அ.அ 09 கிஸ்ஸடிக்க இப்படி களேபரமா?

அ.அ 09 கிஸ்ஸடிக்க இப்படி களேபரமா?

இது அயலான் அன்பு தொடர்கதையின் 9-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
முதல் முறை குறைப்பிரவசத்தில் முடிந்த எங்கள் கஜகஜா முயற்சி அடுத்த முயற்சியில் ஓரளவுக்கு முழுசாக நடந்தது. அசோக்கின் வீட்டில் போட்டோக்களை develop செய்யும் "dark room"-ல் எங்கள் முதல் oral sex-ம், hand job-ம் வெற்றிகரமாக நிறைவேறியது. ஆனாலும் மனசு நிறையலையே!!!

அ.அ 09 கிஸ்ஸடிக்க இப்படி களேபரமா?
எங்கள் தமிழ்சங்கத்தில் ஆண்டுவிழா கொண்டாட்டங்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆரம்பிக்கப்போகிறது. இத்தனை நாட்கள் பிள்ளைகள் செய்த ஒத்திகைகள் எல்லாம் இன்று அரங்கேறப்போகிறது. கோபால் தான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்பதால் எங்களை பம்பரமாக சுற்றவைத்து வேலை வாங்கினார். ஆனால் எனக்கு அந்த அழுத்தங்கள் எல்லாம் தெரியவே இல்லை. ஏனென்றால் நானும் அசோக்கும் எல்லா வேலைகளையும் ஒன்றாக செய்தோம், ஒரே காரில் சுற்றினோம். வாசலில் நிற்கவைக்க வரவேற்பு பொம்மைகள் வாங்க, flex banner-கள் எடுத்துவர, நடன நிகழ்ச்சிக்கான உடைகளை வாங்க என்று எங்கு போவதானாலும் ஒன்றாக போனோம். எங்கள் கூட மற்றவர்கள் இல்லாத நேரத்தில் கைகளை கோர்த்துக்கொண்டு வண்டி ஓட்டினோம். MacDonalds-யில் Coffee வாங்கியபோது ஒரே Cup-ல் மாறி மாறி sip செய்துகுடித்தோம். தோன்றியபோதெல்லாம் ஒருவரிடம் மற்றவர் கிஸ்ஸடிக்கட்டுமா என்று அனுமதி கேட்டுக்கொள்ளாமல் மாறி மாறி தன்னிச்சையாக இயல்பாக முத்தங்கள் பறிமாறிக்கொண்டோம். மொத்தத்தில் அந்த ஆண்டுவிழாவில் எங்கள் நெருக்கம் தான் ஓங்குதாங்காக வளர்ந்தது. கடைசியில் விழாவும் ஆரம்பிக்கபோகிறது.

தீபாவும் ரோகிணியும் சேர்ந்து தேவ்தாஸ் படத்தில் வரும் “Dola Re! Dola Re…” பாடலுக்கு தங்களை மாதுரி தீக்சித்தாகவும் ஐஸ்வர்யா ராயாகவும் நினைத்துக்கொண்டு ஆட தயாரானார்கள். backstage-ல் அவர்கள் தயாராகிக்கொண்டிருக்க, நானும் அசோக்கும் அக்கடாவென்று முன்வரிசையில் இருந்த இரண்டு சீட்களில் சரிந்து உட்கார்ந்தோம். அப்போது கோபாலின் குட்டிப்பெண் எங்களை நோக்கி வந்தாள்.

“என்ன அம்மு?” நான் அவளை செல்லமாக தூக்கி மடியில் உட்கார வைத்துக்கொண்டேன்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

“விடுங்க மாமா! நான் ஒன்னும் சின்ன பாப்பா இல்லை” லாவண்யா திமிறிக்கொண்டு கீழே இறங்கி தான் வளர்ந்த பெண் என்று நிரூபிக்க துடித்தாள். நான் வேண்டுமென்றே அவளை இறங்கவிடாமல் வம்பு பண்ண, “மாமா! நான் Grade two போறேன். I’m a big girl. Leave me right now” என்று மீண்டும் தான் பெரியவள் என்பதை நினைவுபடுத்தினாள்.

“சரிம்மா பெரிய மனுஷி.. என்ன விஷயம்” என்று அவளை கீழே இறக்கிவிட்டேன்.

லாவண்யா தன் பட்டுப்பாவாடையின் சுருக்கங்களை சரி செய்தபடி “ரோகிணி ஆண்ட்டி உங்களையும் அசோக் மாமாவையும் backstage-க்கு கூப்பிட்டாங்க” என்றாள்.

