| தலைப்பு | காதல் - The Core | ||
| மொழி | Malayalam | ||
| வெளியான வருடம் | 2023 | ||
| வகை | Feature film | ||
| எங்கு பார்க்கலாம்? | Amazon Prime | ||
| இலவசமாக பார்க்கலாமா? | ஆம் | ||
| நடிகர்கள் | மம்மூட்டி, ஜோதிகா | ||
| இயக்குனர் | ஜியோ பேபி | ||
| கதைச்சுருக்கம் | |||
I hate porn that starts off fucking... I need to know why they are fucking சேரும் இடத்தை போல போகும் பயணமும் சுவாரசியமே... Gay-க்களின் கதைகள், Coming Out பற்றிய கதைகள் எல்லாம் வெளிநாட்டவர்களுக்கானது, அப்படியே இந்தியாவில் வந்தாலும் ஹிந்தியில் மட்டுமே வரும், அதுவும் Metro-க்களில் வசிக்கும் இளைஞர்களை பற்றி, பணக்கார Gay-களை பற்றி மட்டுமே என்று இருக்கும் சூழ்நிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நடுத்தர வர்க்கத்து குடும்பத்தை சேர்ந்த 40களை தாண்டிய குடும்பஸ்தனான ஆணின் Coming Out கதை என்பது நிச்சயம் பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும். அதை விட பெரிய அம்சம் என்னவென்றால் அந்த கதாபாத்திரத்தை ஏற்றிருப்பது ஒரு முன்னணி கதாநாயகன். நம் திரையில் கதாநாயகன் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற image-ஐ பற்றி கவலைப்படாமல் மம்மூட்டி ஒரு closet homosexual கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது மட்டுமல்லாது அந்த படத்தை சொந்த காசில் தயாரித்திருப்பதை புரட்சி என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது? நேற்று (24/11/2023) அன்று வெளியான மம்மூட்டி, ஜோதிகா இணைந்து நடித்துள்ள “காதல் – The Core” என்ற திரைப்படம் நம் conservative ஆன தென்னிந்திய குடும்பங்களில் ஓரினச்சேர்க்கையாளர்களின் இருப்பை பற்றிய உரையாடலை நிச்சயம் வெளிக்கொண்டுவரும் என்பதில் சந்தேகமே இல்லை. தனக்கு திருமணமாக சில மாதங்களிலேயே தன் கணவனின் சமபாலீர்ப்பை பற்றி தெரிந்தும் ஏன் ஓமனா இத்தனை வருடங்கள் அமைதியாக இருந்துவிட்டு, இளமையை கழித்த பின்பு இப்படி விவாகரத்து கோருகிறார் என்ற கேள்வியில் படத்தின் உயிர்நாடி வெளிப்படுகிறது. ஓமனா அப்போது விவாகரத்து கோரியிருந்தால் அவரது ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றமாக வகைப்படுகிறது. அதனால் மேத்யூ கைது செய்யப்பட்டிருக்கலாம், அவரது வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் 2018-ல் சுப்ரீம் கோர்ட் ஓரினச்சேர்க்கை குற்றம் இல்லை என்று தீர்ப்பளித்த பிறகு விவாகரத்து கோருவதால் மேத்யூஸ் மீது குற்ற நடவடிக்கை பாயாது என்பதால், இப்போது ஓமனா விவாகரத்து கோருவதன் மூலம் தன் கணவன் மேத்யூஸ் மீதமுள்ள காலம் தன் நிஜ வாழ்க்கையை வாழட்டுமே என்று சொல்கிறார். சுப்ரீம் கோர்ட்டின் அந்த தீர்ப்பினால் விடிவு பெற்றது ஓரினச்சேர்க்கையாளர்கள் மட்டுமல்ல, அவர்களது துணைகளும் தான் என்றும் பாதிக்கப்பட்ட துணைகளின் வலியையும் பேசுகிறது இந்த காதல் – The Core. ஓமனா மேத்யூஸிடம் இருந்து விவாகரத்து பெற்ற பிறகு அவருக்காக தேர்தல் வேலைகளை இன்முகத்தோடு செய்கிறார். படத்தின் முடிவில் வரும் காட்சிகள் மூலம் மேத்யூஸும் ஓமனாவும் சட்டப்படி கணவன் மனைவி இல்லை என்றாலும் அவர்களுக்குள் இருக்கும் உண்மையான காதலை அழகாக சொல்கிறார் இயக்குனர் ஜியோ பேபி. ஆனால் அந்த காதலை தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து தான் நிரூபிக்கவேண்டும் என்பது இல்லை என்ற கருத்தையும் அழுத்தமாக வைக்கிறார். கல்யாணம் ஆன ஓரினச்சேர்க்கையாளர்களின் வலியை மிகவும் யதார்த்தமாக சொல்கிறது இந்த படம். நான் இந்த படத்தை பயந்து பயந்து தனியாக தான் பார்த்தேன். ஒவ்வொரு closet gay-க்கும் இப்படிப்பட்ட புரிதலுடன் கூடிய விடுதலை கிடைக்காதா என்ற ஏக்கத்தை இந்த “காதல் – The Core” படம் நிச்சயம் ஏற்படுத்தும். பாதிக்கும் மேற்பட்ட பகுதியை மிக மிக இயல்பான மனிதர்களுடன், பெரிதாக drama இல்லாத வசனங்களுடன் கடக்கும் இந்த படம் வழக்குமன்ற காட்சிகள் வந்ததும் நம்மை இருக்கை நுணிக்கு கொண்டு வருகிறது.
