LGBTQ+ படங்கள் எல்லாமே இளைஞர்கள் மற்றும் 16,17 வயது ஆண்களை கொண்டது, நகைச்சுவையாகவோ அல்லது உனர்வுபூர்வமாகவோ Coming out, Societal acceptance என்பதை மட்டுமே சுற்றி சுற்றி வருவது அலுப்பாக உள்ளது. அவர்களை மட்டும் குறை சொல்லமுடியாது… ஏனென்றால் நம்மூர் காதல் படங்களும் கல்யாணத்தோடு முடிந்துவிடுகின்றனவே. தமிழ் சினிமாவிலும் after marriage காதல் கதைகள் என்றால் அலைபாயுதே, மனசு ரெண்டும் புதுசு என கைவிரல் அளவுக்கு கூட எடுத்து சொல்ல முடியாத எண்ணிக்கையிலேயே உள்ளன.
இது போன்ற சூழலில் இத்தாலிய / துருக்கிய இயக்குநர் Ferzan Ozpetek இயக்கிய The Goddess of Fortune (Italian: La dea fortuna) – 40களின் கடைசிகளில் இருக்கும் gay ஆண்களின் மண வாழ்க்கையை திரையில் பார்ப்பதே கொஞ்சம் refreshing ஆக உள்ளது. சொல்லப்போனால் ஒரு gay kiss கூட இல்லாத LGBT திரைப்படத்தில் நமது lead pair-ஐ நாம் நிஜமான Gay Couple என்று நம்பும் அளவுக்கு ‘யதார்த்தமாக’ உள்ளனர்.
படம் ஒரு Gay livers-களின் திருமண நிச்சயதார்த்தத்தில் ஆரம்பிக்கிறது. அதில் பங்குபெறும் நமது கதாநாயகர்கள் ஆர்துரோ மற்றும் அலெஸ்ஸாண்டிரோ இடையே ஒருவித அசௌகரியம் நிலவுவதை காட்டி அவர்களது வாழ்க்கையில் ஏதோ பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது என்பதை establish செய்துவிடுகிறார் இயக்குனர். அந்த விழாவில் அவர்களுடைய தோழி ஆன்னாமரியா அழைப்பிதழ் இல்லாமல் gatecrash செய்து, தனது குழந்தைகளை அவர்கள் சில நாட்கள் வைத்திருக்கவேண்டும் என்று சொல்கிறாள்.
ஆன்னாமரியா – இவர்கள் இருவருக்கும் பிரியமான தோழி என்பதை அவள் தூங்கிக்கொண்டிருக்கும் ஆர்துரோ மற்றும் அலெஸ்ஸாண்டிரோ நடுவில் வந்து உரிமையாக படுத்துக்கொள்ளும் காட்சியில் தெரிகிறது. ஆன்னாமரியா அலெஸ்ஸாண்டிரோவை ஒருதலையாக காதலித்ததும், அவள் அலெஸ்ஸாண்டிரோவிடம் தன் காதலை சொல்ல வரும்போது அவன் தான் ஒரு gay என்றும், தங்களுடைய common friend ஆன ஆர்துரோவை காதலிப்பதாக சொல்ல, ஆன்னா அவர்களுடைய தோழியாக ஒதுங்கிவிடுகிறாள். கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் ஆன பிறகு அவளுடைய திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிகிறது. தற்போது ஆன்னாவுக்கு உடல்நிலை சரியில்லை. ஆன்னா மரியாவுக்கும் அவளுடைய அம்மாவுக்கும் சுமுகமான உறவு இல்லாததால் அவள் சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்வதற்கு முன்பு குழந்தைகளை ஆர்துரோ மற்றும் அலெஸ்ஸாண்டிரோ தம்பதிகளிடம் விட்டுவிட்டு போகிறாள்.
ஆர்துரோவுக்கும் அலெஸ்ஸாண்டோவுக்கும் நடுவே இடைவெளி அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் ஆர்துரோ வேறொரு ஆணுடன் கள்ளத்தொடர்பில் இருந்து அலெஸ்ஸாண்டிரோவிடம் கையும்களவுமாக பிடிபடுகிறான். குழந்தைகளின் வருகை பிரச்சனையில் புகைந்துக்கொண்டிருக்கும் ஆர்துரோ & அலெஸ்ஸாண்டிரோவின் பிரச்சனைக்குறிய திருமண வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை கொண்டுவருகிறது. துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனளிக்காமல் ஆன்னாமரியா மருத்துவமனையில் இறந்துவிடுகிறாள். ஆர்துரோவும் அலெஸ்ஸாண்டிரோவும் அவள் குழந்தைகளை அவர்களது பாட்டி வீட்டில் கொண்டுவிட பிரயாணம் செய்கிறார்கள். அப்போது இருவரும் ஒன்றாக மனம் விட்டு பேச வாய்ப்பு கிடைக்கிறது.
