| தலைப்பு | From Beginning to End (Do Começo ao Fim) |
| மொழி | Portuguese |
| வெளியான வருடம் | 2009 |
| வகை | Feature film |
| எங்கு பார்க்கலாம்? | Theatrical Release |
| இலவசமாக பார்க்கலாமா? | ஆம் |
| நடிகர்கள் | Rafael Cardoso; João Gabriel Vasconcellos; Júlia Lemmertz; Fábio Assunção |
| இயக்குனர் | Aluizio Abranches |
| கதைச்சுருக்கம் | |
I hate porn that starts off fucking... I need to know why they are fucking சேரும் இடத்தை போல போகும் பயணமும் சுவாரசியமே... எழுதப்பட்ட புராணங்களில் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் இருந்த நெருக்கம், கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே இருந்த ஈர்ப்பு என்று இலைமறை காயாக ஓரினக்காதலின் இருப்பை பதிவு செய்திருந்தாலும் இந்த 21ம் நூற்றாண்டிலும் ஓரினக்காதலையோ இல்லை ஓரினச்சேர்க்கையையோ இந்த சமூகம் இன்னும் முழுசாக ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படிப்பட்ட நிலையில் ஒரு ஓரினக்காதல் கதையில் incest-ம் சேர்ந்துக்கொண்டால்? இவை இரண்டும் இணைந்த திரைப்படம் கழுவி கழுவி ஊற்றப்படும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் ஒரு இன்ப அதிர்ச்சிக்கு ஆளாவீர்கள். சகோதரர்கள் இருவரும் ஓரினக்காதலர்களாக மாறும் இந்த பிரேசில் நாட்டில் எடுக்கப்பட்ட போர்ச்சுகீஸ் மொழிப்படம் எந்த ஒரு straight காதல் கதைக்கும் சளைத்தது இல்லை என்று தோன்றும். தாமஸ் இல்லாமல் பிரான்சிஸ்கோ தனிமையில் போராடுகிறான். பிரான்ஸிஸ்கோ கிளப்பில் சந்தித்த ஒரு பெண்ணுடன் உறவை ஏற்படுத்திக்கொள்ள முயற்சித்தாலும், அவனால் தாமஸை தவிர வேறொருவருக்கும் தன்னை கொடுக்க முடியாது என்று உணர்கிறான். அங்கே ரஷ்யாவில் வசிக்கும் தாமஸும் பிரான்ஸிஸ்கோவின் பிரிவில் அவன் தான் தன் உயிர் என்று கண்டுக்கொள்கிறான். இருவரும் videocam வாயிலாக virtual sex-ன் மூலம் தங்கள் விரகத்திற்கு வடிகால தேட முயற்சிக்கிறார்கள். ஆனாலும் உடல்ரீதியான பிரிவு தாங்க முடியாமல் பிரான்சிஸ்கோ ரஷ்யாவிற்கு செல்கிறான். சகோதரர்கள் மகிழ்ச்சியுடன் மீண்டும் இணைகிறார்கள். இது போன்ற படங்களின் பிரச்சனை என்னவென்றால் (சமுதாயத்தால் வரையறுக்கப்படாத) உறவுகளை அவர்கள் உணர்ச்சிப்பூர்வமாக காட்டும் விதத்தில் நாம் சொக்கிப்போய்விடுவோம். நம்மையும் மீறி அவர்களை ஆதரிக்க தொடங்குவோம். அதுவே நம்மை சுற்றி நடக்கும்போது நமது எதிர்வினை வேறாக இருக்கும். இந்த படத்திலும் அதுவே தான் நிகழ்கிறது. படம் visually aesthetic-ஆக நம்மை ஈர்க்கிறது. Lead characters இருவரும் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறார்கள். மேலும் அவர்கள் விளையாட்டு வீரர்கள் (athlete மற்றும் swimmer) என்பதால் கட்டுடம்பில் கவர்ச்சியாகவும், வெறும் speedo மற்றும் bulge தெரியும் உடைகளில், இது தவிர முழுநிர்வாணம் மற்றும் கேமிராவுக்கு முன்பு உடலுறவில் மிக இயல்பாக இருக்கிறார்கள். நடிகர்கள் என்பதை மீறி உண்மையான காதலர்களை அவர்களுடைய வீட்டில் அவர்களுக்கு தெரியாமல் நாம் எட்டிப்பார்ப்பது போல natural-ஆக இருக்கிறார்கள். கதை நடக்கும் இடமும் கண்ணை கவர்வதாக இருக்கிறது. ஏற்கனவே எனக்கு பிரேசில் மற்றும் பிரேசில் ஆண்கள் மீது ஒரு weakness இருக்கிறது. இந்த கதைக்களமும், கதாபாத்திரங்களும் முழுக்க முழுக்க பிரேசில் நாட்டில் இருப்பதால் என்னையும் அறியாமல் நான் அவர்கள் மீது பாரபட்சமாக ஈர்க்கப்பட்டுள்ளேன். “உடற்கவர்ச்சி” ஈர்ப்பு என்பது யாருக்கு நடுவேயும் வரலாம். குறிப்பாக வெவ்வேறு அப்பாக்களுக்கு பிறந்த half-brothers, இரு consenting adults-க்கு நடுவே பூக்கும் gay உறவை நாம் judge பண்ணமுடியாது என்றாலும் படம் இந்த இந்த ஏடாகூடமான உறவை ஒரு fairy tale போல காட்டுவதிலேயே குறியாக இருக்கிறது. கதை நடக்கும் சமயத்தில் பிரேசிலின் சூழல் Gay-க்களுக்கு அனுகூலமாக இல்லை என்பதை ஓர் இடத்தில் கூட பதிவு செய்யவே இல்லை. அது மட்டுமல்லாமல் பொதுவாக சமுதாயத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு நடக்கும் bullying, குறிப்பாக பள்ளி மற்றும் உறவினர் வட்டத்தில் எழும் கேலிகள், இவை ஓரினச்சேர்க்கையாளர்களின் மீது ஏற்படுத்தும் பாதிப்புகள் என்று எந்த ஒரு sensitive-ஆன விஷயங்களையும் தொடாமல் வெறும் 4-5 கதாபாத்திரங்களையும், ஒரு வீட்டை மட்டுமே வைத்து எளிதாக கடந்துவிடுகிறார் இயக்குனர். இந்த incest relationship ஏற்கக்கூடியதா இல்லையா என்பது தனிமனித கருத்து, அதனால் நான்/நாம் அங்கு போக வேண்டியதில்லை. ஆனால் இது அங்கொன்று இங்கொன்றுமாக நிகழ்கிறது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். தாமஸ் மற்றும் ஃபிரான்ஸிஸ்கோ ஒன்றாக “வாழ” ஆரம்பித்த பிறகு அவர்களது உறவில் என்ன நிகழ்ந்தது என்பதை அறிந்துக்கொள்ளும் சுவாரசியம் எனக்கு உள்ளது. அது போல வேறு கதை எதுவும் காண கிடைத்தால் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.இந்த படத்தை தேடி நீங்கள் அலைய வேண்டாம் என்பதால் படத்தின் முழுநீள வீடியோவை கீழே பகிர்ந்துள்ளேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும். |
|
| முன்னோட்டம் | |
![]() |
|
| முழு நீள வீடியோ | |
| பகுதி 2 | |
| பகுதி 3 | |



