Undertow (Contracorriente)

Undertow (Contracorriente) – அவனும் அவளும் அதுவும்…

தலைப்புCotracorriente
மொழிSpanish
வெளியான வருடம்2009
வகைFeature film
எங்கு பார்க்கலாம்?YouTube
இலவசமாக பார்க்கலாமா?ஆம்
நடிகர்கள்Cristian Mercado (Miguel), Manolo Cardona (Santiago), Tatiana Astengo (Mariela)
இயக்குனர்Javier Fuentes-Leon
Download Linkஇங்கே சொடுக்கவும்
கதைச்சுருக்கம்
I hate porn that starts off fucking... I need to know why they are fucking
சேரும் இடத்தை போல போகும் பயணமும் சுவாரசியமே...

Undertow (Contracorriente) – அவனும் அவளும் அதுவும்…
Click for large image
Contracorriente (Eng. title: Undertow) – எப்போதாவது ஏதாவது காதல் கதையை பார்த்து கண் கலங்கி இருக்கிறீர்களா? அப்படி என்றால் இந்த ‘பேய்’ காதல் கதையை பார்த்தால் நிச்சயம் நீங்கள் கண் கலங்கவில்லை என்றாலும் நெஞ்சில் பாரத்தை உணர்வீர்கள். நான் அந்த Spanish மொழியில் எடுக்கப்பட்ட ‘Peru’ நாட்டு படத்தை, எந்த வித இடையூறும் இல்லாமல் – Mobile / laptop-ஐ தொடாமல், தொந்தரவு செய்யப்படாத தனிமையில், பார்த்தபோது கடைசி காட்சியில் என் கண்ணில் ஈரத்தை உணர்ந்தேன். காதலை புரிந்துக்கொள்ள மொழி தேவையில்லை. ஒரு கட்டத்தில் நான் subtitle-ஐ கூட படிக்க தோன்றாத அளவுக்கு இந்த காதல் கதையில் ஊன்றிவிட்டேன். நிச்சயம் பாருங்கள்.

Undertow (Contracorriente) – அவனும் அவளும் அதுவும்…
Click for large image
இப்படி ரசித்து சிலாகிக்கும் அளவுக்கு இந்த படத்தின் கதை என்ன? – ஒரு மீனவ கிராமத்தில் வசிக்கும் Miguel என்னும் மீனவன் நிறைமாத கர்ப்பினியான அவன் மனைவி Mariela, மற்றும் நண்பர்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான். அதே ஊருக்கு வந்து வசிக்கும் வெளியூர் ஓவியனான Santiago-வை பற்றி ஊர் மக்களுக்கு பெரிய நல்ல அபிப்பிராயம் இல்லை. ஆனால் Miguel-க்கும் Santiago-வுக்கும் இடையே யாருக்கும் தெரியாத காதல் உறவாடிக்கொண்டிருக்கிறது.

Undertow (Contracorriente) – அவனும் அவளும் அதுவும்…
Click for large image
அந்த மீனவர் குல வழக்கப்படி யாரேனும் இறந்து விட்டால் அவர்களது உடலை முறையாக ஜலசமாதி செய்யவேண்டும். இல்லை என்றால் அவர்களது ஆவி இந்த உலகத்திலேயே அமைதியின்றி சுற்றிகொண்டிருக்கும் என்பது நம்பிக்கை. படம் ஆரம்பிப்பதே Miguel தன் நண்பனின் உறவினர் Carlos-ஐ நடுக்கடலில் அடக்கம் செய்யும் காட்சியில் தான். Miguel-ம் Santiago-வும் கடற்கரையில் சந்திக்கும் ஒரு மதியவேளையில் சிறு பிணக்கு ஏற்பட்டு Miguel வீட்டுக்கு வந்துவிட, எதிர்பாராமல் Santiago அலையில் அடித்து செல்லப்பட்டு இறக்கிறான். கடைசியில் Santiago பார்த்தது பேசியது Miguel என்பதால் அவனது ஆவி Miguel-ன் கண்ணுக்கு மட்டும் தெரிகிறது. ஆவியான Santiago Miguel-லிடம் தன்னை முறையாக அடக்கம் செய்து தனக்கு விடுதலை கொடுக்குமாறு கேட்கிறான்.