குழந்தைகளை விட்டுவிட்டு வரும்பொழுது தான் அவர்களுடைய பாட்டி கொடுமைக்காரி என்று தெரியவர, ஆர்துரோவும் அலெஸ்ஸாண்டிரோவும் வீடு புகுந்து அவர்களை தூக்கிக்கொண்டு போகிறார்கள். வழியில் அடுத்த படகு கிடைக்க இரவு முழுவதும் தோணித்துறையில் காத்திருக்கிறார்கள். நடந்தவை நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லதாக இருக்கட்டும் என்று தவறுகளை மன்னித்து குழந்தைகளுடன் புதிய வாழ்க்கையை தொடங்குகிறார்கள்.
இதில் பல காட்சிகள் தான் சொல்ல வந்ததை வெளிப்படையாக சொல்லாமல் உள்ளார்ந்த அர்த்தத்துடன் அழகாக சொல்கின்றன. ஆர்துரோ கையும் களவுமாக மாட்டும் போது அவனை அழைத்துச்செல்ல வரும் அலெஸ்ஸாண்டிரோ அந்த கள்ளக்காதலனிடம் “நீ சும்மா அவனை ஓத்திட்டு இருந்தே… அதுக்காக எனக்கு அறிவுரை சொல்லாதே… நான் கூட இது மாதிரி அப்பப்போ வெளியே பசங்க கூட படுத்திருக்கேன்… ஆனா காதல் ஆர்துரோவோட மட்டும் தான்” என்று சொல்லும் காட்சி கிட்டத்தட்ட அனைத்து gays-களும் ஒத்துக்கொள்ளும் விஷயம். உடல் கவர்ச்சி வேறு காதல் வேறு என்பதை அனுபவம் தான் உணர்த்துகிறது.
பிரச்சனைகள் உச்சத்தில் இருக்கும்போது ஆர்துரோவும், அலெஸ்ஸாண்டிரோவும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கையில் வார்த்தை விளையாட்டில் “sex mood”க்கு வருவதை அவர்களது பார்வையும் சிரிப்பும் அழகாக வெளிப்படுத்தும். படிப்பு முடிந்து குழந்தைகள் இருவரும் அலெஸ்ஸாண்டிரோவுடன் படுத்து தூங்க, ஆர்துரோ வந்து அலெஸ்ஸாண்டிரோவை பார்வையாலேயே தன் அறைக்கு ‘படுக்க’ கூப்பிடும் காட்சியின் erotic தன்மையை உண்மையான உடலுறவு காட்சி கூட கொடுக்க முடியாது.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி
Loading ...
படத்தின் ஆரம்பத்திலும் கடைசியிலும் வரும் ஆன்னாமரியாவின் அம்மா ஓரினச்சேர்க்கையாளர்களை வெறுக்கும் ஒரு சீமாட்டியாக கலக்குகிறார். கொஞ்சம் caricature போல தோன்றினாலும், அவர் போன்ற ஆட்கள் எப்படி அடக்குமுறையை கையாண்டு குழந்தைகளின் மனதில் ஆறாத வடுக்களை உருவாக்குகிறார்கள் என்பதை இயல்பாக காண்பிக்கிறார்கள். படத்தில் ஆர்துரோவும் அலெஸ்ஸாண்டிரோவும் மருத்துவமனையில் ஆன்னாமரியாவை பார்த்துவிட்டு வெளியே வந்து பேசும் ஒரு காட்சி மட்டுமே “melodrama” வகையில் சேர்கிறது. மற்ற காட்சிகள் எல்லாம் உணர்வுபூர்வமாக இருந்தாலும் இயல்பாக கடத்தப்பட்டுள்ளது அழகு.
முதல் முறையாக Ferzan Ozeptek படத்தில் குழந்தைகள் நடித்துள்ளனர். அவர்களை வைத்து அதிகப்பிரசங்கித்தனமாக நகைச்சுவை செய்யாமல் அல்லது மனதை பிழியும் சோகக்காட்சிகள் எழுதாமல், குழந்தைகளை குழந்தைகளாகவே வைத்து இயல்பாக காட்சிப்படுத்தியுள்ளார்.
எனக்கு இந்த படம் மிகவும் பிடித்திருந்தது. நான் முன்பே சொன்னது போல “come out” செய்வதோடு நிறுத்தாமல், நடுத்தர வயது gay தம்பதியின் வாழ்க்கையை, தடுமாற்றத்தை பிரச்சனைகளை, மற்ற LGBTQ+ படங்களை போல dark & depressing ஆக இல்லாமல் இயல்பாக சொல்லியுள்ளது தான் இந்த “The Goddess of Fortune”-ன் தனித்துவம்.
இது போல Gay couple-களின் திருமண வாழ்க்கையை பற்றிய கதைகள் தெரிந்தால் எனக்கு தெரிவிக்கவும். பார்க்கிறேன்.
<--- முற்றும் --->
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்:
Alternate Blogger URL: