கா.ஒ.கா 17 வினையாகிப்போன வேலை

கா.ஒ.கா 17 காதலுக்கு வேட்டு வச்ச வேலை

இது காத்துவாக்குல ஒரு காதல் தொடர்கதையின் 17-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
நான் என் உணர்ச்சிப்பெருக்கை அடக்காமல் வீதியில் வைத்து அர்ணாபை கிஸ்ஸடித்து வழியனுப்பினேன். அந்த செய்கையே எங்களது அமைதிக்கு வேட்டு வைத்துவிடுகிறது. நாங்கள் Gay Couple என்பதால் எங்களை அறையை காலி செய்யுமாறு வீட்டு சொந்தக்காரர் சொல்லிவிட, அர்ணாப் எனக்காக தனி வீடு பார்க்கிறான். எனக்கு இன்னும் வேலை கிடைக்காத நிலையில் இது கூடுதல் செலவை இழுத்துவிடுகிறது.

கா.ஒ.கா 17 காதலுக்கு வேட்டு வச்ச வேலை
நானும் அர்ணாபும் Light Rail-ல் நான் புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் Regent Park-ல் உள்ள Petrol Station-க்கு போய்க்கொண்டிருக்கிறோம். Regent Park தற்போது Toronto-வின் குற்றங்கள் மிகுந்த புறநகர் பகுதிகளில் முதன்மையான இடத்தில் உள்ளது. நான் அங்குள்ள Petrol Station-க்கு, அதுவும் night shift-க்கு போவதில் அர்ணாபுக்கு சுத்தமாக விருப்பம் இல்லை. ஆனால் எவ்வளவு நாள் தான் நான் வீட்டில் சும்மா இருந்து என் சேமிப்பையும், அர்ணாபின் சம்பளத்தையும் கறைப்பது என்ற குற்ற உணர்ச்சியில் இந்த வேலையை ஏற்றுள்ளேன். இரவு shift என்பதால் நான் பகல் பொழுதில் எனது IT வேலை தேடுதலை தொடரலாம் என்று நினைத்து தான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். அந்த இரவு பயணம் முழுவதும் அர்ணாப் தான் கோர்த்திருந்த என் கையை விடவே இல்லை. அதை நானும் கவனித்தேன், நெகிழ்ந்தேன்.

கா.ஒ.கா 17 காதலுக்கு வேட்டு வச்ச வேலை
எங்கள் ரயில் Union-ல் வந்து நின்றது. இறங்கி அடுத்த ரயில் எப்போது என்று பார்க்க, அது 15 நிமிடங்கள் என்று காட்டியது. அவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டாமே என்று நாங்கள் King St West-க்கு நடந்து சென்று Dundas Station-க்கு பஸ் ஏறினோம். 1:30 மணி நேர பயணத்துக்கு பிறகு நாங்கள் Petrol Station-க்கு வந்து சேர்ந்ததும் அர்ணாப் என்னை மென்மையாக முத்தமிட்டு “இன்னும் கூட எனக்கு நீ ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த வேலைக்கு வரனும்னு பிடிவாதம் பிடிக்கிறேன்னு எனக்கு புரியலை… If it makes you happy, I also have to accept it” என்று இறுக்கமாக அணைத்து எனக்கு விடை கொடுத்தான். கனடாவில் என் முதல் வேலை… படபடப்புடன் உள்ளே போனேன்.

Petrol Station நான் எதிர்பார்த்ததை விட நிறைய வேலை வாங்கியது. வெறும் Cash management & reporting மட்டும் இருக்கும் என்று நினைத்த எனக்கு, நான் ஒருவன் மட்டுமே Petrol Station-ன் மொத்த Physical Inventory-ஐ கவனித்துகொள்ள, Stock reconciliation செய்ய என்பதோடு நில்லாமல் தரையை mopping செய்வது, toilet cleaning என்று மொத்த Petrol Station-ன் சுத்தத்துக்கும் நான் தான் பொறுப்பு என்பது எனக்கு கண்ணை கட்டியது. நல்ல வேலையாக எனக்கு முந்தின shift செய்த தேஜாவும் எங்களை போல இந்தியாவில் இருந்து PR Immigration-ல் வந்து குடியேறியவன் என்பதால் பொறுமையாக விளக்கினான். அதனால் முதல் நாள் பெரிதாக பயமுறுத்தாமல் கடந்தது.

கா.ஒ.கா 17 காதலுக்கு வேட்டு வச்ச வேலை
காலை 5:30 ஆயிற்று. அடுத்த shift-க்கு வரும் Andrew Hill வந்தால் தான் நான் அவனுக்கு shift handover செய்துவிட்டு 6:00 மணிக்கு கிளம்ப முடியும். 6:00 மணி ஆச்சு… Andrew நிதானமாக ஆடி அசைந்து வந்தான். உள்ளூர் வெள்ளைக்காரன் என்பதால் மிகவும் தெனாவட்டாக நடந்துக்கொண்டான். அவன் இந்த பகல் shift-ஐ விட்டுக்கொடுக்க மறுத்ததால், நிர்வாகம் வேறு வழியில்லாமல் சொன்ன பேச்சை கேட்கும் நிலையில் இருக்கும் “desperate immigrant”-ஆன என்னை வேலைக்கு எடுத்துள்ளது என்பது புரிந்தது. நான் Andrew-வுக்கு hand over செய்துவிட்டு அவசரம் அவசரமாக வீட்டு வரும்போது காலை 8:15 மணி ஆகியிருந்தது. என் அர்ணாப் அலுவலகத்துக்கு கிளம்பிவிட்டு எனக்காக காத்திருக்கிறான்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

