ஜெய் அந்த Brazil-ல் onsite team-டீமில் புதிய மெம்பராக வந்து சேர்ந்தான். அந்த டீமில் இருந்த எல்லோரையும் அறிமுகப்படுத்தும் போது Jeff Ferreira (ஜெஃப்)பையும் அறிமுகப்படுத்தினார் அவனது மேலாளர். ஜெஃப் ஆள் பார்க்க தான் சின்ன பையனாக தெரிந்தான் ஆனால் கிட்டத்தட்ட ஜெய்யின் வயது தான். பொதுவாக பிரேஸில் பசங்களுக்கு இயல்பாகவே உடற்பயிற்சி மீது ஆர்வம். ஜெஃப்பும் நல்ல உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருந்ததால் அவனால் தன் வயதை ஏராளமாக குறைக்க முடிந்தது. அவனை பார்த்ததும் ஜெய்க்கு மனசுக்குள் காரணமே இல்லாமல் பட்டாம்பூச்சிகள் பறந்தன. ஆனாலும் ஜெய் அதை சாமார்த்தியமாக மறைத்துக்கொண்டான். ஜெய் ஒரு தனிமை விரும்பி என எல்லோரும் நினைத்திருந்தாலும் அவன் உள்மனதில் தனக்கு என்று ஒருவன் வேண்டும் என்று ஏங்கினான். ஆம்.. “ஒருவன்” என்ற ஏக்கம் அவனை மௌனமாக்கி வைத்திருந்தது. அவனால் தனது sexual orientation / பாலியல் விருப்பத்தை வெளியே சொல்லமுடியவில்லை. இந்த சமயத்தில் தான் அவனுக்கு Brazil-ல் Rio De Geniro-வுக்கு வரக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. வந்த இடத்தில் ஜெப்பையும் பார்க்கமுடிந்தது.
Onsite என்பதால் வேலை பளு அதிகமாக இருந்தது. Project கிட்டத்தட்ட முடிந்து Live போகும் தருணத்தில் Deadline நெருங்க நெருங்க pressure இன்னும் அதிகமானது. அதனால் மொத்த டீமும் கிட்டத்தட்ட இரவுபகல் என ஒன்றாக கழிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் ஜெய்க்கு ஜெஃப்புடன் வேலையில் தினசரி interaction அதிகம் ஆகி, அவனோடு நிறைய நேரம் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயம் கிறிஸ்துமஸ் பண்டிகையும் வர வேலை பளு களைப்பிலிருந்து ஊழியர்களை கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய client side-ல் அலுவலகத்தில் கிறுஸ்துமஸ் மரம் நடப்பட்டு Chris Mom விளையாட்டு தொடங்கியது.
அந்த விளையாட்டில் ஒவ்வொருவரும் Chris Mom-ஆக அதாவது மற்ற உறுப்பினர் ஒருவருக்கு அம்மாவாக இருந்து தினமும் தமது “பிள்ளை”க்கு ஒரு பரிசை அவர்களுக்கு தெரியாமல் கிறிஸ்துமஸ் மரத்தடியில் வைத்துவிடவேண்டும். விளையாட்டின் கடைசி நாளன்று “பிள்ளை” தன் அம்மாவுக்கு ஒரு ஸ்பெஷல் பரிசு தரவேண்டும். இந்த விளையாட்டில் ஜெஃப்புக்கு தினமும் காலையில் ஒன்று, மாலையில் ஒன்று என இரண்டு பரிசுகள் வந்துக்கொண்டிருந்தன. அவன் நண்பர்கள் அவனை அதிர்ஷடக்காரன் என்று பாராட்டினார்கள். இந்த மாதிரி ஒரு “அம்மா” எங்களுக்கு கிடைக்கவில்லையே என்று அலுத்துக்கொண்டனர். ஆட்டத்தின் கடைசி நாளும் வந்தது.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
விழா ஒருங்கிணைப்பாளர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்களது “அம்மா”விடம் அறிமுகப்படுத்தி வைத்தனர். ஜெஃப்பின் அம்மா வந்தபோது அவன் ஒரு சிறப்பான பரிசை கொடுத்தான். அவன் “அம்மா”வுக்கு பூரிப்பு தாங்கலை. அம்மாவிடம் ஏதாவது கேள்வி கேட்கவேண்டுமா என்று விழா ஒருங்கிணைப்பாளர் கேட்டபோது ஜெஃப் “தினமும் காலையும் மாலையும் பரிசு வைக்கும் அளவுக்கு உங்களை நான் என்ன impress செய்தேன்?” என்று கேட்டான். அதற்கு அவன் “அம்மா” நெற்றியை சுருக்கி “நான் தினமும் காலையில் மட்டும் தானே பரிசுகள் வைத்தேன்” என்று கூற, எல்லாருக்கும் யார் அந்த “மற்றொரு அம்மா?” என்று கேள்வி வந்தது.
