அடுத்த நாள் காலை எழுந்ததும் ஜெய் இன்று மாலை வீட்டுக்கு போனதும் தனியாக ஊர் சுற்றுவது என்று முடிவு செய்து, ஆஃபீஸ் நேரத்தில் தன் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளை பற்றி ஆராய்ச்சி செய்து, எங்கே போவது என்று சில இடங்களை குறித்துக்கொண்டான். ஜெஃப்பிடம் கேட்க அவனது ஈகோ தடை போட்டது. ஜெஃப் இல்லாமல் கூட எனக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று மார்தட்டிக்கொள்ள அவனது ஈகோ துடித்தது. பாவம் அதன் முன்பு ஜெய்யின் காதல் திறனிழந்து கொண்டிருந்தது. ஆனால் அதை உணரும் நிலையில் ஜெய்யின் மூளை இல்லை.
ஜெஃப் வீட்டு வாசலில் கார் நின்றதும், ஜெய் தன் ரூமுக்கு சென்றான். கொஞ்சம் நேரம் கட்டிலில் விழுந்து கிடந்துவிட்டு பின்னர் எழுந்து குளித்துவிட்டு ஷார்ட்ஸும், டேங்க் டாப்புமாக கிளம்பினான். கால் போன போக்கில் நடந்தான். தான் இருக்கும் பகுதி மிகவும் போஷான பகுதியாக இருப்பதையும், ஆனால் நடு நடுவே நம் ஊர் சேரிகள் போன்ற இடங்கள் இருப்பதை கண்டான். பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக இருப்பதையும் கண்டான்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
தெருக்கள் எங்கிலும் மக்கள் கூட்டம். ஜெய்க்கு தான் வெளியூர்க்காரன் என்பதை தனது உடல்மொழியும், உடையும் அப்பட்டமாக காண்பிப்பதாக உணர்ந்தான். பின்னர் எந்த தெருவை பிடித்தோம் என்று கூட தெரியாமல் கடைசியில் பீச்சு ரோட்டுக்கு வந்தான். பீச் எங்கிலும் ஆண்களும் பெண்களும் இருப்பதிலேயே சின்ன ஸ்பீடோவும், பிகினியுமாக மணலில் படுத்துக்கொண்டும், வாலிபால் விளையாடிக்கொண்டும் இருந்தார்கள். பல ஜோடிகள் கிட்டத்தட்ட உடலுறவின் மெயின் மேட்டர் தவிர மற்ற எல்லாவற்றையும் நட்ட நடுவெளியில் அரங்கேற்றிக்கொண்டிருந்தனர். ஜெய்க்கு ஜெஃப் சொன்னதன் அர்த்தம் புரிந்தது. காதலும் காமமும் அந்த ஊரில் அவ்வப்போதே வெளிப்படுத்தப்படுகிறது.
திடீரென்று ஜெய் தான் கீழே தள்ளப்படுவதையும், பாக்கெட்டில் இருந்த பர்ஸும் பிடுங்கப்படுவதை உணரும் முன்பு அவன் மீது மண் வீசப்பட்டு கண் பார்வையை சில நிமிடங்களுக்கு இழந்தான். அவனை சிலர் தூக்குவதையும், ஓரிடத்தில் உட்காரவைக்கப்படுவதையும் ஜெய்யால் உணரமட்டுமே முடிந்தது. ஜெய்யின் முகத்தில் சிலர் தண்ணீர் விட்டு கழுவியும், அவன் கண்களை விரித்து தண்ணீர் விட்டு கழுவியும் சில நிமிடங்கள் கழித்து ஜெய்க்கு மீண்டும் பார்வை கிடைத்தது. ஜெய் அதிர்ச்சியிலும், அயர்ச்சியிலும் கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தான்.
ஜெய்! உனக்கு ஒன்னும் ஆகலையே?” என்று ஜெஃப்பின் குரல் கேட்டபோது தான் மீண்டும் உலகத்துக்கு வந்தான்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
Loading ... |
“உன்னோட ஃபோன்-ல ICE – In Case of Emergency-ல என்னோட நம்பரை சேமித்து வைத்திருந்ததால யாரோ எனக்கு கால் பண்ணி சொன்னாங்க… ஜிம்முல இருந்து அப்படியே ஓடி வர்றேன்” என்று சொல்லிவிட்டு ஜெய்யை இறுக்க கட்டிப்பிடித்து அவன் முகமெங்கும் முத்தமிட்டபோது தன் உடம்பை விட ஜெஃப்பின் உடம்பு கூடுதலாக நடுங்குவதை ஜெய் உணர்ந்தான்.
