04. Friendship with benefits…. (கடைசி அத்தியாயம்)

04. Friendship with benefits…. (கடைசி அத்தியாயம்)

இது நினைக்க தெரிந்த மனமே தொடர்கதையின் 4-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
விழா முடிந்து ரவி ஊருக்கு கிளம்பிவிடுகிறான்... ரமேஷிடம் சொல்லாமல். கடந்த சில நாட்களாக அவர்களுக்கிடையே ஏற்பட்டிருந்த கெமிஸ்டிரியில் பூரித்து போயிருந்த ரமேஷ், ரவி தனக்காக காத்திருக்காமல், தன்னோடு தனியாக நேரம் செலவழிக்காமல் அந்நியன் போல கிளம்பிவிட்டதை நினைத்து வருந்துகிறான். நான் அவனுக்கு அவ்வளவு தான் போல... என்று ரமேஷ் தன் மனசை தேற்றிக்கொள்ள முயற்சிக்க, மீண்டும் காலம் வேறு கோலம் போடுகிறது.

அடுத்த நாள் காலையில் “கண்ணு… நேரமாச்சுடா… எழுந்திரு” என்ற அம்மாவின் குரல் எங்கோ கிணற்றுக்கடியில் இருந்து கேட்பது போல இருக்க, கஷ்டப்பட்டு கண்ணை திறந்தான் ரவி. தொடர்ந்து மூன்று முறை கையடித்ததில் தொடையும் கால்முட்டிகளும் வின்னென்று வலித்தன. சுயஉணர்வு வந்த சில நொடிகளில் எல்லாம் மீண்டும் ரமேஷ் அவன் நினைவுகளை ஆக்கிரமித்தான். அந்த நாள் முழுவதும் ரமேஷின் நினைவு ரவியை வாட்டியது. ஒரு நாள் போவது ஒரு யுகம் கழிவது போல நீளமாக இருந்தது.

அம்மா எடுத்துவைத்த இரவு சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு தொலைகாட்சியை போட “நான் அடிச்சா தாங்கமாட்டே நாலு நாளு தூங்கமாட்டே” என்று விஜய் மிரட்டிக்கொண்டிருந்தார். “ஏற்கனவே நான் தூக்கமில்லாம கஷ்டப்பட்டிட்டு இருக்கேன் இதுல இது வேறயா?” என்று சலிப்போடு ரவி தான் இருக்கும் நிலைமைக்கு ஏதேனும் அமைதி தேவை என்று இசையருவி சேனலுக்கு மாற்ற, அதில் பழைய பாடல்கள் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தன.

அடுத்த பாடலாக “ஆனந்த ஜோதி” படத்திலிருந்து தேவிகா சாமி சிலை முன்பு “நினைக்க தெரிந்த மனமே.. உனக்கு மறக்க தெரியாதா?” என்று பாட ஆரம்பிக்க, அவர் தனக்காக பாடுவதை போல இருந்தது. பாடலை அன்று தான் முதன்முறையாக கேட்பது போல கூர்ந்து கவனிக்க, அது ரவியின் சோகத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. அன்றிரவு முழுக்க அந்த பாடல் ரவியின் mobile phoneல் loop-ல் திரும்ப திரும்ப பாடிக்கொண்டிருந்தது. எப்போது அவனை தூக்கம் தழுவியது என்று ரவிக்கும் தெரியவில்லை.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

அடுத்த நாள் காலை எழுந்தபோது நேற்று அளவுக்கு மனது பாரமாக இல்லையென்றாலும் ரமேஷ் ரவியை நினைவில் இம்சித்துக்கொண்டிருந்தான். “இதுவும் கடந்து போகும்” என்று ஒரு வறட்டுப்புன்னகையோடு தனக்குள்ளே சொல்லிக்கொண்டு ரவி தன் கடமைகளை தொடர ஆரம்பித்தான். ஆனாலும் அவன் மனது மீண்டும் மீண்டும் “நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா?” என்று முனுமுனுத்துக்கொண்டே இருந்தது.

“என்ன மாப்ளே? love failure case மாதிரி இருக்கே? தாடி மட்டும் தான் பாக்கி… ” செந்திலின் கேலி எங்கோ வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்த ரவியை நிஜத்துக்கு இழுத்துவந்தது. அன்றைய பொழுது எதுவும் பேசாமல் எப்படியோ ஓட்டினான்.

அடுத்த நாள் மாலை உற்சாகமே இல்லாமல் வீட்டுக்கு வர வாசலில் மாசு மாமாவின் வண்டி நின்றிருந்தது. ரவி வண்டியின் petrol tank cover-ல் வைத்திருந்த tiffin box எடுத்துக்கொண்டு வராண்டாவுக்குள் நுழைய, அவன் கண்கள் ஆச்சரியத்தில் அகல விரிந்தது. ஹாலில் ரமேஷ் உட்கார்ந்திருந்தான். அம்மா அவனுக்கு டீப்பாயில் எடுத்து வைத்திருந்த பலகார தட்டு பாதி காலியாயிருந்தது. பக்கத்தில் இருந்த டம்ளரில் கொஞ்சூண்டு காஃபி இருந்தது.

