கதைச்சுருக்கம்... |
---|
சந்தோஷ் எழுதிய கெஞ்சல் செய்தியும், அம்மணக்குண்டி படமும் தப்பான கார்த்திக்கு email-ல் வந்துவிட, அவனை சந்திக்க அழைத்த கார்த்தி உண்மையை புரியவைக்கும் நிஜமான கதை. |
நான் Forum Mall-ஐ அடைந்தபோது சந்தோஷ் ஏற்கனவே அங்கு படபடப்பாக இருந்ததை அவன் கால்கள் வேகமாக ஆடிக்கொண்டிருந்த விதம் சொன்னது. நான் அவனிடம் நெருங்கி அவன் தோளை தொட்டேன். நிமிர்ந்து என்னை பார்த்த சந்தோஷின் கண்ணில் ஒருவித பயம் தெரிந்தது.
“Hi, நான் தான் கார்த்தி.. Karthi with an “I”..” என்று சொல்லி புன்ன்னகை புரிந்தேன். ஆனால் பதில் புன்னகை பூக்கும் நிலையில் சந்தோஷ் இல்லை.
“பயப்படாத சந்தோஷ்… நானும் Gay தான்.”
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
சந்தோஷின் முகத்தில் இறுக்கம் குறைந்தாலும் அந்த photo-வை வைத்து நான் அவனை மிரட்டி படுக்க கூப்பிடப்போகிறேனோ என்ற திகில் அவன் கண்ணில் ஓடியதை மறைக்கமுடியவில்லை.
“சொல்லு சந்தோஷ்… உன்னோட கார்த்தியை எப்படி தெரியும்?”
.
“எனக்கு என்ன தேவை சந்தோஷ்?”
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
Loading ... |
“அது உங்களுக்கு தான் தெரியும்… ப்ளீஸ்! சீக்கிரம் கேளுங்க. என்னோட ATM Card-ன் PIN தர்றேன். Account Balance ரொம்ப எல்லாம் இல்லை. இருக்குறதை எடுத்துக்கோங்க” என்றபடி தன் purse-லிருந்து ATM Card-ஐ எடுத்து table மீது வைத்தான்.
நான் அவனுடைய -ஐ அவன் பக்கம் தள்ளியபடி “சந்தோஷ்… இதை எடுத்து முதல்ல உள்ளே வை. உன் Account-ல இருக்குறது தான் உன்னோட value-ன்னா நோ ரொம்ப cheap ஆன item-ஆ இருக்கியே…” கோணல் புன்னகை ஒன்றை உதிர்த்தேன்.
சந்தோஷின் முகத்தில் அடிபட்ட புலியின் சீற்றம் தெரிந்தது.
“உன்னோட சந்தோஷ் உன்னை Social media- உன்னை விரட்டி விரட்டி propose பண்ணினானா? நீ என்ன forum-ல என்ன post போட்டாலும் அதுல வந்து உனக்கு ஆதரவா messages போட்டானா?”
“ம்ம்…”
“அந்த கார்த்தி உன் கிட்டே ஏற்கனவே ஒரு சிலர் அவனை love பண்றதா சொல்லி ஏமாத்தி அவனை matter பண்ணிட்டு அவனை ditch பண்ணிட்டாங்கன்னு சொன்னானா?”
“ம்ம்..”
“அதனால love மேலேயும் மனுஷங்க மேலயும் நம்பிக்கை போயிட்ட சமயத்துல உன்னோட profile-ஐ பார்த்து அவனோட எண்ண ஓட்டங்களும், உன்னோட சிந்தனைகளும் ஒரே மாதிரி இருக்குறதை பார்த்து ஆச்சரியப்பட்டான்னு சொன்னானா?”
சந்தோஷ் திடுக்கிட்டான். “உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்.. அந்த கார்த்தியை உங்களுக்கும் தெரியுமா?”
“அப்புறம் உன்னை லவ் பண்றதாகவும், நீ இல்லைன்னா அவன் வாழ்க்கை திரும்பவும் சூனியமா போயிடும்னு சொல்லியிருப்பானே…”
“ஆமாம்..”
“தினமும் காலையிலே Good morning-ம், நடு ராத்திரியிலே உன்னோட நினைப்பாவே இருக்கு சந்தோஷ்ன்னு நேரம் கெட்ட நேரத்துல love messages அப்புறம் phone calls-ன்னு கூப்பிட்டானா?”
“ம்ம்…”
“அப்புறம் நீ உன்னோட பிடிவாதத்தை தளர்த்தவும் உன்னை கட்டில்ல சல்லி சல்லியா பிரிச்சு மேஞ்சிருப்பானே…”
“ம்ம்ம்…”
.
“ப்ளீஸ்… உண்மையை சொல்லுங்க. உங்களுக்கும் கார்த்தி கூட பழக்கம் இருந்திருக்கா?” சந்தோஷ் விட்டால் அழுதுவிடுவான் போல இருந்தது.
“சந்தோஷ்! நீ இந்த Gay scene-க்கு புதுசுன்னு நினைக்கிறேன். அதனால தான் நீ ரொம்ப easy-யா ஏமாந்திருக்கே…”
சந்தோஷின் கண்ணில் கண்ணீர் கோர்க்க ஆரம்பித்திருந்தது.
.