Undertow (Contracorriente) – அவனும் அவளும் அதுவும்…
Click for large image
முதலில் அதை நம்பாத Miguel, சில பரிசோதனைகளுக்கு பிறகு ‘ஆவி’ Santiago தன் கண்ணுக்கு மட்டும் தான் தெரிகிறான் என்று உறுதி செய்துக்கொள்கிறான். Miguel தங்கள் குல சம்பிரதாயப்படி ஜலசமாதி செய்து வைக்கும்வரை Santiago-வின் ஆவி தன்னை விட்டு போகாது என்பதால், உயிருடன் இருந்த Santiago உடன் வாழ கொடுத்து வைக்கவில்லை, அதனால் Santiago-வின் ஆவியுடனாவது நினைத்த வாழ்க்கையை வாழலாமே என்ற பேராசையில் Santiago-வின் உடலை கடலுக்கு அடியில் கல்லில் கட்டி வைத்துவிடுகிறான். அதற்கு Santiago-வின் ஆவியும் தான் உயிரோடு இருந்தபோது இருவரும் ஒன்றாக வாழ முடியாத வெளிப்படையான வாழ்க்கையை ஆவியாகவேனும் வாழ்ந்துக்கொள்ளலாம் என்று சந்தோஷமாக ஒப்புக்கொள்கிறது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

Undertow (Contracorriente) – அவனும் அவளும் அதுவும்…
Click for large image
இதற்கு நடுவே Miguel-க்கும் Santiago-வுக்குமான ஓரினகாதல் உறவு வெளியே தெரிந்துவிட, அவனது மீனவர் சமுதாயம் அவனை ஒதுக்கிவிடுகிறது. Miguel-ன் மனைவி Mariela பிறந்த கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு தாய் வீட்டுக்கு போய்விடுகிறாள். ஒருவழியாக Miguel அவளை கெஞ்சி, கொஞ்சி சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்து வந்துவிடுகிறான். மனைவி Mariela-வும், குழந்தையும் தான் தன்னுடைய நிஜ வாழ்க்கையின் ஆதாரம் என்ற நிதர்சனமான உண்மையை Miguel உணர்ந்து, மனதை தேற்றிக்கொள்கிறான் , Santiago-வின் ஆவியின் அருகாமை தன் வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதால் Santiago-வின் ஆவியை தன்னை விட்டு போய்விடுமாறு கேட்டுக்கொள்கிறான். இணைந்திருப்பது மட்டுமே காதல் அல்ல, தான் நேசிப்பவருக்கு தன்னால் பிரச்சனைகள் வரும் என்றால் விலகி நிற்பதும் காதலே என்று Santiago-வின் ஆவியும் அதற்கு ஒத்துக்கொள்கிறது. மீனவர் குப்பமும் Miguel-ஐ தங்களுடன் சேர்த்துக்கொள்கிறது.

Undertow (Contracorriente) – அவனும் அவளும் அதுவும்…
Click for large image
இந்நிலையில் ஒரு நாள் கடலுக்கு அடியில் கட்டு தளர்ந்து Santiago-வின் உடல் மீனவர்களின் வலையில் மாட்டுகிறது. முதலில் Miguel Santiago-வின் பிணத்தை பற்றி தான் கண்டுக்கொள்ளாதது போல நடித்தாலும், உள்ளுக்குள் அவன் Santiago-வை நினைத்து உருகுகிறான். Santiago ஒரு தன்பாலின ஈர்ப்பாளன் என்பதால் அவனை கைவிட்ட Santiago-வின் தாயும், சகோதரியும் அவனுடைய உடலை பெற்றுச்செல்ல வருகிறார்கள். தன் காதலன் Santiago-வின் கடைசி விருப்பமான அதே ஊரில் கடைசி வரைக்கும் Miguel உடன் இருக்கவேண்டும் என்பதை நிறைவேற்றுவதற்காக, Miguel மீண்டும் தன் காதலை வெளிப்படுத்துகிறான். Santiago-வின் உடலை அதே கடலில் முறைப்படி அடக்கம் செய்யவேண்டும் என்று சொல்ல, அவன் மனைவி Mariela மீண்டும் அவனை விட்டுவிட்டு போய்விடுகிறாள். Santiago-வின் தாயிடம் Miguel கெஞ்சி கூத்தாடி Santiago-வின் இறந்த உடலை பெற்றுக்கொண்டு கடலுக்கு போகிறான்.

