P G 11. பிரளயம்

P G 11. பிரளயம்

இது Paying Guest தொடர்கதையின் 11-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
ரவி Planet Romeo app-ஐ தன் mobile phone-ல் install செய்ய முயற்சிக்கிறான். ஆனால் அவினாஷ் ரவியை தடுத்து தனது mobile-ல் உள்ள PR application-ஐ உபயோகப்படுத்துமாறு சொல்கிறான். வரப்போகும் ஆபத்து தெரியாமல் ரவி Planet Romeo-ல் ரொம்ப நேரம் செலவழிக்கிறான். அவினாஷை தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கலாமா என்று யோசிக்கும் ரூபாவின் சித்தப்பா அந்த வீட்டில் நிச்சயம் gay presence இருப்பதாக கண்டுபிடிக்கிறார்.

“இப்படி உட்காரும்மா….” ரூபா பால் ஆற்றியபடி லக்ஷ்மிபதியின் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

லக்ஷ்மிபதி பால் டம்ப்ளரை வாங்கிக்கொள்ள, “சித்தப்பா! அவினாஷை பத்தி நீங்க ஒன்னுமே சொல்லலையே… பையன் எப்படி?” என்று கேட்டாள்.

“நம்ம காலத்துல எல்லாம் கன்னி கழியுறதுக்காகவே கல்யாணத்துக்காக அலைஞ்ச ஆளுங்க உண்டு… ஆனா இப்போதைய generation வயசுக்கு வந்ததும் முதல் வேலையா செக்ஸ்க்கு அலையுதுங்க… அதனால கல்யாணத்துக்கு அவசரப்படறதில்லை… Facebook, mobile apps-ன்னு அவங்களுக்கு ஆள் பிடிக்கிறதுல ரொம்ப ஈஸியா போச்சு. நம்மளால அவங்களை கண்காணிச்சுட்டே இருக்க முடியாது. நாளைக்கே ஸ்வேதா வந்து தான் virgin இல்லைன்னு சொன்னா கூட எனக்கு அதிர்ச்சி இருக்காது… அதனால தான் சீக்கிரம் ஸ்வேதாவுக்கு கல்யாணம் பண்ணிக்குடுத்து என் தலையிலே இருந்து பாரத்தை இறக்கி வச்சிடலாம்னு பாக்குறேன்” – லக்ஷ்மிபதி.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

“ஆனா சித்தப்பா… பையன் பிடிச்சிருந்தா கல்யாணத்தை சீக்கிரம் முடிச்சிடலாமே. உங்களுக்கும் பாரம் இல்லாம போயிடும்”

“ம்ம்ம்… முன்னே எல்லாம் பையன் பார்க்கும்போது நல்ல வேலை இருக்கா, நல்ல குடும்பம் இருக்கா, பையனுக்கு வேற கல்யாணம் ஆயிருக்க, இல்லை வேற பொண்ணு கூட தொடர்பு இருக்கான்னு பார்ப்போம்… ஆனா இப்போ இருக்குற சூழ்நிலையிலே பையனுக்கு பொண்ணு புடிக்குமா இல்லை பையன் பிடிக்குமா? வேற பையன் கூட affair இருக்கா… அவன் Gay-யா இல்லை straight-ஆன்னும் பார்க்க வேண்டியதா இருக்கு…” லக்ஷ்மிபதி லேசாக தயங்கினார்.

“சித்தப்பா…” ரூபாவின் முகத்தில் குழப்ப ரேகை.

லக்ஷ்மிபதி மொபைலை எடுத்தார் “என் mobile phone-ல ஊர்ல இருக்குற எல்லா Dating apps-ம் வச்சிருக்கேன். நான் எப்போ எல்லாம் ரூபாவோட friends இல்லை prospective groom-ஐ பார்க்கப்போறேனோ அப்போ எல்லாம் mobile-ஐ casual வெளியே எடுத்து பார்ப்பேன். அந்த surrounding-ல இருக்குறவங்கள் யாராச்சும் dating app-ல profile வச்சிருந்து active search-ல இருந்தா எனக்கு App Nearby profiles-னு Notifications வரும். அப்படி வந்தா அது எந்த App-லன்னு பார்ப்பேன். பொதுவா என்னை பெருசு-ன்னு நினைச்சிட்டு சின்ன பசங்க அவங்க dating apps-ல location ON பண்ணி வச்சுட்டே தான் பேசுவாங்க… அதுக்கப்புறம் நான் அவங்களோட profile-ல போய், அவங்களுக்கு affair இருக்கா, அவங்க sexual orientation என்னான்னு கணுபிடிச்சுடுவேன். அப்படி ஒரு abnormal விஷயம் நம்ம வீட்டுல கண்டுபிடிச்சேன்” ரூபா அதிர்ந்தாள்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

இங்கே கதைகளுக்கு கொடுக்கப்படும் featured image மற்றும் பெயர்கள் படிக்கும் போது உங்கள் கற்பனையை influence செய்கிறதா?