“இல்லை… என் கார்த்தி அப்படிப்பட்ட ஆள் இல்லை… அவனுக்கு Office-லயும் வீட்டுலயும் கொஞ்சம் பிரச்சனைங்க இருக்குறது எனக்கு தெரியும்.. அவன் சொல்லிட்டான்”
“அட அசடே! அது முன்ஜாமீன் வாங்குறதுக்காக அப்பப்போ போட்டு வைக்கிற பிட்டுங்க… அவனை மாதிரி ஆளுங்க உன்னை சட்டுன்னு வெட்டிவிட மாட்டாங்க. அவங்களோட current target கிடைக்கலைன்னா standby-க்காக உன்னை side-ல maintain பண்ணிட்டே இருப்பாங்க… நீ கெஞ்சிக்கிட்டு பின்னாடி சுத்துறது கூட இந்த மாதிரி ஆளுங்களுக்கு ஒரு போதை தான்…”
“இல்லை…”
“White lies – அதை கண்டுபிடிச்சு நிரூபிக்கிறதும் இல்லை அவனை அப்படியே நம்புறதும் உன்னோட இஷ்டம். ஆனா ஒரு certain stage-ல மனசு வெறுத்து நீயா அவனை விட்டு விலகனும்னு முடிவு பண்றப்போ அவங்க sympathy card போட்டு உன்னை திரும்ப கொக்கியில மாட்டிடுவாங்க… இதுல இருந்து வெளியே வர்றது உன்னோட willpower-ஐ பொறுத்தது தான்.”
“By the way… you look hot. நானே உன்னோட nudes-ஐ பார்த்து ஒரு தடவை கையடிச்சேன். உனக்கு Gay dating-ல அடுத்த ஆள் கிடைக்கிறது கஷ்டமா இருக்காது… ஆனா love பண்றதுக்கும், companionship-க்கும் ஆள் தேடுறீன்னா கொஞ்சம் பொறுமையா நல்ல ஆள் கிடைக்கிற வரைக்கும் காத்திட்டு இரு… இல்லை அதுவரைக்கும் நானும் தான்னு விளையாட இறங்குறேன்னா மனசை கழற்றிவச்சிட்டு விளையாட்டு மைதானத்துல இறங்கு…”
“ம்ம்ம்…”
“எது எப்படியோ… ஒரு மனுஷனுக்கு சுயமரியாதைங்குறது ரொம்ப முக்கியம். இப்படி ஓழ் வாங்குறதுக்காக ஒருத்தன் கிட்டே கெஞ்சிட்டு இருக்குறதுக்காகவா உன்னை உங்க அப்பா அம்மா பெத்து போட்டாங்க?”
சந்தோஷ் கொஞ்சம் கடுப்பாவதை என்னால் உணரமுடிந்தது.
“உன் முன்னாடியே உன்னோட mail-ஐ Trash bin-ல இருந்தும் permanently delete பண்றேன். அதை வச்சு எனக்கு சாதிச்சிக்குறதுக்கு எதுவும் இல்லை. ஆனா உன்னை பார்த்தா கொஞ்சம் பாவமா இருந்துச்சு… அதனால சொல்லனும்னு நினைச்சதை சொல்லிட்டேன். எதுக்காகவும் எவனுக்காகவும் உன்னை நீயே விட்டுக்குடுக்காதே…” என்றபடி நான் என் mobile phone-ஐ எடுத்து அவனுடைய பார்வையில் அவனுடைய mail-ஐ delete செய்தேன்.
சந்தோஷின் முகத்தில் ஒரு ஆசுவாசம்.
“சரி சந்தோஷ்! நான் கிளம்புறேன். It was nice meeting you.” என்றபடி எழுந்தேன்.
“Thanks Karthi with i… நீங்க சொன்னது பேசுனது எல்லாம் எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கு…. என்னால அவனை மாதிரி சட்டுன்னு மனசை மாத்திக்க முடியாது. நான் முயற்சி பண்றேன்… போறதுக்கு முன்னாடி ஒரு தடவை…” என் அனுமதியை எதிர்பார்க்காமல் என்னை மென்மையாக கட்டிப்பிடித்தான்.
வண்டியில் சாவியை போடும்போது எனக்கு சிரிப்பு வந்தது. நிச்சயம் அந்த கார்த்தி மீண்டும் சந்தோஷுக்கு கொக்கி போடுவான், இவனும் அவனது குரலை கேட்டதும் இல்லை குறுஞ்செய்தியை பார்த்ததும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு மீண்டும் அவன் பின்னாடியே நாய்க்குட்டி போல வாலாட்டிக்கொண்டு போவான் என்று தோன்றியது. ஏனென்றால் நானும் ஆரம்பத்தில் அப்படி கண் இல்லாத கபோதியாக சிலரால் அலைக்கழிக்கப்பட்டு பின்னரே எனக்கு சொந்த புத்தி வந்து சுயமரியாதையோடு இருக்கிறேன். சந்தோஷும் அந்த phase-ஐ கடந்து தானே ஆக வேண்டும். வண்டியின் ignition start செய்யப்பட்டு உறும, நான் சீராக வண்டியை செலுத்தி சாலையில் கலந்தேன்.
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 12/09/2016
Alternate Blogger URL: https://kasamusakathaigal.blogspot.com/2020/04/blog-post.html
Feedback |
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
கதை எப்படி இருக்கு? |
Picture of the day |
---|