என்னிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளும் அதன் பதில்களும் இங்கே… உங்களுக்கு புதிய கேள்விகள் இருந்தால் [email protected] என்ற email-க்கு அனுப்பவும்.

கேள்வி 15: நாங்க ஜாலியா சும்மா timepass-க்கு செக்ஸ் கதை படிச்சு கில்ஃபான்ஸா கையடிக்கலாம்னு வர்றோம்… எதுக்கு இப்படி இழுத்த்த்த்து கருத்து சொல்ற தொடர்கதை எல்லாம் எழுதுறீங்க? மனசுக்குள்ள பெரிய சமுத்திரக்கனின்னு நினைப்போ?

பதில்: Gay உறவுகளை அடிப்படையாக கொண்டு sex-ஐ தாண்டி உணர்வுப்பூர்வமாக கதைகளை தமிழில் படிக்க ஆசை தான். ஆனால் இணையத்தில் ரொம்ப கொஞ்சமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக தான் காண கிடைக்கிறது. அதனால் நான் படிக்க விரும்புவது போல நானே எழுதலாம் என்று முடிவு செய்து எழுதுவது தான் – உயிரில் கலந்த உறவே, Sugar Daddy, Paying Guest, அயலான் அன்பு, காத்துவாக்குல ஒரு காதல் போன்ற தொடர்கதைகள். என்னை போல இருக்கும் யாருக்காச்சும் இது போன்ற உணர்வுப்பூர்வமாக கதைகள் பிடிக்கலாம். அவர்கள் தேடும் போது என்றேனும் இந்த கதைகள் அவர்கள் கண்ணில் படலாம்…

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

கேள்வி 14: தொடர்களுக்கும் தொடர்கதைகளுக்கும் வித்தியாசம் என்ன?

பதில்: இந்த வலைமனையில் பதிவுகளை சில வகைகளாக பிரித்திருக்கிறேன். அடிப்படையில் இவை அனைத்தும் எனது கற்பனை என்பதால் அனைத்து பதிவுகளும் செக்ஸ் கற்பனை என்ற உச்சவகையினத்தில் வரும். அவை ஓரினச்சேர்க்கை மற்றும் ஈரினச்சேர்க்கை என்று இருவகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

தொடர்கள் – குறிப்பிட்ட கதாநாயகர்கள் பங்குபெறும் தனித்தனி கதைகள். இவற்றினிடையே vague-ஆக ஒரு sequence இருக்குமே தவிர ஒன்றுக்கொன்று பெரிதாக தொடர்பிருக்காது. வெறும் ஓக்கும் சம்பவங்கள் மட்டுமே இருக்கும். அதனால் எந்த கதையையும் எந்த வரிசையிலும் படிக்கலாம். நீளம் காரணமாக ஒரு சில கதைகள் இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கும் – புது வேலைக்கு முதல் ராத்திரி – 1, புது வேலைக்கு முதல் ராத்திரி – 2 ஆகியவை சேர்த்து ஒரே கதை.

தொடர்கதைகள் – இவை proper-ஆன பல அத்தியாயங்கள் கொண்ட ஒரே கதை. அனைத்தும் செக்ஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஒரே கதை. இந்த வலைமனைக்கு வருபவர்களின் எதிர்பார்ப்பை கொண்டு ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஏதேனும் உடலுறவு காட்சி இருப்பதாக எழுதப்பட்டுள்ளது. இவற்றை வரிசையில் படிக்க அத்தியாயத்தின் தலைப்பில் உள்ள எண்ணை தொடரவும். Example – “01. உள்வாடகை”, “02. ரூல்ஸ் ராமானுஜம்”. பதிவுகளின் பக்கத்தில் உள்ள Side Bar-ல் “இதே தொடரில் மேலும்” என்ற பெட்டியில் அந்த கதையின் அத்தனை பதியப்பட்ட அத்தியாயங்களும் வரிசை படுத்தப்பட்டிருக்கும்.

கேள்வி 13: உங்கள் தொடர்கதைகளில் வரும் கே-கள்ள உறவுகள் சரியா?

