என் குடும்பம்

Group Study – KISS – Keep it Short & Simple

“மச்சி! டீ குடிக்க போகலாமா? எனக்கு தூக்கம் வருது” அஷோக் குரல் கொடுக்க, இதற்காகவே காத்திருந்தது போல ரமேஷ், அருண் மற்று முகுந்த் எல்லோரும் தங்களுடைய புத்தகத்தை மடித்து வைத்தார்கள். RS Khurmi-யின் பைபிள் அளவுக்கு மொத்தமான “Fundamentals of Fluid Dynamics” பத்தகங்கள் சத்தத்தோடு மூடப்பட்டன. பிரகாஷின் அறையில் combined study அல்லது group study நடந்துக்கொண்டிருக்கிறது. ஆம்பள பசங்க நல்ல நாளிலேயே சேர்ந்தாப்புல ஒரு மணி நேரம் பாட புத்தகத்தை திறந்து வைத்து படிக்கிறது அதிசயம்… இதுல ஆறு ஏழு தடிப்பசங்க சேர்ந்தா… கேட்கவே வேண்டாம். அது மட்டுமில்லாம ராத்திரியிலே படிச்சா? சுத்தம்… அரை மணி நேரம் படிச்சிட்டு Tea Break-னு எழுந்தா திரும்ப படிக்க உட்கார்றதுக்கு ரெண்டு மணி நேரமாவது ஆகும். கேட்டா அந்த ராத்திரியிலே டீ குடிக்க 5 கிலோமீட்டர் போகனும்னு ஒரு சால்ஜாப்பு. எல்லோரும் எழுந்து தங்கள் லுங்கிகளை சரியாக பிரித்து கட்டினார்கள்.

“பிரகாஷ்… உன் கிட்டே தான் சொல்றோம். நீ வரலை?” – முகுந்த். அந்த அறையில் இருந்த எல்லோரும் ஏதோ சொல்லத்தெரியாத காரணங்களால் பிரகாஷை தங்கள் முடிசூடாத தலைவனாக கொண்டு நடந்தார்கள். பிரகாஷின் ஆளுமையா அப்படி…

“விடுடா மச்சான்.. அவன் இப்போ எல்லாம் நம்ம கூட டீ குடிக்க வர்றதே இல்லை… இதோ கார்த்தி வந்ததும் இவன் ரொம்ப கெட்டுப்போயிட்டான்” – அருண் முகுந்துக்கு ஆதரவாக கொடிபிடித்தான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

“இல்லடா… இது ஏழாவது semester… இதுல ஒழுங்கா clear பண்ணுனா தானே அடுத்த semester-ல project-ல concentrate பண்ண முடியும்? எல்லாரும் உட்கார்ந்து படிங்க… 12:30 மணிக்கா எல்லாரும் ஒன்னா போகலாம்… நானும் வர்றேன்” ‘தலைவன்’ பிரகாஷ் சொன்னபோதும் அதை ஏற்கும் மனநிலையில் யாறும் இல்லை… கார்த்தியை தவிர.

“உனக்கென்னடா… அது தான் Campus Interview-ல select ஆயிட்டே இல்லை? இன்னும் ஏன் படிப்பு படிப்புன்னு உயிரை எடுத்துட்டு இருக்கே?” – முகுந்த்.

“Campus placement தான் நம்ம life-ஓட ultimate destination-ஆ என்ன? ஒருவேளை உள்ளே போனதும் அவங்க நமக்கு குடுக்குற job profile புடிக்கலைன்னா புலம்பிட்டு அங்கேயே காலத்தை ஓட்டிட்டு இருப்பியா? நல்ல மார்க் இருந்துச்சுன்னா US-ல Higher studies-க்கு apply பண்ணலாம் இல்லை? எனக்கு life-ல choices இருந்தா தான் secure-ஆ இருக்க முடியும். Only secure human beings make the world a better place” பிரகாஷ் தான் டீ குடிக்க வரவில்லை என்பதை உறுதிபட தெரிவித்தான்.

“டீ குடிக்க வரலைன்னு நேரா சொல்லேன்… இதுக்கு ஏன் அர்த்த ராத்திரியிலே தத்துவம் எல்லாம் கக்குறே?” முகுந்த் பிரகாஷை mimicry செய்தபடி “கார்த்தி… நீயாச்சும் கிளம்புறியா?” – முகுந்த் கார்த்தி வரமாட்டான் என்று தெரிந்தும் வேண்டுமென்றே அவனை வம்புக்கு இழுத்தான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

இனி வரும் பதிவுகளின் header image-ல் தமிழ் நடிகர்கள் படங்களுக்கு பதிலாக பொதுவான romantic / erotic images வைத்தால் comfortable ஆக feel செய்வீர்களா?

View Results

Loading ... Loading ...

“விடுடா மச்சான்… ஒரு campus இன்னொரு campus கூட தானே சேரும்… ரெண்டு பேரும் ஒரே குட்டையிலே ஊற ஆரம்பிச்சிடுச்சுங்க… இதுங்க கிட்டே பேசி நம்ம நேரத்தை waste பண்ன வேண்டாம்” ரமேஷ் சொன்னது கார்த்திக்கு ஆதரவாக இருப்பது போல இருந்தது.

“மச்சி! நீ மட்டும் கார்த்தியை பிரகாஷ் இல்லாத தனியா கூட்டிட்டு வா… நான் உனக்கு full-லே வாங்கி தர்றேன்” – அருண் அந்த வம்பில் கலந்துக்கொண்டான்.

