In from the side

In from the side

தலைப்பு In from the Side
மொழி English
வெளியான வருடம் 2022
வகை Feature film
எங்கு பார்க்கலாம்? Netflix
இலவசமாக பார்க்கலாமா? ஆம்
நடிகர்கள் Alexander Lincoln, Alexander King, William Hearle
இயக்குனர் Matt Carter
கதைச்சுருக்கம்
I hate porn that starts off fucking... I need to know why they are fucking
சேரும் இடத்தை போல போகும் பயணமும் சுவாரசியமே...

First things first… எனக்கு இந்த 2021-ல் வெளிவந்த British Romantic Drama-வான “In from the side” பிடித்துப்போனதற்கான காரணம் இது வழக்கமான LGBTQ+ படங்கள் போல closet-க்குள் புழுங்குவது, gay-ஆக coming out செய்ய திண்றுவது மாதிரி depressing characters இல்லாமல் தன்பாலீர்ப்பாளர்களை normalise செய்யும் விதமாக அமைந்தது தான். மேலும் சராசரியாக gay-க்கள் எல்லாம் எப்போதும் சோகமாக, தனிமை விரும்பிகளாக இருப்பார்கள் என்ற பிம்பங்களை உடைத்து, உற்சாகமான கதாபாத்திரங்கள் மூலம் ஓரினச்சேர்க்கையை கொண்டாடும் படம் இது. அதற்காக இது எந்த conflict-ம் இல்லாத feelgood படமும் அல்ல. இதிலும் காதல், குழப்பம், மோதல், ஊடல் எல்லாம் உண்டு. பல LGBTQ+ திரைப்பட விழாக்களில் விருதுகள் பெற்றது என்பதில் ஆச்சரியம் இல்லை. கண்ணுக்கு அழகான கதாநாயகர்கள், வண்ணமயமான லண்டன் நகரம், கார்டிஃப்பின் மைதானம் என்று பார்க்கவும் ஜில்லென்று mainstream commercial படம் போல இருக்கிறது.

படம் மழையில் நடக்கும் பரபரப்பான Rugby match-ல் செம்ம மாஸாக ஆரம்பிக்கிறது. லண்டன் நகரத்தில் இருக்கும் LGBT Rugby Club-களில் Team A-ல் இருக்கும் வாரன்னுக்கும், Team B-ல் புதிதாக சேர்ந்திருக்கும் அனுபவமில்லாத மார்க்குக்கும் ஒரு விளையாட்டு பந்தயம் முடிந்து நடக்கும் பார்ட்டியில் பார்த்த உடனேயே ஈர்ப்பு ஏற்பட்டு அடுத்த சில நிமிடங்களில் கழிப்பறையில் வைத்து கிஸ்ஸடிக்கிறார்கள் பின்னர் மார்க்கின் வீட்டு படுக்கை அறையில் சுடச்சுட உடலுறவும் நடக்கிறது. ஆனால் இரண்டு பேரும் வெவ்வேறு partner-களுடன் உறவில் இருக்கிறார்கள். மார்க்குடைய துணைவன் ரிச்சார்டு வேலை விஷயமாக நிறைய பயணம் செய்வதால் அவர்களுடையது ஒரு long distance உறவாக இருக்கிறது. வாரன் தன்னை இந்த Team A-ல் இணைத்துவிட்ட தனது காதலன் ஜான் தன்னை dominate செய்தாலும் நன்றிக்கடனுக்காக அவனுடன் இருக்கிறான். இப்படிப்பட்ட இரு கதாநாயகர்களுக்கு நடுவே காமத்தை தாண்டி காதல் பூக்கிறது.

விளையாட்டு பயணங்களில் யாரும் கவனிக்காதபடிக்கு விரல்கள் கோர்த்து தங்கள் காதலை வளர்க்கின்றனர். காலமும் அவர்களை நிறைய நேரம் ஒன்றாக இருக்கும்படி சந்தர்ப்பங்களை அமைத்துக் கொடுக்கிறது. கடைசி நேரத்தில் ரிச்சார்டு வெளியூருக்கு போகவேண்டி இருந்ததால் மார்க் வாரனை கிறிஸ்துமஸ்ஸுக்கு தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்று குடும்பத்துக்கு அறிமுகம் செய்கிறான். அதுபோல வாரனும் மார்க்குடன் நிறைய நேரம் செலவழிக்கவேண்டும் என்று ஒரு மிக முக்கியமான rugby match-க்காக வாரனின் Team B-ல் guest player-ஆக சேர்கிறான். Cardiff-ல் நடக்கும் அந்த match-க்காக மார்க்கும் வாரனும் team members-களை தவிர்த்துவிட்டு தனியாக பயணம் செய்கிறார்கள். இப்படியாக மிக சந்தோஷமாக போய்க்கொண்டிருக்கும் அவர்கள் காதல் கதை எப்படியாக முடிந்தது என்பது தான் இந்த மீதிப்படமும்.

