முன் கதை சுருக்கம்... |
---|
ரூபா பிடிவாதமாக அவினாஷை வீட்டை விட்டு உடனடியாக வெளியேற சொல்கிறாள். அதை தடுக்க முடியாமல் ரவி திணறும்போது அவர்கள் கட்டிப்பிடிப்பதை பார்த்து ரூபா கலாட்டா செய்து, மிட்டுவை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற முயற்சிக்கிறாள். அவினாஷ் அவர்கள் வீட்டையும், வாழ்க்கையையும் விட்டு ஒரேயடியாக போய்விடுகிறான். |
“அண்ணா… அந்த பக்கம் பார்த்து வாங்க… கொஞ்சம் சேறா தான் இருக்கு. உள்ளே பள்ளமா இருக்கான்னு தெரியலை” அவினாஷ் கையை நீட்ட, தண்ணிர் தேங்கியிருந்த அந்த சிறிய குட்டைக்கு அப்பால் இருந்து ரவி அவன் கையை நீட்டி பிடித்துக்கொண்டு, காலில் சேறு படாத அளவுக்கு கால் நுணியில் நடந்தான். அவினாஷை முதன் முதலில் ஓத்த கொடைக்கானலின் Berijam lake-க்கிற்கு தங்கள் காதலின் anniversary-ஐ கொண்டாட இருவர் மட்டும் தனியாக வந்திருக்கிறார்கள். ஏற்கனவே வதிருந்தபடியால் அந்த இடம் இவர்களுக்கு பழகிவிட்டதன் காரணமாக இம்முறை trekking கூட்டத்தோடு வராமல் தனியாக வந்திருக்கிறார்கள். மாலை மண்டிவிட்டதால் ரவியையும் அவினாஷையும் தவிர அந்த இடத்தில் வேறு யாரும் இல்லை. மாலை மெல்ல மெல்ல இருட்டிக்கொண்டிருக்கிறது. குட்டையை தாண்டியதும் ரவி அவினாஷ் எதிர்பார்க்காதபோது அவன் இடுப்பில் கிச்சு கிச்சு மூட்ட, அவினாஷ் ரவியிடம் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள ஓடினான். ரவி அவனை விடாமல் துரத்திக்கொண்டு வந்தான்.
ஓடிக்கொண்டிருந்த அவினாஷ், ரவியின் குரல் கேட்காததால் பின்னால் திரும்பி பார்க்க, அங்கே ரவி மட்டுமல்ல ஒரு ஈ, காக்கா கூட இல்லை. அவினாஷின் குரலில் பதற்றம் தொற்றிக்கொண்டது. இதயம் வழக்கத்தை விட பல மடங்கு அதிகம் துடிக்க, வாயை திறந்து நிறைய காற்றை விழுங்கிக்கொண்டு அவற்றை பலமாக வெளியிட்டபடி “ரவிண்ணா…” என்று கத்தினான். அவன் குரல் அந்த குளக்கரை எங்கும் எதிரொலித்தது. அவினாஷ் ஆவேசத்தோடு அங்கும் இங்கும் ஓடியபடி ரவியின் பெயரை சொல்லி கத்த, அந்த வனமெங்கும் ரவியில் பெயரால் நிறைந்தது. ஆனால் ரவியிடம் இருந்து பதில் எதுவும் இல்லை. கடைசியில் களைத்துப்போய் குளத்து தண்ணீரில் கால் வைத்து குணிந்து மூச்சு வாங்க, தண்ணீரின் மேல் திடீரென்று ரவியின் முகம் வெளிப்பட்டது. அவன் கண்கள் அகல விரிந்து வானத்தை வெறித்துப்பார்க்க, திறந்த வாயோடு ரவியின் உயிரில்லாத உடம்பு தண்ணீரின் அடியிலிருந்து மேலே வந்து மிதந்தது. அதிர்ச்சியில் அவினாஷின் வாய் தன்னிசையாக அலறியது – “ரவியண்ணா…”
படுக்கையில் இருந்து திடுக்கிட்டு எழுந்த அவினாஷ் சுற்றும் முற்றும் பார்த்தான். அறையில் night lamp உறுத்தாத அளவுக்கு வெளிச்சம் பொழிந்துக்கொண்டிருக்க, கண்ணாடி சுவற்றுக்கு வெளியே விடிய ஆரம்பிப்பதற்கு அடையாளமாக வானம் கருநீலத்திலிருந்து வெளிர் மஞ்சளுக்கு மாறிக்கொண்டிருந்தது. அவினாஷுக்கு பலமாக பெருமூச்சு வாங்கியது. தலைமாட்டில் இருந்த Digital Clock-ல் மணி 5:30-ஐ நெருங்கிக்கொண்டிருந்தது.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
“என்னடா ஆச்சு?” பக்கத்தில் படுத்திருந்த சமீர் எழுந்து அவினாஷின் தோளை உலுக்கினான். அவினாஷ் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. “அவி! Are you OK? What happened? Any nightmares…?” சமீர் அவினாஷின் நெற்றியில், கன்னத்தில், கழுத்தில் தன் பின்னங்கையை வைத்து அவினாஷுக்கு ஜுரம் அடிக்கிறதா என்று பார்த்தான். இல்லை என்றதும் சமீருக்கு ஆசுவாசம்.
