P G 17. மீண்டும் மீண்டு(ம்) வா…

P G 17. மீண்டும் மீண்டு(ம்) வா…

இது Paying Guest தொடர்கதையின் 17-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
எப்படியோ அவினாஷின் mobile number-ஐ தேடிப்பிடித்து ரூபா அவனை தொடர்பு கொள்கிறாள். சமயம் கிடைக்கும்போது இந்தியா வந்து தங்களை பார்க்குமாறு அழைக்கிறாள். ரூபா அவினாஷ் தங்கள் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தங்களுடைய வாழ்க்கையில் என்ன புயலடித்தது என்பதை நினைவுகூர்கிறாள்.

“கல்யாண வீடுன்னாலே தண்ணியடிக்கிறதுக்குன்னு ஒரு கூட்டம் இருக்கும்னு உனக்கே தெரியுமே… எனக்கு தெரிஞ்சு கெட்ட பழக்கம்னாலும் இவர் ரொம்ப enjoy பண்றது தண்ணியடிக்கிறதை தானே. எத்தனை நாள் அதை வச்சு சண்டை போட்டிருக்கேன். நீ வந்ததுக்கு அப்புறம் அதை நிறுத்துன மனுஷன் அதுக்கப்புறம் அந்த சாராயத்தை தொட்டது கூட இல்லை. நான் பண்ணின torture-க்கு எல்லாம் அவர் திரும்ப மொடா குடிகாரர் ஆகியிருக்கலாம். ஆனா அவர் அப்படி செய்யலை. ஒருவேளை அது அவர் உனக்கு செய்யுற மரியாதையா இருக்கலாம்… ஏன்னா அவர் உன்னால தான் அந்த பழக்கத்தை விட்டார். அந்த கல்யாணத்துல அவர் தண்ணியடிச்சலாச்சும் எனக்கு அவர் திரும்ப கிடைப்பாராங்குற நப்பாசையிலே அவரை இழுத்துவிட்டேன். என் சொந்தக்கார பையன் ஒருத்தன் அவரை வலுக்கட்டாயமா அழைச்சுட்டு போனான். அப்படி போன மனுஷன் இப்படி நடைபிணமா தான் திரும்ப வந்தார்” ரூபா தாங்காமல் அழுதாள்.

அவினாஷுக்கு அவளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியவில்லை. தவிப்போடு உட்கார்ந்திருந்தான்.

“லட்சுமிபதி சித்தப்பா அவர் வீட்டுல உன்னை பற்றியும், உன் கூட நெருக்கமா இருக்குறதால ரவியும் Gay-வா இருக்கலாம்னு சந்தேகப்படுறதா சொல்லிவைக்க அது பரவும்போது எங்க சொந்தக்காரங்க நடுவுல ரவியும் Gay-ங்குற மாதிரி தீயா பரவிடுச்சு. அந்த விஷயம் தெரியாம நான் அவரை தண்ணியடிக்க அனுப்ப, அங்கே இருந்த ஒருத்தன் இவரை நக்கலா பேச, அப்போ நடந்த கைகலப்புல அவர் மாடியிலே இருந்து கீழே தவறி விழுந்து தலையிலே பலமா அடிபட்டுடுச்சு. நாலு மாசமா Coma condition-ல இருந்தார். நான் சித்தப்பா கிட்டேயும் மத்தவங்க கிட்டேயும் கோவிச்சுக்கிட்டு எனக்கு யாரும் தேவையில்லை, அவங்க யார் மூஞ்சிலேயும் முழிக்க மாட்டேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்”

