| தலைப்பு | The Cakemaker | ||||||||||
| மொழி | Hebrew | ||||||||||
| வெளியான வருடம் | 2017 | ||||||||||
| வகை | Feature film | ||||||||||
| எங்கு பார்க்கலாம்? | Netflix | ||||||||||
| இலவசமாக பார்க்கலாமா? | ஆம் | ||||||||||
| நடிகர்கள் | Tim Kalkhof [de] (Thomas), Roi Miller (Oren), Sarah Adler (Anat), Zohar Strauss (Motti) & Tamir Ben-Yehuda (Itai) | ||||||||||
| இயக்குனர் | Ofir Raul Grazier | ||||||||||
| கதைச்சுருக்கம் | |||||||||||
I hate porn that starts off fucking... I need to know why they are fucking The Cakemaker – இறந்து போன காதலனின் குடும்பத்துக்கு உதவி செய்வதற்காக, அவர்கள் அறியாமல், மூன்றாம் மனிதராகி அறிமுகம் ஆகி, நெருக்கமானவராக மாறி, கடைசியில் தான் யார் என்ற அடையாளம் தெரிந்ததும் காதலனின் குடும்பத்தால் அவமானப்படுத்தி விரட்டி அடிக்கப்பட்டு… கடைசியில் அதே குடும்பத்தினர் இவருடைய காதலின் மகத்துவம் புரிந்து, அவருடைய வருகைக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார்கள்… இது தமிழில் 1993-ம் ஆண்டு வெளியான, பானுப்ரியா, ஜெயராம் மற்றும் அர்ஜும் நடித்து, விக்ரமன் இயக்கிய “கோகுலம்” படத்தின் கதையாயிற்றே என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.சேரும் இடத்தை போல போகும் பயணமும் சுவாரசியமே... ‘கோகுலம்’ படத்தில் காதலர்கள் இருவரும் வெவ்வேறு gender-களாக இருப்பதாலும், காதலன் மறைவுக்கு பிறகு காதலி அவன் குடும்பத்தை தாங்கிப்பிடிப்பது நெகிழ்ச்சியூட்டும் கதையாகிறது. ஆனால் இரண்டு காதலர்களும் ஒரே sex-ஆக, குறிப்பாக ஆண்களாக இருந்தால் இந்த சமுதாயம் எப்படி ஏற்கும்? இது தான் “The Cakemaker” என்னும் இஸ்ரேலிய LGBT படத்தின் கதை. ‘கோகுலம்’ கொஞ்சம் melodrama-வாக, நம்மூர் ரசனைக்கேற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த “The Cakemaker”-ல் இயல்பு கூடுதலாகவும், melodrama குறைவாகவும் இருக்கும்.Berlin நகரத்தில் வசிக்கும் தாமஸ் என்ற baker-க்கும், அலுவலக விஷயமாக Jerusalem நகரத்தில் இருந்து வரும் ஆர்லெனுக்கும் ஓரினக்காதல் ஏற்பட்டு அது உறவாகவும் தொடர்கிறது. பல காலமாக தன்னை காண வராத ஆர்லெனை தேடி அவன் அலுவலகத்துக்கு செல்லும் தாமஸுக்கு ஆர்லென் இறந்து ஒரு மாதம் ஆகிறது என்ற செய்தி பேரிடியாக இறங்குகிறது. அவனது குடும்பத்தை – மனைவி மற்றும் குழந்தையை ஒரு முறை தூரத்தில் இருந்தாவது பார்க்கலாம் என்று ஜெருசலேம் போகிறான். அங்கே அவன் மனைவி அனத் ஒரு coffee shop வைத்துக்கொண்டு அல்லாடுவதை பார்க்கும் தாமஸ், தான் யாரென்று சொல்லாமல் அவளிடம் வேலைக்கு சேர்கிறான்.தாமஸ் தனது trademark-ஆன cookies-களை செய்து விற்பனைக்கு வைக்க, சீக்கிரம் அனத்தின் கடை பிரபலமாகிறது. தாமஸுக்கும் அவன் காதலனின் மனைவி அனத்துக்கும் நடுவே நட்பு பூக்கிறது. ஒரு உணர்ச்சிவசப்பட்ட தருணத்தில் இருவருக்கும் உடலுறவு ஏற்பட்டு இன்னும் நெருக்கமாகிறார்கள். எதிர்பாராத விதமாக அனத்துக்கு தன் கணவனின் காதலன் இந்த தாமஸ் என்று தெரிந்துவிட, அவன் விரட்டப்படுகிறான். தாமஸ் தன் இறந்த கணவன் மீது கொண்ட அன்பு தான் அவனை தனக்கு வேலைக்காரனாக இருக்க வைத்தது என்று அவன் அன்பை புரிந்துக்கொள்ளும் அனத் அவனை பார்க்க பெர்லின் போகிறாள். அங்கே தாமஸ் தன் கடையில் இருந்து சைக்கிளில் போவதை தூரத்தில் இருந்து அவனுக்கு தெரியாமலே பார்த்தபடி நிற்கிறாள்.