யாரோ ” நம்ம ஜெஃப்புக்கு ரூட் போடுற அந்த பொண்ணு யாரும்மா??” என்று தங்கள் டீமிலுள்ள பெண் நபர்களை நோக்கி கூவினார்கள்.
ஆனால் ஜெஃப்பின் பார்வை திடமாக நேராக ஜெய்யை நோக்கி திரும்பியது. ஜெய் அவனை காதலோடு பார்த்துக்கொண்டிருந்தான். ஒன்றும் சொல்லிவிடாதே என்பது போல ஜெஃப்பை பார்த்து தலையாட்டினான்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
Loading ... |
வேலை அதிகம் இருந்ததால் கிறிஸ்துமஸ் அன்று மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு அனைவரும் நேரம் காலம் பார்க்காமல் ஆபீசே கதி என்று உழைத்துக்கொண்டிருந்தார்கள். ஜெஃப் வேலை நிமித்தமாக நிறைய நேரம் ஜெய்யுடன் செலவழித்தான். காபி சாப்பிட, லஞ்ச் சாப்பிட, மாலையில் கொஞ்ச நேரம் நடைபழக என இருவரும் ஒன்றாகவே சுற்றினர். தங்களை சுற்றி மற்றவர்கள் இருப்பதை நினைவிலேயே கொள்ளாமல் இருவரும் project-உடைய deadline-ல் வரும் நெருக்கத்து pressure-ஐயும் தங்களுடைய நெருக்கத்தால் business cum pleasure trip-ஆக மாற்றிக்கொண்டிருந்தனர். அவர்களிடையே முளைத்த அன்னியோனியம் நேரம் போவதே தெரியாமலும், வேலை பளு தெரியாமலும் வைத்திருந்தது. இருவரும் மாலையில் நடக்கும்போது இயல்பாகவே கைகள் கோர்த்துக்கொண்டன. கூடவே மற்ற டீம் மெம்பர்கள் இருந்தபோதும் இருவருடைய கண்கள் மட்டும் எப்போதும் விலகவே இல்லை.
புத்தாண்டுக்கு முந்தைய இரவு மொத்த டீமும் ஒன்றாக புகழ் பெற்ற Ipanema beach-ல் உள்ள hotel-ல் New year eve party கொண்டாட client சார்பில் arrange செய்யப்பட்டது. வழக்கம் போல ஜெய்யும் ஜெஃப்பும் ஒன்றாக கலந்துக்கொண்டனர். சாராயம் தண்ணீராக சப்ளை செய்யப்பட்டது. விலையுயர்ந்த குடி ஓசியில் கிடைக்கிறது என்பதால் எல்லோரும் தண்ணீரில் நீச்சலடித்தனர். ஜெய் இரண்டு கோப்பைகளை எடுத்துக்கொண்டு வந்து ஜெஃப்பிடம் ஒன்றை நீட்டினான். ஆனால் ஜெஃப் fitness freak என்பதால் அதை மறுத்தான். உடனே ஜெய்யும் தனது கோப்பையை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு ஜெஃப்பின் அருகில் வந்து அமர்ந்தான்.
“ஜே.. நான் தான் குடிக்க மாட்டேன்னு சொன்னேன்.. உன்னை குடிக்க வேணாம்னு சொல்லலையே.. உனக்கு அதிலே சந்தோஷம்-நா மத்தவங்களை பத்தி கவலைபடாம குடி” என்றான் ஜெஃப்.
“அப்படி இல்லை… நீயும் தண்ணியடிப்பேன்னு நினைச்சு, உனக்கு கம்பெனி குடுக்க தான் கொண்டுவந்தேன். இன்னைக்கு எனக்கு பார்ட்டி மூடே இல்லை. நாம ரெண்டு பேர் மட்டும் வெளியே கொஞ்ச நேரம் நடக்கலாமா?” என்று கேட்டான் ஜெய்.
“டீம்ல எல்லாரும் ஒன்னா வந்திருக்கும்போது நாம மட்டும் தனியா ஒதுங்கினா நல்லா இருக்காதே ஜே…” என்றான் ஜெஃப்.
“நம்ம பசங்களை பாரு.. இப்போ பக்கத்தில யார் இருக்காங்கன்னு உணர்ற நிலைமையிலே இங்கே யாருமில்லை… எல்லாம் வானத்துல பறந்துட்டு இருக்காங்க.. சரி! வா போகலாம்” என்று உரிமையோடு ஜெஃப்பின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு போனான் ஜெய்.