“என்ன கண்ணு… தெனமும் நேரத்துக்கு வந்துடுவே ஆனா இன்னைக்கு இவ்வளவு லேட்டா வர்றே? ரமேஷ் உனக்காக ரொம்ப நேரமா காத்திட்டு இருக்கு…” அம்மா இவர்களுக்குள் உரையாடலை தொடங்கி வைத்துவிட்டு வெளியே முற்றத்துக்கு போனார்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

கீழ்கண்டவர்களின் Top 10 எல்லாம் Gay கதைகள் தான். எனவே இவர்களில் யார் இனி வெறும் Gay கதைகளில் மட்டும் வந்தால் போதும் என்று நினைக்கிறீர்கள்?

View Results

Loading ... Loading ...

“ஓ! ரொம்ப நேரம் ஆச்சா ரமேஷ்?” ரவி கடமைக்கு கேட்டான்.

“இல்லை ரவி… நான் அஞ்ரை மணிக்கு வந்தேன். அம்மா கிட்டே பேசிட்டு இருந்தேன்… நீ வழக்கமா ஆறு மணிக்குள்ளே வந்துடுவேன்னு சொன்னாங்க… ஆனா இன்னைக்கு லேட்டாயிடுச்சு போல…”

“ஆமாம்… பாலத்து வேலையால டிராஃபிக் ஜாம் ஆயிடுச்சு…” ரவி தன் சாக்ஸை கழற்றியபடி ரமேஷின் முகத்தை பார்க்காமல் பதில் சொன்னான்.

கொஞ்ச நேரம் அங்கே ஒரு அசௌகரியமான மௌனம் குடியேறியது. ரவிக்கு ரமேஷிடம் பேச்சு கொடுக்க விருப்பமில்லை. ரமேஷ் ரவி பேச ஆரம்பிப்பான் என்று எதிர்பார்த்தான் போல…

“சொல்லு ரமேஷ்… வதனியையும் குழந்தையும் ஊருக்கு கூட்டிட்டு போக வந்தியா?”

“வதனியும் குழந்தையும் பெருந்துறையிலே அவங்க அப்பா வீட்டுக்கு போயிருக்காங்க… ரெண்டு வாரம் அங்கே தான் இருப்பாங்க…”

“ஓ! ஏதாச்சும் urgent வேலையா வந்தியா?”

அம்மா ஹாலுக்குள் வந்தார் “நான் இந்த மாட்டை புடிச்சுட்டு போய் கொல்லையிலே கொட்டாயிலே கட்டிப்போட்டுட்டு வர்றேன்… வந்து சூடா பலகாரம் போடுறேன்… ரமேஷு கிளம்பிடாத… நிதானமா சாப்புட்டுட்டு தான் போகனும்” என்றார்.

“உங்களுக்கு எதுக்குங்கம்மா சிரமம்… நானும் ரவியும் மாட்டை புடிச்சுட்டு போறோம்…” என்று சொல்லிவிட்டு ரவியை பார்க்க, ரமேஷ் தனிமையை தேடுவது ரவிக்கு புரிந்தது. தன் அறைக்கு சென்று ரவி லுங்கிக்கு மாறிவிட்டு வந்தபோது களத்தில் மாட்டை பிடித்தபடி ரமேஷ் நின்றுக்கொண்டிருந்தான். ரவி படியிறங்குவதை பார்த்ததும் ரமேஷ் மாட்டோடு கொல்லையை நோக்கி நடக்க ரவி அவன் பின்னால் நடந்தான்.

“சொல்லு ரமேஷ்… ஏதாச்சும் urgent வேலையா வந்தியா?” ரவி ரமேஷை சீண்டினான்.

“ஆமாம்… உன்னை பார்க்கனும்னு தோணுச்சு… அதான் வந்தேன். Tatkal-ல டிக்கெட் கிடைச்சுது.. Sick leave போட்டுட்டு வந்தேன்.. இன்னைக்கு ராத்திரி திரும்ப போகனும்..”