இரு அழகான ஆண்களுடைய romance, smooch-கள், படுக்கை அறை காட்சிகளை தாண்டி இந்த படம் என்ன சொல்ல வருகிறது? பொதுவாக gay உறவுகளில் non monogamy – என்னும் துணை அல்லாத மற்றவர்களுடன் உறவு கொள்வதும், அலுப்பு தட்டி open relationship-கள் மூலம் வேறு ஆள் தேடுவதும் straight உறவுகளை விட அதிகம். வாரன் தான் மார்க்குடன் நெருக்கமாக இருப்பது தன் துணையான ஜானுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்ள திணறுகிறான். அதே சமயம் வாரனின் துணையான ரிச்சார்டு இந்த ‘காதல் இல்லாத காமம் மட்டும் கொண்ட’ one night stand-க்கு அனுமதி அளித்தாலும், continuing relationship-க்கு தடைபோடுகிறான். e.g ரிச்சார்டும், மார்க்கும் ஒரே ஆளை ஒரு முறைக்கு மேலே மீண்டும் வீட்டுக்கு அழைத்து வரக்கூடாது என்றும், அப்படிப்பட்ட சூழல் வந்தால் மற்றவருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதிமுறையை விதிக்கிறான். எனினும் அங்கும் monogamy-ஐ பின்பற்றுபவர்கள் உண்டு, அங்கும் ஒருதலை காதல், நம்பிக்கை துரோகத்தால் இதயங்கள் நொறுங்குகின்றன… Gay relationship-களிலும் உறவை பேணிப்பாதுகாக்க மெனக்கிட வேண்டும், அங்கும் மன்னிப்பு, எல்லாம் உண்டு.

2:15 மணி நேரம் ஓடும் இந்த படத்தில் பெரிதாக தொய்வு ஏற்படுத்தும் தருணங்கள் இல்லை என்றபோதும், மார்க்கும் வாரனும் பார்க்கவும், படுக்கையிலும் நன்றாக இருந்தாலும், ஏனோ நம் மனது அவர்களுக்காக root செய்வதில்லை. நமக்கும் அவர்கள் ஒருவர் மற்றவர்களை இருக்கும் உறவின் மூச்சுமுட்டலில் இருந்து தப்பிக்க escape route-ஆக உபயோகிக்கிறார்களோ என்றும், இது “கள்ள உறவு” என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. அதனால் நாம் அவர்கள் முடிவை பார்க்கும்போது “எதிர்பார்த்தது தானே” என்று பெரிய பாதிப்பு இல்லாமல் கடந்து போகிறோம். Lead protagonists-களின் நடவடிக்கைகள் எல்லாம் white/black-ஆக இருக்கவேண்டும் என்ற நிர்பந்தம் இல்லையே. படங்களில் இப்படிப்பட்ட flawed character-களை, white & black-க்கு இடைப்பட்ட grey மனித மனங்களை பார்ப்பதும் சுவாரசியம் தானே?

இருந்தாலும்… மார்க்கும் வாரனும் காதல் வயப்படும் காட்சிகள் பார்வையாளர்களுக்கு உண்மையிலேயே ஜிவ்வென்ற அனுபவத்தை கொடுக்கும். அவர்கள் இருவரும் கூட்டத்துக்கு நடுவே வெறும் பார்வையாலேயே காதலையும் காமத்தையும் பரிமாறிக்கொள்வது ஐஸ் மழை பொழிவது போன்ற குளிர்ச்சி. இதன் இயக்குனர் openly gay என்பதாலோ என்னவோ, தன்னுடைய straight நடிகர்களிடம் இருந்து gay-க்களின் காதல் மொழியை அற்புதமாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். குறிப்பாக அந்த ராட்டினத்துக்கு கீழே மறைவில் ஒதுங்கும் காட்சியும், இரண்டாவது முறை வாரன் மார்க்கின் வீட்டுக்கு வரும் காட்சியும். மார்க் தங்களுடைய intimate moments-ஐ படம் எடுப்பது கவிதை. மார்க் மற்றும் வாரனுக்கு இடையே இருக்கும் chemistry நம்மை இந்த rational thoughts எல்லாவற்றையும் மறக்கடித்துவிடுகிறது.

In from the side என்பது rugby ஆட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு தவறான/ penalty move, அதையே literally மொழிபெயர்த்தால் “மூன்றாவது மனிதர் உறவின் நடுவில் நுழைவதை” சொல்லலாம். இந்த படமும் அப்படி தான். உறவுகளில் உள்ள பிரச்சனைகளை களைய முயற்சிக்காமல், வெளியேறாமல் மூன்றாவது நபரிடம் ஆறுதல் பெற நினைத்தால் அது தோல்வியில் தான் முடியும். இங்கே நாம் மிகவும் ரசித்த வாரன், மார்க் ஜோடிக்கும் இதுவே நடக்கிறது.


* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்:
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

முன்னோட்டம்
YouTube video
விமர்சனம்
YouTube video

முழு நீள வீடியோ

பகுதி 2
பகுதி 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top