| முன் கதை சுருக்கம்... |
|---|
| Hobart நகர்த்தில் இருந்து நிகிலும் கணேசனும் தனித்தனியே வெவ்வேறு நாட்களில் வீட்டுக்கு வந்து சேர்கின்றனர். ஆனால் கணேசனின் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் நிகிலுக்கு குழப்பமாக இருக்கிறது. நாட்கள் செல்ல செல்ல கணேசன் தன்னிடம் இருந்து விலகுவது நிகிலுக்கு பைத்தியம் பிடிக்க வைக்கிறது. கிடைத்த தனிமையில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நடக்கும் உடலுறவின் மூலம் நிகில் கணேசனை சமாதானம் செய்து மீட்டெடுக்கிறான். ஆனால் அதே சமயம் வீணா பனிக்குடம் உடைந்து மயக்கத்தில் கிடப்பதை பார்க்கிறார்கள். |
குழந்தையின் வருகை நிகிலிடமும் கணேசனிடமும் பலப்பல emotion-களை தூண்டிவிட்டிருந்தது. வீணா நிச்சயம் வழுக்கி விழுந்திருந்தபோது தங்களை அழைத்திருப்பாள். “அப்பா…”, “நிகில்…” என்று நிச்சயம் கூக்குரல் எழுப்பியிருப்பாள். வலி தாங்காமல் கதறியிருப்பாள்… உயிருக்கு போராடியிருப்பாள். ஆனால் அந்த நேரத்தில் தாங்கள் என்ன செய்துக்கொண்டிருந்தோம்? Makeup sex என்ற பெயரில் உடலுறவு கொண்டிருந்தோம்… ஒருவேளை அப்போது sex நடக்காமல் இருந்திருந்தால், நிகில் வந்து அழைத்ததும் கணேசன் சாப்பிட வந்திருந்தால், நாம் வீணாவை இந்த நிலைமைக்கு விட்டிருக்கமாட்டோம்…” என்ற குற்ற உணர்ச்சி இருவரையும் பிய்த்து தின்றுக்கொண்டிருக்கிறது. நிகிலும் கணேசனும் ஒருவரை ஒருவர் நேரடியாக கண்களை பார்க்க முடியாமல் தவிர்த்துக்கொண்டிருந்தனர். வீணாவுடைய பிரசவத்தில் ஏற்பட்டுள்ள complications-ஐயும், நல்லபடியாக குழந்தை பிறந்ததையும் கேட்டு Brisbane-ல் இருந்து பூர்ணிமா வந்து சேர்ந்தாள். அவளது presence பிரசவமான வீணாவை கவனித்துக்கொள்வதில் நிறைய வேறுபாட்டை கொடுத்தது. ஏனென்றால் ஒரு அம்மாவுக்கு தான் இன்னொரு பிரசவமான பெண்ணின் அவசியமும், தேவைகளும் புரியும். பூர்ணிமாவும், தோழி லாவண்யாவும் சேர்ந்து வீணாவை நல்லபடியாக கவனித்துக்கொண்டார்கள். ஆனால் வீணா உடல்நலம் தேறி மீண்டும் வீடு செல்வதற்கு சில நாட்கள் பிடிக்கும் என்பதால் மருத்துவமனையில் இருக்கிறாள். கணேசனுக்கும் நிகிலுக்கு உட்கார்ந்து ஓய்வெடுக்க முடியாத அளவுக்கு வேலை இருந்தது. குடும்பத்தின் புதிய உறுப்பினரின் வரவு அவர்களுக்குள் ஒருவித அமைதியை கொடுத்திருந்தது. கணேசன் வீணா மற்றும் குழந்தையையும், hospital-ஐயையும் விட்டு நகரவில்லை. இரவில் நிகிலும் பூர்ணிமாவும் வீட்டுக்கு போய் வந்தார்கள். வீணாவின் உடல்நிலை சீராக ஆனது. வீட்டுக்கு போனதும் அவள் நிறைய ஓய்வில் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் கணேசனுக்கும் நிகிலுக்கும் நடுவில் ஏற்பட்டுள்ள குற்ற உணர்ச்சி காரணமான அசௌகரியம் மட்டும் அப்படியே இருக்கிறது. சொல்லப்போனால் வீணாவின் நிலைமையை பார்த்த அவர்களுக்கு வேறு எதுவும் பெரிதாக தோன்றவில்லை என்பதே உண்மை. மூன்று நாட்களுக்கு பிறகு கணேசன் நிகிலிடம் “நான் இன்னைக்கு வீட்டுல போய் தூங்கிட்டு காலையில வர்றேன்” என்று சொன்னபோது நிகிலுக்கு தான் ஆசுவாசமாக இருந்தது.
