முன் கதை சுருக்கம்... |
---|
விக்கி சரியான நேரத்தில் நரேனை hospital-க்கு கொண்டு வந்து சேர்த்ததால் அவர் இப்போது ICU-வில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். நரேனை காண US-ல் இருந்து வந்த அவர் மகன் ஹரீஷிடம் தான் சாகும் முன்பாவது முகமூடி இல்லாமல் தன் sexual orientation-ஐ வெளிப்படுத்தி ஒரு gay-ஆக சாகவேண்டும் என்று come out செய்கிறார். ஆனால் தன் தந்தை ஒரு gay என்ற உண்மை ஹரீஷுக்கு அருவெறுப்பை ஏற்படுத்துகிறது. விக்கியின் காதல் என்ன ஆனது? |
ஹரீஷ் வெளியே வந்தபோது இவன் வருவதை கவனித்த விக்னேஷ் செரிலிருந்து எழுந்து ஹரீஷை நோக்கி நடந்தான். “மாமாவுக்கு எப்படி இருக்கு?” அவன் குரலில் பதற்றம் தொனித்தது. ஹரீஷ் எந்த சலனமும் இல்லாமல் “ம்ம்… Doctors attend பண்ணிட்டு இருக்காங்க” என்று சொல்ல, விக்னேஷின் பதற்றம் கூடியது “Attend பண்ணிட்டு இருக்காங்களா? இப்போ தானே visitors-ஐ கூப்பிட்டாங்க?” ஹரீஷின் தோளை உலுக்கினான். ஹரீஷ் தன் மனதில் இருந்த கோபத்தை மறைத்தபடி விக்னேஷின் கையை நாசூக்காக தட்டிவிட்டு முன்னே நடந்தான். சட்டென்று திரும்பி விக்னேஷின் கையை பிடித்து பார்க்க, ஹரீஷின் பார்வை விக்னேஷ் அணிந்திருந்த மோதிரத்தின் மீது வெறித்து நின்றது. விக்னேஷுக்கு அங்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. ஹரீஷ்! ப்ளீஸ் சொல்லு… மாமாவுக்கு என்ன ஆச்சு! ஏன் doctors இப்போ attend பண்றாங்க?” விக்னேஷின் குரலில் அழுகை எட்டிப்பார்க்க ஆரம்பித்தது.
“விக்கி! அப்பா கையிலே இதே மாதிரி ஒரு மோதிரம் இருக்கு… அதை காமிச்சிட்டு தான் ஒரு closet gay-ன்னு confess பண்ணினார். He also said that he had found a true love…”
விக்னேஷின் முகத்தில் அதிர்ச்சியை மறைக்கமுடியவில்லை.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
“உன்னை Urologist கிட்டே அழைச்சிட்டு போயிட்டு வந்ததுக்கு அப்புறம் தான் அப்பா collapse ஆனார்னு அம்மா சொன்னாங்க… அப்பா கையிலேயும் உன் கையிலேயும் ஒரே மோதிரம்… நான் Gay-ன்னு அப்பா மரண வாக்குமூலம் குடுக்குறார். நீயும் அப்பாவும் எங்ககிட்டே இருந்து ஏதாவது மறைக்கிறீங்களா?” ஹரீஷின் குரலில் கடுமை எட்டிப்பார்க்க ஆரம்பிதத்து.
விக்னேஷ் ஹரீஷின் பார்வையில் இருந்து சங்கடப்படாமல் “சில விஷயங்களை மறைச்சிருந்தாலும், சில விஷயங்களை மறைக்காம இருந்திருந்தாலும் இன்னைக்கு மாமாவுக்கு இந்த நிலைமை வந்திருக்காது… Yes! I am a Gay by sexual orientation and fell in love with mama. I proposed my love to mama and he almost reciprocated positively… என்னை பார்க்கும்போதே அவர் கண்ணுல அந்த ஆசை அப்பட்டமா தெரியும். ஆனா அவரை பொறுத்தவரைக்கும் எங்க love-க்கு இடைஞ்சலா இருக்குறது எனக்கும் அவருக்கும் இருக்குற 25 வயசு வித்தியாசம். அவர் கடைசி வரைக்கும் எனக்கு விக்கியை பிடிக்கும் ஆனா எங்களுக்குள்ள இருக்குற வயசு வித்தியாசம் தான் என்னை ஏத்துக்க தடுக்குதுனு சொல்லிட்டு இருந்தார். கடைசியா மாமா என்னை அழைச்சிட்டு போனது Urologist கிட்டே இல்லை Psychiatrist கிட்டே counselling-க்காக. அவங்க ஆலோசனைப்படி இனிமே ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்காதீங்கன்னு சொன்னதுக்கபுறம் வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்துல மாமாவுக்கு இப்படி ஆயிடுச்சு… ஒருவேளை நான் என்னோட காதலை மறைச்சிருந்தாலோ இல்லை மாமா தன்னோட ஆசையை மறைக்காம ஏதாச்சும் workaround solution இருக்குமான்னு யோசிச்சிருந்தா இன்னைக்கு இந்த நிலைமை வந்திருக்காது இல்லை?”
