முன் கதை சுருக்கம்... |
---|
விக்கி சரியான நேரத்தில் நரேனை hospital-க்கு கொண்டு வந்து சேர்த்ததால் அவர் இப்போது ICU-வில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். நரேனை காண US-ல் இருந்து வந்த அவர் மகன் ஹரீஷிடம் தான் சாகும் முன்பாவது முகமூடி இல்லாமல் தன் sexual orientation-ஐ வெளிப்படுத்தி ஒரு gay-ஆக சாகவேண்டும் என்று come out செய்கிறார். ஆனால் தன் தந்தை ஒரு gay என்ற உண்மை ஹரீஷுக்கு அருவெறுப்பை ஏற்படுத்துகிறது. விக்கியின் காதல் என்ன ஆனது? |
“Well… few months back நம்ம Government-ல same sex marriage-ஐ legalise பண்ணலாமான்னு கேட்டப்போ நீ அதுக்கு ஆதரவா தானே vote பண்ணினே… இப்போ உன் வீட்டுல ஒரு member Gay-ன்னு தெரிஞ்சதும் உன்னோட stand மாறிடுச்சா?”
“ஆம்னா… அது அந்த ஊர் கலாச்சாரத்துக்கு சரியா இருக்கலாம். ஆனா என்னோட ஊர், எங்க கலாச்சாரத்துக்கு இது ஒத்துவராது…”
“அப்போ நாம இப்படி கல்யாணம் பண்ணிக்காமலேயே ஒரே விட்டுல live-in relationship-ல ஒரே கட்டில்ல படுத்துக்குறோமே… உங்க ஊர் கலாசாரப்படி ஆணும் பொண்ணும் உடலுறவுல இணையறதையே ஒரு சடங்கா பெரியவங்க ஆசீர்வாதம் பண்ணி designated place & time-ல அனுப்புவாங்க… ஆனா நாம் ரெண்டுபேரும் கல்யாணமே பண்ணிக்காம, cats & dogs மாதிரி வீட்டுல ஒரு இடம் விடாம we are fucking around… அது உன்னோட கலாச்சாரத்துல வருதா ஹரீஷ்?
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
“ஆம்னா… We are in love. We’ll get married someday. ஆனா இது எந்த வகையிலே சேரும்?”
ஹரீஷ்! நான் உங்க நாடே வெறுக்குற muslim மதத்தையும், இன்னும் அதிகமா வெறுக்குற Pakistan நாட்டையும் சேர்ந்தவ… என்னை எந்த conviction-ல காதலிக்கிறே? Patriotic revenge through sex-ஆ?”
“Don’t bullshit Aamna… You don’t need a reason to fall in love…” திடீரென்று ஹரீஷுக்கு மின்னலடித்தது… “Hey! just stop…. இதையே தான் அந்த பையனும் சொன்னான்….” ஹரீஷ் திணறினான்.
“See… உனக்கே நீ என்ன பண்ண இருந்தேன்னு புரிஞ்சுதா? When you fall in love you just fall in love… அதுக்கு காரணம் தேவை இல்லை… நாடு, இனம் மொழி, gender எதுவும் தேவைப்படாது… ரெண்டு souls-ம் எப்போ எங்கே இணையனும்னு மேலே இருக்குற khudha (கடவுள்) எழுதி வச்சிடுவான்… அதனால உங்க அப்பா இந்த வயசுல closet-ல இருந்து வெளியே வந்து இன்னொரு soul கிட்டே காதல்ல விழுந்ததை பத்தி தப்பா பேசாதே…. அந்த பையன் எப்படி?”
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
Loading ... |
“நான் பார்த்தவரைக்கும் observe பண்ணினவரைக்கும் அவன் என் அப்பா மேலே என்னை விட அதிக அன்பா, அக்கறையா இருக்கான்… அவன் இல்லைன்னா அவரை நேரத்துக்கு Hospital-ல்ல சேர்த்திருக்கமுடியாது… சேர்த்ததோட தன் கடமை முடிஞ்சுதுன்னு ஒதுங்கிக்காம இன்னைக்கு நானா துரத்துர வரைக்கும் இங்கேயே குட்டி போட்ட பூனை மாதிரி hospital-ஐயே சுத்திட்டு இருந்தான்…”
“ஏண்டா துரத்துன?”
ஹரீஷ் தான் விக்னேஷிடம் சொன்னதை அப்படியே ஒப்பித்தான்.
“முட்டாள்டா நீ! அவனை உன்னோட வார்த்தைகள் எப்படி காயப்படுத்தி இருக்கும் தெரியுமா? நீயே love-ல தானே இருக்கே… எப்படிடா உன்னால இன்னொரு love-ஐ கொச்சைப்படுத்தி பேசமுடிஞ்சுது? Any love is love.”
