| தலைப்பு | Brokeback Mountain | ||||
| மொழி | English | ||||
| வெளியான வருடம் | 2005 | ||||
| வகை | Feature film | ||||
| எங்கு பார்க்கலாம்? | Amazon Prime | ||||
| இலவசமாக பார்க்கலாமா? | இல்லை | ||||
| நடிகர்கள் | Heath Ledger (Ennis Del Mar), Jake Gyllenhaal (Jack Twist) | ||||
| இயக்குனர் | Ang Lee | ||||
| Download Link | இங்கே சொடுக்கவும் | ||||
| கதைச்சுருக்கம் | |||||
I hate porn that starts off fucking... I need to know why they are fucking Ang Lee (Life of Pi, Crouching Tiger Hidden Dragon) இயக்கத்தில்உருவான Brokeback Mountain தன்பாலீர்ப்பினர் மற்றும் அவர்கள் சார்ந்த கதைகளை ரசிக்கும் ரசிகர்களிடையே ஒரு காவியமாக கொண்டாடப்படுகிறது என்றால் அது சும்மா அல்ல. மேலோட்டமாக பார்த்தால் அது ஒரு சாதாரண காதல் கதை… அப்படி என்றால் அனைத்து gay-க்களின் வாழ்க்கையிலும் நடக்கும் நிகழ்வுகள் கொண்ட “சாதாரண” கதை. தன்பாலீர்ப்பினர்களின் காதலும், அன்பும் எப்படி சமூகத்தின் கட்டுப்பாடுகளால் நசுக்கப்படுகின்றன, அவர்களின் ஆழ்ந்த உணர்வுகளையும், அவர்களின் தனிமை நிறைந்த பயணத்தையும் பேசும் ஒரு துயரக் காவியம். அமெரிக்காவின் Wyoming மாகாணத்தில் உள்ள Brokeback Mountain (இடத்தின் பெயரே அது தான்) பின்னணியில் விரியும் இக்கதை, இரண்டு இளைஞர்கள் காதல் கொள்வதில் இருந்து, எப்படி அவர்களது காதல் சமுதாய கோட்பாடுகளில் சிக்கி / சிக்காமல் அமரத்துவம் பெறுகிறது என்பதை மனதை தொடும் விதமாக சொல்கிறது.சேரும் இடத்தை போல போகும் பயணமும் சுவாரசியமே... Brokeback mountain-ல் மிகப்பரந்த ranch எனப்படும் மேய்ச்சல் நிலத்தில், ஆட்டு மந்தைகளை மேய்ப்பதற்காக இளைஞர்களான Ennis Del Mar (Heath Ledger) மற்றும் Jack Twist (Jack Glyllenhall) ஆகியோரை வேலைக்கு கொண்டு வருகிறார். மலைகள் சூழ்ந்த நிலத்தில் வேறு யாரும் இல்லாத தனிமையும், வயதும் இருவரையும் உடலுறவு கொள்ள வைக்கிறது. அது ஆழமான காதலாக பரிமளிக்கிறது. ஒரு நாள் வெட்டவெளியில் இருவரும் உடலுறவு கொள்வதை பார்க்கும் முதலாளி அவர்களை வேலையை விட்டு நீக்கி அவர்களை வெவ்வேறு (சொந்த) ஊருக்கு அனுப்பிவிடுகிறார். எனிஸுக்கும், ஜேக்குக்கும் அன்று ஏற்படும் பிரிவு, நான்கு வருடங்களுக்கு பிறகு இருவரும் மீண்டும் சந்திக்கும் போது எனிஸுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், எனிஸுக்கு எட்டு மாத ஆண் குழந்தையும் உண்டாகிவிடுகிறது. ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் சந்திக்கும் அவர்களிடையே காதல் துளிர்க்கிறது. எனிஸ் மற்றும் ஜாக் இருவரும், தங்களின் எதிர்பாராத காதலைச் சந்திக்கும்போது, அதை எப்படி அணுகுவது எனத் தெரியாமல் தவிக்கின்றனர். மீன் பிடிக்க போவதாக இருவரும் மீண்டும் தனிமையில் இரண்டு நாட்கள் செலவழிக்கிறார்கள். இந்த உணர்வு, சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாதது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். அவர்கள் ஒருவர் மார்பில் அடுத்தவர்கள் சாய்ந்துக்கொண்டு தங்கள் கடந்த வாழ்க்கையை பற்றி பேசும் காட்சி மிக அழகான காட்சி. நாம் கல்யாணம் ஆன கே-க்கள் நம் காதலை அசைபோடும் போது என்னென்ன நுட்பமான மன உணர்வுகளை எல்லாம் வெளிப்படுத்துவோமோ, அதை மிக தத்ரூபமாக திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம், அதன் கதை மட்டுமல்ல, கதாபாத்திரங்களின் மனப் போராட்டங்களையும், உணர்வுபூர்வமான சிதைவுகளையும் நுட்பமாகப் பதிவு செய்த விதம் தான். இரண்டு கதாநாயகர்களும், அடுத்தவர் மீது ஆழமான காதலில் இருந்தாலும், personality-ல் வெவ்வேறானவர்கள். எனிஸ் தன் மனப்போராட்டத்தை உள்ளுக்குள்ளே வைத்து புழுங்கிக்கொண்டு, சமுதாயத்துக்கு ஏற்ப வாழ முயற்சிக்கும் கொஞ்சம் practical ஆன கதாபாத்திரம். அதே சமயம் ஜேக் கொஞ்சம் தைரியமானவர். மனசுக்கு தோன்றும்படி வாழ முயற்சிக்கும் happy go lucky personality. மீண்டும் காதல் துளிர்த்த பிறகு ஜேக் எனிஸுடன் கூடுதல் நேரம் செலவழிக்கவேண்டும் என்ற பதைபதைப்பில் தவிப்பதும், அது நடக்கவில்லை என்றபோது எரிந்து விழுவதிலும், எனிஸை விட கூடுதல் கவனம் பெறுகிறார். எனிஸ் உடனான உறவு சாத்தியமில்லாதது என்பதை ஜேக் உணரும்போது, ஜாக் அடையும் மன உளைச்சல், ஒரு சாதாரண காதலுக்கு அப்பாற்பட்டது. எனிஸ் டெல் மார் கதாபாத்திரத்தின் மனப் போராட்டங்கள் மிகவும் ஆழமானவை. இந்த சமுதாயத்தில் தன்பாலீர்ப்பு உறவுகளுக்கு ஏற்படும் ஆபத்துகளை அவர் உணர்கிறார். சிறிய வயதில் எனிஸ் தன் தந்தை ஓரினச்சேர்க்கையாளர் என்று சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவர் கொடூரமாக ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டதை தான் பார்க்க வைத்ததன் காரணத்தை பின்னர் புரிந்துக்கொண்டதாக சொல்கிறார். அதனால் ஜேக்கிடம் “இது நம்ம ரெண்டு பேருக்கும் இடையிலான விஷயம்; வெளியுலகத்துக்குத் தெரியக்கூடாது” என்று எனிஸ் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். இந்த பயம், கடைசியில் அவரது வாழ்க்கையின் முடிவிலும் பிரதிபலிக்கிறது. இந்த படத்தில் மூல கதாபாத்திரங்களான ஜேக் மற்றும் எனிஸை போல, சொல்லப்போனால் அவர்களை விட கூடுதல் பரிதாபம் பெறுவது எனிஸின் மனைவி அல்மா-வின் கதாபாத்திரம். தன் கணவன் எனிஸ், காதலன் ஜேக்கை மாடிப்படியில் வைத்து வெறித்தனமாக கிஸ்ஸடிப்பதை பார்க்கும் அல்மா, தன் அதிர்ச்சியையும், துக்கத்தையும் உள்ளுக்குள் புதைத்துக்கொண்டு ஜேக்கிடம் இயல்பாக பேச முயற்சிப்பதும், எனிஸ் ஜேக்குடன் வெளியே போவதாக சொல்லி கிளம்பும்போது, அவர்கள் உடலுறவு கொள்வார்கள் என்று தெரிந்தும் எதுவும் செய்ய முடியாத இயலாமையுடன் உடைந்து