“நீ அடுத்த தடவை வர்றப்போ பார்த்துக்கலாமே…”

“எனக்கு உன்னை பாக்குறது மட்டுமில்ல… உன்னை kiss பண்ணனும்னு தோணுச்சு… அதனால அடக்கமுடியாம வந்துட்டேன்”

ரவி அதிர்ச்சியில் நின்றான். மாடு பழக்க தோஷத்தில் முன்னே நடக்க, ரமேஷ் அதன் கயிற்றை பிடித்து நிறுத்த முயற்சித்தான். ஆனால் மாடு இவனை இழுத்துக்கொண்டு போக, ரமேஷ் ரவியை கைவிரல்களோடு தன் விரல்களை கோர்த்துக்கொண்டு இழுக்க, ரவி ரமேஷுக்கு இணையாக நடக்க ஆரம்பித்தான்.

“ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் உன்னை பார்த்ததுமே எனக்கு ஏனோ அப்படி ஒரு ஈர்ப்பு… இருந்தாலும் என்னை கட்டுப்படுத்திக்கிட்டு வேணும்னே தான் உன்னோட messages-க்கு late-டா reply பண்ணிட்டு இருந்தேன். ஆனா அன்னைக்கு உன் கூட பொழுது முழுசும் சுத்தினப்போ என்னோட பிடிவாதம் தளர்ந்துபோயிடுச்சு… நான் வண்டியிலே போறப்போ உன்னை இடுப்போட கட்டிப்பிடிச்சுட்டு நெருக்கமா வந்தேன்… நீ எதிர்ப்பு காட்டலைன்னாலும் நீ அதை கவனிச்சியா இல்லையான்னு தெரியலை… உனக்கும் என் மேலே ஈர்ப்பு இருக்கா இல்லையான்னு எனக்கு தெரியலை. ஜூஸ் கடையிலே நீ உன்னோட பிரியத்தை லேசா கோடு போட்டு காமிச்சே… எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு… அப்புறம் அன்னைக்கு ராத்திரி நீ கிட்டத்தட்ட என்னை kiss பண்ண வந்தே… அப்போ நான் முழிச்சிருந்தேன். உன் கண்ணுல இருந்த லவ்வை பார்த்தப்போ எனக்கு பரவசமா இருந்துச்சு… அதே சமயம் எனக்கு கொஞ்சம் பயமாவும் இருந்துச்சு”

ரவி கேட்டுக்கொண்டிருப்பதன் அடையாளமாக “ம்ம்..” என்றான்.

“நாம ரெண்டு குடும்பங்களும் நெருக்கம்… நாம உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது கசமுசா பண்ணிட்டு அதால பின்னாடி குடும்பங்களுக்குள்ள அசிங்கமா ஏதாச்சும் ஆயிடுச்சுன்னா… அந்த பயம் ஒரு பக்கம்… என்ன தான் நான் கல்யாணத்துக்கு அப்புறம் வெளியே தப்பு பண்றதை விட்டுட்டாலும், முன்னாடி தொட்ட சில மிச்சங்கள் கல்யாணத்துக்கு அப்புறமும் எப்போவாச்சும் தொடரும்… அவனுங்க சென்னைக்கு வேலையா வர்றப்போ அவங்களுக்கு mood இருந்தா call பண்ணுவானுங்க… நான் ஹோட்டலுக்கு போவேன்.. ரெண்டு மூணு மணி நேரத்துல மேட்டர் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்துடுவேன்… sex பண்ணதே மனசுல பதியாது… அவனுங்க அப்புறம் திரும்ப contact பண்றவரைக்கும் அவங்க ஞாபகமே வராது… ஆனா உன் case அப்படியில்லை… உன்னோட பரவசத்தை பார்த்துக்கு அப்புறம் நீ சீரியஸா இருக்குறப்போ எனக்கு உன்னை வெறும் சதையா பார்க்க முடியலை… எனக்கு உன் கிட்டே ஒரு close friend-டா இருக்கனுன்னு தோணுது… எனக்கு உன்னை அவ்வளவு பிடிக்குதுடா… ஆனா உன்னோட எண்ணம் என்னான்னு தெரியலை… உன்னை வெறுமனே அம்மணமா மட்டும் பார்க்க என் மனசு இடம் குடுக்க மாட்டேங்குது”

“சரி!…”

“a sex session changes everything… ஒரு தடவை படுத்தப்புறம் மனசு மாறிடுச்சுன்னா… அந்த பயமும் இருக்கு… உன்னை பார்த்தேன்னா, உன் கூட தனியா இருந்தேன்னா நான் என்னோட control-லை இழந்துடுவேன்னு பயம் வந்துச்சு… அதனால தான் அன்னைக்கு ஊருக்கு போகும்போது உன்னை avoid பண்ணினேன்… அப்படியும் உன்னை station-ல பார்த்தப்போ அவ்வளவு சந்தோஷம்… நான் இறங்கி வந்திருந்தேன்னா கூட்டம்னு கூட பார்க்காம உன்னை கிஸ்ஸடிச்சிருப்பேன்… உள்ளே அவ்வளவு கொதிச்சிட்டு இருந்தேன்… அதனால தான் வெளியே வரமாட்டேன்னு அடம்புடிச்சேன்… ஆனா கடந்த மூணு நாளும் உன் நினைப்பால என்னால ஒரு வேலையும் செய்யமுடியலை… அதனால தான் இன்னைக்கு உன்னை பார்க்கனும்னு லீவ் போட்டுட்டு வந்தேன்… kiss பண்ணலைன்னாலும் Atleast confession-ஆச்சும் பண்ணனும்னு..” ரமேஷின் பார்வை ரவியின் பார்வையை சந்திப்பதை தவிர்த்தது.

“ரமேஷ்… இங்கே பாரேன்” ரவி ரமேஷின் தோளில் கைபோட்டான்.

ரமேஷ் தயக்கதோடு திரும்பினான். ரவி ரமேஷின் விரல்களை இறுக்க கோர்த்துக்கொண்டு “ரமேஷ்… நமக்கு ஒருத்தவங்க மேலே ஈர்ப்பு வர காரணம் என்னாவா வேணும் இருக்கலாம்… ஆனா ஈர்ப்புன்னு வந்துட்டா சரி தப்பு எல்லாம் பார்க்குற தன்மையை இழந்துடுவோம். சில காரணங்கள் சரியா இருக்கலாம்.. சில காரணங்கள் தப்பா இருக்கலாம்… ஆனா மனசை அமுக்கிவைக்க கூடாது… மூச்சு முட்டும்… எனக்கும் உன்னை பார்த்த உடனேயே உன் மேலே ஈர்ப்பு வந்துச்சு… அது ஏன்னு exact-ஆ தெரியலை… என் மனசுக்கு உன்னை பிடிக்கிறதுக்கு காரணம் தேவைப்படலை. அன்னைக்கு ராத்திரி என் மனசுல பொங்குன அன்புனால உன்னை kiss பண்ண முயற்சிபண்ணினேன்… ஒருவேளை அன்னைக்கு kiss பண்ணினதுக்கு அப்புறம் எனக்கு உன் மேலே sexual interest இல்லாம போயிருக்கலாம்… எது எப்படியோ… எனக்கு நீ நெருங்கின நண்பனா வேணும்… வதனியும் குழந்தையும் அப்புறம் மாமாவும் அத்தையும் கூட… என் கிட்டே உன்னோட தேவை “friend with benefit”நா கூட எனக்கு ஆட்சேபனை இல்லை… friendship இருக்குறவரைக்கும் எனக்கு “benefits” தப்பா தெரியலை” ரவி ரமேஷின் தோளில் சாய்ந்துக்கொண்டான்.

மாலை சூரியன் அஸ்தமிக்க ஆரம்பிக்க ரமேஷின் முகத்தில் தெரிந்த தெளிவும் நிம்மதியும் ரவிக்கு சந்தோஷமாக இருந்தது. ரமேஷ் முகத்தை லேசாக திருப்பி தோளில் சாய்ந்திருந்த ரவியின் நெற்றியில் முத்தமிட்டான்.

“நீ எதுக்காக வந்தியோ அந்த வேலையை செய்யலாம்…” ரவி குறும்பாக சிரிக்க, ரமேஷ் ரவியின் கன்னத்தை தன் கைகளால் ஏந்தி அவன் உதட்டை தன் உதட்டால் மென்மையாக உரசியபடி மெல்ல மெல்ல ரவியின் வாயை முழுசாக ஆக்கிரமித்தான்.

மாலை சூரியன் வெட்கத்தோடு மெல்ல மறைந்தது.

========== முற்றும் ==========

***இந்த நினைக்க தெரிந்த மனமே தொடர் இத்துடன் முடிவடைகிறது***

* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 27/07/2017
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2017/06/04-friendship-with-benefits.html
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day
04. Friendship with benefits…. (கடைசி அத்தியாயம்)

2 thoughts on “04. Friendship with benefits…. (கடைசி அத்தியாயம்)”

  1. Avatar photo
    இனியன்

    நல்ல கதை….

    எனக்கும் நெருங்கிய நண்பர்கள் உறவினர்களிடம் இந்த மாதிரி feelings இருந்திருக்கு… ஆனால் பயத்தில் ஏதும் ப்ரொசிட் பண்ணாம விட்டு இருக்கேன்… கொஞ்சம் நாளுல சரியாயிடும்…

    பட் அந்த ஃபீலிங் அந்த டைம்ல ரொம்ப ஸ்பெஷல் தான்😍😍😍

    Keep writing ✌✌✌

    1. Avatar photo
      காதல்ரசிகன்

      “பட் அந்த ஃபீலிங் அந்த டைம்ல ரொம்ப ஸ்பெஷல் தான்😍😍😍” – அது தான் நான் சொல்ல வந்தது. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கும் ஒரு இன்ப அவஸ்தை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top