I hate porn that starts off fucking... I need to know why they are fucking சேரும் இடத்தை போல போகும் பயணமும் சுவாரசியமே...
Click for large image
Operation Hyacinth – இந்த படத்தை Gay-களை வெறுக்கும் homophobic ஆட்கள் பார்த்தால் கூட இதை One of the finest thrillers of recent times என்று சொல்வார்கள். படம் அந்த அளவுக்கு விறுவிறு ரகம். இது போலந்து நாட்டில் 1985-1988 ஆண்டுகளுக்கு இடையே நடந்த homosexuals-க்கு எதிரான அரசாங்கத்தின் அநியாயமான வெறுப்புணர்வு கொண்ட “Operation Hyacinth”-ஐ அடிப்படையாக கொண்ட படம். செம்பருத்தி (Hyacinth) பூவை அமெரிக்காவில் “homosexuals”-களை இழிவான முறையில் குறிப்பிடுவார்களாம்.
போலிஷ் காவல்துறை ஓரினச்சேர்கையாளர்களை தேடிப்பிடித்து அவர்களிடம் “Declaration of Homosexuality”-ல் கையெழுத்து வாங்கி, அவர்களை வேலை செய்யும் இடத்தில் அடையாளத்தை வெளியிட்டு விடுவோம் என்று blackmail செய்து, ஓரினச்சேர்க்கை குறித்த அந்தரங்க தகவல்களை கேட்டு மன உளைச்சல் கொடுப்பது என்று அவர்கள் வாழ்க்கையை நரகமாக்கிய வரலாற்றை பார்வையாளர்கள் முன்பு கொண்டுவருகிறது இந்த படம்.
Click for large image
போலந்து நாட்டில் AIDS மற்றும் விபச்சாரத்தை கட்டுக்குள் கொண்டுவர என்ற போர்வையில் துவங்கப்பட்ட இந்த operation, மறைமுகமாக homosexuals-களின் மனதில் பயத்தை உருவாக்கி, அவர்களை நடைபிணமாக்க உபயோகப்படுத்தப்பட்டதாம். 1985 முதல் 1987 வரை போலந்து அரசாங்கம் கிட்டத்தட்ட 11000 ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்த Declaration-களை பெற்று, அந்த தகவல்களை database-ல் ஏற்றியது. இந்த Operation Hyacinth 1987-ல் நிறுத்தப்பட்டாலும், 1988 ஆண்டு வரை இந்த file-கள் Database-ல் ஏற்றப்பட்டனவாம். இந்த விஷயம் Western mass media-ல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதும் போலந்து அரசாங்கம் அப்படி ஒரு Operation-ஏ நடக்கவில்லை என்று மறுத்தது.
Click for large image
Operation Hyacinth கதை இது தான். போலந்து காவல்துறையில் வேலை செய்யும் Edward Mrozowski என்னும் அதிகாரி தன் மகன் Robert Mrozowski -ஐ திறமையாக வழிநடத்தி அவனை வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக groom செய்கிறார். Robert Mrozowski-க்கு அதே காவல் துறையில் வேலை செய்யும் Halinka என்ற அதிகாரியுடன் காதல் இருக்கிறது. அவர்களது காதலை Robert-ன் பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டு Halinka-வை தங்களுடைய Dinner-களில், Get together-களில் இணைத்து, அவளை தங்கள் குடும்பத்து உறுப்பினராக ஏற்றுக்கொள்கிறார்கள். காதலர்களான Robert-ம், Halinka-வும் நிறைய உடலுறவும், அடுத்தவரை அம்மணமாக படம் எடுக்க அனுமதிக்கும் அளவுக்கு அந்நியோன்யமாக இருக்கிறார்கள். இந்த சமயத்தில் Robert Mrozowski-க்கு gay-க்களை கண்டுபிடிக்கும் assignment வருகிறது.
ஓரிரவு Robert சாதாரண உடையில் Gays-களின் cruising spot என்று சந்தேகப்படும் கழிவறை ஒன்றில் நுழைய, அப்போது போலீஸ் வந்துவிட்டதாக அனைவரும் சிதறி ஓடுகிறார்கள். அப்போது Robert-ஐயும் சக gay என்று நினைத்து Arek என்னும் இளைஞன் Robert-ன் கையை பிடித்து இழுத்து செல்கிறான். அந்த நேரத்தில் ஒரு Gay-ன் மரணத்தை தொடர்ந்து போலந்து காவல்துறை Kamil என்னும் ஒரு ஓரினச்சேர்க்கையாளரை கைது செய்து, சித்ரவதை செய்து ஒப்புதல் வாக்குமூலம் வாங்குகிறது. Robert-ன் team-க்கு வந்த அந்த Case-ல் கைது செய்யப்பட்ட Kamil சிறையிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்துக்கொள்கிறார். இந்த சம்பவத்தால் திடுக்கிடும் Robert குற்ற உணர்ச்சியில் மூடப்பட்ட அந்த case-ஐ தனிப்பட்ட முறையில் துப்பறிகிறான்.
