முன் கதை சுருக்கம்... |
---|
அந்த நிகழ்ச்சிக்கு பிறகு சபா லண்டனில் இருந்து தூரமாக உள்ள Leads-க்கு வேலை தேடி போவதாக சொல்ல, ஹரீஷ் அவன் பிரியப்போவதை நினைத்து வருத்தப்படுகிறான். தனது வருத்தத்தை Redditt-ல் பதிவாக போட, ஒரு பயணாளரின் பதில் அவனுக்கு தெளிவை உண்டாக்குகிறது. |
“ரித்தி என் கிட்டே சபா பத்தின உன்னோட dilemma பத்தி, நீ போட்ட Redditt post-ஐ பத்தி நிறைய பேசினா… அவ சொன்னதுக்கப்புறம் நானும் அதை படிச்சேன். அதனால தான் அதை பத்தி உன் கிட்டே பேசலாம்னு நினைச்சு call பண்ணினேன்”…
ஹரீஷ் எதுவும் பதில் சொல்வான் என்று எதிர்பார்க்காமலேயே ரீனா மேலும் தொடர்ந்தாள்.
.
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts |
---|
அது என்ன ரீனா…?” ஹரீஷ் லேசாக நடுங்கினான்.
“சினிமாவுல வர்ற மாதிரி ஒவ்வொரு தடவை நீ சபா கூட சண்டை போடுறப்பவும் உன் மனசு உள்ளுக்குள்ளே அந்த சண்டையை enjoy பண்ணி, romanticise பண்ணி… உன்னையும் அறியமலேயே உனக்குள்ளே அவன் மேலே காதல் வர வச்சிருக்கு… சினிமாவுல பின்னாடியே வந்து socially unacceptable- Stalking, தொந்தரவு பண்ற hero மேலே heroine-க்கு காதல் வர்றது மாதிரி… ஆனா உன்னால அதை உணர முடியலை… இப்போ அவன் உன்னை விட்டு போயிடுவானோன்னு பயம் வந்ததும் உள்ளுக்குள்ளே புதைஞ்சு கிடந்த காதல் இப்போ resurface மேலே ஆகிட்டு இருக்கு. I beleive that you had fallen in love with him…”
“ரீனா…. ஆனா நான் Gay இல்லை. உனக்கே தெரியும் நான் கட்டில்ல உன்னை எப்படி பரவசப்படுத்தி இருக்கேன்னு… நான் எப்படி Gay ஆகமுடியும்?”
“பேபி! கட்டில்ல ஒருத்தரை பரவசப்படுத்துறதுங்குறது technique தான். யாரை எங்கே, எப்படி தொட்டா அடுத்தவங்க கிளர்ச்சி அடைவாங்கன்னு sex partner-ஓட human anatomy-யை நல்லா தெரிஞ்சுக்கிட்டா யார் யாரை வேணும்னாலும் bed-ல அசத்தலாம். It comes with practice and observation. உனக்கு உன் கூட படுத்த பொண்ணுங்களோட உடம்போட நுணுக்கம் தெரிஞ்சிருக்கு… அது தான் நீ என்னையும் மத்த பொண்ணுங்களையும் கட்டில்ல திணற அடிச்சதுக்கு காரணம்.”
மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி |
---|
Loading ... |
“ம்ம்ம்…”
“ஆனா Sexuality-ங்குறது எல்லாரும் நினைக்கிற மாதிரி வெறும் உடம்பு சம்பந்தப்பட்டது இல்லை. அதுல முதல்ல மனசு தான் வரும். அதோட extension-ஆ தான் உடம்பால approach பண்ற தைரியம் வரும். நீ உலகத்துக்கு முன்னாடி நான் பொண்ணுங்களையும் படுக்கையிலே satisfy பண்ணுவேன் அதனால் நான் bisexual-ன்னு சால்ஜாப்பு சொல்லிக்கிட்டாலும், மனசை பொறுத்தவரைக்கும் நீ Gay தான் sexuality-ல. அதனால தான் நாம சில வருஷங்களா sex வச்சுக்கிட்டு இருந்தாலும் உனக்கு என் மேலே காதலோ இல்லை ஈடுபாடோ வரலை…”
“ரீனா! நீ Canada போறேன்னு சொன்னப்ப கூட நான் உன்னை போக வேண்டாம்னு சொல்லலைன்னு பழி தீர்த்துக்குறியா?” ஹரீஷ் நடுங்கினான்.
“பேபி! பழிவாங்குறதுக்கு நான் உன்னை வெறுக்குறேனா என்ன? நான் இன்னும் உன்னை love பண்றேன்… will love you forever. ஆனா உன்னை பத்தின என்னோட observation சுத்தமான unbiased opinion.”
“ம்ம்ம்…” ஹரீஷின் குரல் சுரத்தே இல்லாமல் ஒலித்தது.
“சரி! அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு எல்லாத்தையும் சொல்லேன்… உன்னோட Redditt post-ல அந்த incident-ஓட finer details எதுவும் இல்லை.” – ரீனா.