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

“அவர் நல்ல மனுஷன் அவி! அவர் தான் இல்லாத காலத்துக்கு அப்புறம் நானும் மிட்டுவும் கஷ்டப்பட கூடாதுன்னு பார்த்து பார்த்து எல்லாத்தையும் செஞ்சு வச்சிருந்திருக்கார். ஆனா ஒன்னுத்த கூட அவர் சொல்லி காட்டினது இல்லை. அவர் நல்ல மனசுக்கு எனக்கு அவர் நல்லபடியா திரும்ப வந்தாலே போதும். எதிர்காலத்துல அவர் Gay-ஆ come out – வெளியே வந்தாலும் நான் அதை எந்த பிரச்சனையும் பண்ணாம ஏத்துக்குவேன். ஏன்னா நீ போனதுக்கு அப்புறம் நான் Human sexuality பத்தின நிறைய research papers படிச்சேன். Scientific-ஆ explain பண்ணின அந்த thesis-ஐ எல்லாம் படிக்க படிக்க தான் எனக்கு ஒரு தெளிவு வந்துச்சு. Theoretcially புரிதல் இல்லைன்னாலும் ஒருத்தரோட sexuality is not other’s business-ங்குறது அடிப்படையான விஷயம். அது கூட தெரியாத அளவுக்கு எனக்கு ஆத்திரத்துல புத்தி கெட்டுப்போயிடுச்சு. ஒருத்தவங்களை அவங்களோட sexuality-ஐ வச்சு judge பண்ண கூடாதுன்னு புரிஞ்சப்போ நீயும் அவரும் என்னை விட்டு ரொம்ப தூரம் போயிட்டீங்க….”

“அண்ணி! ரவியண்ணா அப்படி இல்லை. எனக்கு தெரியும். He is straight as a reek… நீங்க அவரை பத்தி அப்படியெல்லாம் யோசிக்காதீங்க” அவினாஷ் ரூபாவை தேற்ற முயற்சித்தான்.

“இல்லை அவி! Sexuality பத்தி நிறைய படிச்சப்போ sexual fluidity-ங்குற concept-ஐ பத்தி படிச்சேன். Sexuality-ங்குறது Black & White-ன்னு clear-ஆ define செய்யப்படுறது இல்லை. அது ஒரு broad spectrum. மனுஷங்களோட sexuality அந்த spectrum-ல ஏதோ ஒரு இடத்துல இருக்கு. அதை பொறுத்து ஒருத்தரோட hetrosexuality மற்றும் homosexuality-ஓட அளவு, ratio மாறுது. காலப்போக்குல homosexuality-ஓட அளவு அந்த specturum-ல எந்த இடத்துல இருக்கோ அதுக்கேத்த மாதிரி individuals-ஓட sexualityயும் மாறுது. அதனால தான் நிறைய பேர் வயசான காலத்துல Gays-ஆ come-out பண்றாங்க. இது இயற்கையான விஷயம் தான்னு எனக்கு புரிஞ்சதும் homosexuality பத்தின என்னோட பார்வை மாறிடுச்சு. நாளைக்கே அவர் தான் ஒரு Gay-ன்னு வெளியே வந்தா நான் அவருக்கு தேவையான support-ஐ குடுப்பேன். ஆனா வேற ஒரு extra marital relationship-னு வந்து நின்னா அப்போ என்னோட சுயமரியாதையைக்காக தான் முடிவு எடுப்பேனே ஒழிய அவரோட sexuality-ஐ பார்த்து இல்லை…” ரூபா தீர்க்கமாக பார்வையோடு முகத்தை துடைத்துக்கொண்டாள்.

“அண்ணி! நீங்க அநாவசியமா நிறைய கற்பனை பண்ணிக்கிறீங்க. ஒரு Gay-க்கு இன்னொருத்தரை பார்த்ததுமே அவங்க Gay-யா இல்லை Straight-யான்னு தெரியும்… நான் சொல்றேன்.. ரவியண்ணன் homosexual இல்லை. அதனால முதல்ல அண்ணனை குணப்படுத்துறதை பத்தி மட்டும் யோசிப்போம்” அவினாஷ் ரூபாவை திசை திருப்பினான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

கதையில் கில்மா படங்களை மறைத்துவிட்டு, வெறும் text மட்டும் படிக்கும் வசதியை உபயோகிக்கிறீர்களா?

View Results

Loading ... Loading ...

