முன் கதை சுருக்கம்... |
---|
ரீனாவின் முன்பு தான் அவமானப்படுத்தப்பட்டதாக ஹரீஷ் பொறுமுகிறான். மீண்டும் முழு வாடகை கொடுக்கும் அளவுக்கு சம்பாதித்து சபாவை வீட்டை விட்டு வெளியேற்றவேண்டும் என்ற வெறியில் சபா உடல் உழைப்பு தேவைப்படும் வேலைக்கு செல்கிறான். அவனுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட, சபா அவனை Doctor-டம் அழைத்து செல்கிறான். |
“ஏண்டா இவ்வளவு serious issue-னு சொல்லியிருந்தா நான் மட்டுமாச்சும் வந்திருபேன் இல்லை?” ரித்திகா படுக்கையில் இருந்த ஹரீஷின் தலையை கோதினாளா இல்லை தட்டினாளா என்று தெரியாதபடிக்கு ஏதோ ஒன்று செய்தாள். பக்கத்தில் இருந்த சபாவின் கையை பிடித்துக்கொண்டு “Thanks a lot சபா! உன்னோட Timely Help-க்கு ரொம்ப நன்றி” என்று கண்ணில் நன்றியுணர்ச்சி பளபளக்க ரித்திகா சொன்னபோது “சீ! சும்மா இரு ரித்தி… Roommate-க்கு இது கூட செய்யாம என்ன?” என்று அவளை தோளோடு அணைத்துக்கொண்டான். ஹரீஷுக்கு உடம்புக்கு முடியாமல் போனபோது ரித்திகா அவள் கணவன் மற்றும் மாமனார் மாமியாரோடு Glassgow மற்றும் Iceland-க்கு சுற்றுலா போயிருந்தார்கள். ஹரீஷுக்கு Deep Freezer Room-ல் வேலை செய்தபோது நிறைய பனி மற்றும் ammonia gas-வை சுவாசித்திருந்ததால் அவனது மூச்சுக்குழல் பாதிக்கப்பட்டிருந்தது. இரண்டு நாள் ஹாஸ்பிடலில் வைத்துவிட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டதும் சபா ஹரீஷை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டான். இன்று லண்டன் திரும்பிய ரித்திகா விஷயம் கேள்விப்பட்டு பதற்றத்தோடு வந்திருக்கிறாள்.
கிளம்புவதற்கு அறிகுறியாக ரித்திகா ஒரு சின்ன துள்ளலோடு எழுந்து ஹரீஷின் wardrobe-ல் இருந்து சில துணிகளை எடுத்து duffle bag-ல் அடைத்தபடி “மூஞ்சி கழுவிட்டு கிளம்புடா… உடம்பு தேறுற வரைக்கும் நம்ம வீட்டுல வந்து இரு” என்றபடி தன் காரியத்தை தொடர்ந்தாள். ஹரீஷிடம் இருந்து எதுவும் பதில் வரவில்லை… ரித்திகா திரும்பி பார்க்க, ஹரீஷ் கட்டிலில் இருந்து அசையாமல் தலை குணிந்தபடி உட்கார்ந்திருந்தான்.
ரித்திகா ஹரீஷின் தலையை தடவியபடி “எனக்கு தெரியும்… உனக்கு என் மாமனார் மாமியார் கூட comfortable-ஆ இல்லைன்னு… ஆனா என்னடா பண்றது? உன்னை இப்படி விட்டு நான் அங்கேயும் இங்கேயுமா அல்லாட முடியுமா? அவங்க ஏதாச்சும் தொன தொனன்னு சொன்னாங்கன்னா அதை கண்டுக்காத… ப்ளீஸ்டா” என்று ஹரீஷின் தாடையை பிடித்து செல்லமாக உயர்த்தினாள்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
“ரித்தி! ஹரீஷை ஏன் இன்னும் அதிகமா சங்கடப்படுத்துறே? அவனை நான் பார்த்துக்குறேன்… நீ அவன் கிட்டே ஒரு வேலை கிடைக்கிற வரைக்கும் பொறுமையா இருக்க சொல்லு… இந்த Tradie வேலையெல்லாம் அவனுக்கு ஒத்து வராது. ஹரீஷுக்கு வேலை கிடைக்கிற வரைக்கும் வாடகையும், Groceries-ம் நான் வாங்கி போட்டுடுறேன்…. நிச்சயமா நான் கணக்கு வச்சிட்டு அவனுக்கு வேலை கிடைச்சதும் கணக்கு போட்டு திரும்ப வசூல் பண்ணிடுவேன்… ஒவ்வொரு பவுண்டும் எனக்கு முக்கியம்” சபா ரித்திகாவின் கையில் இருந்த duffle bag-ஐ வாங்கியபடி சொல்ல, அவள் முகத்தில் கொஞ்சம் நிம்மதி படர்ந்தது.
