| முன் கதை சுருக்கம்... |
|---|
| PTSD எனப்படும் துயரத்துக்கு பிறகு மன அழுத்தத்தில் இருந்து என்னை மீட்க உதவியது அர்ணாப் மற்றும் விஷ்வாவின் துணை மட்டுமே. மெல்ல மெல்ல என் அப்பா என்னுடைய sexuality-ஐ ஏற்றுக்கொள்வதோடு நில்லாமல், அவர் அர்ணாபிடமும் இனிமையாக நடந்துக்கொள்கிறார். அவர் எங்களை ஓரினச்சேர்க்கையாளர்கள் பாதுகாப்பாக இருக்கும் ஏதாவது வெளிநாட்டுக்கு போய் சந்தோஷமாக வாழுமாறு சொல்கிறார். |
நான் வெறுக்கும் இரவு நேரம் வந்தது. அர்ணாப் அப்பாவுக்காக single cot-ம் மெத்தையும் வாங்கியிருந்தான். நாங்கள் மூவரும் சம உயரத்தில் இரு கட்டில்களில் படுக்கிறோம். எனக்கு அர்ணாப் பக்கத்தில் இருந்தால் அவனை கட்டிக்கொள்ளாமல், தடவாமல் இருக்க முடியாது. அப்பாவும் அதே இடத்தில் படுப்பதால் நான் சங்கடமாக தள்ளிப்படுக்க, அர்ணாப் என் பக்கம் ஒருக்களித்து என் அவஸ்தையை பார்த்து கமுக்கமாக சிரித்துக்கொண்டிருந்தான். அந்த சிரிப்பு என்னை இன்னும் உசுப்பேற்ற, எனக்கு அப்படியே அவன் மீது பாய்ந்து உதட்டை கவ்வி இழுக்கவேண்டும் போல தோன்றியது. நான் திரும்பி அப்பாவை பார்த்தேன். அவர் எங்களுக்கு முதுகு காட்டியபடி ஒருக்களித்து படுத்திருந்தார்.
அர்ணாப் என் இடுப்பில் கை போட்டு தன் பக்கம் இழுத்தான். நான் சத்தம் வராதபடிக்கு அவனை நெருங்கி படுத்து என் அப்பாவை பார்த்தேன். அவரிடம் அசைவு இல்லை. அர்ணாப் என் கன்னத்தை தன் ஆள்காட்டி விரல் நுணியால் தடவிக்கொண்டு எட்டி என் உதட்டில் சத்தமில்லாத முத்தம் ஒன்றை வைத்தான். “பிரணயி! பயப்படாதே… என் மாமனார் நமக்கு privacy குடுக்குறதுக்காக தான் சுவத்தை பார்த்து படுத்திருக்கார்… So make use of it” என்று என் மேலே கால் போட்டான். நான் இன்னும் நெருங்கி அவன் முதுகை தடவியபடி அர்ணாபின் உதட்டை கவ்வினேன்.| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
|---|
நாங்கள் மூவரும் ஒரு மாலை ஔத்ராம் காட் பகுதியில் நதியோர சாலையில் நடந்துக்கொண்டிருந்தோம். நானும் அர்ணாபும் கையை கோர்த்துக்கொண்டு நடக்க, கூடவே என் அப்பா எந்த அசௌகரியமும் காண்பிக்காமல் நடந்து வந்துக்கொண்டிருந்தார். அர்ணாபின் mobile phone சிணுங்கியது. “இந்த நேரத்தில் யார் அழைப்பது?” என்ற லேசான எரிச்சலுடன் mobile phone திரையை பார்த்த அர்ணாப் என்னிடம் “Let me take this call” என்று அழைப்பை ஏற்றான். அழைத்தது அவன் கம்பெனியின் RMG (Resource Manager). “ஹலோ ஜெயா!” என்று சினேகமாக அவன் பேசியதில் இருந்து அழைப்பவருடன் அவனுக்கு cordial relationship இருப்பது தெரிந்தது.
“ஹாங்! ஆமாரா Canada visa அனுமோதிதா ஹாயேசே…” என்று சொல்லிவிட்டு “Thanks Jaya di” என்று வாழ்த்தை ஏற்றுக்கொண்டான். “கடா சப்தாஹே பேயேசி…” என்று சொன்னதும் எதிர் பக்கத்து கேள்விக்கு பதிலாக “கிந்து… ஆமி ஷீக்ரா Canada யாச்சி நா…” என்று மறுப்பது போல தலையாட்டினான். எனக்கு கனடா, விசா என்ற வார்த்தைகளுடன் அவன் மறுப்பது போல தலையசைத்ததும் என்னவாக இருக்கும் என்று யூகிக்க முடிந்தது. “ஹாங்! ஆமி கார்த்தி-கேரா Canada visa அனுமோதெரா ஜான்யா அபேக்ஷா கராச்சி… கார்த்தி ஆமாரா boyfriend” என்று உரையாடலில் என் பெயரும் சேர, நான் அவன் முகத்தை வெறித்து பார்த்தபடி நின்றேன். அர்ணாப் “கிந்து ஆமி ஏகானா Canada யேடே ப்ரஸ்துதா நாயி” என்று மீண்டும் தலையை இடம் வலமாக வேகமாக ஆட்டினான். சில நொடி மௌனத்துக்கு பிறகு “ஆமாகே கிச்சு சமயா தித்தே.. I’ll get back to you” என்று அழைப்பை துண்டித்தான்.நானும் அப்பாவும் அவனை பார்த்தபடி அமைதியாக நின்றிருக்க, நடை பழகுபவர்கள் எங்களை தாண்டி நடந்தார்கள். அப்பா தான் “என்ன ஆச்சு அர்ணாப்? Is all well?” என்று பேச்சை ஆரம்பித்தார். அர்ணாப் எங்களிடம் பொதுவாக “நான் Canada Visa அப்ளை பண்ணினதும் என்னோட HR Portal-ல update பண்ணி வச்சிருந்தேன். நாளை பின்னே Onsite கிடைக்கிறதுக்கு வசதியா இருக்கும்னு. இப்போ Loblaw Project-ல இருக்குற local resource paper போட்டுட்டதால urgent-ஆ replacement தேடுறாங்க. என் ஞாபகம் வந்து visa status என்னான்னு கேட்டாங்க. நான் போன வாரமே எனக்கு கிடைச்சிடுச்சு. ஆனா கார்த்திக்கு இன்னும் விசா கிடைக்கலை, அதனால இப்போ நான் கனடாவுக்கு வர்ற நிலைமையில் இல்லைன்னு சொல்லிட்டேன்..” என்று தோளை குலுக்கினான். நான் அதிர்ச்சியில் திறந்த வாய் மூடாமல் நின்றிருந்தேன்.
| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
|---|
அர்ணாப் இன்னும் தயங்க, அப்பா எங்களை ஓரத்தில் இருந்த bench-ல் உட்கார சொன்னார். “சரி! Think this way… இப்போதைக்கு நீங்க உங்க love-ஐ prove பண்றது தான் முக்கியம்னு அர்ணாப் இந்த project-ஐ ஒத்துக்கலை. ஒரு 2-3 மாசத்துல கார்த்திக்கு விசா கிடைக்குது. அப்போ என்ன பண்ணுவீங்க? வேலையை ராஜினாமா பண்ணிட்டு கனடா போவீங்க… அங்கே அர்ணாப், கார்த்தின்னு ரெண்டு பேர் வருவாங்கன்னு எந்த கம்பெனியும் வேலையை வச்சுக்கிட்டு உங்களுக்காக காத்திருக்க மாட்டாங்க… நீங்க வேலை தேடுவீங்க… புது ஊர்ல வேலை கிடைக்க எவ்வளவு நாள் ஆகும்னு தெரியாது.. வருமானம் வேணுமேன்னு கிடைக்கிற வேலையில சேருவீங்க… அது நல்ல வேலையா இருந்தா பரவாயில்லை… இல்லைன்னா அடுத்த வேலை தேடுற pressure இருக்கும்… இந்த ஓட்டத்துல உங்க love backseat-க்கு போயிடும். பொருளாதாரம் மூச்சு முட்டும் போது இந்த காதல், கத்திரிக்கா எல்லாம் காணாம போயிடும்… அதனால நல்லா யோசிச்சு உங்களுக்கு அனுகூலமான முடிவை எடுங்க” என்று முடித்த போது நாங்கள் ஏற்கனவே அவர் சொன்ன முடிவை எடுத்திருந்தோம்.
அர்ணாபின் தோளை தட்டினார் “அர்ணாப்… இப்போ கூட நீங்க ரெண்டு பேரும் நூத்துக்கணக்கான மைல் தூரத்துல இருக்கீங்க… ஆனாலும் உங்க love ரொம்ப steady-ஆ இருக்கு… இன்னும் கொஞ்ச தூரம் போறதால மட்டும் தடுமாற்றம் வந்துடும்னு யோசிக்கிறீங்களா? I make a promise here… ஒருவேளை மூணு மாசத்துக்குள்ள கார்த்தியோட PR Visa வரலைன்னா நானே அவனை Tourist visa-ல அங்கே உன் கிட்டே அனுப்பி வைக்கிறேன். இதுக்கு மேலே நான் சொல்றதுக்கு எதுவும் இல்லை” என்று முடித்தபோது அர்ணாப் அவர் கையை பிடித்துக்கொண்டு “அப்பா! நீங்க சொல்றது சரி தான்… நான் முதல்ல போய் என் கார்த்தி வந்து இறங்குறப்போ வசதியா இருக்குறதுக்கு ஏற்பாடு பண்ணி வைக்கிறேன்” என்று “என்”-ஐ அழுத்தமாக சொல்லி சத்தியம் செய்ய, நான் அவர்கள் இருவரையும் சேர்த்து கட்டிக்கொண்டேன்.இரவு அப்பாவும் அர்ணாபும் சேர்ந்து சமைத்த dinner-ஐ ஒரு கட்டு கட்டிவிட்டு sofa-வில் சரிந்தேன். அப்பா ஷூ மாட்டிக்கொண்டு “நான் walking போயிட்டு வர்றேன்” என்று கிளம்ப, அர்ணாப் “அப்பா! நாங்களும் வர்றோமே… கொஞ்ச நேரம் குடுங்க” என்று எழுந்தான். அப்பா “பாவம்… நாலஞ்சு நாளா நான் 24 மணி நேரமும் உங்க கூடவே இருக்கேன்… உங்களுக்கு கொஞ்ச privacy குடுக்குறதுக்காக walking போறேன்னு explicit-ஆவா சொல்ல முடியும்… நீங்க தான் புரிஞ்சுக்கனும்” என்று சிரிப்புடன் வெளியே கிளம்ப, அவர் படியிறங்கிவிட்டதை உறுதி செய்துவிட்டு நான் அர்ணாபை கட்டிப்பிடித்தபடி கட்டிலில் விழுந்தேன். அடுத்தவர்களின் உடைகள் விரைவில் கழற்றிவிட்டு கிடைத்த cycle gap-ஐ miss பண்ண கூடாது என்று வெறித்தனத்துடன் நானும் அர்ணாபும் காமக்களியாட்டத்தில் குதித்தோம்.* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 22/11/2024
| Feedback |
| எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
![]() |
கதை எப்படி இருக்கு? |
| Picture of the day |
|---|
![]() |





