பரத் ஒரு பக்கம் gym floor-ல் வியர்க்க விறுவிறுக்க workout செய்துக்கொண்டிருந்த சைலஜாவை பார்த்தான். மறுபக்கம் சுவற்றில் மாட்டி இருந்த wall clock-ஐ பார்த்தான். மீண்டும் சைலஜாவை பார்த்தான். இவர் workout-ஐ முடிச்சிட்டு கடையை கட்டினார் என்றால் தானும் கிளம்பலாம் என்ற அங்கலாய்ப்புடன் பரத் தன் mobile phone-ஐ நோண்ட ஆரம்பித்தான். பரத் இங்கே சரத்தின் Gym-ல் assistant ஆக இணைந்து சில நாட்களே ஆகியிருந்தது. ஆண்கள் workout செய்யும் போது பரத்தை spotting செய்ய, exercises சொல்லிக்கொடுக்க என்று நிறைய வேலை வாங்குவார்கள். ஆனால் பெண்கள் workout செய்கையில் பெரும்பாலும் அவர்கள் cardio, machine exercises என்று செய்வதால் பரத்துக்கு ஓய்வு கிடைக்கும். இப்போது சைலஜா ரொம்ப நேரமாக workout செய்தாலும் பரத்துக்கு வேலை இல்லாததால் அவனுக்கு போரடித்தது.