போவது என்று பரிதாபத்தை அள்ளும் அல்மா, கடைசியில் எனிஸிடம் அவரது தன்பாலீர்ப்பை கையும் களவுமாக பிடித்து கோபத்துடம் பேசும் சமயத்தில் நமக்கு எனிஸ் மீது கொஞ்சம் கோபமே வருகிறது. தன் பங்குக்கு தவறு ஏதும் செய்யாமல் தண்டனை அனுபவிக்கும் அல்மா, உலகில் தன்பாலீர்ப்பு ஆண்களை கல்யாணம் செய்து தவிக்கும் அத்தனை பெண்களையும் represent செய்கிறார். படத்தின் உச்சகட்ட காட்சிகளில் ஒன்று, எனிஸ், ஜாக்கின் இறப்புச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடையும் தருணம். ஜாக்கின் பெற்றோரைச் சந்தித்து, அவரது அத்தியாயத்தை மூடும்போது, ஜாக்கின் மறைந்த நினைவுகள் எனிஸை வாட்டி வதைக்கின்றன. ஜாக்கின் வீட்டிலிருந்து, ஜாக்கின் சட்டையும், அவரது சட்டைக்குள் பத்திரமாக இருந்த தனது சட்டையையும் கண்டெடுக்கும் காட்சி, பார்வையாளர்களின் கண்களைக் கலங்கச் செய்யும். அந்தக் காட்சி, அவர்கள் இருவரும் வாழ்ந்த காதலை, சமூகத்தின் கண்களுக்குத் தெரியாமல், எவ்வளவு ரகசியமாகப் பாதுகாத்து வந்தனர் என்பதைப் பறைசாற்றுகிறது. அந்த சட்டைகளைத் தனது அலமாரியில் வைத்து, அதைப் பார்த்தபடியே, “ஜாக், நான் உன்னை என் நெஞ்சிலேயே வைத்திருக்கிறேன்” என்று எனிஸ் உணருவதான காட்சி, வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட சோகத்தை ஏற்படுத்துகிறது. “Brokeback mountain” ஒரு tragical காதல் கதை மட்டுமல்ல. அது, சமூகத்தின் கட்டுபாடுகளால், தன்பாலீர்ப்பாளர்களின் மெல்லிய உணர்வுகள் எப்படி மிருகத்தனமாக நசுக்கப்படுகின்றன என்பதற்கான ஒரு சான்று. எனிஸ் மற்றும் ஜாக்கின் கதை, நிஜ வாழ்க்கையில் பலரது பிரதிபலிப்பாக இருக்கலாம். அது தான் இந்த படத்தை Classic என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளது. பொதுவாக ரசிகர்களும், விமர்சகர்களும் இந்த “Brokeback Mountain”, “Call me by your name”, “God’s own country” – ஆகிய மூன்று படங்களையும் gay trilogy என்று குறிப்பிடுவார்கள். எல்லாம் வெறும் gay love story-க்கள் கதை என்பதை தாண்டி, காதல் கதைகளை ரசிக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் விருப்பமான படங்களாக மாறியுள்ளன. To sum it up, “Brokeback Mountain” ஒரு உணர்வுபூர்வமான, கவித்துவமான திரைப்படம். அதன் காட்சிகள், இசை, மற்றும் Heath Ledger, Jack Glyllenhall ஆகியோரின் அற்புதமான நடிப்பு, இந்த திரைப்படம், காதல் மற்றும் துயரம் பற்றிய ஒரு ஆழமான விவாதத்தைத் தொடங்குகிறது. அதை ஒருமுறை பார்ப்பவர்கள், அதன் உணர்வுபூர்வமான தாக்கத்திலிருந்து அவ்வளவு எளிதாக மீண்டு வர முடியாது. இது காலம் கடந்த ஒரு காவியம். 💔 * பதிவு முதலில் பதியப்பட்ட நாள்:
குறிச்சொற்கள்: ஓரினக்காதல், ஓரினச்சேர்க்கை
|
|||||
| முன்னோட்டம் | |||||
![]() |
|||||
| விமர்சனம் | |||||
![]() |
|||||