கார்த்தி எதுவும் பேசாமல் சிரிப்போடு “பாஸ் என்கிற பாஸ்கரனின் நயன்தாரா” போல அவர்கள் பக்கம் கையெடுத்து கும்பிட, அடுத்த சில நொடிகளில் அறை காலியானது. சில நிமிடங்களில் வாசலில் பைக்-குகள் கிளம்பும் சத்தமும் கேட்டது.

“கார்த்தி! ஒரு தம் போட்டுட்டு வந்துடலாமா?” பிரகாஷ்ஷின் விருப்பங்கள் கார்த்திக்கு எப்போதும் கட்டளை தான். புத்தகத்தில் புக்மார்க் வைத்துவிட்டு எழுந்தான்.

நள்ளிரவு…. ஆளில்லாமல் வெறிச்சோடிய தெருக்களும், இருண்ட மொட்டைமாடிகள், ஆங்காங்கே எரியாத தெருவிளக்குகள் மேலும் இருட்டை கூட்ட, மேகங்கள் இல்லாத தெளிவான வானத்தில் தூவப்பட்டிருந்த நட்சத்திரங்கள், குளிர்ந்த தென்றல் காற்று… மாடியின் கைப்பிடியில் பிரகாஷ் உட்கார்ந்து தம் இழுக்க, கார்த்தி சில அடிகள் தள்ளி நின்று கையை கட்டிக்கொண்டு பிரகாஷை பார்த்தபடி நின்றிருந்தான்.

“நான் உன்னை முன்னாடியே Combined studies-க்கு கூப்பிட்டிருக்கனும் கார்த்தி! எனக்கு படிக்கிறதுக்கு நீ மட்டும் தான் செம கம்பெனி… ஒருவேளை உன் கூட மத்த semesters-க்கு படிச்சிருந்தேன்னா percentage இன்னும் அதிகமா ஏறியிருக்கலாம்…” பிரகாஷ் உணர்ச்சிவசப்பட்டிருப்பது அவன் குரலில் தெரிந்தது.

“எனக்கும் அப்படி தான் தோணுது… தனியா படிக்கிறதை விட இது ரொம்ப நல்லா இருக்கு….”

“நீ ஏன் தனியாவே இருக்கே? போர் அடிக்கலையா?”

“ஹ்ம்ம்ம்… இல்லை. அப்படியே இருந்து பழகிடுச்சு… சொல்லப்போனா தனியா இருக்கிறது எனக்கு பாதுகாப்பா இருக்கு… என்னை பத்தியும் என்னோட பேச்சு/நடை பற்றியும் வர்ற கேலி கிண்டல்களை எல்லாம் இப்போ தான் மறத்து போற அளவுக்கு தன்னம்பிக்கை கிடைச்சிருக்கு… அதனால தான் ரமேஷ் கூப்பிட்டப்போ என்னால group study-க்கு வரத்துணிஞ்சிருக்கு…”

“சாரிடா…”

“ஏன்?” என்பது போல கார்த்தி செற்றியை சுருக்கியது அந்த அரையிருட்டில் பிரகாஷால் பார்க்க முடிந்தது.

“இல்லை… நான் கூட மத்தவங்க கூட சேர்ந்துக்குட்டு உன்னை நிறைய ஓட்டியிருக்கேன்…. நீ ரொம்ப சாஃப்டா பேசுறது, உன்னோட நடை ஒரு பக்கமா tilted-ஆ இருக்குறது… அது இதுன்னு நான் நீ இல்லாதப்போ உன்னை பத்தி தப்புத்தப்பா பேசியிருக்கேன்… ஆனா உன் கூட நெருங்கி பழகுறப்போ தான் உன்னோட talents-ம், personality-யும் எனக்கு தெரியுது.”

“ஹா! ஹா! Your apologies accepted… But என்னை கேலி பண்ற முதல் ஆள் நீ இல்லையே? அதனால உன்னோட apologies-ஐ திரும்ப குடுத்துடுறேன்”

பிரகாஷ் தன் கையில் இருந்த கடைசி cigar puff-ஐ இழுத்துவிட்டு அதன் stub-ஐ கைப்பிடி சுவற்றில் தேய்ந்து நெருப்பை அணைத்தான். கார்த்தி வழக்கம்போல தம் முடிந்ததும் கீழே போவது போல கிளம்புவதற்கு தயாராகிவிட்டதை தன் restlessness-ன் மூலம் தெரிவித்தான்.

“கார்த்தி! இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருக்கலாமா? இந்த Unit தான் முடிக்கப்போறோமே?”

“ஹ்ம்ம்ம்… சரி!”

“கார்த்தி! உன் கூட படிக்கிறப்போ எனக்கு பாடங்கள் எல்லாம் தானாவே நல்லா புரியுது…. முன்ன எல்லாம் ஹிந்தி பாட்டுங்களை கேட்டாலே கடுப்பா இருக்கும்… ஆனா நீ கேட்குறதால நானும் கேட்டு கேட்டு இப்போ எனக்கும் ஹிந்தி பாட்டுங்க புடிக்க ஆரம்பிச்சுடுச்சு… என்னானு தெரியலை… நீ இருந்தா எனக்கு மத்தவங்க யார்கிட்டேயும் கவனம் போக மாட்டேங்குது” பிரகாஷ்ஷின் குரல் வழக்கத்துக்கு மாறாக குழைய தொடங்கியது.

கார்த்தியின் முகத்தில் சலனமே இல்லை. ஆனால் அவன் சட்டென்று இறுக்கமானது கார்த்தி தன் கையை கட்டிக்கொண்டதிலேயே தெரிந்தது.

“கார்த்தி.. I think I like you a lot…” கார்த்தியின் தலை ஒரு கோணத்தில் திரும்பினாலும் அவன் பார்வை பிரகாஷை விட்டு அகலவில்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top