அடுத்த நாள் காலை… நிகில் வீணாவுக்கு அறைக்கு வெளியே போட்டிருந்த நாற்காலி வரிசையில் சரிந்து உட்கார்ந்து தூங்கி எழுந்தான். கணேசன் வந்த பிறகு வீட்டுக்கு போகலாம் என்று காத்திருந்தான். அப்போது அவன் அலைபேசி ஒலித்தது. எதிர்புறத்தில் “Is this Mr. நிகில்?”… ஒரு விரைப்பான இளம் ஆண் குரல் கேட்டது. “Mr. Nikhil, I am Constable Clinton Strathfield” என்று சொன்னதும் நிகிலின் உடம்பில் ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டது. அடுத்த சில நிமிடங்களுக்கு நடந்த உரையாடலில் “எங்கே..?”, “எப்போ…?” என்று இரண்டு கேள்விகளை மட்டுமே நிகிலால் கேட்க முடிந்தது.
| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி... |
|---|
Police Constable “Mate… do you have a minute?” என்று நிகிலின் தோளில் கை வைத்தபோது அவன் மனது மரத்து போயிருந்தது. “I have some thing to show…” என்று Clint Strathfield நடக்க, நிகில் அவனை இயந்திரத்தனமாக பின் தொடர்ந்தான். “” என்ற நிகிலின் கேள்விக்கு க்ளிண்ட் பதில் எதுவும் சொல்லவில்லை. இருவரும் மருத்துவமனையின் parking lot-ல் இருந்த சென்றபோது அங்கே இருந்து இன்னொரு police constable-ன் கண்காணிப்பில் இருந்த இளைஞன் ஒருவன் Clint-ஐ பார்த்து பரபரத்தான். Clint அவனிடம் கார் சாவியை வாங்கி அவனுடைய கார் கதவை திறந்தான்.
| மேலே படிக்கிறதுக்கு முன்னாடி... |
|---|
நிகில் மீண்டும் கணேசனிடம் வந்தபோது அவர் இன்னும் வாயை பிளந்த நிலையில் மயக்கத்தில் இருந்தார். நிகில் பார்வையில் அவர் காணல் நீராக நெளிய ஆரம்பித்தார். நிகிலின் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து கன்னத்தில் கோடு போட்டு வழிந்தது. நிகில் அழுகையுடன் “கணேசன்…” என்று அழைத்தபோது அவன் வாயில் இருந்து சத்தமில்லாமல் வெறும் காற்று தான் வந்தது, மெதுவாக கணேசனின் கையை தொட்டான். “கணேசன்… நாம ரெண்டு பேரும் சேர்ந்து செஞ்ச தப்புக்கு நீங்களே உங்களுக்கு தண்டனை கொடுத்து பிராயச்சித்தம் தேடிக்க முயற்சி பண்ணிட்டீங்க… ஆனா நான் எனக்கு எப்படி தண்டனை குடுத்துக்குறது?” என்று கேட்டபடி நிகில் கணேசனின் கன்னத்தை தொட்டான்.
