| முன் கதை சுருக்கம்... |
|---|
| என் அப்பா எங்களை compromising position-ல் கையும் களவுமாக பிடித்த பிறகு என்னுடைய sexual orientation-ஐ மாற்ற என்னை conversion therapy-க்கு உள்ளாக்குகிறார். முதலில் மதரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறாததால் என்னை உளவியல் ரீதியாக 'குணமாக்க' முயற்சிக்கிறார். இதில் என் மனநிலை பாதிக்கப்படுகிறது. சரியான நேரத்தில் விஷ்வா என்னை காப்பாற்றி அர்ணாபுக்கு தகவல் சொல்கிறான். அர்ணாப் என்னை மருத்துவமனையில் வந்து சந்திக்கிறான். |
அப்பா “அர்ணாப்… நான் முட்டாள்தனமா அவனோட Sexual Orientation-ஐ மாத்தமுடியும்னு என்னென்னவோ பண்ணி இப்போ… படுக்கையில ஒன்னுக்கு போறது கூட தெரியாத அளவுக்கு அவனை சிதைச்சு வச்சிருக்கேன்… நான் எப்படி அவனை மீட்டெடுக்கிறது?… நானும் சராசரி மனுஷன் தானே. என் பையன் gay-ன்னு தெரிஞ்சதும் வழக்கமா react பண்ற மாதிரி நடந்துக்கிட்டு, இப்போ அவனை…” என்று அவர் அழுதபோது அவர் உடம்பும் குலுங்கியது. அர்ணாப் “கவலைப்படாதீங்க! கார்த்திக்கு சீக்கிரம் சரியாயிடும்… all he needs now is a caring environment. உங்க அன்பு அவனை நிச்சயம் சீக்கிரம் குணமாக்கி இயல்புக்கு கொண்டு வரும்… என்னை நம்புங்க!” என்று அவர் கையின் மீது தன் கையை வைத்தான்.
அப்பா அர்ணாபை நிமிர்ந்து பார்த்தார் “அர்ணாப்! கார்த்தி சரின்னு சொன்னா அவனை உன் கூட கொல்கத்தாவுக்கு கூட்டிட்டு போயிடு. அதுவும் வேணாம்னா நீங்க ரெண்டு பேரும் எங்கேயாச்சும் கண்காணா தூரத்துக்கு போயிடுங்க… என் கூட இருக்குறதை விட அவன் உன் கூட தான் சந்தோஷமா இருப்பான்…” என்று அவன் கையை பிடித்தார். அர்ணாப் “அப்பா! நான் அவனை நல்லா பார்த்துக்குவேன்… கார்த்தி சுயநலமா யோசிச்சிருந்தான்னா அவன் உங்க முயற்சிக்கு ஒத்துக்காம வீட்டை விட்டு போயிருப்பானே! ஆனா அவனுக்கு உங்களோட acceptance-ஐ தவிர வேறெதுவும் பெருசு இல்லை. நான் கொல்கத்தா போனப்புறம் நீங்க அவனை சந்தோஷமா வச்சிருந்தாலே போதும்” என்று சொன்னபோது அப்பா தலையசைத்தார்.அப்பா தழுதழுத்த குரலில் “அர்ணாப்… நான் உங்களை புரிஞ்சு ஏத்துக்கிட்டாலும் இந்த ஊர் நம்மளை நிம்மதியா இருக்கவிடாது. வார்த்தைகளால உங்களை குத்தி கிழிச்சு காயமாக்கும்… கலாச்சாரம்ங்குற பேர்ல உங்களை வெறுத்து ஒதுக்கும்… அதனால நீங்க ரெண்டு பேரும் எங்கேயாச்சும் Gay marriage-ஐ legalise பண்ணியிருக்குற வேற நாட்டுக்கு போயிடுங்க… நான் அப்பப்போ விருந்தாளியா வந்து உங்களை பார்த்துட்டு போறேன்… சீக்கிரமா ஒரு நல்ல Immigration Consultant-ஐ போய் பாருங்க…” என்று அப்பா சொல்ல, அர்ணாப் அவர் தோளில் சாய்ந்தான். அப்பா அவன் தோளை சுற்றி கைபோட்டு அவன் தோளை தட்டிக்கொடுத்தார்.
