முகமூடியையும் சேர்த்து அவிழ்த்து…

முகமூடியையும் சேர்த்து அவிழ்த்து…

கதைச்சுருக்கம்...
தன் அலுவலகத்தில் வேலை செய்யும் கார்த்தியை தனஞ்செயா அவ்வப்போது கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் Gay என்று குத்திக்காட்டி பேச, ஒரு நாள் அதை கார்த்தி எதிர்க்கும் போது.... அவர்கள் உறவு என்ன ஆனது?

முகமூடியையும் சேர்த்து அவிழ்த்து…
சனிக்கிழமை மதியம்… ஆளில்லாத அலுவலகத்தில் நான் மட்டும் வேலையை செய்துக்கொண்டிருந்தேன். பொதுவாக நான் வேலையை வீட்டுக்கு கொண்டு போகும் ஆள் இல்லை. எவ்வளவு நேரம் ஆனாலும் அலுவலகத்திலேயே இருந்து முடித்துவிட்டு வீடு என்னும் personal space-ஐ கறைபடாமல் பாதுகாப்பேன். அது மட்டுமல்லாமல் வீட்டில் மனைவி, குழந்தைகள் இல்லாததால் நான் “போரடிக்குதே” என்று மீதமிருக்கும் வேலையை முடிப்பதற்காக அலுவலகம் வந்தேன். என் வேலையில் பிஸியாக இருந்தபோதும் எங்கள் அலுவலகத்து கதவு திறக்கப்பட்டு மூடுவதும் என் கவனத்துக்கு வந்து போனது. யாராவது housekeeping-ஆக இருக்கும் என்று நான் கண்டுக்கொள்ளாமல் என் வேலையில் கவனமாக இருந்தேன். ஒரு சிறிய break எடுத்து களைப்பை போக்குவதற்கு Coffee குடிக்கலாம் என்று pantry-க்கு போனேன்.

சுடுதண்ணீரில் கொஞ்சம் காஃபி தூள் போட்டு black coffee ஒன்றை எடுத்துக்கொண்டு என்னுடைய favourite இடமான  தூண் மறைவுக்கு சென்று ஒரு சிகரட்டை பற்றவைத்து கொண்டு நின்றேன். என் பக்கத்தில் நிழலாடுவதை கண்டு நான் தலையை நிமிர்த்த, பக்கத்தில் தனஞ்செயா கையில் mobile phone-ஐ நோண்டியபடி வந்து நின்றான். என்னை பார்த்து “ஹாய் கார்த்தி…” என்று சிரிக்க, நான் மௌனமாக ஒரு தலையசைப்பில் அவனது ஹாய்-க்கு பதில் சொன்னேன்.

முகமூடியையும் சேர்த்து அவிழ்த்து…
“Do you have a problem with me Dhana?” நான் நேரடியாக விஷயத்துக்கு வந்தேன். “என்ன?” என்று தனஞ்செயா என்னை குழப்பமாக பார்க்க, நான் “இல்லை… நான் Gay-ஆ இருக்குறதுல, அதுவும் கல்யாணம் ஆன closet gay-ஆ இருக்குறதுல உனக்கு எதுவும் பிரச்சனை இருக்கா?” என்று கேட்டேன். தனஞ்செயா புருவம் நெறித்து குழப்பமாக “எனக்கு ஏன் பிரச்சனையா இருக்கனும்? உங்க sexual orientation, உங்களோட வாழ்க்கை…” என்று தோளை குலுக்க, நான் “அப்புறம் ஏன் தனஞ்செயா வேணும்னே நான் இருக்குறப்போ gays-ஐ பத்தி தரக்குறைவா பேசுற மாதிரி என்னை சீண்டுறே? உனக்கும் எனக்கும் ஏதாச்சும் history இருக்கா?”

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

தனஞ்செயாவை பேச இடம் கொடுக்காமல் இறங்கி அடித்தேன் “Don’t say that those comments are coincidental… ஒவ்வொரு தடவை நீ இப்படி homophobic comments அடிக்கும் போதெல்லாம் ஒன்னு என்னை பார்த்து பேசுறே… இல்லை என்னை குறிப்பிட்டு பேசுறே. Why are you doing this to me?” என்று நான் ஆவேசத்தில் கிட்டத்தட்ட இரைய, தனஞ்செயா அமைதியாக “Yes…. I do so just because I like you Karthi” என்று சொன்னதும் எனக்கு சப்தநாடியும் ஒடுங்கி போனது.