அவினாஷ் எழுந்து கட்டிலுக்கு நேரே இருந்த கண்ணாடி சுவற்றில் பூட்டப்படாத கதவை திறந்துக்கொண்டு பால்கனிக்கு போய் நின்றான். அந்த உயரமான apartment balcony-ல் இருந்து பார்த்தபோது வான்கோவரின் கட்டடங்கள் எல்லாம் சிறிதாக, அழகாக தெரிந்தன. வான்கோவர் நகரம் இன்னும் முழுதாக விழித்துக்கொள்ளவில்லை. பொதுவாகவே வான்கோவர் அப்படி தான். வேலைக்கு போகிறவர்களால் காலை 8 மணிக்கு லேசான சந்தடி ஆரம்பிக்கும், மாலை 5:30 மணிக்கு நகரத்தில் மனிதர்கள் இருக்கிறார்களா என்று தெரியாத அளவுக்கு அடங்கிப்போகும். குளிர் காலத்தில் கேட்கவே வேண்டாம். பனி சாலைகளை மூடிக்கொள்வதால் மக்கள் அவசியமான வேலைக்கும் வீட்டுக்கும் போவதை தவிர வேறு போக்குவரத்தே வைத்துக் கொள்ளமாட்டார்கள். அவினாஷ் கைப்பிடியில் கைவைத்துக்கொண்டு அமைதியான சாலைகளை வெறித்துப்பார்த்தபடி சமீர் அவினாஷை பின்புறமாக வந்து கட்டிப்பிடித்து அவினாஷின் தோளில் தன் தாடையை இருத்தி நின்றான்.
“என்ன அவி! ரவியோட ஞாபகமா? இன்னும் நீ அந்த incident-ல இருந்து வெளியே வரலையா? You have to move on. எவ்வளவு நாளுக்கு தான் அதையே நினைச்சிட்டு இருப்பே? Please come out of that…” மென்மையாக அவினாஷின் கன்னத்தில் முத்தம் வைக்க முயல, அவினாஷ் லாவகமாக அதை தவிர்த்தான்.
“இப்போ கூட பாரு… நாம college time-ல emotional bonding எதுவும் இல்லாதப்போ hookup பண்ணி எத்தனை தடவை செக்ஸ் வச்சிருந்திருக்கோம். ஆனா இப்போ… நான் என் முழுமனசோட உன் கிட்டே I Love You சொல்றேன் ஆனா என்னை ஒரு சின்ன peck (கன்னத்து முத்தம்) கூட வைக்க விடமாட்டேங்குறே… போகட்டும். நீ என்னைக்கு என் கிட்டே என்னை love பண்றதா சொல்றியோ அது வரைக்கும் நான் celibate-ஆவே இருப்பேன்.” அவினாஷ் சமீரின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு அரையின் wardrobe-ல் இருந்து ஜிம்மில் போடும் Activewear-ஐ எடுத்து மாட்டினான். Balcony-ல் கண்ணாடி சுவற்றுக்கு அப்பால் நின்றபடி தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும் சமீரை பார்த்து ஒரு புன்னகை புரிந்துவிட்டு flat-லிருந்து வெளியேறினான்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
Loading ... |
அந்த விடிகாலை வேளையில், வான்கோவர் சாலையில் இவன் காரை தவிர வேறு எந்த வண்டியும் இல்லை என்பதால் காரின் பயணம் முன்னோக்கி smooth-ஆக போக, அவினாஷின் மனம் பின்னோக்கி பயணித்தது.
ரவியின் வீட்டிலிருந்து கனத்த மனதோடு suitcase-களை இழுத்துக்கொண்டு தெருவுக்கு வர, அவினாஷின் கண்ணீர் நிறைந்த கண்களுக்கு சாலையில் எல்லாமே கானல் நீராக தெரிந்தது. இவனை பார்த்ததும் ஒரு Taxi அவினாஷின் அருகே வந்து “சார்! Taxi வேணுமா?” என்றபோது அவினாஷ் சுயநினைவுக்கு வந்தான். Taxi-க்காரனை பார்த்து “ஹாங்…” என்று விழிக்க, “எங்கே சார் போகனும்? Airport-ஆ?” என்று கேட்க, “ஆமாம்” என்று சொன்னபடி அவினாஷ் அதில் ஏறினான்.