பதில்: நான் இந்த வலைமனையை படிக்கும் சாமானியர்களுக்கும், சமுதாயத்துக்கு நல்லது கெட்டது என அறிவுரைகள் எதையும் சொல்ல முனையவில்லை. இந்தியாவில் மட்டுமல்ல உலகில் தங்கள் சமபாலீர்ப்பை மறைத்து கல்யாணம் செய்து, கடைசி வரை உண்மை வெளியே தெரியாமல் உயிரை விட்ட தன்பாலீப்பாளர்களின் எண்ணிக்கை கோடானுகோடிகளை தாண்டும். அப்படி இருக்கும் அனைவரும் தங்கள் துணைகளை ஏமாற்றவேண்டும் என்று நினைத்து கல்யாணம் செய்வதில்லை. சமுதாயம் மற்றும் குடும்பங்களின் அழுத்தம், வம்சம் வளர குழந்தை வேண்டும் என்றோ இல்லை கல்யாணம் செய்து பெண்ணோடு குடித்தனம் நடத்தினாலாவது தம்முடைய சமபாலீர்ப்பு மறையாதா என்கிற நப்பாசை பல பேருக்கு. தம்மை பற்றிய புரிதல் வருவதற்கு முன்பே கல்யாணம் ஆகிவிடும் பாவப்பட்ட ஜென்மங்கள் மிக அதிகம். அதனால் கல்யாணம் ஆன கே-க்கள் அனைவருமே மகாபாவிகள் அல்ல.

மேலும் Sexuality என்பது fluid-ஆன விஷயம் என்பதை பல ஆராய்ச்சிகள் உறுதிபடுத்தியுள்ளன. ரசனைகள் போல பாலீர்ப்பும் காலப்போக்கில் மாறிக்கொண்டே இருக்கக்கூடிய தன்மை கொண்டது. அதனால் கல்யாணம் செய்யும்போது கொஞ்சம் சமபாலீர்ப்பும் நிறைய எதிர்பாலீர்ப்பும் கொண்டவர்கள் காலப்போக்கில் அதன் விகிதாசாரம் மாறுவதையும் உணரலாம். எது எப்படியோ ஒரு உறவில் நடுவில் வரும் மூன்றாவது மனிதர் எப்போது கெட்டவர்களாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லையே? தம்மை போன்றவர்களை பார்த்ததும் ஈர்க்கப்படுவது இயலான விஷயம் தானே? தங்கள் உறவின் எல்லையை உணர்ந்து வாழ்வதே எல்லா திருமண பந்தத்துக்கு அப்பாற்பட்ட உறவுகளுக்கும் நல்லது.

கேள்வி 12: ஜித்து ஜிலாடி ஜெய், ஜெய்யும் ஜெஃப்பும், ஜெய்யும் பிரபாகரும்… இது என்ன ஜெய் “overloaded”?

பதில்: ஹி! ஹி! எனக்கும் புரியவில்லை. இந்த தொடர்களில் வரும் ஜெய் எல்லாம் என்னுடைய ஆளுமை / personality-யின் ஒவ்வொரு பாகங்கள். அதனாலோ என்னவோ சொந்த அனுபவத்திலிருந்து inspire செய்யப்பட்ட கதைகளுக்கு எல்லாம் default choice-ஆக தானாக வந்து நிற்பது ஜெய்யின் முகம் தான். எனக்கு இதில் complaint இல்லை… ஆனால் படிப்பவர்களுக்கு போர் அடித்துவிடக்கூடாதே என்பது தான் என் ஒரே கவலை. ஹா! ஹா! பேச்சு வாக்கில் ஜெய் கதைகள் பல என்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் மிகைப்படுத்தப்பட்ட பதிவுகள் என்பதை தெரியாமல் சொல்லிவிட்டேன்.

கேள்வி 11: அப்படி என்ன ஜாக்கி ஷராஃப், சரத்குமார் மற்றும் ஜெய் மீது அத்தனை ஈர்ப்பு?

பதில்: ம்ம்ம்… எனக்கு சொல்ல தெரியவில்லை. ஜாக்கி ஷராஃப் மற்றும் சரத்குமார் இருவரும் நான் வயதுக்கு வந்த சமயத்தில் எனக்கு அறிமுகமானவர்கள். அவர்கள் இருவரின் முரட்டுத்தனமான ஆண்மையை மிகவும் ரசித்திருக்கிறேன். சொல்லப்போனால் அவர்களை போன்ற உடல் அம்சங்கள் – சரத்தின் தாடை பிளவு, ஜாக்கியின் நீண்ட கால்கள், எனக்கும் இருந்திருக்கக்கூடாதா என்று பல நாட்கள் ஏங்கியிருக்கிறேன். அதனால் அவர்கள் இருவரையும் நினைத்து கையடித்து களைத்திருக்கிறேன். என்னுடைய கற்பனைகளில் இன்றும் அவர்கள் தங்களுடைய முப்பதுகளிலேயே இருக்கிறார்கள்… ஓக்கப்படும் பெண்கள் மட்டும் தான் மாறிக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சிலரை நினைத்து கையடித்து இருக்கிறேன் – விஜய்யின் தெனாவட்டான கவர்ச்சியும், பிருத்விராஜின் ஆண்மை நிறைந்த arrogant confidence-ம் அவர்களது sex appeal என்றபோதும் எனக்கு ஜெய் போன்ற இயல்பான அடுத்த வீட்டு பையன் போன்ற vulnerable personality-ல் உள்ள sex appeal தான் மிகவும் பிடித்திருக்கிறது. காரணம் நானும் அப்படிப்பட்ட “பாவம்” பையன் தான். சென்னை 28 படத்திலேயே ஜெய் என்னை கவர்ந்துவிட்டான். அதிலிருந்து இப்போது அஞ்சலியுடனான காதல் தோல்வி கிசுகிசுவில் அவ்வப்போது அடிபடுவதால் எனக்கு ஜெய் மீது காமம் கலந்த தோழமை பாசம்.

