| முன் கதை சுருக்கம்... |
|---|
| உயரமான Career aspiration-களுடன் திருமணத்தை பற்றி யோசிக்காத வீணா ஒரு எதிர்பாராத unprotected sex session-ல் கர்ப்பமாகிறாள். நிகிலும் வீணாவும் தாங்கள் வாங்கியுள்ள புது வீட்டுக்கு போகும் கையோடு கல்யாணமும் செய்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து, இருவரின் குடும்பங்களும் கோவிலில் சந்திக்கிறார்கள். அனைவரும் பேசிக் கொண்டிருக்கும்போது வீணாவின் தந்தை கணேசனின் mobile phone-ல் இருந்து வந்த Planet Romeo-வின் message tone நிகிலையும், கணேசனையும் கலவரப்படுத்துகிறது. பாம்பின் கால் பாம்பு அறியும் என்ற பழமொழி அந்த இடத்தில் நிஜமாகிறது... |
கணேசன் நிகிலை நேராக பார்க்காமல் சொல்லிக்கொண்டிருக்க, நிகில் அவர் விரல்களை பிரித்தான். “இருந்தேன்னு கடந்த காலத்துல சொல்லாதீங்க… உங்க இஷ்டப்படி மீதி வாழ்க்கையை வாழுங்க… சரியான சந்தர்ப்பம் உருவாக்கி வீணா கிட்டேயாவது நீங்க Come Out பண்ணி உங்க மனசுல இருந்து பாரத்தை இறக்கி வைக்க நான் உதவி பண்றேன் கணேசன்… I am not judging you.. I understand you” என்றதும் கணேசன் நிமிர்ந்து பார்த்தார். அவர் கண்களில் கண்ணீர் கோர்த்துக்கொண்டு கன்னத்தில் வழிய தயாராக இருந்தது. நிகில் உரிமையுடன் அந்த கண்ணீரை துடைத்துவிட, கணேசன் நிகிலின் கைகளை பிடித்து கண்களில் ஒத்திக்கொண்டு விசும்பினார். கணேசன் மனம் விட்டு அழுது தன் பாரத்தை இறக்கிக்கொள்ளட்டும் என்று பொறுமையாக நிகில் அமர்ந்திருந்தான்.
Point Cook-ல் நிகிலும் வீணாவும் வாங்கிய வீட்டின் புதுப்பிக்கும் பணி இன்னும் இரு வாரத்தில் முடிந்துவிடும் என்று சொன்னதும், அதை உறுதி செய்துக்கொண்டு கல்யாண தேதியை குறித்தார்கள். பெரியவர்கள் முதன் முதலில் சந்தித்த ஸ்ரீ சிவா விஷ்ணு கோவிலிலேயே கல்யாணமும் நடத்த ஏற்பாடு நடந்தது. கல்யாணத்துக்கான ஏற்பாட்டை பூர்ணிமாவும், நிகில் சேர்ந்து கவனித்துக்கொள்ள, கல்யாணம் முடிந்து அவர்களை புது வீட்டில் குடியேற்றும் பொறுப்பை சூர்யா விரும்பி ஏற்றுக்கொண்டான். கல்யாணம் நல்லபடியாக முடிந்து வீட்டுக்கு வந்தபோது பூர்ணிமா தான் ஆரத்தி எடுத்து வரவேற்றாள். கணேசனுக்கு தன் மகளின் மனம் நிறைந்து மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து சந்தோஷமாக இருந்தாலும் ஏனோ அவருக்கு ஏற்பட்டுள்ள லேசான முகவாட்டத்தை நிகில் கவனிக்க தவறவில்லை. மாமனார் மருமகன் இருவருமே திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக ஒருவரை ஒருவர் நேரில் பார்ப்பதை தவிர்த்தனர். மாலை வரை மாற்றி மாற்றி உள்ளூர் நண்பர்கள் வந்து இவர்களுக்கு வாழ்த்து சொல்ல வந்து tired ஆக்கிக் கொண்டிருந்தார்கள். இரவு வந்தபிறகு தான் நிகில் குடும்பத்தினருக்கு ஓய்வு கிடைத்தது. பூர்ணிமா “நிகில்! வா நாம போய் எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வரலாம்” என்று அழைத்தாள். நிகில் “அக்கா! நான் சென்னை கிச்சன்ல சொல்லியிருக்கேன்… Deliver பண்ணிடுவாங்க… அது மட்டுமில்ல… இன்னும் கொஞ்ச நேரத்துல first night வச்சுக்கிட்டு நான் எப்படி வெளியே போறது?” என்று சொல்ல, பூர்ணிமா “டேய்! ஏண்டா இப்படி அலைஞ்சு மானத்தை வாங்குறே… இன்னைக்காடா உனக்கு first night? மனசாட்சியை தொட்டு சொல்லு… எல்லாத்தையும் முடிச்சதுக்கு அப்புறம் கல்யாணம் பண்றே… பேசாம மூடிக்கிட்டு வாடா” என்று அவன் சட்டையை பிடித்து இழுத்தாள். “என்னாது… மூடிக்கிட்டா? அக்கா… வர வர நீ ரொம்ப bad words பேசுறே” என்று போலியாக அலுத்துக்கொண்டு நிகில் அவளை பின்தொடர்ந்தான். நிகிலின் பெற்றோர்களும் கணேசனும் இந்த உரையாடலுக்கு அநியாயத்துக்கு வெட்கப்பட்டார்கள்.நேற்று தான் கல்யாணம் நடந்தது போல இருக்கிறது ஆனால் அதற்குள் நான்கு வாரங்கள் மிக எளிதாக களவாடப்பட்டிருந்தது. முதல் வார இறுதியில் கணேசன் மீண்டும் சிட்னிக்கு போன பிறகு தான் நிகிலுக்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. அந்த ஒரு வாரத்தில் இருவரும் மிக சாமர்த்தியமாக அடுத்தவர்களை நேருக்கு நேர் பார்ப்பதையோ இல்லை ஒன்றாக தனிமையில் இல்லாதவாறு பார்த்துக்கொண்டார்கள். இன்று பூர்ணிமாவும், நிகிலின் பெற்றோரும் Brisbane கிளம்புகிறார்கள். அவள் கணவனும் குழந்தைகளும் வேலை மற்றும் பள்ளியின் காரணமாக கடந்த வாரமே போய்விட்டார்கள். அடுத்த வாரம் நிகிலின் பெற்றோர் மீண்டும் மதுரை திரும்புகிறார்கள்.