இருவரும் கடற்கரை மணலில் கால் புதைய நடக்க அது கொண்டாட்ட காலமாதலால் கடற்கரையெங்கும் மனித கூட்டம். Ipanema beach-ன் speciality-ஏ அதில் நிறைந்திருக்கும் G-string அணிந்த ஆண்களும், dental-floss bikini அணிந்த பெண்களும் தான். இந்த கடற்கரையில் G-string மற்றும் dental-floss bikini அணிந்து தங்களுடைய கட்டான உடம்பை காட்டவேண்டும் என்பதற்காகவே மாதக்கணக்காக winter-ல் வியர்த்து விறுவிறுக்க exercise செய்து summer வந்ததும் கிட்டத்தட்ட நிர்வாணமாக வந்து குவியும் ஆண்களும் பெண்களாலேயே பீச் நிரம்பி வழிந்தது. அந்த மனித உடல்களின் அலையில் நீந்தியபடியே ஜெய்யும், ஜெஃப்பும் ஒருத்தரை ஒருத்தர் பிரிந்திடக்கூடாது என்று இறுக்கமாக கையை கோர்த்து ரொம்ப தூரம் கடந்து கூட்டமில்லாத இடத்துக்கு வந்து மணலில் அமர்ந்தனர்.
“ஜே… ஏன் நீ தண்ணி அடிக்கலை?” என்று கேட்டான் ஜெஃப்.
“இல்லை… தண்ணி அடிச்சா உன் கூட இருக்குற இந்த சமயத்தை முழுசா அனுபவிக்க முடியாது. தண்ணி மப்புல அடுத்த நாள் காலையிலே இதெல்லாம் யாருக்கோ நடந்த மாதிரி இருக்கும். நான் இந்த நிமிஷத்தை, உன் கூட இருக்குற ஒவ்வொரு நொடியையும் ரசிச்சு, உணர்ந்து அனுபவிக்கனும்னு விரும்புறேன்” என்றான் ஜெய்.
“Chill Bro… நான் உன்னை விட்டு எங்கே ஓடிப்போகப்போறேன்? எப்போ இப்படி உன் கூட நெருக்கமாவேன்னு, உன்னோட மட்டும் தனியா வெளியே வருவேன்னு எத்தனை நாள் நான் காத்துக்கிட்டே இருந்தேன் தெரியுமா?. என்னை நெருங்க உனக்கு இவ்வளவு லேட் ஆயிருக்கு.. நிறைய நாள் எனக்கு உன்னை, கொஞ்ச தெரியாத இந்த முட்டாள் தத்தியை கொல்லனும் போல கோபம் வந்துருக்கு தெரியுமா?” என்று சிரித்தபடியே ஜெஃப் ஜெய்யின் கழுத்தில் கை போட்டு செல்லமாக கழுத்தை நெறிப்பது போல இறுக்கினான்.
ஜெய் ஜெஃப்பின் இடுப்பில் கைபோட்டு வளைத்து நெருக்கமாக உட்கார்ந்தான். இருவருக்குமிடையெ இருந்த பனித்திரை மெதுவாக உடைந்து உருகி காதல் தண்ணீராக ஓட ஆரம்பித்திருக்கிறது. அது சீக்கிரம் வெள்ளப்பிரவாகமாக உருமாற தயாராகிக்கொண்டிருந்தது.
“ஜெஃப்… எனக்கு உன் கிட்டே ஒன்னு சொல்லனும். அதை கேட்டதுக்கப்புறம் நீ என் கிட்டே பழகனுமா இல்லை வேண்டாமான்னு முடிவு பண்ணிக்கோ” என்று தயக்கமாக சொன்னான் ஜெய்.
“என்ன… நீங்க ஒரு கே-ன்னு சொல்லப்போறீங்களா? சொல்லிட்டு எனக்கு option குடுக்கப்போறீங்களா? அதுக்கு தான் இவ்வளவு build up-ஆ” என்று ஜெஃப் படீரென்று உடைக்க ஜெய் ஒரு நிமிடம் தடுமாறினான்.
“உனக்கு எப்படி..?” வார்த்தை வெளிவர திக்கியது.
“ஜே… நீ என்னை கவனிச்சிட்டு இருந்ததை விட அதிகமா நான் உன்னை பத்தி டாக்டரேட் வாங்குற அளவுக்கு ஒரு ஆராய்ச்சியே பண்ணியிருக்கேன். மென்மையாவும், ரொம்ப Gentle-ஆவும் நீ பேசுற விதம், உன்னோட sensitive nature, நீ மத்தவங்க மேல காண்பிக்கிற caring nature, சட்டுன்னு காயமாகக்கூடிய உன்னோட vulnerability… எல்லாரையும் ஆச்சரியப்படுத்துற உன்னோட artistic abilities.. எல்லாம் நீ கே-யா இருக்கக்கூடிய possibilities ரொம்ப அதிகம்னு சொல்லுச்சு. உனக்கு தெரியாம check பண்ணினப்போ அதையே உன்னோட browser history-ம் confirm பண்ணுச்சு. நீ Planet Romeo-ல இருக்கியான்னு தேடினேன் ஆனா நீ இல்லை..” என்றான் ஜெஃப்.
