Cobalt Blue (2023)

Cobalt Blue (2023)
பெயர்Cobalt Blue
மொழிHindi
வெளியான வருடம்2022
வகைFeature film
தளம்Netflix
YouTube-ல் கிடைக்கிறதா?இல்லை
நடிகர்கள்நீலே மெஹந்தலே, அஞ்சலி சிவராமன், ப்ரதீக் பப்பர்
இயக்குநர்சச்சின் குந்தல்கர்
கதைச்சுருக்கம்

என்ன தான் நாம் Bollywood is all about gloss, அவங்களுக்கு கதையை விட அழகா காண்பிக்கிறது தான் முக்கியம், choose style over substance அப்படின்னு கழுவி கழுவி ஊத்தினாலும், LGBTQ (Dostana, Shubh Mangal Zyada Saavadhaan, Aligarh, Badhaai Do, Chandigarh Kare Aashiqui), Extra Marital affairs (Gehraayiyaan) போன்ற taboo விஷயங்களை துணிச்சலாக பொதுவெளியில் பேசுவது அவர்கள் தான். தென்னிந்திய படங்கள் இவற்றை மறந்தும் கனவில் கூட பேசாது. மராத்தி இயக்குனர் சச்சின் குந்தல்கர் தான் எழுதிய “Cobalt Blue” என்ற நாவலை அவரே Hindi + English திரைப்படமாக இயக்கி Netflix-ல் வெளியிட்டுள்ளார். கிட்டத்தட்ட ஆறு மாத காலங்களுக்கு Netflix இந்த படத்தை வெளியிடாமல் நிறுத்தி வைத்தது ஏன் என்று எல்லாருக்கும் தெரியும்.

Cobalt Blue (2023)
1986 – ஓரினச்சேர்க்கை இந்தியாவில் சட்டரீதியாக குற்றமாக கருதப்பட்ட காலத்தில், கேரளாவில் நடப்பதாக எழுதப்பட்ட கதை. மகாராஷ்டிராவை சேர்ந்த பிராமண குடும்பம் ஒன்று வேலை நிமித்தமாக கேரளாவுக்கு குடிபெயர்கிறது. கட்டுப்பாடான அப்பா, கட்டுப்பெட்டியான அம்மா மற்றும் பாட்டியுடன் அஸீம், தனய் என்னும் மகன்களும், அனுஜா என்ற மகளும் கொண்ட குடும்பம். இவற்றில் அஸீம் மட்டும் தான் “normal”. அனுஜா ஹாக்கி விளையாடுவதால் குட்டையாக நறுக்கப்பட்ட தலைமுடி, enfield bike வைத்திருக்கும் தோழிகளுடன் triples போவது என்று கிட்டத்தட்ட tomboy போல இருக்கிறாள். அவள் தம்பி தனய் கலை இலக்கியம் என்று தனி உலகத்தில் இருக்கிறான்.

Cobalt Blue (2023)
பாட்டி இறந்துவிட, அவர் வசித்த மேல் மாடி அறையை தங்களுக்கு கேட்கும் தனய் மற்றும் அனுஜா இருவருடைய கோரிக்கையையும் நிராகரித்து வாடகைக்கு விடுகிறார். அதில் குடியேறும் பெயரில்லாத பையன் மற்றவர்களை போல அல்லாமல் மிகவும் வித்தியாசமாக இருக்கிறான். கலையுணர்ச்சி ததும்ப, வித்தியாசமாக அதே சமயம் அனைவரையும் வசீகரிக்கும் திறமையுடன் இருக்கும் அவன் மீது தனய் பார்த்த உடனேயே காதல் கொள்கிறான். அந்த பெயரில்லாத பையனும் தனய்யின் காதலுக்கு reciprocate செய்ய, ஒரு இரவில் ஆற்றின் கரையில் இருவரும் உடலுறவு கொள்கிறார்கள். இதற்கு பிறகு தனய்க்கு அந்த பையனை தவிர வேறு யாரும் கண்ணுக்கு தெரியவில்லை. அவ்வளவு பித்தாக இருக்கிறான்.

Cobalt Blue (2023)
இந்நிலையில் ஒரு நாள் அந்த பையனும் அனுஜாவும் ஒரே நேரத்தில் காணாமல் போய்விடுகிறார்கள். தனய் அவர்கள் இருவரும் தனித்தனியாக சென்றிருப்பார்கள் என்று நினைத்து கொண்டிருக்கும் வேளையில் அனுஜா அந்த பையனோடு தான் ஓடியிருக்கிறாள் என்பதை தெரிந்து இடிந்து போகிறான். அக்காவும் தம்பியும் ஒரே பையனோடு அடுத்தவருக்கு தெரியாமல் உறவில் இருந்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு பிறகு அனுஜா மட்டும் திரும்பி வந்துவிடுகிறாள். பாண்டிச்சேரிக்கு அந்த பையனோடு ஓடிவிட்டதாகவும், அவன் அங்கே இருந்து காணாமல் போனதும் வீட்டுக்கு வந்துவிட்டதாக சொல்லும் அனுஜாவை குடும்பம் மன்னித்து ஏற்றுக்கொள்கிறது. அனுஜா தான் அந்த பையனுடன் பலமுறை பாதுகாப்பான உடலுறவு வைத்துள்ளதாக சொல்கிறாள். ஆனால் தனய் மட்டும் தன் காதலன் ஒரு bisexual ஆக இருந்தது மட்டுமில்லாமல் ஒரே நேரத்தில் தன் அக்காவுடனும் உறவில் இருந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