“நீங்களும் அசோக்கும் நாங்க ஆடும்போது audience crowd-ல இருக்காதீங்க… Please” ரோகிணி கெஞ்சலாக சொன்னபோது “அப்போ உன்னோட ஆட்டத்தை யார் video எடுப்பாங்களாம்?” என்று நான் கேட்டேன்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

தொடர்கதைகள் படிப்பவர்களுக்கு! அத்தியாயங்கள் என்ன frequency-ல் வரவேண்டும்?

View Results

Loading ... Loading ...

“Video… யாராச்சும் Organiser கிட்டே வாங்கிக்கிறேன்… ஏன் சொல்றேன்னா…. இப்போ தான் நான் முதல் தடவையா stage-ல ஆடுறேன்…. நீங்க கண்ல தென்பட்டீங்கன்னா எனக்கு ரொம்ப nervous-ஆ இருக்கும்… அதனால…” ரோகிணி இழுக்க, “அப்போ பொண்டாட்டி ஆடுறத புருஷன் என்னை தவிர ஊர்ல இருக்குற மத்தவனெல்லாம் பாக்கனுமா? நல்லா இருகக்குடி உன் nervousness” என்று லந்து செய்தேன்.

“உங்களை யார் பார்க்கவேணாம்னு சொன்னா…. என் கண்ணெதிர்ல உட்கார்ந்து பார்க்காதீங்கன்னு தானே சொல்றேன்… Please..பா. என்னை புரிஞ்சுக்கோ” ரோகிணி கெஞ்ச, அசோக் தீபாவிடம் “நீங்களும் உங்க பங்குக்கு ஏதாவது சொல்லனுமா?” என்று வம்புக்கு இழுத்தான். தீபா அவனை பார்வையாலேயே “உஷ்” என்று அடக்கினாள்.

“சரி! விடு… நான் audience-ல உட்காரலை… மறைஞ்சு நின்னு பார்த்துக்குறேன்… கட்டுன பொண்டாட்டியவே ஒளிஞ்சு நின்னு sight அடிக்கவேண்டியிருக்கு… கலிகாலம்” என்று அங்கிருந்து நகர ரோகிணி என் தோளை பிடித்து நிறுத்தி “Please பா… தப்பா எடுத்துக்காதே” என்று கெஞ்சியபோது நான் என் குறும்புத்தனத்தை மூட்டை கட்டிவிட்டு “சீ அசடே! நீ tension இல்லாம ஆடு…” என்று அவள் கன்னத்தை தட்டிகொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.

அ.அ 09 கிஸ்ஸடிக்க இப்படி களேபரமா?
Stage-ன் பக்கவாட்டில் திரைச்சீலைகளின் மறைவில் பசங்கள் அடுத்து வரும் தங்களுடைய performance-க்காக வரிசைகட்டி நிற்க, நானும் அசோக்கும் அவர்களோடு நின்று ஆட்டங்களை பார்த்துக்கொண்டிருந்தோம். அசோக் என் தோளை சுற்றி கைபோட்டுக்கொண்டு, தன் தாடையை என் தோளில் இருத்தினான். மெல்ல மெல்ல எங்களுக்குள் காதல் பிரவாகம் ஊற ஆரம்பித்ததும் நாங்கள் சுற்றுபுற சூழலை மறக்க ஆரம்பித்தோம். நான் திரும்பி என் முகத்துக்கு மிக நெருக்கத்தில் இருந்த அசோக்கின் அழகான கண்ணை பார்த்து புன்னகைத்தேன். அசோக் “ப்ச்ச்ச்” என்று தோளை குலுக்கிவிட்டு மீண்டும் அழகாக சிரித்தான்..என் கவனம் Stage-ல் ஆடிக்கொண்டிருக்கும் ரோகிணியிடம் இருந்து அசோக்கிடம் தாவியது. அசோக் தன் ஒரு கையை எடுத்து என் இடுப்பை சுற்றிக்கொள்ள, நான் அவனது விரல்களோடு என் விரல்களை கோர்த்துக்கொண்டேன். Speaker-ல் “Dola re.. Dola re..” பாடல் உச்சஸ்தாயியில் முழங்க, மேடையில் ரோகிணி மற்றும் தீபாவின் நடனம் ஜோராக களைகட்டியது.

“கார்த்தி….” அசோக் எனக்கு மட்டுமே கேட்கும்படியாக கிசுகிசுத்தான்.

“என்ன?” என்பது போல நான் புருவத்தை அசைக்க, அசோக் என்னை பார்த்து உதட்டை குவித்து காற்றில் முத்தம் ஒன்றை படரவிட்டான். நான் புன்னகையோடு என் பதில் முத்தத்தை காற்றில் அனுப்பினேன்.

அசோக் என் காதுக்கு அருகே குணிந்து “எனக்கு காத்துல வேணாம்… உண்மையா வேணும்” என்று சொன்னபோது எனக்கு ஜிவ்வென்று இருந்தது. நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். வயசு பசங்களும், குழந்தைகளும் சுற்றியிருக்க, நான் “இங்கே முடியாது… அப்புறமா” என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி பதில் சொன்னேன்.