Undertow (Contracorriente) – அவனும் அவளும் அதுவும்…
Click for large image
ஊர் மக்கள் அனைவரும் வெறுப்பாக வேடிக்கை பார்க்க, Santiago-ன் உடம்பை தன்னந்தனியாக தோளில் சுமந்து செல்கிறான். அதை பார்த்து மனம் இளகும் Miguel-ன் நண்பர்கள் அவனுக்கு தோள் கொடுக்க, ஊர் மக்களின் அனுமதியை எதிர்பார்க்காமல் வந்து Santiago-ன் பூத உடலை தூக்குகிறார்கள். பின்னர் ஊர் மக்களின் எதிர்ப்பு மெல்ல மெல்ல தளர்ந்து Santiago-வின் உடல் கடலலையை அடையும்போது அது ஊர்மக்கள் பங்குபெற்ற ஊர்வலமாக மாறிவிடுகிறது. கிட்டத்தட்ட ஊர் மக்கள் மறைமுகமாக அவர்களது காதலை அங்கீகரித்துவிட்டார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். கட்டுமரத்தில் இருந்து Miguel தன் காதலனின் உடம்பை கடலுக்குள் தள்ளும் போது Santiago-வின் ஆவி தோன்றுகிறது. கடைசி முறையாக Miguel-ஐ அழுத்தமாக முத்தமிட்டுவிட்டு இந்த உலகை விட்டு மறைந்துவிடுகிறது.

Undertow (Contracorriente) – அவனும் அவளும் அதுவும்…
Click for large image
படிக்கும் போது ஏதோ fairytale கதை போல தோன்றினாலும் நிச்சயம் serious ஆன gays-களுக்கு மனதை பிசையும் அளவுக்கு அழுத்தமான காதல் படத்தில் இழைந்தோடுகிறது. பெரிதாக exposure இல்லாத பிற்போக்கு மீனவ கிராமத்தில் வெள்ளந்தியான மக்கள். ஓரினக்காதல் என்பது ஏற்றுக்கொள்ளப்படாத எட்டாக்கனி. அப்படிப்பட்ட சூழலில் திருமணமான ஆண் ஒருவன் சக ஆணின் மீது காதல் கொள்வது என்பது எப்படிப்பட்ட அழுத்தமும், அதை மறைக்க முகமூடியும் தேவைப்படும் என்பதை melodrama இல்லாமல் எளிமையாக, அதே சமயம் அழுத்தமாகவும் கடந்து சென்றிருப்பது தான் முதல் சிறப்பு. அனைத்து Gays-களை போல Miguel-க்கு குழந்தை பெற்றுக்கொள்வது என்பது வம்சவிருத்தி என்பதை தாண்டி உலகத்துக்கு தன் ஆண்மையை நிரூபிக்கும் அம்சமாக படுகிறது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

தொடர்கதைகள் படிப்பவர்களுக்கு! அத்தியாயங்கள் என்ன frequency-ல் வரவேண்டும்?

View Results

Loading ... Loading ...

Undertow (Contracorriente) – அவனும் அவளும் அதுவும்…
Click for large image
ஆனால் அதே Miguel தன் காதலை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது அவன் அடி மனது ஆசைகளை நிறைவேற்றும் போது பார்க்கும் நாம் அவர்களுக்காக சந்தோஷப்படுகிறோம். ஆவியான Santiago-வும், Miguel-ம் சந்தோஷமாக தெருவில் கைகள் கோர்த்துக்கொண்டு நடக்கிறார்கள். வீட்டில் TV பார்க்கும் போது மடியில் அமர்ந்துக்கொண்டு, தலைமுடி கோதி… என்று தாங்கள் விரும்பும் இன்பத்தை அனுபவிக்கிறார்கள். ஒவ்வொரு Gay ஆணின் அடி மனது விரும்பும் அன்பை, வெளிப்படுத்தும் ஆசைகளை திரையில் Miguel-ம் Santiago-வும் நிறைவேற்றுவதை காணும்போது அப்படி ஒரு பரவசம்.