ஜெய் எதுவும் பேசுகிற நிலைமையில் இல்லை… ஜெஃப் பேசுவதை மட்டும் கேட்கும் அளவுக்கு அவன் உடலில் திராணி இருந்தது. ஜெஃப் நிதானமாக தொடர்ந்தான். நள்ளிரவின் இருட்டில் அங்கங்கே மின்னும் சீரியல் பல்புகளிலிருந்து மாறி மாறி வரும் இருளிலும், வெளிச்சத்திலும் ஜெஃப்பின் முகம் இன்னும் வசீகரமாக இருந்தது. ஜெய் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
“ஜே… PR-ல உன்னை தேடனும்னா Romeo-ல எனக்கும் ஒரு account / profile இருக்கனும் இல்லை? எனக்கும் அதுல ஒரு profile இருக்கு.. அதுவும் ஒரு அன்பான, நேர்மையான துணைக்கான தேடலோட.. என்னோட தேடல்களுக்கு நீ முடிவா இருப்பேன்னா என்னை விட அதிகமா சந்தோஷப்படுறவங்க யாரும் இருக்கமாட்டாங்க.. சரின்னு ஒரு வார்த்தை சொல்லு.. நான் Romeo-ல இருந்து என்னோட profile-லை deactivate – இல்லை.. Delete -ஏ பண்ணிடுறேன்.. இதை விட வெளிப்படையா உனக்கு என்னால propose பண்ணமுடியாது” என்றான்.
ஜெய் மௌனமாக ஜெஃப்பையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“சரி ஜே.. திரும்ப போகலாமா?.. நியூ இயர் பிறக்க போகுது.. டீம்ல நம்மள தேடுறதுக்கு முன்னாடி நாமளா போய் சேர்ந்துக்கலாம்” என்று கேட்டபடி ஜெஃப் எழுந்திருந்தான். ஜெய் இன்னும் உட்கார்ந்திருந்தான். ஜெஃப் ஜெய்யை நோக்கி தன் கையை நீட்டினான்.
ஜெய் ஜெஃப்பின் கையை பிடித்து பலமாக இழுக்க, ஜெஃப் ஜெய் பக்கத்தில் முட்டிபோட்டு உட்கார்ந்தான்.
“என்ன ஜே..?” என்று ஜெஃப் ஜெய்யின் முகத்துக்கு அருகே நெருங்கி மென்மையாக கேட்க,
“உன்னோட மொபைலை எடு… அதுல Romeo profile-ஐ delete பண்ண log in பண்ற அளவுக்கு இங்கே network signal-ஓட strength இருக்கான்னு check பண்ணலாமா?” என்று ஜெய் சொல்ல, ஜெஃப் அவனை ஆச்சரியமாக பார்த்தான்.
கண்ணில் கண்ணீர் குளமாக தேங்கி கரையை உடைக்க தயாராக இருக்க.. “I Love you.. Jeff” என்றான் ஜெய். இதற்காகவே காத்திருந்தது போல கண்ணீர் கரையை உடைத்து ஜெய்யின் கன்னத்தில் பாய்ந்தது.
ஜெஃப் ஜெய்யை கட்டிக்கொண்டு அவன் உதட்டோடு தன் உதட்டை அழுத்தமாக பதித்தான். ஜெய்யும் தன் கையை ஜெஃப்பின் கழுத்தோடு போட்டு, அவன் பிடறி முடியை பிடித்தவாறே ஆழமாக கிஸ்ஸடித்தான். முத்தமிட்டவாறே ஜெய் கடற்கரை மணலில் சரிய, ஜெஃப் வாயை எடுக்காமலேயே அவன் மீது சரிய…
அதே சமயத்தில் வானவேடிக்கைகள் எல்லாம் ஒரே நேரத்தில் வெடித்து வானத்தை வண்ணமயமாக்க, அவர்களை சுற்றி இருந்த கூட்டம் ஆர்ப்பரித்து கத்தியது “Happy New Year”..
கீழே உள்ள படத்தை காண “படங்களை காட்டு” பட்டனை உபயோகிக்கவும்.
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 01/09/2012
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2012/09/happy-new-year.html
Feedback |
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
கதை எப்படி இருக்கு? |
Picture of the day |
---|