ஹரீஷ் தலையை பிடித்துக்கொண்டு chair-ல் சரிந்தான்.
“விக்கி! நீ அப்பாவை காப்பாத்துனேங்குறதால நான் பொறுமையா பேசிட்டு இருக்கேன்… I can understand that you are gay so does your attraction but… இதென்ன வயசுக்கு மீறின காதல். You are as old as me… அவரை பார்த்தா உனக்கு father figure-ஆ தோணலையா? How can you even romanticise him? Had you guys got physical?”
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
Loading ... |
ஹரீஷ்! Love is blind-ன்னு சொல்வாங்களே அது மாதிரி தான். எனக்கு மாமாவை ஏன் பிடிச்சுதுன்னு சொல்ல காரணம் தெரியலை… அதே சமயத்துல ஏன் அவர் கூடாதுங்குறதுக்கும் காரணம் தெரியலை… எனக்கு அவரை பிடிச்சுது… அவருக்கும் என்னை பிடிக்குது.. அவ்வளவு தான்”
“Sorry to sound rude Viggi! இதுல ஏதோ எனக்கு உடன்பாடு இல்லை… ஒருவகையிலே தனியா இருக்குற வயசானவங்களை lure பண்ற scam போல தோணுது… நீ அப்பாவை நேரத்துக்கு இங்கே Hospital-ல்ல கொண்டு வந்து சேர்த்ததுக்கு நன்றி… Shall I ask you to leave the place right now?”
“Fine Harish… Psychiatrist முன்னாடி இனிமே நாங்க ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சுக்க கூடாதுன்னு தான் முடிவு பண்ணிட்டு வந்தோம். எனக்கு மாமா நல்லா இருக்கார்னு message பண்ணி சொல்லு… அது மட்டும் போதும். எங்கே இருந்தாலும் நான் மாமாவோட நன்மைக்காக வேண்டிக்குவேன்…” விக்னேஷ் தளர்ச்சியோடு எழுந்து சென்றதை பார்க்க ஹரீஷுக்கே கொஞ்சம் பாவமாக தான் இருந்தது.
இரவு ஒரு பதினோரு மணி போல Hospital-ன் corridor-ல் பரபரப்பு குறைந்ததே தவிர முழுசாக அடங்கியதாக தெரியவில்லை. Visitors chair-ல் காத்துக்கொண்டிருந்த ஹரீஷுக்கு தான் எதற்காக இப்படி இரவில் கொசுக்கடியில் காத்திருக்கிறோம் என்று எரிச்சலாக இருந்தது. நரேன் தான் ஒரு closet gay என்று சொன்னதில் இருந்து ஹரீஷுக்கு அவர் மீது ஒரு அருவெறுப்பு வர ஆரம்பித்திருந்தது. ஹரீஷுக்கு தான் படித்த, வேலை பார்க்கும் இடங்களில் LGBT+ சமூகத்தை நேர்கொள்வதும், அவர்களுக்கு ஆதரவளிப்பதும், சமமாக நடத்துவதும் இயல்பாக வந்தாலும், தன் வீட்டில் அது போல ஒருவரை கண்டபோது ஹரீஷுக்கு அவனுடைய broadmindedness எல்லாம் காற்றில் பறந்துவிட்டது. வயசான காலத்துல புத்தி போயிருக்கு பாரு… என்று திட்டத்தான் தோன்றியது.
அப்போது ஹரீஷின் மொபைல் சிணுங்கியது. அவன் எதிர்பார்த்தது போலவே மொபைல் திரையில் “ஆம்னா” என்று பளிச்சிட்டது. ஹரீஷ் ஆர்வத்தோடு அழைப்பை ஏற்றான்.
“ஹாய் பேபி! எப்படி இருக்கே?” எதிர்முனை கொஞ்சியது.
“Fine.. நீ என்ன பண்ணிட்டு இருக்கே?”
“Don’t say that you are missing me… How’s appa? Had he stabilised?”
“Sort of… he confessed and collapsed”
“What happened? How is he now?”
“He is still under critical observation”.
“அது சரி! என்ன confess பண்ணுனாரு? உனக்கு சித்தி, தம்பி பாப்பா எல்லாம் இருக்காங்களா?” ஆம்னா ஹரீஷின் இறுக்கத்தை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டாள்.
“அப்படின்னா கூட பரவாயில்லையே… எனக்கு என் வயசுல ஒரு சித்தப்பா கொண்டுவர பார்த்திருக்கார்… I am a gay-ன்னு confess பண்ணுனார்… பேசாம என்னை பாக்காமலேயே செத்து போயிருக்கலாம்” ஹரீஷ் கோபத்தில் இரைந்தான்.
“Baby cool! இப்போ நீ என்ன சொன்னேன்னு தெரியுதா? I never thought you are such a homophobic… Shame on you”
ஆம்னாவின் கொட்டு ஹரீஷின் புத்தியில் சரியாக இறங்கியது.