சாப்பிட்டு முடித்த ஹரீஷ் சாப்பிட்ட தட்டிலேயே கொஞ்சம் போல தண்ணீரை உபயோகித்து கை கழுவ, சபா அந்த தட்டை வாங்கிக்கொண்டு கிச்சனுக்கு நடந்தான். படுக்கையில் படுத்திருந்த ஹரீஷ் சபாவை பார்த்த பார்வையில் அவனை பற்றிய பழைய வெறுப்புகள் எல்லாம் காணாமல் போயிருந்தன. ஹரீஷ் தான் Dining table-க்கு வந்து சாப்பிடுவதாக சொன்னாலும் சபா வலுக்கட்டாயமாக படுக்கையிலேயே சாப்பாட்டை கொண்டு வந்து கொடுத்தான். சபா வழக்கம் போல சட்டை போடாமல் தன் கட்டான மேலுடம்பை காட்டியடி வீட்டில் வளைய வந்தான். ஏற்கனவே போட்டுக்கொண்ட ஒப்பந்தப்படி shorts போட்டுக்கொண்டிருக்கிறான். ஆனால் அதையும் அவனது சூத்து முழுசாக நிறைத்திருந்ததால் துணியில் சுருக்கம் என்பதே இல்லாமல் shorts துணி கிட்டத்தட்ட சபாவின் சூத்து தோல் போலவே shape-ஆக இருந்தது. சபாவின் பெருத்த தொடைகளை பார்க்கும் போதெல்லாம் ஹரீஷுக்கு தன் உடம்பின் மீது ஒரு தாழ்வு மனப்பான்மை வருவதை தடுக்க முடியாமல் தவித்தான்.
சபா வந்து கட்டிலில் ஹரீஷின் முகம் பார்த்தபடி எதிரில் உட்கார்ந்தான். “என்ன champ? இப்போ எப்படி இருக்கு? நாளைக்கு போய் திரும்ப மூட்டை தூக்குற அளவுக்கு தெம்பா இருக்கியா?” என்றபடி நெருங்கி வந்து தன் விரல்களை ஹரீஷின் நெற்றியில் வைத்துப்பார்த்தான். ஹரீஷின் கண்கள் சபாவின் கல் மார்பில் குத்திட்டு நின்றது. அவன் பார்ப்பதை சபாவும் பார்த்தான். சபா குறும்பாக ஹரீஷின் கண்களை ஊடுருவி பார்த்தபடி வேண்டுமென்றே தன் மார்பை ஒவ்வொரு பக்கமும் தனித்தனியாக புடைக்க செய்து விளையாட்டு காட்ட, ஹரீஷ் தன் கையை நீட்டி அவன் மார்பை தொட்டுப்பார்த்தான்… சபா கவர்ச்சியாக சிரிக்க, ஹரீஷ் தன்னை அறியாமலேயே அவனது செழுத்த மார்பை தடவ ஆரம்பித்தான்.
“சபா! உன் உடம்புல இருக்குற muscle mass-க்கு உன்னை அடிச்சு போட்டா ஒரு ஊரே ஒரு வாரத்துக்கு வச்சு சாப்பிடலாம் போல… கும்முன்னு உடம்பை ஏத்தி வச்சிருக்கே…” என்று ஹரீஷ் சொல்ல, சபா தன் நெற்றியை ஹரீஷின் நெற்றியோடு மோதி “சீ! போடா..” என்று சிரித்தான்.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
Loading ... |
“சபா! உன்னோட glamour-க்கு நீ சும்மா ஒரு matrimony profile create பண்ணி உன்னோட passport size photo போட்டாலே பொண்ணுங்க கூட்டம் அலைமோதுமே… ஆனா ஏன் நீ marriage வேணாங்குறே? என்னை அவ்வளவு நல்லா பார்த்துக்குறே…. உன்னையும் அதுபோல love பண்ண, உனக்கு ஒரு partner, relationship வேணும்னு தோணலையா?” ஹரீஷ் பேச ஆரம்பித்தபோது தானாகவே அவன் குரல் தணிய ஆரம்பித்தது.
இது நாம ஏற்கனவே பேசுனது தான் ஹரீஷ்… தயிர் சாதம் சாப்பிடுறவனுக்கு கறி சோறை பார்த்தா குமட்டும்… எனக்கும் பொண்ணுங்களை erotic-ஆ நினைச்சு பார்த்தா அப்படி தான்… I am comfortable in my own sexuality…” என்று ஹரீஷின் கன்னத்தை தட்டிவிட்டு எழுந்தான்.