.”கணேசன்… காதலுக்கு கண் இல்லைன்னு சொல்லுவாங்க… அதே மாதிரி காமமும் நம்ம கண்ணை மறைச்சிடுச்சு. சமுதாயத்து பார்வையில நம்ம உறவு தப்பா இருந்தாலும், அதோட அடிப்படையான அன்பு சுத்தமானது… எனக்கு முதல்ல உங்க மேலே பிரமிப்பு தான் வந்துச்சு… எல்லோரும் வாழ்க்கை முடிஞ்சிடுச்சுன்னு முடங்கி போற சமயத்துல நீங்க காலத்தை எதிர்த்துக்கிட்டு உங்க ஆசைகளை, விட்டுப்போன வாழ்க்கையை வாழ முயற்சி பண்ணுனது எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. நீங்க என்னை உங்களோட இளமை காலத்து version-ஆ நினைச்சு பார்த்தீங்க. மாப்பிள்ளைன்னாலும் நானும் closet gay-ஆ இருக்குறதை பார்த்து உங்களுக்கு என் மேலே கரிசனம் வந்துச்சு… ரெண்டு பேரும் connect ஆயிட்டோம். அதோட extension-ஆ organically sexual relationship-லயும் கலந்துட்டோம்… இதுல யார் தப்பு கணேசன்?” நிகில் விசும்பினான். சிறு இடைவெளிக்கு பிறகு நிகில் “நீங்க அப்போ கேட்டப்பவே நான் கல்யாணத்தை நிறுத்திட்டு வீணாவை உங்க கூடவே அனுப்பி இருந்தா நீங்க இந்நேரத்துக்கு Sydney-ல உயிரோட இருந்திருப்பீங்க… ஆனா இப்படி நாம ரெண்டு பேரும் ஒருத்தர் மேலே ஒருத்தர் அன்பாகி, பித்து பிடிச்சு… அதே அன்பால, இப்போ நானே உங்களுக்கு எமன் ஆயிட்டேன். கணேசன்! உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் எப்படி என்னை மன்னிச்சுக்குவேன்? அந்த குற்ற உணர்ச்சியில உங்களை மாதிரி நானும் பைத்தியம் பிடிச்சு, தற்கொலை பண்ணி செத்துப்போனா வீணாவும் குழந்தையும் என்ன பண்ணுவாங்க? அவங்களுக்காகவாச்சும் நான் உயிரோட இருந்தாகனுமே! இப்படி காலாகாலத்துக்கும் உங்க சாவுக்கு நான் பொறுப்பேத்துக்கிட்ட்டு குற்ற உணர்ச்சியில வாழுறது தான் நீங்க எனக்கு தர்ற தண்டனையா?” நிகில் சத்தமில்லாமல் மனசுக்குள் இரைந்தான். நிகில் சிந்திய கண்ணீர் கணேசனின் கையில் சொட்டு சொட்டாக விழுந்தது. அந்த ICU ward-ன் அமைதியை நிகிலின் அழுகை விசும்பல் லேசாக கலைத்துக்கொடிருந்தது. ஆனால் பக்கத்தில் இருந்த ECG இயந்திரத்தின் “கீய்ங்” சீரான தாளத்தில் பின்னணி இசைத்துக்கொண்டிருந்தது. திடீரென்று அதன் சத்தம் “கொயுங்க் கொய்ங்க்” என்று அபஸ்வரமாக வீறிட்டு அலர, நிகில் அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தான். அதன் திரையில் தெரிந்த sine வளைவுகள் நீண்ட நேர்கோடாக மாற ஆரம்பித்திருந்தது. நிகில் பதற்றத்துடன் “நர்ஸ்…” என்று அலறியது அந்த மருத்துவமனையின் corridor-ல் ஒலித்தது.(முற்றும்)
பி.கு: நிகில் மற்றும் கணேசனின் உறவை மன்னிப்பதா அல்லது கணேசனின் மரணம் மூலம் அவர்களை தண்டிப்பதான் என்பதை படிக்கும் வாசகர்கள் உங்கள் கையில் ஒப்படைத்துவிட்டு கதையை இப்படி open ended ஆக முடிக்கிறேன். Choice is yours…
இந்த கதை பிடிச்சிருந்ததா? அடுத்து ஏதாவது இன்னொரு கதை படிக்கலாமா?
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்:
| Feedback |
| எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
|
கதை எப்படி இருக்கு? |