என் அர்ணாப் “முதலிரவு எப்படி இருந்துச்சு?” என்று double meaning-ல் கேட்டபடி என்னை இழுத்து கிஸ்ஸடித்தான். அர்ணாபின் கண்கள் என் முகத்தின் ஒவ்வொரு cell-ஐயும் scan செய்தது. “உன் கண்ணுல அவ்வளவு களைப்பு… டீ போட்டு தர்றேன்… குடிச்சிட்டு தூங்கு. சாப்பாடு fridge-ல வச்சிருக்கேன். எழுந்து குளிச்சிட்டு reheat பண்ணிட்டு சாப்பிடு… சாயங்காலம் நான் சீக்கிரம் வர முயற்சி பண்றேன்” என்று மீண்டும் உதட்டை கவ்விவிட்டு எனக்கு டீ போட kitchen திட்டை நோக்கி நடந்தான்.

கா.ஒ.கா 17 காதலுக்கு வேட்டு வச்ச வேலை
நான் அவனை முதுகுப்புறமாக கட்டிக்கொண்டு “உனக்கு ஏற்கனவே நேரம் ஆகுது… நீ போ! நான் டீ போட்டு குடிச்சுக்குறேன்” என்று முனகினேன். “நீ இப்படி சொல்லிட்டு நான் அப்படி போனதும் போய் தூங்கிடுவே… என் திருப்திக்காக” என்று டீ போட்டு கோப்பையை என் கையில் திணித்துவிட்டு, என் தலைமுடியை கோதினான். என் நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு தன் laptop bag-ஐ எடுத்துக்கொண்டு தெருவில் இறங்கினான். அவன் ஓட்டமும் நடையுமாக என் பார்வையில் இருந்து மறையும் வரை நான் வாசலில் நின்று அவனை பார்த்துக்கொண்டே நின்றேன்.

நேரம் ஆக ஆக நான் களைப்பில் கண்களை மூடினாலும் எனக்கு தூக்கம் வரவில்லை… உடம்பு இன்னும் புது routine-க்கு பழகவில்லை… படுக்கையில் உருண்டு புரண்டு ஒரு வழியாக தூங்க ஆரம்பித்தபோது மதியானத்தை தொட்டிருந்தது. மாலை அர்ணாப்பின் “பிரணயி” என்ற அழைப்பும், அதை தொடர்ந்து என் மேலே படுத்து உடம்பை அழுத்திய பாரமும் என்னை உறக்கத்தில் இருந்து எழுப்பியது. அர்ணாப் என் கன்னத்தில் முத்தம் வைத்தபடி தலைமுடியை கலைத்தான். “நல்லா தூங்கிட்டியா? Coffee போடட்டுமா?” என்றவனிடம் நான் “ஹ்ம்ம்ம்…” என்று பதிலளித்தேன்.

கா.ஒ.கா 17 காதலுக்கு வேட்டு வச்ச வேலை
அர்ணாப் “நீ கொஞ்ச நேரம் கழிச்சு Coffee போட்டு குடுன்னு சொல்லுவே… நான் அதுவரைக்கும் உன் மேலே படுத்திருக்கலாம்னு நினைச்சேன்… நீ என்னடான்னா பட்டுன்னு சரின்னு சொல்லிட்டே?” என்று செல்லமாக அலுத்துக்கொண்டான். நான் மல்லாக்க திரும்பி படுத்தேன். அர்ணாப் என்னை கண்ணை பார்த்தபடி என் நெற்றியில் முத்தம் வைத்தான். “நேற்று ராத்திரி நீ இல்லாம வீடு ரொம்ப வெறிச்சோடி இருந்துச்சு தெரியுமா… நாம ஒன்னா சேர்ந்து வாழ ஆரம்பிச்ச பிறகு நீ இல்லாம நான் தூங்குன முதல் ராத்திரி… உனக்காக நான் தான் கூடுதலா பிரார்த்தனை பண்ணனும் – உனக்கு சீக்கிரம் regular IT வேலை கிடைக்கனும்னு…” என்று அர்ணாப் சொன்னபோது எனக்கு உண்மையிலேயே மனம் பாரமாக இருந்தது. நான் அவனை இழுத்து என் மார்பில் போட்டு கட்டிக்கொண்டேன்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

வெளியுலகத்துக்கு எப்படி இருந்தாலும், உள்ளுக்குள் உங்களுடைய sexual preferences, பாலீர்ப்பு ரசனை காலப்போக்கில் மாறியிருப்பதாக நினைக்கிறீர்களா?

View Results

Loading ... Loading ...

கா.ஒ.கா 17 காதலுக்கு வேட்டு வச்ச வேலை
மாலை 8:00 மணிக்கு என்னை வழியனுப்ப அர்ணாப் என் கூடவே Light Rail Terminal-க்கு வந்தான. பாவம்! அவன் எப்படியாவது நாங்கள் ஒன்றாக இருக்கும் நேரத்தை இழுக்க முயற்சிப்பது கண்கூடாக தெரிந்தது. என் நேரம்… நாங்கள் Terminal-க்கு போகவும், Light Rail வரவும் சரியாக இருந்தது. இதை விட்டால் அடுத்தது அரை மணி நேரம் கழித்து தான் என்பதால் நான் மனமில்லாமல் அதில் ஏறினேன். அர்ணாப் சீக்கிரம் Platform-ல் நின்றபடி என் பார்வையில் இருந்து காணாமல் போனான். அடுத்த வேலை நாள் எப்படி இருக்கப்போகிறதோ என்ற பதைபதைப்பு என்னை தொற்றிக்கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top