Cobalt Blue (2023)
மீதி படம் முழுவதும் தனய் எப்படி அந்த ஏமாற்றத்தில் உழல்கிறான், கடைசியில் எப்படி உண்மையை ஏற்றுக்கொண்டு சகஜ நிலைக்கு வந்தான் என்பது தான் கதை. அனுஜாவுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. அவளுக்கு அஸ்ஸாமில் hockey coach வேலை கிடைத்துவிட, கல்யாண நாளன்று வீட்டை விட்டு மீண்டும் ஓடிவிடுகிறாள். ரயிலில் போகும் போது தனய்யும் தன் காதலனும் ‘compromising position’-ல் இருக்கும் புகைப்படங்களை பார்த்து தனய்யின் வாட்டத்துக்கு தான் ஓடிப்போனது காரணமில்லை, அந்த பையன் தந்த ஏமாற்றம் தான் என்று தெரிந்துக்கொள்கிறாள். தனய் தன் அனுபவங்களை புத்தகமாக எழுதி வெளியிடுகிறான். அதை அந்த பெயரில்லாத ஒருதலை காதலன் படிப்பதாக படம் முடிகிறது.

Cobalt Blue (2023)
இதை புத்தகமாக RJ ஆனந்தி செய்திருந்த விமர்சனத்தை கேட்டபோது புத்தகத்தை படமாக மாற்றும் போது translation-ல் நிறைய உணர்ச்சிகள் காணாமல் போய்விட்டது என்பது புரிந்தது. காரணம் திரைக்கதையில் ஒரு கட்டத்துக்கு மேலே ஜவ்வாக இழுப்பது போல தோன்றும். படத்தை காப்பாற்றுவது என்னவென்று பார்த்தால் நடிகர்கள் – தனய்யாக நீலே மெஹந்தாலே, அனுஜாவாக அஞ்சலி சிவராமன் மற்றும் பெயரில்லாத பையனாக பிரதீக் பப்பர் தரும் நடிப்பும், அழகான கேரளாவை இன்னும் அழகாக செல்லுலாயிடில் சுருட்டியிருக்கும் Vincenzo Condorelli-ன் ஒளிப்பதிவும், கலை இயக்கமும் தான். உடலுறவு காட்சிகள் படமாக்க பட்ட விதம் “intimacy coordinator” இல்லாமல் எடுக்கப்பட்டதன் quality வித்தியாசம் தெரியும்.

Cobalt Blue (2023)
முன்பே சொன்னது போல படம் நடுவில் கொஞ்சம் இழுவையாக தெரிந்தாலும், அது முழுவதுமாக தனய்யின் பார்வையில் நகர்வதால் நம்மால் அவனது உணர்ச்சிகளை புரிந்து கொள்ளமுடிகிறது. தனிமையில் இனிமை காணும் அவன் பாப்லோ என்று பெயரிட்டு ஒரு ஆமையை செல்லபிராணியாக வளர்ப்பது, பெயரில்லாத காதலனை பார்க்கும் போதெல்லாம் அவன் வெளிப்படுத்தும் பரவசம், கல்லூரியின் Gay lecturer கூட flirt செய்வது, தன் காதல் அந்த பையனுக்கு வெறும் பொழுதுபோக்கு என்று உணர்ந்த போது அவன் காட்டும் வலி… அனைத்தையும் நீலே மெஹந்தாலே மிக அழகாக பார்வையாளர்களுக்கு கடத்துகிறார். அக்காவாக வரும் அஞ்சலி சிவராமன் பொருத்தமாக இருக்கிறார். இந்த காதல் முக்கோணத்தில் இணைப்பு புள்ளியாக வரும் பிரதீக் பப்பர் செதுக்கிய கட்டுடம்புடன் enigmatic ஆக நம்மையும் அவன் மீது ஈடுபாடு கொள்ள வைக்கிறார்.

Cobalt Blue (2023)
சமயம் கிடைக்கும் போது இந்த படத்தை பாருங்கள். சிறு குறைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் தனய்யை நம்மால் புரிந்துக்கொள்வதோடு நில்லாமல் அவனை நேசிக்கவும் ஆரம்பித்துவிடுவோம்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

Planet Romeo (PR), Grindr மாதிரியான Gay dating apps-ல ஆளுங்கள pickup பண்றதுக்கு உங்களோட முக்கியமான criteria என்ன?

View Results

Loading ... Loading ...
முன்னோட்டம்
  • YouTube video

  • விமர்சனம்
  • YouTube video




  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Free Sitemap Generator
    Scroll to Top