இந்த படத்தின் அழகே இதன் தெளிவான நீரோட்டம் போன்ற அமைதியான திரைக்கதையும், அதன் அடிநாதமான மென்சோகமும் தான். தாமஸ் தன் காதலை, காதலனை இழந்த துக்கத்தை வெளிப்படுத்தி இருக்கும் விதமும், அதை வெளியே சொல்ல முடியாத பரிதவிப்பும் பார்க்கும் நமக்கே திரைக்குள் சென்று அவனை கட்டி அணைத்து ஆறுதல் சொல்லலாமா என்பது போல இருக்கும். என்ன தான் காதல் இருந்தாலும், சமூகத்தின் முன்பு எந்த உரிமையில் அவன் ஆர்லெனின் குடும்பத்தை பார்க்க முடியும் என்ற பரிதாபம், இந்த சமுதாயத்தால் அங்கீகரிக்கப்படாத மொத்த ஓரினக்காதல்களின் பிரதிநிதித்துவம். தாமஸுக்கு இணையாக நம் மனதில் அனத் நிற்கிறாள். கணவன் இழந்த பின்னும் துவண்டு போகாமல், தன் குழந்தைக்காக வாழ்க்கையை எதிர்கொள்ளும் தைரியம் நம்மை சபாஷ் போட வைக்கிறது என்றால், அவள் தாமஸிடம் (அவன் யார் என்று தெரியாமல்) தன் கணவன் திருமணம் தாண்டிய காதலுக்காக தன்னை விட்டு செல்லும்போது விபத்தில் இறந்ததை, அர்லென் மீது வெறுப்பு இல்லாமல் சொல்வதில் அவளுடைய உண்மையான காதலுக்கு அங்கீகாரம் கிடைக்காத வலி வெளிப்படுகிறது. அனத் கடைசியில் தாமஸை மன்னித்து அவனை பார்க்க பெர்லினில் நிற்கும்போது நம் அன்பை சம்பாதிக்கிறாள்.இந்த படம் வெறுமனே ஓரினக்காதலுக்காக பேசப்படவில்லை. ஒரு படத்தில் Sexual fluidity பற்றி பேசியது, நான் பார்த்த படங்களில் இது தான் முதல் முறை. காமம் என்பது கறுப்பு வெள்ளை விஷயம் இல்லை. காலங்கள் மாற, ரசனையும், அன்பும் ஈடுபாடும் வெவ்வேறு பரிமாணங்கள் எடுக்கிறது. உதாரணத்துக்கு – சுத்த சைவப்பையன் தன் காதலிக்காக அசைவம் சாப்பிட ஆரம்பிப்பது போல… காலம் காலமாக சைவம் சாப்பிடுபவர்கள் அப்படி அசைவத்தில் என்ன தான் இருக்கிறது என்ற ஆர்வத்தில் அசைவம் ருசிக்க முற்படுவது போல, அசைவத்திலேயே ஊறிப்போனவர்கள் ஒரு கட்டத்தில் சைவத்துக்கு மாறுவது போல, காமத்திலும் மனிதர்களின் preferences மாறுகிறது.அன்பு பிரவாகமெடுக்கும் சமயத்தில் அந்த அன்பு எந்த gender / sex மீது செலுத்தப்படுகிறது என்பது பார்க்காமல் அவர்களோடு அன்பில் உடல்கள் காமத்தில் கலப்பது தான் sexual fluidity-ன் ஆரம்பம். அதை இந்த படம் அழகாக சொல்கிறது. உணர்ச்சிவசப்பட்ட தருணத்தில் தன்னை முழு gay-ஆக நினைக்கும் தாமஸ் பெண்ணான அனத்துடன் உடலுறவில் ஈடுபடுவது தான் fluid sexuality. காதலினாலோ அல்லது வெறும் அனுபவங்களுக்காகவோ… ஏதோ ஒரு காரணம் மனிதர்களை இருபாலினத்தவர்கள் மீதும் காமம் கொள்ள வைக்கிறது. அது இயல்பு தான் என்றும், அதனால் அப்படிப்பட்ட மாறுபடும் காம எண்ணங்கள் தோன்றும் போது மனிதர்கள் குற்ற உணர்ச்சியில் உழல வேண்டிய அவசியம் இல்லை என்று மனோதத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்:
குறிச்சொற்கள்: ஓரினக்காதல், ஓரினச்சேர்க்கை | |||||||||||
| முன்னோட்டம் | |||||||||||
![]() | |||||||||||
| விமர்சனம் | |||||||||||
![]() | |||||||||||
| முழு நீள வீடியோ | |||||||||||
![]() | |||||||||||