வீட்டில் இரவு சாப்பாட்டுக்கு ஜெஃப், ஜெய் மற்றும் அம்மா மூவரும் உட்கார்ந்திருந்தனர்.
ஜெய்… இந்த ஊர்ல Social Inequality இருக்கு… காசில்லாதவங்களும், கடைநிலை வர்க்கமும் இருக்குற இடம் Favela-ன்னு பேரு. அங்கே இருக்குறவங்களுக்கு தங்களுக்கு பணமில்லை என்ற ஆதங்கமும், தாங்கள் ஒடுக்கப்படுவதாகவும் ஒரு aggression இருக்கு.. அதனால அங்கே crimes கொஞ்சம் அதிகம். அங்கே ரொம்ப Careful-ஆ இருக்கனும். இப்போ அந்த இடங்கள்ல middle class வர்க்கம் அதிகரிச்சிட்டு வர்றதால அந்த ஆளுங்களும் நிறைய பேர் படிச்சிட்டு, வேலை விஷயமா வெளியே வர ஆரம்பிச்சிருக்காங்க. அடுத்த சில வருஷங்கள்ல அந்த பகுதிகளும் நம்ம ஏரியா மாதிரி பாதுகாப்பா மாறலாம்.. இருந்தாலும் அங்கே குடியிருக்குறவங்க யாராவது பழகுற வரைக்கும் அங்கே தனியா போறது நல்லது இல்லை. அதே மாதிரி கூட்டமான இடங்கள்ல கையிலே பணத்தை எடுத்துட்டு போறதும் நல்லது இல்லை… நிறைய Snatch & Run cases இருக்கும்… நீ சில மாதங்களுக்கு எங்கே வெளியே போகனும்னாலும் ஜெஃப்பை கூட்டிட்டு போ…” என்றார் அம்மா.
“நான் வர்ற வரைக்கும் காத்திருக்க முடியாத அளவுக்கு அப்படி என்ன அவசியம்டா உனக்கு? ஃபோன்ல உனக்கு என்னவோ ஆச்சுன்னு கேட்ட உடனே எனக்கு ஆதியிருந்து அந்தம் வரைக்கும் நடுங்கி போச்சு…” என்று சொன்னபடி ஜெய்யின் கையை இறுக்க கோர்த்துக்கொண்டான்.
இரவு சாப்பாடு முடிந்ததும் அம்மா தூங்கப்போய்விட இருவரும் கைகள் கோர்த்தபடி சோஃபாவில் உட்கார்ந்து கொஞ்ச நேரம் டி.வி பார்த்தார்கள். ஜெஃப் ஜெய்யின் தோளில் தன் தலையை சாய்த்துக்கொண்டு, அவன் கால் மேலே கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அவன் கவனம் டிவியில் இருப்பதைவிட ஜெய்யோடு ஒட்டிக்கொண்டு இருப்பதிலேயே இருந்தது.
கடிகாரத்தில் மணி 11 அடிக்க, லேசாக கொட்டாவி விட்டபடியே ஜெய் “நான் கிளம்பட்டுமா?” என்று எழுந்தான்.
ஜெஃப் ஜெய்யின் தோளில் இருந்து கையை விலக்காமல் ஜெய்யின் முகத்தை நிமிர்ந்து பார்த்து “உன்னை தனியா அனுப்ப பயமா இருக்கு… நைட் இங்கேயே படுத்துக்கோயேன்” என்றான்.
ஜெய் ஜெஃப்பின் நெற்றியில் செல்லமாக முட்டியபடி “ஏண்டா… இங்கே இருந்து மூனாவது வீடு தான் என்னோட ரூம்… அதுக்கு போறதுக்கே பயந்தேன்னா அப்புறம் என்ன பண்றது?”
“சரி… நான் உன்னை ரூம்ல வந்து விட்டுட்டு வர்றேன்… நீ தைரியசாலி தான்.. ஆனா நான் பயந்தாங்கொள்ளியாவே இருந்துக்குறேன்.. என் நிம்மதிக்காக உன்னை உன்னோட ரூம்ல விட்டுட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு ஜெஃப் தான் அணிந்திருந்த பாக்ஸர் ஷார்ட்ஸ் மேலே நைட் பேண்ட்டை மாட்டிக்கொண்டு ஜெய் கூட வாசலில் இறங்கினான்.