தனஞ்செயா நிதானமாக பேசினான் “கார்த்தி! எனக்கு உங்களை பார்த்த உடனேயே ரொம்ப பிடிச்சுப்போச்சு…. அது மட்டும் இல்லாம நீங்க நம்ம team-கூட ரொம்ப supportive-ஆ இருக்குறது, Ego இல்லாம எல்லார் கூடவும் குடும்பம் மாதிரி பழகுறத பார்த்ததும் நான் உங்க ரசிகனாவே மாறிட்டேன். ஆனா எல்லாத்துக்கும் மேலே உங்களோட அந்த quality-ஐ பார்த்ததும் எனக்கு உங்க மேலே பொறாமை வந்துடுச்சு…” என்றதும்  நான் “என்ன அந்த quality?” என்று கேட்பது போல தனஞ்செயாவை பார்த்தேன்.

முகமூடியையும் சேர்த்து அவிழ்த்து…
“நீங்க உங்களோட sexuality-ஐ மறைக்க முயற்சி பண்ணாத quality தான் அது. என்னால அப்படி இருக்க முடியலை கார்த்தி… நானும் உள்ளுக்குள்ள gay தான். ஆம்பளையோட உடம்பு, அவனோட சிரிப்புன்னு ஆம்பளையோட ஒவ்வொரு அணுவையும் ரசிக்கிற pucca- gay நான்… ஆனா என்னை சுத்தி இருக்குறவங்களுக்கு என்னோட சமபாலீர்ப்பு தெரிஞ்சுடுச்சுன்னா என்னாகுங்குற பயத்துல நான் என்னை சுத்தி பொண்ணுங்கள சேர்த்துக்குட்டு என்னை ஒரு மன்மத ராசாவா காமிச்சுக்க முயற்சி பண்றேன்…. எங்கே எனக்குள்ள இருக்குற இந்த homosexuality என் body language-ல ஒரு feminine look கொண்டுவந்துட போகுதோங்குற பயத்துல ஜிம்முக்கு போய் உடம்பை ஏத்தி எனக்கு ஒரு முரட்டு ஆம்பளைங்குற இமேஜை உருவாக்க நான் படுற பாடு எனக்கு மட்டும் தான் தெரியும் கார்த்தி… ஆனா நீங்க? எந்த ஒரு மெனக்கெடலும் இல்லாம நான் இப்படி தான்னு casual-ஆ இருக்குறத பார்த்தா எனக்கு பொறாமை வருமா வராதா?” தனஞ்செயாவின் குரல் மெல்ல மெல்ல ஒடுங்க தொடங்கியது.

“என்ன தான் நான் என்னை ஒரு stud மாதிரி காமிச்சுக்க உயிரை குடுத்து உழைச்சாலும், என்னை attract பண்ற மாதிரி ஆம்பளைங்களை பார்த்தா என்னோட ஈர்ப்பை control பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கு. நானும் சாதாரண மனுஷன் தானே? அது மாதிரியான சமயத்துல எங்கேயாச்சும் என்னோட homosexuality வெளியே தெரிஞ்சுட போகுதோங்குற பயத்துல நான் எனக்கு போட்டுக்குற முகமூடி தான் இந்த homophobic comments எல்லாம். எனக்கு gays-ஐ பார்த்தா எரிச்சல்னு ஊர நம்ப வச்சா நான் gay-ஆ இருப்பேனான்னு யாருக்கும் தோணாது இல்ல? அதுக்கு தான் இப்படி ஏடாகூடமா பேசுறது…” தனஞ்செயாவின் குரல் அநியாயத்துக்கு உள்வாங்கியது.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

உங்க நண்பர் / மனைவியோட தோழர் மேலே உங்களுக்கு கிறுக்கு பிடிக்குது... என்ன பண்ணுவீங்க?

View Results

Loading ... Loading ...

முகமூடியையும் சேர்த்து அவிழ்த்து…
எனக்கு தனாவின் மீதிருந்த கோபம் எல்லாம் கறைந்து இப்போது பரிதாபம் தான் வந்தது. நான் அவன் தோளை ஆறுதலாக தொட நானே எதிர்பாராத விதமாக தனஞ்செயா உடைந்து அழுதான். “கார்த்தி! எனக்கு உங்களை எவ்வளவு பிடிக்கும்னா நான் என் பொண்டாட்டியை fuck பண்றப்போ கூட உங்க முகம் தான் மனசுல வருது…. அந்த feelings-ஐ மறைக்க தான் நான் உங்களை target பண்ணி comment அடிக்கிறதுக்கு காரணம்…. இனிமேல் அப்படி பண்ண மாட்டேன். இது வரை பேசுனதுக்காக, ப்ளீஸ் என்னை வெறுத்துடாதீங்க. I am sorry for all those comments” என்றபோது நான் அவனை தோளோடு இறுக்கி அணைத்தேன்.