கேள்வி 10: சாருக்கு அப்படி என்ன வடக்கத்திய ஆம்பளைங்க மேலே மட்டும் கூடுதல் ஈர்ப்பு? தமிழ்நாட்டு பசங்க செக்ஸியா இல்லையா?

பதில்: க்ர்ர்ர்… அழகை ரசிக்குறதுன்னு வந்துட்டா அதோட மூலத்தை ஆராய்ச்சி பண்ணனுமா என்ன? நான் வயசுக்கு வந்தப்போ தமிழ்ல பிரபலமா இருந்த ஹீரோக்கள் – ரஜினி, கமல்ஹாசன், பிரபு, கார்த்திக், முரளி, அர்ஜுன், சரத்குமார்… எல்லோருமே மக்களுக்கு பிடிச்ச நல்ல நடிகர்கள் தான்.. ஆனா எத்தனை பேரு “செக்ஸி”ன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க… உடம்பு, செக்ஸ் அப்பீல்னு பார்த்தா எனக்கு தேறுனது சரத்குமார் தான்… அப்புறம் கார்த்திக் பற்றி நிறைய செக்ஸ் கிசுகிசுக்கள் கேள்விப்பட்டதால கார்த்திக் எப்படி “ஓத்திருப்பான்னு” ஒரு ஆர்வம். இப்போதைய ஹீரோஸ் எல்லாரும் நான் பார்த்து lanky teenagers-ஆ அறிமுகமாகி இப்போ வளர்ந்த ஆண்களா இருந்தாலும் எனக்கு அவங்க எல்லாம் “சின்ன பசங்க”ளா தான் தெரியுறாங்க… விஜய், ஜெய் தவிர. Six Pack abs வச்சு உடம்பை காண்பித்தாலும் எனக்கென்னவோ சூர்யா பயங்கர “Homely figure”, அஜித் Style icon… புதுப்பசங்கள்ல ஹரீஷ் கல்யாண் கொஞ்சம் செக்ஸியா தெரியுறான். செக்ஸியா புது பசங்க வந்தா தான் அடுத்து வர்ற பதிவுகள்ல வித்தியாசம் காண்பிக்க முடியும்… பாக்கலாம்.

கேள்வி 9: உங்கள் கதைகளில் எப்படி பார்த்த உடனே ஓக்கிறார்கள்?

பதில்: ஹா! ஹா! நிஜ வாழ்க்கையில் கூட நிறைய திறமைசாலிகள் பார்த்த முதல் சந்திப்பிலேயே மேட்டர் செய்துவிடுகிறார்கள் ஆனால் அப்படிப்பட்டவர்கள் எண்ணிக்கையில் குறைவு தான். எனக்கு அந்த சாமர்த்தியம் இல்லை ஏனென்றால் நான் ஒருவரிடம் பேசி, பழகி ஈர்க்கப்பட்டால் மட்டுமே அவர்களோடு மேட்டர் பண்ணமுடியும். முன்பே சொன்னது போல இந்த கதைகள் எல்லாம் Sexual fantasy வகை கதைகள். நம்மால் முடியாததை செய்து பார்ப்பது போன்ற கற்பனைகள் ஒருவகையில் இயலாமையின் வடிகால்கள் தானே. வயது ஏற ஏற எனது கற்பனைகளில் அந்த மாற்றம் பிரதிபலிப்பதை காணலாம். பிற்பாடு எழுதப்பட்ட கதைகளில் உடலுறவு சில் அறிமுகங்களுக்கு பிறகு நடப்பதாகவும், மேட்டர் முடிந்ததும் அவர்களுக்குள் உறவு பூப்பதாகவும் அதன் தொடர்ச்சியையும் எழுத முற்பட்டிருக்கிறேன்.

கேள்வி 8: உங்கள் கதைகளில் பெண்கள் தான் முதலில் ஆண்களை அழைக்கிறார்களே?

