறைக்கிற அர்ணாப் பாபு! ப்ளீஸ் அது என்னான்னு சொல்லு…” என்று அர்ணாபின் கன்னத்தை கையில் எடுத்து அவன் கண்களை ஊடுருவினேன். அர்ணாப் பெருமூச்சுடன் “நம்ம landlord Papa-ஜி நாம Gays-ங்குறதால நம்மளை வெளியே போக சொல்லிட்டார். முந்தின நாள் ராத்திரி நீ கூட யாரோ கதவை திறக்குறாங்கன்னு சந்தேகப்பட்டே இல்லை? அப்போ அவர் தான் வந்திருக்கார். நாம gay couple-ங்குறது அவருக்கு OK தானாம். அப்புறம் நேத்து காலையிலே வாசல்ல வச்சு கிஸ்ஸடிச்சோம் இல்லை… அதை அவரோட அம்மா பார்த்துட்டு பிரச்சனை பண்ணிட்டாங்களாம். Papa-ஜி நேத்து Office-க்கு வந்திருந்தார். நம்மளை உடனே vacate பண்ணிக்க சொல்லிட்டார்” என்றபோது எனக்கு சங்கடமாக இருந்தது.

நேற்று ஆர்வக்கோளாறில் வாசலில் வைத்து அர்ணாபை கிஸ்ஸடிக்க வேண்டிய அவசியம் என்ன? கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாமே. அர்ணாப் என் கையை கோர்த்துக்கொண்டு “எப்படியும் நமக்குன்னு தனி private space வேணும்னு ஆயிடுச்சு… அதனால உனக்கும் பேச்சு துணைக்கு இருக்குற மாதிரி தமிழ் community இருக்குற இடமா பார்க்கலாம்னு இங்கே வந்திருக்கோம்… உனக்கு வீடு பிடிச்சிருக்கா?” என்று என் கன்னத்தை தன் உள்ளங்கையால் ஏந்தி அர்ணாப் என்னை கேட்க, நான் “Do we have a choice?” என்று சத்தம் வராமல் கேட்டேன்.

கா.ஒ.கா 16 கஞ்சியில் கையெழுத்து
Click for large image
“ஏன் இல்லாம…? வேற வழி இல்லாம இங்கே வரலை… பிடிச்ச மாதிரி வீடு கிடைக்குற வரைக்கும் AirBnB-ல கூட அவசரத்துக்கு accommodation பார்த்துக்கலாம். போய் வீட்டை சுத்திப்பாரு” என்று அர்ணாப் என்னை தள்ளினான். அர்ணாபின் mobile phone சிணுங்க, அவன் எடுத்து “ஹாங்! ஜஸ்ஸி பாய்” என்று உரையாடலை தொடங்கினான். நான் அந்த ஒற்றை bedroom வீட்டை சுற்றி பார்க்க நகர்ந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top