ஹரீஷ் Michael-ஐ Airport-ல் drop off செய்வதற்காக சபா தன்னை அழைத்ததில் இருந்து கடைசியில் சபா கோபத்தோடு வீட்டை விட்டு அன்றிரவு சென்றது வரைக்கும் எல்லாவற்ரையும் ஒரு வார்த்தை கூட விடாமல் முழுசாக சொன்னான். கடைசியில் சபாவுக்கு Leeds based job-க்கு வந்த interview call எப்படி தன்னை உலுக்கிப்போட்டது என்று முடித்தான்.
“பேபி! அவன் ஏன் லண்டனை விட்டுட்டு Leeds-க்கு போறான்னு உனக்கு இன்னுமா புரியலை?”
“ஏன்?”
“அவன் உன்னை love பண்ண ஆரம்பிச்சிருக்கான்…. ஆனா நீ தான் ஒரு Gay இல்லைன்னு அவனுக்கு impression குடுத்திருக்கே. உன் பக்கத்துல தன்னோட oneside love-ஐ மனசுக்குள்ளே வச்சு புழுங்கிக்கிட்டு இருக்க முடியாம அவன் உன்னை விட்டு தூரமா Leeds-க்கு போறான்… சட்டுன்னு நினைச்ச உடனே வந்து பார்க்க முடியாத தூரத்துக்கு. இது எவ்வளவு obvious-ஆ இருக்கு. இது கூட உனக்கு புரியலையாடா?”
ஹரீஷ் திகைத்துப் போனான் “எப்படி ரீனா அவ்வளவு sure-ஆ சொல்றே?
.
“ம்ம்ம்…” ஹரீஷுக்கு பேச்சு வரவில்லை. அன்று இரவு நடந்ததை மனதுக்குள் செய்து பார்த்தபோது பெருமூச்சு விட்டபடி மௌனமாக நின்றுக்கொண்டிருந்த சபாவின் கண்ணில் இருந்த வலி இப்போது தெளிவாக புலப்பட்டது. அதை தொடர்ந்து சபா தளர்வாக வெளியே நடந்து சென்றதற்கான காரணம் ஹரீஷுக்கு புரிந்தது.
“சரி பேபி! நீ பத்திரமா வீட்டுக்கு போயிட்டு ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடி உன் கண்ணை மூடிக்கிட்டு சபா வேற யாரையோ… நீ அவன் கூட sex sessions-ல பார்த்த யாரையாச்சும் அவன் smooch பண்ற மாதிரி நினைச்சு பாரு. ஒருவேளை உனக்கு அது எந்த ஒரு சலனத்தையும் ஏற்படுத்தலைன்னா நீ அவனை love பண்ணலைன்னு உறுதியாயிடும். சரியா?”
“ம்ம்…”
“சரி பேபி! நேரமாச்சு… பத்திரமா வீட்டுக்கு போ. எதுவா இருந்தாலும் யோசிச்சு ஒரு நல்ல முடிவு எடு… உன்னை support பண்றதுக்கு நாங்க எல்லாரும் இருக்கோம். Take care! Bye!”
“Bye ரீனா..!” அழைப்பு துண்டிக்கப்பட, ஹரீஷின் மனதில் குழப்பம் அதிகம் ஆனது.
ஏன் வீட்டுக்கு போய் தூங்கும் வரைக்கும் காத்திருப்பானேன்?” ஹரீஷ் கொஞ்சம் பதற்றத்தோடு steering wheel-ஐ இறுக்க பிடித்தபடி கண்ணை மூடி சபா Michael-ஐ கிஸ்ஸடிப்பதாக கற்பனை செய்து பார்க்க முயற்சிக்க, ஹரீஷின் கற்பனையில் கிஸ்ஸடித்து முடித்து இருவரும் விலகிய போது தான் ஹரீஷ் நன்றாக கவனித்தான் – சபா கிஸ்ஸடித்தது ஹரீஷை. Michael-ஐ இல்லை. கண்கள் மூடிய நிலையில் ஹரீஷின் முகத்தில் தோன்றிய புன்னகை அடங்கவே இல்லை.
ஹரீஷ் smartphone-ஐ எடுத்து Redditt app-ல் login செய்தான். தான் எழுதிய post-க்கு சென்று கடைசி பயனாளரின் comment-க்கு பதிலை அரக்கபரக்க type செய்தான். Post செய்து முடித்ததும் தன் பதிலை மீண்டும் படித்தபோது ஹரீஷின் மனது தெளிவாகியிருந்தது.
"சபா ஆண்களை கிஸ்ஸடிப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை... அந்த ஆண் நானாக மட்டும் இருக்கும் பட்சத்தில்"
ஹரீஷ் சந்தோஷத்தில் mobile phone-ஐ பக்கத்து சீட்டில் தூக்கிப்போட்டுவிட்டு lane-ல் பின்னால் வண்டி எதுவும் வருகிறதா என்று பார்த்தபடி தன் car-ஐ highway-ல் சீறிப்பாயும் traffic stream-ல் கலந்தான்.
* பதிவு முதலில் பதியப்பட்ட நாள்: 18/05/2020
Alternate Blogger URL: https://orinakadhalkadhaigal.blogspot.com/2020/05/18.html
Feedback |
எழுதின எனக்கு objective-ஆ பார்க்கமுடியாது... படிச்ச உங்களுக்கு கதை எப்படி இருந்தது என்று உங்களோட கருத்துக்களை மறக்காமல் Comments-ல் போடவும். |
கதை எப்படி இருக்கு? |
Picture of the day |
---|