View Results

Loading ... Loading ...

“என்ன சித்தப்பா சொல்றீங்க?”

“ஆமாம்மா… இந்த வீட்டுல ஒரு Gay profile active-ஆ இருக்கு…. உன் மாப்பிள்ளையோட mobile phone-ல இந்த app-ஐ எப்போவாச்சும் பாத்திருக்கியா?” லக்ஷ்மிபதி Romeo app-ன் icon-ஐ காட்டினார்.

“அப்படி எதுவும் பார்த்ததா எனக்கு ஞாபகம் இல்லை சித்தப்பா. ஆனா அப்படிபட்ட Profile நம்ம வீட்டுல தான் இருக்கனும்னு எப்படி சொல்றீங்க? நாம இருக்குறதோ Flat-ல. பக்கத்து flat-ல இருந்தாலும் Nearby-ன்னு தானே சொல்லும்?”

“எனக்கும் அந்த சந்தேகம் இருந்துச்சும்மா… முந்தா நாள் நான், மாப்பிள்ளை அப்புறம் அந்த பையன் மூணு பேரும் ராத்திரி walking போயிட்டு அப்படியே மிட்டுவை கொஞ்ச நேரம் park-ல விளையாட விட்டிருந்தோம் இல்லை… அப்பவும் அந்த profile Nearby-ல காமிச்சுது.” லக்ஷ்மிபதி Planet Romeo-வை திறந்து இந்த profile தாம்மா அது. HotShotBanana என்று காமக்குறியீடாக பெயரிடப்பட்டிருந்தது. இப்போ பாரு Far away-ல 20 km-ன்னு காட்டுது. சரி! நீ எதுவும் அவசரப்படாதே. ராத்திரி மாப்பிள்ளை வீட்டுக்கு வந்ததும் பார்க்கலாம்…” ரூபா அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தாள்.

லக்ஷ்மிபதி அவள் தோளில் ஆறுதலாக கைவைத்தார். “ரூபாம்மா… கேட்குறேனேன்னு தப்பா நெனச்சுக்காதே… மாப்பிள்ளை அந்த விஷயத்துல எப்படி?” அந்த-வை அழுத்தி கேட்டதால் அவர் எந்த விஷயத்தை கேட்கிறார் என்று ரூபாவுக்கு புரிந்தது.

“எவ்வளவு தான் அடிக்கடி பண்ணினாலும் அடுத்த தடவை எப்போன்னு கேட்க வைப்பாருங்க சித்தப்பா” சங்கடத்தோடு சொன்னாள். அவள் கண்ணில் கண்ணீர் துளிகள். தன் கணவன் Gay-யாக இருப்பான் என்ற பயமா இல்லை சித்தப்பாவிடம் இந்த விஷயத்தை பற்றி பேசவேண்டிய துர்பாக்கிய சூழ்நிலையை நினைத்தா என்று அவளுக்கே தெரியவில்லை.

“சரிம்மா! கண்ணை துடைச்சுக்கோ. ராத்திரி மாப்பிள்ளை வந்ததும் ஏதாச்சும் காரணம் சொல்லி அவர் mobile phone-ஐ எடுத்துட்டு வா. எதுக்கும் check பண்ணலாம்”.

இரவு ரவியும் அவினாஷும் களைப்போடு வீட்டுக்கு வந்து அவரவர் அறைக்கு சென்ற உடனேயே படுதுவிட, சிறிது நேரத்தில் ரவியிடமிருந்து மெல்லிய குறட்டை சத்தம் வெளிப்பட்டது. சத்தம் வராதபடிக்கு ரூபா அவன் mobile phone-ஐ எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். பால்கனியில் உலாத்திக்கொண்டிருந்த லக்ஷ்மிபதியும் ஹாலுக்கு வந்து Romeo app-ஐ திறக்க, “HotShotBanana” profile Nearby-ல் 30 மீ தூரத்தில் அதாவது மிக நெருக்கத்தில் இருப்பதாக காட்டியது. ரூபா கைகள் நடுங்கியபடி ரவியின் mobile-ஐ திறந்து அதில் install செய்யப்பட்டிருந்த apps-களில் Romeo-வை தேட, சிறிது நேரத்தில் பெருமூச்சோடு சேர்த்து அவளது முகத்தில் ஒரு நிம்மதிப்புன்னகை.

இந்த Paying Guest இன்னும் தொடரும்...

* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 31/01/2019
Feedback
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும்.
Comments

கதை எப்படி இருக்கு?

0 / 5 Results 0 Votes 0

Your page rank:

Picture of the day
P G 11. பிரளயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top