மலையாள படங்கள் என்றாலே இயல்பான நடிப்பு இருக்கும் என்று தெரியும். ஆனால் இதில் acting powerhouse ஆன மம்மூட்டியுடன் போட்டி போடாமல் அனாயாசமாக score செய்கிறார் ஜோதிகா. அந்த இறுகிய முகத்தின் பின்னால் உள்ள வலியை அழகாக பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறார் இந்த ஒரு காலத்து “overacting queen”. 17 வருடங்களுக்கு பிறகு ஜோதிகா மலையாள படத்தில் நடிக்கிறார் என்று கேள்விப்பட்டதும் நான் அது OTT Release plan-ன் பாகமாக, Pan India appeal-க்காக என்று நினைத்தேன். ஆனால் இப்போது அந்த ஓமனா கதாபாத்திரத்தில் ஜோதிகாவை தவிர வேறு யாரையும் நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. என்ன… அந்த பின்னணி குரல் தான் கொஞ்சம் ஒட்டவில்லை. ஆனால் கொஞ்ச நேரத்துக்கு பிறகு பழகிவிடுகிறது. அது போல மம்மூட்டியின் ‘நண்பர்’ தங்கனுடனான உறவின் ஆழம் பற்றிய கூடுதல் காட்சிகள் இல்லை என்பதால் மம்மூட்டியின் பக்கத்து தவிப்பு straight ஆட்களுக்கு பெரிதாக புரியாது. இந்த படம் mainstream படங்களில் ஒரு நிச்சயம் landmark படம் என்று தான் சொல்லவேண்டும். ஒரினச்சேர்க்கையாளர்கள் குறித்து ஹிந்தியில் ஏற்கனவே நிறைய commercial படங்கள் வந்திருந்தாலும் அவை பெரும்பாலும் நகைச்சுவையாக கடத்தப்பட்டிருக்கும் (Shub Mangal Zyaada Saawadhan, Badhaai Do) அல்லது dark-ஆக இருக்கும் (Aligarh, My Brother Nikhil). அவற்றில் இருந்து இந்த “காதல்” முற்றிலும் வித்தியாசப்படுத்தும் அம்சம் என்னவென்றால் இது பிரச்சார தொனியிலோ அல்லது lead character-களை caricature ஆக காட்டவோ இல்லை. நமக்குள், நம்மை சுற்றியுள்ளவர்களுள் ஒரு மேத்யூஸ் தேவசி இருக்கலாம். இது போன்ற இயல்பான படஙளின் மூலம் ஓரினச்சேர்க்கையாளர்களின் வலிகளை புரிந்து, அவர்களை இந்த சமூகம் என்றாவது ஒரு நாள் ஏற்றுக்கொள்ளும் மாற்றம் வரலாம். இந்த படம் வெற்றி பெற்றால் mainstream cinema-ல் ஓரினச்சேர்க்கையாளர்களை பற்றிய தாழ்வுணர்ச்சியை களைந்து இது பற்றி இன்னும் அதிகம் உரையாடல்களை ஏற்படுத்தும் என்று நம்புவோமாக. அதற்காகவேனும் இந்த திரைப்படம் முடிந்த அளவுக்கு நிறைய பார்வையாளர்களை சென்று சேரவேண்டும் என்பதே என் பிரார்த்தனைகள். | |||
| முன்னோட்டம் | |||
![]() | |||
| விமர்சனம் | |||
![]() | |||
| முழு நீள வீடியோ | |||