“தனா! உனக்கு உன் மனைவியை பிடிக்குமா? இல்லை கடமைக்கு வாழுறீங்களா?” – நான்.

“எனக்கு என் ராதான்னா உயிர் கார்த்தி! அவ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது. ஆனா…” தனஞ்செயா விசும்பினான். நான் அவன் தோளை இறுக்கினேன்.

முகமூடியையும் சேர்த்து அவிழ்த்து…
“தனா! முதல்ல நம்மள மாதிரி Gays-ங்க கல்யாணமே பண்ணிக்க கூடாது. அதையும் தாண்டி கல்யாணம் பண்ணிக்கிட்டா நாம நம்ம பொண்டாட்டிங்களுக்கு விசுவாசமா இருக்கனும். ஆனா அப்படி வாழுற வாழ்க்கையிலே நமக்கு தான் மூச்சு முட்டும். நாம நாமளாவும் இருக்க முடியாது… பொய்யா மத்தவங்களாவும் இருக்க முடியாது. எல்லா கல்யாணமான நல்ல Gay male-களுக்கு இருக்குற பிரச்சனை தான் இது.”

“ம்ம்ம்…” தனஞ்செயா ஆமோதிப்பது போல தலையசைத்தான். “நாம நேசிக்கிரவங்களுக்காக நாம உயிரோட இருந்து வாழ்ந்து தான் ஆகனும்… ஆனா என்ன பண்றது? ஆழம் தெரியாம காலை விட்டாச்சு… இப்படி closet-ல இருக்குறது மூச்சு முட்டும்… அதனால தான் நிறைய closet gays மனசு புழுங்கி புழுங்கியே சீக்கிரம் செத்து போயிடுறாங்க…. இந்த மாதிரி சமயத்துல closet-ல இருக்குற நாம தான் நமக்குள்ள we should help each other. அதுக்காக sex தான் தீர்வுன்னு அர்த்தம் இல்லை…. நம்மளோட உணர்ச்சிகளை, குழப்பங்களை, பகிர்ந்துக்கனும்னு நினைக்கிறதை மத்தவங்களோட மனசு விட்டு பேசிக்கனும்…. உனக்காக எப்பவும் நான் இருப்பேன்.” நான் தனஞ்செயாவின் தோளில் கை போட்டேன்.

முகமூடியையும் சேர்த்து அவிழ்த்து…
“Don’t be hard on yourself for what you are… Just accept yourself who you are and move on… அதுவுமில்லாம நம்ம team-ல இருக்குறவங்க எல்லாரும் progressive ஆளுங்க. உன்னோட sexuality-ஐ வச்சு உன்னை judge பண்ண மாட்டாங்க… அதனால உன்னோட real self-ஐ மறைக்க கஷ்டப்படாதே… be yourself ” நான் தனஞ்செயாவின் தோளை இறுக்கியபோது என்னையும் அறியாமல் அவனுடைய நெற்றியில் முத்தம் வைத்தேன். தனஞ்செயா என்னை இடுப்போடு வளைத்து கட்டிக்கொண்டு என் மார்பில் தலை சாய்த்துக்கொண்டான்.

சில நிமிடங்கள் கழித்து நாங்கள் விலகியபோது அவன் முகத்தில் ஒரு தெளிவு. தனஞ்செயாவின் முரட்டு ஆண்மை ததும்பிய முகம் மனம் விட்டு அழுததால் கண்ணும் மூக்கும் சிவந்து அவனது ஆழ்மனதை உறித்து காட்டியது. மீண்டும் அலுவலகத்துக்கு நடக்கும் போது எங்கள் கைகள் மிக இயல்பாக கோர்த்துக்கொண்டது.

3 thoughts on “முகமூடியையும் சேர்த்து அவிழ்த்து…”

    1. Avatar photo
      காதல்ரசிகன்

      நன்றி K!… ஆனால் usual என்பதற்கு ஒரே கதையையே திரும்ப திரும்ப எழுதுவதாக அர்த்தமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top