“ம்ஹும்….இப்போவே வேணும்” அசோக் சின்ன குழந்தை போல காலை உதறிக்கொண்டு அடம்பிடிக்க, நான் யாரும் கவனிக்காதபடிக்கு பசக்கென்று அவன் கன்னத்தில் மெல்லிய முத்தம் ஒன்றை வைத்தேன்.

அ.அ 09 கிஸ்ஸடிக்க இப்படி களேபரமா?
“ம்ஹும்…  எனக்கு இது வேணும்” அசோக் தன் கீழுட்டை பிதுக்கிகாட்டிவிட்டு என் காதில் “கூடவே என் குட்டித்தம்பிக்கும்…” என்று கண்ணடித்து சிணுங்கியபோது  ரோகிணி மற்றும் தீபாவின் ஆட்டம் முடிந்து கரகோஷம் எழும்பியது. நான் அசோக்கிடம் “என் பின்னாடியே வா” என்பது போல பார்வையாலேயே சைகை செய்துவிட்டு ‘இயல்பாக’ அந்த இடத்தை விட்டு நகர சில அடிகள் வித்தியாசத்தில் அசோக்கும் அங்கிருந்து விலகினான்.

“ஏங்க… நான் ஆடினது எப்படி இருந்துச்சு?” ஒப்பனை கலையாமல், வியர்த்து விறுவிறுத்து வந்த ரோகிணியிடம் இருந்து முதல் Speed Breaker.

“ம்ம்.. சூப்பரா ஆடினே..” நான் அவளிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்க, ரோகிணி அடுத்து என்ன பேசினாள் என்று எனக்கு புரியவில்லை. நான் திடீரென்று நினைவுக்கு வந்தவனாக “சரி! கோபால் என் கிட்டே catering item எல்லாம் வந்துடுச்சான்னு பார்க்க சொன்னார்… நான் அவசரமா Store room-க்கு போயிட்டு இருக்கேன்” என்று உரத்த குரலில் சில்லியபடி அவளிடம் இருந்து பிய்த்துக்கொண்டு நகர, எனக்கு முன்னே இருந்த அசோக் “Store room” என்று தலையாட்டியபடி Basement-ல் இருந்த Store room-ஐ நோக்கி நடந்தான். வெள்ளை வேட்டியில் அவனது எடுப்பான பின்னழகு அசைவதை சைட்டடித்தபடி நான் நடக்க, அசோக் வேட்டியை மடித்து கட்டியபோது அவனது ஆட்டுசதையின் மொத்தத்தை பார்த்து எனக்கு காதில் புகை வராத பொறாமை தான்.

அசோக் Store room-க்குள் நுழைந்ததும் நான் யாராவது என்னை கவனிக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தேன். யாரும் இல்லை என்றதும் என் உதட்டை நாக்கால் ஈரப்படுத்திக்கொண்டு அசோக்கோடு கஜகஜா செய்யப்போகிறோம் என்று குஜால்ஸாக உள்ளே நடக்க, Store room-க்குள் நுழைந்ததும் எனக்கு மூச்சு அப்படியே தடக்கென்று நின்றது.

அ.அ 09 கிஸ்ஸடிக்க இப்படி களேபரமா?
“நல்லவேளை… எப்படிடா இதை நகர்த்துறதுன்னு பேந்த பேந்த முழிச்சிட்டு இருந்தேன்…. ஆண்டவனா பார்த்து உன்னை அனுப்பியிருக்கான்” என்று சொல்லிக்கொண்டிருந்த கோபால் என்னை பார்த்ததும் “அட! ஒருகைக்கு ரெண்டு கையாவே கிடைச்சிடுத்தே… அசோக்! கொஞ்சம் நகர்ந்து கார்த்திக்கும் இடம் குடு.. வா கார்த்தி! வந்து ஒரு கை போடு…” கோபால் பெரிய பாயாச அண்டாவை இடம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். கிஸ்ஸடிக்க வந்த என்னை இப்படி வம்புல மாட்டிவிட்டுட்டியே என்று அசோக் என்னை பார்வையாலேயே முறைக்க, நான் என்னை நொந்துக்கொண்டு என் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு அந்த பாயாச அண்டாவை தூக்கியபோது உண்மையிலேயே அயற்சியாக இருந்தது.

“என்னவா இங்கே வந்தீங்க… யாராச்சும் நான் இங்கே அல்லாடிட்டிருக்குறத சொன்னாங்களா?” கோபால் குதூகலத்துடன் கேட்க, அசோக் என்னை “நீயே பதில் சொல்லிக்கோ” என்பது போல முறைத்து பார்த்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top