Undertow (Contracorriente) – அவனும் அவளும் அதுவும்…
Click for large image
ஆனால் என்னை மிகவும் கவர்ந்தது Santiago-வின் கதாபாத்திரம் தான். தான் காதல் கொண்டது ஒரு திருமணமான ஆண் என்றாலும் அவனை அப்படியே ஏற்றுக்கொண்டதோடு நில்லாமல், Miguel-ன் மனைவி மீதும் அன்பாக இருக்கும் அழகான மனது அவனுக்கு. Miguel தனக்கு குழந்தை பிறந்ததும் அதை தூக்கிச்சென்று Santiago-வின் ஆவியிடம் காட்டுகிறான். Santiago-வும் தன் காதலனின் குழந்தையை தடவிக்கொடுத்து மகிழ்கிறான். இங்கே திரையில் அவன் மனது மட்டும் அல்லாது ஆளும் செம அழகாக இருக்கிறான்.

Undertow (Contracorriente) – அவனும் அவளும் அதுவும்…
Click for large image
Santiago-வாக வரும் நடிகர் Manolo Cardona நிறைய நமது அசோக் செல்வனை நினைவுபடுத்துகிறார். காதல் காட்சிகளில் இவரை போன்ற காதலர் கிடைக்கமாட்டாரா என்று ஏங்க வைக்கிறார். குறிப்பாக Santiago-வும் Miguel-ம் படத்தில் முதல் முதலில் கட்டித்தழுவும் காட்சியும், பின்னர் உயிரோடு இருக்கும் போது கடைசி சந்திப்பில் Miguel-ஐ பேசவிட்டு, அவன் தோளை தடவிக்கொண்டு அவன் பேசுவதை ரசிக்கும் போது Manolo Cardona-ன் கண்ணில் தெரியும் காதல்… ஸ்ஸ்ஸ்! ஜிலீர் அனுபவம்.

Undertow (Contracorriente) – அவனும் அவளும் அதுவும்…
Click for large image
ஒரு காட்சியில் மிகைல் தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போது கட்டிலுக்கு பக்கத்தில் சாண்டியாகோவின் ஆவி தோன்றுகிறது. “Sorry! நீ நினைச்சதும் வந்துட்டேன்…” என்று சொல்லும் காட்சி நகைச்சுவையாக இருந்தாலும் Gay ஆண்களின் பெண்களுடனான உடலுறவின் “psyche”-ஐ இவ்வளவு வெளிப்படையாக சொல்லும் காட்சியை நான் இதுவரை பார்த்ததில்லை. கடைசி காட்சியில் Santiago-வின் ஆவி Miguel-ஐ முத்தமிட்டு விலகும் காட்சியில் எனக்கு கண்ணீர் துளிர்த்தது.

Undertow (Contracorriente) – அவனும் அவளும் அதுவும்…
Click for large image
படத்தில் ஒளிப்பதிவாளர் Mauricio Vidal-ன் லென்ஸ் கடற்கரையின் அழகை காட்டுவதோடு நில்லாமல், பெரு நாட்டு மீனவ கிராமத்தை அப்படியே கண் முன்பு காட்டுகிறது. மிகைப்படுத்தப்பட்ட அழகுடன் ஆங்கில படங்களில் கிராமங்களை பார்த்த நமக்கு இதை பார்க்கும் போது, அவர்களது வீட்டு அமைப்புகள், வாழ்க்கை முறைகள் எல்லாம் நம்மூர் மீனவ குப்பங்களை போலவே இருப்பது நம்மை இன்னும் கூடுதலாக ஒன்றவைக்கிறது. Climax-ல் Miguel Santiago-வின் உடலை தனியாக தூக்கிக்கொண்டு போகும்போது மெல்ல மெல்ல ஊர் மக்கள் அவனை தொடர்வதில் இருக்கும் drama, அதுவும் நம் தமிழ் சினிமாவின் sentiment காட்சியை போல உள்ளது. Human emotions எல்லாம் universal தான் போல…

இந்த full length படம் YouTube-ல் முழுவதுமாக கிடைக்கிறது. CC-ஐ on செய்துவிட்டு “Auto Translated Subtitles”-ஐ தேர்ந்தெடுத்தால் நல்ல English-ல் subtitles கிடைக்கிறது. பார்த்து பரவசம் அடையவும். YouTube-ல் இருந்து download செய்வதற்கு Click Here

முன்னோட்டம்
YouTube video

விமர்சனம்
YouTube video

முழு நீள வீடியோ
YouTube video

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top