Click for large image
இம்முறை தன்னை காப்பாற்றிய Arek-ஐ துருப்பு சீட்டாக உபயோகித்து Robert அந்த நகரத்து ஓரினச்சேர்க்கையாளர்களின் network-க்கில் இணைகிறான். ஒரு Villa-வில் நடக்கும் Gay party ஒன்றில் கலந்துக்கொள்ளும் Robert போலந்து கேக்களின் உலகத்துக்கு உள்ளே சென்று வியக்கிறான். அதில் சாமானியர்கள் மட்டுமல்லாமல் பேராசிரியர்கள் போன்ற மேதைகளும் இருப்பதை பார்த்து Gays-க்களும் அவனை போல சராசரி மனிதர்கள் என்று normalise ஆகிறான். ஒரு கட்டத்தில் Arek அவனை முத்தமிட (liplocking எல்லாம் இல்லை… வெறும் peck முத்தம் தான்) Robert-க்கு தன்னுடைய sexual identity-ஐ குறித்த குழப்பம் வருகிறது.
Click for large image
அந்த இரவில் Arek-கை காப்பாற்ற அவனை பாதுகாப்பாக மறைத்து தன் வீட்டுக்கு அழைத்து வரும் Robert, எதிர்பாராமல் Arek-, முதல் முறையாக ஆணுடன் உடலுறவு கொள்கிறான். இதை அறிந்துக்கொள்ளும் Robert-ன் தந்தை, Arek தன் மகனை gay ஆக்கிவிட்டான் என்ற கோபத்தில் அவனை கைது செய்து Declaration of Homosexuality-ல் கையெழுத்து வாங்க முயற்சிக்கிறார். அந்த வேலையை Robert-ஐ வைத்தே நடத்தி அவனை எச்சரிக்க முயற்சிக்கிறார். ஆனால் Arek-க்கு பதிலாக Robert அந்த Declaration of Homosexuality-ல் கையெழுத்து போட்டு, அவரை வெறுப்பேற்றி, Arek-ஐ வெளியேற சொல்கிறான்.
Click for large image
வீட்டுக்கு வந்த Robert தன்னையும் ஒரு gay-யாக உணர்கிறான். அவனது குழப்பத்தை உணரும் அவன் அம்மா ராபர்ட்டை அவன் மனதுக்கு உண்மையாக இருக்குமாறு அறிவுறுத்துகிறார். இந்நேரத்தில் Robert-க்கு காவல்துறையின் Academy-ல் Graduate செய்கிறான். அந்த விழாவில் Robert-ன் தந்தை Arek-ஐ வேறொரு அதிகாரி மூலமாக கொல்ல ஏற்பாடு செய்வதை தெரிந்துக்கொண்டு, கடைசியில் Arek-கை காப்பாற்றுவதுடன் படம் முடிகிறது.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி
Loading ...
Click for large image
இயக்குனர் Piotr Domalewski-ம் திரைக்கதை ஆசிரியர் Marcin Ciastoń-ம் இந்த படத்தை “Operation Hyacinth”-ஐ ஆவணப்படுத்தும் முயற்சியாக மட்டுமல்லாமல், போலந்து காவல்துறையின் Police Procedural-ஐ அடிப்படையாக கொண்ட thriller ஆக உருவாகியுள்ளார்கள். அதற்காக ‘ஹரி’ படம் போல சத்தமாக, அதிரும் பின்னணி இசை, racy camera works, jump cuts-கள் என்றெல்லம் எதிர்பார்க்காதீர்கள். ஒளிப்பதிவளர் Piotr Sobocinski இரவின் இருளையும், அசைவற்ற stoic தன்மையையும், neon விளக்கொளிகளையும் கலந்து ஓவியம் போன்ற frame-களில் நம்மையும் அந்த இடங்களுக்கே இழுத்துப்போகிறார். 100 நிமிடங்களில் நம்மை முழுமையாக Robert-ஆக உணர வைக்கிறார்கள். சொல்லப்போனால் Robert-ன் ஒவ்வொரு அசைவையும் நாம் இயக்குவதாக தோன்றும் அளவுக்கு ஒன்றிப்போகிறோம்.