“தப்பு தான்… ஆனா தனியா இருக்குற வயசானவங்களை குறிவச்சு அவங்களுக்கு கிடைக்காத அன்பையும் attention-ஐயும் குடுத்து அவங்களோட சொத்துங்களை பிடுங்கிக்கிற சில scammers-ம் இருக்காங்க… எனக்கு அந்த பயம் தான்…”
“அது உனக்கு அந்த பையனை பார்க்கும் போதே உன் மனசுக்கு தெரியும்… நீயே உன் மனசுகிட்டே கேட்டுப்பாரு அந்த பையன் ஏதாச்சும் தப்பா தோன்றானான்னு…”
“எனக்கு அந்த பையனை பத்தி தப்பா தோணலை… சொல்லப்போனா அப்பா confess பண்றவரைக்கும் எனக்கு அவன் மேலே மரியாதை கலந்த affection தான் இருந்துச்சு… நான் வேணும்னே அவனை வெறுக்கடிச்சு அனுப்பனும்னு தான் பேசினேனே ஒழிய என் மனசுக்கு அவன் Gem of the person-ன்னு தான் தோணுது” ஹரீஷ் நரேனும் விக்னேஷும் Psychiatrist-டம் சென்று வந்த கதையை சொன்னான்.
“போடா fool… அவனை பிரியறது தாங்காம தான் உங்க அப்பா collapse ஆகியிருக்கார்னு அப்பட்டமா தெரியுது.. அதையே தானே doctors உன்கிட்டே சொல்லியிருக்காங்க ஏதோ அதிர்ச்சியை தாங்கமுடியலைன்னு… இதுக்கு மேலேயா உனக்கு அவங்களுக்கிடையே இருக்குற love பத்தி சந்தேகம்?”
“ஆனா இதுல அப்பாவியான என்னோட அம்மாவை என்ன பண்ண?”
“See… இது ரொம்ப delicate position. உங்க அப்பா இதை ரகசியமா வச்சிட்டு தன்னோடவே கல்லறைக்கு கொண்டுபோயிருக்கலாம்… ஆனாலும் தான் சாகப்போறோம்னு தெரிஞ்சுட்டு கடைசி நிமிஷத்துல உன்கிட்டே confess பண்ணியிருக்கார்னா அது அவர் மனசுல எவ்வளவு தாங்கமுடியாத பாரமா இருந்திட்டு இருக்குன்னு புரிஞ்சுக்கோ… அதை அவர் இறக்கி வச்சிருக்கார்… இப்போ we have to workout things for her..”
“எப்படி?”
“உங்க அப்பா வீட்டுக்கு திரும்பி வர்ற பட்சத்துல அந்த பையன் கூட இருக்குற உறவை எப்படி முன்னாடி கொண்டுபோக விரும்புறார்னு தெரிஞ்சுக்கலாம்… அதுக்கேத்த மாதிரி முடிவு பண்ணலாம்…”
“அவன் தனக்கு அவர் கிட்டே இருந்து acknowledgement வேணும்னு மட்டும் தான் கேட்குறான். Formal relationship in front of the world எல்லாம் இல்லை.. மத்தபடி அவங்களால் இந்த நாட்டுல open gays-ஆ வாழமுடியாது…”
நரேன் patient-க்கு யாராச்சும் caretaker இருக்கீங்களா?” MICU-ன் வாசலில் இருந்து night duty செய்யும் nurse குரல் கொடுக்க, ஹரீஷ் ஆம்னாவிடம் “I’ll call you back” என்று சொல்லிவிட்டு அவளிடம் ஓடினான்.
“சார்! Patient கிட்டே ரொம்ப பேசாதீங்க… அவர் பக்கத்துல யாராச்சும் அனுசரனையா உட்கார்ந்து இருந்தா அவருக்கு குணமாகக்கூடிய வாய்ப்பு அதிகமா இருக்கு….” நர்ஸ் சொல்லிக்கொண்டே முன்னாடி நடக்க, ஹரீஷ் அவள் பின்னால் இதயம் படபடக்க நடந்து சென்றான்.
நரேனின் வாயிலிருந்து வார்த்தை வரும் முன்பு ஹரீஷ் அவர் கையை கோர்த்துக்கொண்டு “விக்கி காலையிலே வருவான்.. அவனை ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்கேன்… எப்போ பார்த்தாலும் கண்ணு தொறந்த உடனே அவனை தான் கேட்குறீங்க.. அதனால நீங்க கேக்குறதுக்கு முன்னாடியே நானே சொல்லிட்டேன்… 🙂 நாளைக்கு full day பகல்ல அவன் தான் உங்க கூட இருப்பான்…” நரேனின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை படர்ந்தது.
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 05/01/2018
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2018/01/sugar-daddy-12-daggers-drawn.html
Feedback |
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
கதை எப்படி இருக்கு? |
Picture of the day |
---|