“Its OK அவி! It doesn’t matter to me anymore… Coma condition-ல இருந்தப்போ அவருக்காக பூஜை பண்றதை பத்தி பேசும்போது அவினாசி பக்கத்துல இருக்குற கோவில் பத்தி பேச்சு வந்துச்சு. அவினாசிங்குற வார்த்தை வர்றப்போ மட்டும் அவர் கண்ணுல அசைவு தெரிஞ்சுது. அப்போ தான் எனக்கு அவர் உன்னை மறக்க முடியாம தவிச்சிட்டு இருக்கார்னு தெரிஞ்சுது. நல்ல வேளையா உன்னையும் பிடிக்க முடிஞ்சதுக்கு அந்த அவினாசிநாதர் அருள் தான் போல. மெல்ல மெல்ல அவர் Coma-ல இருந்து மீண்டுட்டார். Observation-ல இருக்கார். சீக்கிரமா அவரை General Ward-க்கு மாத்திடலாம்னு சொல்லியிருக்காங்க” ரூபா கன்னத்தில் போட்டுக்கொண்டாள்.

ICU ward-ன் கதவை திறந்துக்கொண்டு ஒரு Duty nurse வெளியே வர ரூபா எழுந்து “சிஸ்டர்! ரவி patient-ஐ இப்போ பார்க்கலாமா?” என்று கேட்டாள்.

“ரூபா! இது Visting hours இல்லைங்குறது உங்களுக்கே தெரியும்.. இருந்தாலும் Duty doctor வர்றதுக்குள்ளே சட்டுன்னு போய் பார்த்துட்டு வந்துடுங்க… இன்னையிலே இருந்து physiotherapist வருவார்…. கை விரல், கால் விரல் எல்லாம் அசைக்கிறதுக்கு exercises குடுப்பாங்க…. ரவியோட condition-ல நல்ல improvement இருக்கு…. சீக்கிரம் General Ward-க்கு மாத்திடலாம்.. கவலை படாதீங்க… நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும்…. சட்டுன்னு எட்டிப்பார்த்துட்டு பட்டுன்னு வந்துடுங்க…. இல்லைன்னா என் வேலைக்கு problem” என்று சிரித்துவிட்டு போக, ரூபாவும் அவினாஷும் உள்ளே சென்றார்கள்.

அவினாஷ் ரவியை பார்த்தபோது கண் கலங்குவதை தவிர்க்க முடியவில்லை. ஜிம் போய் உடம்புக்கு உரமேற்றி கட்டான உடம்போடு எப்படி கம்பீரமாக இருந்த ரவியண்ணா இன்று பொதி மூட்டை போல, காய்ந்த சருகாக கிடக்கிறார் என்ற ஒப்பீட்டை தவிர்க்கமுடியவில்லை. அவினாஷ் ரவியின் கன்னத்தை தடவினான். தூக்கம் கலைக்கப்பட்டது போல ரவியின் தலை மறுபக்கம் திரும்பியது. கண்ணை திறக்காததால் இன்னும் தூக்கம் கலையவில்லை என்று அவினாஷ் உணர்ந்துக்கொண்டான். ரூபா கட்டிலுக்கு கீழே இருந்த மூத்திர டேங்க் நிறைந்து இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, கட்டிலில் கால்மாடில் தொங்க விடப்பட்டிருந்த Pad-ஐ எடுத்து அதில் குறிக்கப்பட்டிருந்த vitals-ஐ படித்தாள். அவினாஷ் ரவியின் தலை முடியை கோதினான்.

Vitals-ஐ பார்த்துக்கொண்டிருந்த ரூபா விசும்பல் சத்தம் கேட்டு கண்ணை உயர்த்தி பார்க்க, அவினாஷ் ரவியின் நெற்றியில் தீழுதடி பதிந்தபடி முத்தம் வைத்துக்கொண்டு மெல்லிய விசும்பலோடு உடம்பு குலுங்கியபடி அழுதுக்கொண்டிருந்தான். ரூபா மெலிதாக சிரித்துக்கொண்டு அவினாஷின் தோளில் கை வைத்து அவனை ஆறுதலாக தடவிக்கொடுத்தாள்.

இந்த Paying Guest இன்னும் தொடரும்...

* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 15/08/2019
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2019/08/p-g-17.html
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day
P G 17. மீண்டும் மீண்டு(ம்) வா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top