குடியுரிமை கொடுக்கும் Top 10 LGBT Friendly நாடுகளில் இருந்து எங்களுக்கு ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூஜிலாந்து ஆகிய நாடுகள் மட்டுமே “shortlist”-க்கு கிடைத்தது. அப்பா சொன்னது போல நானும் அர்ணாப்பும் அவரும் ஒரு Immigration Consultant-ஐ போய் பார்த்தோம். ஆஸ்திரேலியா மற்றும் நியூஜிலாந்து நாடுகளுக்கு application backlog அதிகம் இருப்பதால் அங்கு Permanent Residency Visa கிடைக்க 2-3 வருடங்கள் ஆகும் என்றார்கள். எங்களால் அவ்வளவு நாட்கள் பொறுக்க முடியாது என்பதால் 6-8 மாதங்களில் PR Visa கிடைக்கும் என்பதால் கனடாவுக்கு ஒரு Express PR Visa application-ஐ lodge செய்தோம்.எனக்கும் அர்ணாபுக்கும் IT Skilled Immigration-க்கு தேவையான experience-ம், உரிய documents-ம் சரியாக இருப்பதால் எங்கள் PR Visa குறித்த காலத்துக்குள் வந்துவிடும் என்று Immigration Consultant சொன்னபோது எங்களுக்கு சந்தோஷமாக இருந்தது. அன்றைய தினமே நாங்கள் எங்கள் கனடா குடியுரிமை விண்ணப்பத்தை துவக்கினோம். நான் Immigration application-க்கு தேவையான document-கள் ஏற்பாடு செய்துக்கொண்டிருந்தேன். என் அப்பா என் பெயரில் குறைந்தபட்ச தொகையான ரூ. 14 லட்சத்தை விட கூடுதலாக மொத்தம் ரூ. 20 லட்சம் வங்கியில் deposit செய்திருந்தார். அர்ணாப் தன் பங்கு முதலீடுகளை விற்று வங்கி கணக்கில் போட்டுவைத்திருந்தான்.
நாட்கள் செல்ல செல்ல, வீட்டில் அமைதியான சூழல் நிலவுவதால், என் உடல்நிலை நல்ல தேர்ச்சி அடைந்து வருகிறது. நானும் விஷ்வாவும் அலுவலகம் முடிந்து தவறாமல் Gym போய் உடம்பு ஏற்றுகிறோம். அவ்வப்போது அர்ணாப் வீட்டுக்கு உரிமையோடு வந்து எங்களை பார்த்துவிட்டு போகிறான். நான் ஒரு முறை விஷ்வாவை அழைத்துக்கொண்டு கொல்கத்தா போனேன். Touchwood… எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது. PR Visa வந்துவிட்டால் எங்கள் வாழ்க்கையை இணைந்து துவங்க ஆர்வமாக உள்ளோம்.
அன்று விடியற்காலை கொல்கத்தாவில் இருந்து வந்து இறங்கிய அர்ணாப்பை என் அப்பா தான் விமான நிலையம் சென்று அழைத்து வந்தார். நான் நன்றாக உறங்கிக்கொண்டிருக்க, அர்ணாப் வந்து என் கன்னத்தில் முத்தம் வைத்துவிட்டு குளிக்க சென்றான். நான் எழுந்து வந்தபோது அர்ணாப் பைஜாமா, tanktops-ல் அப்பாவுடன் சேர்ந்து காஃபி குடித்துக்கொண்டிருந்தான். அப்பா எனக்கும் ஒரு கப்பில் காஃபி ஊற்றினார். ஆவி பறக்க காஃபி குடித்து கொண்டிருந்த என்னிடம் அப்பா “தம்பி! அர்ணாப் பாவம்டா… கிட்டத்தட்ட வாராவாரம் வர்றான்… உனக்கு WFH Option இருந்துச்சுன்னா பேசாம நீ போய் அவன் கூட 2-3 மாசம் இருந்துட்டு வாயேன்…”என்றதும் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்தேன்.அப்பா இயல்பாக “நீ போனா நானும் ஒரு weekend வந்தா கொல்கத்தா சுத்தி பார்த்துட்டு வரலாம்ல… நான் இன்னும் அங்கே போனதே இல்லை” என்ற போது எனக்கு அப்படியே துள்ளி குதித்து அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கவேண்டும் போல இருந்தது. அர்ணாப்பின் கண்கள் இன்ப அதிர்ச்சியில் விரிய “Wonderful idea அப்பா… நான் கொல்கத்தாவுல உங்களை host பண்றதுக்கு ரொம்ப ஆர்வமா இருக்கேன்… எப்படி கேட்குறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன். நீங்களே கேட்டுட்டீங்க… சீக்கிரம் வாங்க. We will paint the city red” என்று அவர் கையை பிடித்துக்கொண்டான். அந்த “கை பிடித்த”லை பார்த்து நான் இன்னும் கிறங்கி போனேன்.