இந்த ஊரில் இனி இருக்கப்பிடிக்கவில்லை. லக்ஷ்மிபதி பரிந்துரைத்த Company Guest House-க்கு போவதையும், நாளை office-ல் எந்த முகத்தோடு ரவியை மீண்டும் பார்ப்பது என்ற நினைப்பும் அவினாஷின் முதுகுத்தண்டில் ஒரு சில்லிப்பை படர்த்தியது. இந்த ஊரை விட்டு ஓடிப்போகவேண்டும் என்று மனம் அரற்றியது. ஆனால் எங்கே போவது? என்று மூளை கேட்டது.
“Sorry Sir… இன்னைக்கு traffic கொஞ்சம் அதிகமா இருக்கு.. அங்கங்கே road எல்லாம் jam ஆகி கிடக்கு… உங்க flight எத்தனை மணிக்கு?” Taxi-க்காரன் rear view mirror-ல் அவினாஷை பார்த்தபடி பேசிக்கொண்டே வண்டியை ஓட்டினான்.
“தெரியலை…”
குழப்பத்தில் நெற்றிப்புருவங்கள் சுருங்க, அதுக்கு மேலே Taxi-க்காரன் அவினாஷிடம் பேச்சுக்கொடுக்கவே இல்லை. ஆற்றுப்பாலம் தாண்டும்போது அவினாஷ் தன் மொபைலின் MicroSD Card-ஐ மட்டும் எடுத்துக்கொண்டு mobile phone-ஐ தூக்கிப்போட, அது ஆற்றில் விழுந்ததா இல்லை பாலத்தின் கைப்பிடி சுவற்றில் விழுந்ததா என்று கணிக்கமுடியவில்லை.
Airport-ன் Domestic Terminal-ல் Taxi-க்காரன் அவினாஷை அவசரம் அவசரமாக உதிர்த்துவிட்டு மறைய, அவினாஷ் Terminal Entrance-ல் இருந்த Flight Chart-ஐ பார்த்தான். முதலில் கிளம்பவிருப்பது SpiceJet-ன் மும்பை செல்லும் விமானம் தான். அவினாஷ் SpiceJet counter-க்கு சென்று மும்பைக்கு ஒரு ticket வாங்கினான். Flight-ன் Boarding-ம் முடிந்தது. மும்பைக்கு போவது சரி! ஆனால் மும்பையில் எங்கே போவது? குழப்பத்தில் Flight seat-ல் சரிந்தபடி அவினாஷ் மெல்ல மெல்ல உறங்கிப்போனான்.
சாலையின் குறுக்கில் திடீரென்று ஒரு கறுப்பு பூனை ஓட, அவினாஷ் சமயோஜிதமாக பிரேக் அடித்து அடுத்த வளைவில் காரை நிறுத்தினான். பொதுவாக விடியற்காலைகளில் மட்டுமே எப்போதாவது இது போல பிராணிகள் ஓடும். இன்று எதிர்பாராமல் இந்த பூனை flashback mode-ல் இருந்த அவினாஷை உலுக்கிவிட்டது. அவினாஷ் கொஞ்ச நேரம் மூச்சுவாங்கி ஆசுவாசப்படுத்திக்கொண்டு காரை மீண்டும் start செய்தான்.
கார் மீண்டும் முன்னோக்கி போக, அவினாஷின் நினைவுகள் அதற்கு எதிர்மாறாக பின்னோக்கி செல்ல ஆரம்பித்தது. சமீர் எவ்வளவு எளிதாக சொல்லிவிட்டான் “You have to move on…” என்று. ஆனால் அது அவ்வளவு எளிதாக இல்லை. சமீரையும் குறைத்து சொல்லமுடியாது. அவனும் வெறுமனே சொல்வதோடு நிற்காமல் சொல்வதை செய்து காட்டியவன் தானே. அவனை மாதிரி ஒரு உறுதியான மனசு இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும். ம்ம்ம்”
“ஆனா ஏன் இன்னைக்கு அப்படி ஒரு கனவு வந்துச்சுன்னு தெரியலை…. விடியற்காலை கனவு வேற… அதனால தான் கொஞ்சம் பயமா தான் இருக்கு.. ரவியண்ணா எப்படி இருப்பார்? அவரை கூப்பிடலாமா?… ப்ச்ச்! வேண்டாம், ரவியண்ணாவும் இந்நேரத்துக்கு கடந்து போயிருக்கலாம். எதுக்கு அனாவசியமா பழசை கிண்டனும்?” Car gym-ன் parking lot-ஐ அடைய, அவினாஷ் car engine-ஐ switch off செய்துவிட்டு gym bag-ஐ எடுத்துக்கொண்டு gym-க்குள் நுழைந்தான்.