ஒரு மாலை… நிகில் வீட்டுக்கு வந்தபோது வீணா தளர்வாக sofa-வில் சரிந்திருந்தாள். அந்த காட்சி நிகிலை பதற்றமடைய செய்தது. கையில் இருந்த laptop bag-ஐ அப்படியே போட்டுவிட்டு தாவி வீணாவிடம் வந்தான். “வீணாம்மா… என்னாச்சு? ஏன் என்னவோ மாதிரி இருக்கே?” என்று அவள் கன்னத்தை மென்மையாக தட்டினான். வீணா கண்ணை திறந்தாள். நிகிலை பார்த்ததும் வழக்கமாக வரும் புன்னகை கஷ்டப்பட்டு வெளிப்பட்டது. “ஒன்னுமில்லைடா… வாசல்ல இருக்குற செடிங்களுக்கு கொஞ்சம் தண்ணி விடலாமேன்னு எழுந்து வந்தேன். திடீர்ன்னு அப்படியே கண்ணு இருட்டிட்டு வந்துச்சு… நல்லவேளையா பக்கத்துல sofa இருந்துச்சு. அப்படியே உட்கார்ந்துட்டேன்” என்று வீணா மூச்சு வாங்கியபடி சொன்னாள். நிகிலுக்கும் பதற்றத்தில் வியர்த்தது. “கணேசன்! நான் நிகில் பேசுறேன்…” என்று நிகில் அலைபேசியின் இந்தப்பக்கம் சொல்ல, கணேசன் எதிர்ப்பக்கம் லேசான தயக்கத்துடன் “ஹாங்! சொல்லு நிகில்… வீட்டுல எல்லாம் நல்லபடியா போயிட்டிருக்கா?” என்றார். நிகில் “ஹ்ம்ம்.. வீணாவுக்கு இன்னைக்கு மயக்கம் வந்துடுச்சு… நான் கூட வீட்டுல இல்லை… இனிமேல் எனக்கு அவளை தனியா விட்டுட்டு போக பயமா இருக்கு. முடிஞ்ச அளவுக்கு நான் Work from home பண்ணி அவ கூட இருக்க முயற்சிக்கிறேன். ஆனால் தவிர்க்கமுடியாத சந்தர்ப்பத்தில் என்ன பண்றதுன்னு கவலையா இருக்கு… In this circumstance உங்க உதவி வேணும்” என்று நிகில் நேரடியாக விஷயத்துக்கு வந்தான். எதிர்ப்பக்கம் கணேசன் பதற்றத்துடன் தயங்குவதும் தெரிந்தது. நிகில் “கணேசன்! நீங்க எங்க வீட்டுல ஒரு 6 மாசம் வீணா கூட அவளுக்கு துணையா இருந்தா எங்களுக்கு உதவியா இருக்கும். நீங்க நமக்குள்ள நடந்த conversation-ஐ நினைச்சு தயங்குறீங்கன்னா அதை மறந்திடுங்க. இங்கே வந்தாலும் நீங்க உங்க விருப்பப்படி இருக்கலாம். உங்க ரகசியங்கள் பாதுகாப்பாகவே இருக்கும். அது மட்டுமில்லாம உங்களோட தனிப்பட்ட வாழ்க்கை is not mine or anyone else’s business.” என்று உறுதியளிக்க, கணேசன் “அதுக்கு இல்லை நிகில்… Just இங்கே எவ்வளவு சீக்கிரம் things-ஐ wind up பண்ண முடியும்னு கணக்கு போட்டுட்டு இருக்கேன்… Is it fine if I take this weekend to be there?” என்று கேட்க, நிகில் ஆசுவாசத்துடன் “Thanks கணேசன்” என்று அழைப்பை துண்டித்தான்.* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 30/05/2025
| Feedback |
| எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
![]() |
கதை எப்படி இருக்கு? |