“சரி சாம்பியன்… நீ நல்லா தூங்கு… எனக்கு office வேலை இருக்கு… Cloud technology வந்ததுலே இருந்து எங்கே இருந்தாலும் வேலை செஞ்சாகனும்னு ஆயிடுச்சு… நான் ஹால்ல உட்கார்ந்து வேலை பாக்குறேன்… Good night” சபா அறையின் விளக்கை அணைத்துவிட்டு கதவை சார்த்த அங்கே இருட்டு படர்ந்தது. ஹரீஷ் சரிந்து படுத்தான். இருட்டுக்கு கண்கள் பழகியதும் அதுவரை ஹரீஷின் கண்களில் தேங்கியிருந்த கொஞ்சநஞ்ச தூக்கமும் களைந்து போனது. கதவுக்கு அப்பால் வேலை செய்யும் ஹரீஷை கட்டிக்கொண்டு அவன் தோளில் சாய்ந்து தூங்கவேண்டும் போல இருந்தது. ஆனால் ஹரீஷின் மனம் “அவன் நம்மை சாப்பிட கூட கட்டிலை விட்டு இறங்க விட மாட்டேங்குறான்… இப்போ மட்டும் அனுமதிக்கப்போறானா?” என்று அடக்க, ஹரீஷ் கண்களை கஷ்டப்பட்டு தூங்க முயற்சி செய்தான்.
ஹரீஷின் முயற்சிக்கு பலனாக, ஒருவழியாக தூக்கம் ஹரீஷை மெல்ல மெல்ல ஆட்கொள்ள ஆரம்பிக்க, திடீரென்று சத்தமில்லாமல் கதவு திறக்கப்படுவதை ஹரீஷால் உணர முடிந்தது. தங்கள் அறைக்குள் இருக்கும் washroom-க்கு சபா செல்வதையும், மூத்திரம் அடிக்கும் சத்தமும் அதை தொடர்ந்த closet-ல் flush செய்யப்பட்டு தண்ணீர் பொங்கும் சத்தமும் ஹரீஷின் காதுகளில் விழுந்தது. விளக்கை அணைத்துவிட்டு, தன் shorts-லேயே ஈர கையை துடைத்துக்கொண்டு ஹரீஷ் அறையின் வாசலை நோக்கி நடந்தான். ஹரீஷ் இவற்றை எல்லாம் கனவில் நடப்பது போல பார்த்துக்கொண்டிருக்க, சபா திரும்பி கட்டிலை நோக்கி நடந்து வந்தான்.
ஹரீஷின் முட்டிக்கால் வரைக்குமே இருந்த போர்வையை இழுத்து ஹரீஷின் கழுத்து வரைக்கும் போர்த்தி ஹரீஷின் உடம்பை முழுசாக மூடினான். சபா ஹரீஷை அன்பாக பார்த்தபடி நின்று தன் விரல்களால் நளினமாக ஹரீஷின் தலைமுடியை செல்லமாக கலைத்தான். அடுத்து ஹரீஷ் எதிர்பார்க்காதபடிக்கு குணிந்து ஹரீஷின் நெற்றியில் ஒரு நொடி நீளத்துக்கு ஈரமுத்தம் வைத்துவிட்டு நிதானமாக அறையின் வாசலை நோக்கி நடந்தான். இவை அனைத்தும் கிட்டத்தட்ட ஒரு நிமிடத்துக்கு உள்ளேயே நடந்து முடிந்துவிட, ஹரீஷுக்கு நடந்தது கனவா இல்லை நிஜமா என்று உணர்வதற்கே நேரம் பிடித்தது. சபா தான் தூங்கும்போது தன் தலையை கலைப்பது ஏற்கனவே நடந்த விஷயம் தான் என்றாலும், இன்று சபாவின் முத்தம் ஹரீஷை சலனப்படுத்தியது. இந்த களேபரத்தில் ஹரீஷின் தூக்கம் மீண்டும் மலையேறிவிட, ஹரீஷ் ஒருக்களித்து படுக்கையில் அவன் மனதில் ஏதோ சொல்ல தெரியாத உணர்ச்சி நிறைந்திருந்தது.
ஹாலில் YouTube-ல் பாட்டுப்போட்டுக்கொண்டு சபா வேலை செய்துக்கொண்டிருந்தான். அதில் YouTube Mix playlist-ல் அடுத்த பாடலாக தேவாவின் இசையில் “குஷி” படத்தில் ஜோதிகா சாதனா சர்கம்-ன் குரலில் “யார் சொல்வதோ.. யார் சொல்வதோ?” என்று பாட ஆரம்பிக்க, திடீரென்று ஹரீஷுக்கு சபா விஜய்யாக தெரிந்தான். சந்தோஷத்தில் புரண்டு புரண்டு படுத்தாலும் கடைசியில் ஹரீஷ் எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியவைல்லை.
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 12/04/2019
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2019/04/08.html
Feedback |
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
கதை எப்படி இருக்கு? |
Picture of the day |
---|