Click for large image
போலந்து நாட்டு நடிகர்களை பற்றி நமக்கு எதுவும் தெரியாது என்பது நல்லதாகிவிடுகிறது. நாம் அவர்களை வெறும் கதாபாத்திரங்களாக பார்த்து ஒன்றிப்போகிறோம். Robert ஆக நடித்திருக்கும் Tomasz Ziętek-ன் சராசரிக்கும் கீழான ஒடிசலான தேகம் ஆரம்பத்தில் கொஞ்சம் உறுத்தலாக இருந்தாலும் படம் செல்ல செல்ல அந்த அற்புதமான முகபாவங்கள் மற்றும் உடல்மொழியின் மூலம் நாமும் அவராகவே தோன்றும் அளவுக்கு impress செய்கிறார். குறிப்பாக குற்ற உணர்ச்சி காட்சிகளில்… அதே சமயம் காதலியுடன் உடலுறவு கொள்ளும் காட்சியில் அவ்வளவு இயல்பாக பின்னி பெடலெடுக்கிறார். Arek-குடன் உடலுறவு கொள்ளும் காட்சியில் கவிதையாக ஜொலிக்கிறார். Restaurant-ல் Arek-குடன் flirt செய்யும் போது Tomaz Zietek உண்மையிலேயே உள்ளுக்குள் அப்படி தான் flirtacious-ஆக feel செய்கிறாரா என்று தோன்றும் அளவுக்கு அழகு…
Click for large image
அவரது காதலி Halinka-வாக நடிக்கும் Adrianna Chlebicka அழகாக இருக்கிறார். கேமிரா முன்பு படு இயல்பாக முழு நிர்வாணமாகிறார். ஆனால் இந்த ஆண்களின் கதைக்களத்தில் பெரிதாக scope இல்லாமல் கிடைத்தவரைக்கும் score செய்து நம்மை ஈர்க்கிறார். Robert கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கும் அப்பாவி Arek-காக Hubert Milkowski நம் மனதை அள்ளுகிறார். அந்த குழந்தை முகமும், vulnerabillity-ம் கடைசியில் நம்மை அவருடைய பாதுகாப்புக்காக வேண்டிக்கொள்ள வைக்கிறார்.
Click for large image
நான் முன்பே சொன்னது போல – LGBT வெறுப்பாளர்கள் கூட இந்த படத்தை வெறும் thriller என்று பார்த்தால் அவர்களுக்கும் கூட பிடிக்கும். இப்போதைக்கு முக்கியமான விஷயத்துக்கு வருவோம் – இது Homosexuals-க்களை சுற்றி பின்னப்பட்ட கதை என்றாலும், 3 நிமிடம் ஓடும் ஒரே ஒரு உணர்ச்சிப்பூர்வமான simulated gay sex காட்சி மட்டும் தான் உள்ளது. சொல்லப்போனால் இந்த LGBT படத்தில் gay sex காட்சியை விட Robert-க்கும் அவன் காதலி Halinka-க்கும் நடுவே நடக்கும் sexual intercourse காட்சி தான் lively-ஆக உள்ளது. அதனால் ‘வேற மாதிரி’ எதிர்பார்ப்புடன் இந்த படத்தை பார்க்க உட்காராதீர்கள். நிச்சயம் ஏமாந்து போவீர்கள்.
Click for large image
இந்த படம் வெறும் பொழுதுபோக்கு என்பதை தாண்டி மற்றொரு விதத்தில் கூட முக்கியமானது. அது சமூகத்துக்கு எதிரான சமுதாய மற்றும் அரசு இயந்திரங்கள் கட்டவிழ்த்துவிட்ட அநீதிகளை அடுத்த தலைமுறைக்கு தெரிவிக்க பொழுதுபோக்குடன் செய்யப்பட்ட documentation-ம் கூட. இது போன்ற ஒரு அரசாங்க முயற்சி அமெரிக்காவில் 1940களின் பிற்பகுதியில் – Lavender Scare அல்லது Red Scare, மற்றும் McCarthyism – Second Red Scare என்ற பெயரில் நடந்தது. இந்த McCarthyism-ஐ அடிப்படையாக கொண்டு 2023-ல் Fellow Travelers என்ற mini-series-ம் Netflix-ல் வெளியானது.