ஜெய்யின் அறைக்கு சென்று கதவை திறந்து உள்ளே நுழைந்ததும் ஜெஃப் ஜெய்யின் முதுகில் இறுக்க கட்டிப்பிடித்தான். ஜெய்க்கு ஜெஃப் முதன் முறையாக அவன் வீட்டில் மாடிப்படியில் இறங்கும்போது ஜெஃப் இதுபோல தன்னை பின்பக்கமிருந்து கட்டிப்பிடித்தது ஞாபகத்துக்கு வந்தது. ஜெய் ஜெஃப்பின் கைகளை இறுக்க பிடித்துக்கொண்டான்.
ஜெய் திரும்ப, ஜெஃப் ஜெய்யின் உதட்டில் ஆழமாக முத்தம் வைத்தான். அவன் கைகள் ஜெய்யை இறுக்க கட்டிக்கொண்டது. ஜெய்யும் ஜெஃப்பை கட்டிக்கொண்டு அவன் முத்தங்களை திரும்பி கொடுத்துக்கொண்டிருந்தான். ஜெஃப் ஜெய்யின் டி-ஷர்ட்டுக்குள் கையை விட்டு அவன் முதுகை தடவி கட்டிப்பிடித்தான். அவனுக்கு எப்போது உடைகளை மீறி இணைவதே கொள்ளை இன்பம்.
இன்று இந்த கூடல் காதலாலோ இல்லை காமத்தாலோ இல்லை… அதனால் ஜெய்க்கு ஜெஃப் ஏன் இந்த சிறிய விஷயத்துக்கு இப்படி பயந்துப்போய்விட்டான் என்று லேசான அயற்சியும் தோன்றியது.
அடுத்தடுத்த நாட்களில் ஜெஃப் மாலை வீட்டுக்கு வந்ததும் ஜெய்யிடம் இன்று எங்கேனும் போகவேண்டுமா, ஏதேனும் பொருட்கள் வாங்க வெளியே போகவேண்டுமா என்று கேட்பதை வழக்கமாக்கிக்கொண்டான்.
ஒரு நாள் மாலை வீட்டில் காஃபி குடித்துக்கொண்டிருந்தபோது ஜெஃப் ஜெய்யிடம் “நீ என் கூடவே இந்த ஊர்ல ரொம்ப நாளுக்கு இருக்க போறே தானே?” என்று கேட்டான்.
ஜெய்க்கு ஒரு நிமிஷம் புரை ஏறியது.. “ஏன் ஜெஃப் இந்த கேள்வி?” என்றான்.
ஜெஃப் “உனக்கு இன்னும் CPF Number எடுக்கலை… இந்த ஊர்ல ரொம்ப நாள் இருக்கப்போறோம்னா அது எடுக்குறது ரொம்ப முக்கியம். இந்த ஊர்ல க்யூ-ல நிக்கிற மாதிரி எந்த இடத்துக்கு போனாலும் உடனே எல்லாம் வேலை முடியாது.. நாம நாளைக்கு போய் அந்த வேலையை முடிச்சிடலாம்” என்றான்.
ஆஃபீஸுக்கு ஒரே நேரத்துல ரெண்டு பேரும் லீவ் போட்டா சில்வாஸ் கோவிச்சுக்குவாரே” – ஜெய்.
“நான் அவர் கிட்டே இன்னைக்கு பேசிட்டு இருந்தப்போ தான் இந்த விஷயம் வந்துச்சு. அவர் கிட்டே நான் சொல்லிட்டேன்.. இந்த மாசத்து Payroll-ஐ run பண்றதுக்கு முன்னாடி நாம நாளைக்கு காலையிலே போயிட்டு வந்துடலாம்.. சரியா?” என்றான் ஜெஃப்.
ஜெய்க்கு நெகிழ்ச்சியாகவும் இருந்தது. அதே சமயம் தன்னை ஒவ்வொரு நொடியும் ஜெஃப் மேற்பார்வையிடுவதாக ஒரு uncomfortable feeling தோன்றியது. என்ன தான் பிரியப்படவர்கள் என்றாலும் தான் மற்றவர்களிடம் இருந்து instructions எடுத்துக்கொள்ளவேண்டி இருக்கிறதே என்று தன் மீது லேசான கோபமும் வந்தது.
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 15/04/2014
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2014/04/blog-post.html
Feedback |
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
கதை எப்படி இருக்கு? |
Picture of the day |
---|