பதில்: ஆண்மை என்பது பெண்ணை பலவந்தமாக ஆக்கிரமிப்பதோ இல்லை விருப்பமில்லாத உடலை திணிப்பதோ அல்ல. அதே சமயம் செக்ஸ் என்பது ஆண் மட்டுமே “லீட்” எடுக்கப்படவேண்டிய விஷயம் அல்ல, இங்கு இருவருமே சமம் என்பதும் எனது கருத்து. அதனால் தான் பெண் விருப்பபட்டு ஆணை அழைக்கும் பட்சத்தில் ஆண் தனது வெற்றிக்கொடியை நாட்டுவதாக எனது கதைகள் அமைகின்றன. நோ பலவந்தம் நோ ஆணுறை…

கேள்வி 7: உங்கள் கதாபாத்திரங்கள் எல்லாம் அதிக சம்பளம் வாங்கும் நகரத்து மக்கள் மட்டுமே?

பதில்: நகரத்து காதல், கிராமத்து / சிறு நகரத்து காதல் என்று நான் காதலை பிரித்துப்பார்ப்பதில்லை. ஒருவேளை நான் வளர்ந்த சூழல் என்னையும் அறியாமல் இயல்பாக என்னுடைய கதைகளில் பிரதிபலிக்கலாம். அதே சமயத்தில் பள்ளியிலும், கல்லூரியிலும் வரும் காதலை நான் குறைத்து மதிப்பிடவில்லை என்றாலும், என்னை பொருத்தவரை தன் காலில் சுயமாக நிற்கும் வரை ஏற்படும் காதல், காமம் எல்லாம் ஒருவருடைய கவனத்தை திசைதிருப்பும் distractions என்பது எனது தீர்மானமான எண்ணம்.  தன்னுடைய தேவைகளை தானே பூர்த்தி செய்துக்கொள்ளும் ஆண்களுக்கு தான் தங்களுடைய உறவின் தேவை பற்றிய ஒரு தெளிவான பார்வை இருக்கும். காதலுக்கு பொருளாதாரமும், சுயமரியாதையும் மிக முக்கியம். அதனால் எனது கே கதபாத்திரங்கள் எல்லாம் தங்கள் வாழ்க்கையின் அஸ்திவாரத்தை திறம்பட அமைத்துக்கொண்டு, எந்தவித நிர்ப்பந்தமும் இல்லாமல் தீர்க்கமாக / தீவிரமாக காதல் செய்யக்கூடிய பொருளாதார மேன்மை நிலையில் இருப்பவர்களாக இருப்பது எனது தெளிவான / conscious-ஆன முடிவு. என்னால் பள்ளி மாணவர்களிடையே செக்ஸ், ஆசிரியர் மாணவர் இடையே செக்ஸ் ஆகியவற்றை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அதனால் அப்படிபட்ட கதாபாத்திரங்கள் வருவதற்கான பேச்சே இல்லை.

கேள்வி 6: உங்கள் கே-கதாபாத்திரங்கள் எல்லாம் கட்டுடல் கொண்டவர்களாக இருக்கிறார்கள்? சாதாரணமானவர்கள் செக்ஸ் வைத்துக்கொள்ள கூடாதா?

பதில்: ஹா! ஹா! நான் ரொம்ப நாட்களுக்கு கே-க்கள் எல்லாம் பெண்மையின் நளினம் கலந்து தான் இருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். என்னுடைய பேச்சில், நடவடிக்கைகளில், நடையில் பெண்மை சாயல் இருந்ததால் நிறைய கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியிருக்கிறேன். ஆனால் பல வருடங்கள் கழித்து நிறைய இன்ஸ்டாகிராம் புரொஃபைல்களை பார்த்த போது தான் ஒரு விஷயம் புரிந்தது – நிறைய மாடல்கள் – குறிப்பாக பிரேஸில் மற்றும் கிரேக்க, ஐரோப்பிய மாடல்கள்… அவர்களது கட்டுடலுக்கும், காந்த கவர்ச்சிக்கும் ஒரே நேரத்தில் பல பெண்களை அவர்களால் எளிதில் படுக்கைக்கு அழைக்கமுடியும் என்ற அதீத கவர்ச்சியுடன் இருப்பவர்கள். ஆனால் அவர்களில் நிறையபேர் கே-க்கள். அதில் பலர் மற்றொரு ஆணோடு சட்டரீதியாக கல்யாணம் ஆனவர்கள். சிலர் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பவர்கள். எனக்கு ஆரம்பத்தில் குழப்பமாக இருந்தது – இவ்வளவு ஆண்மையாக, கவர்ச்சியாக இருப்பவர்கள் எப்படி கே-யாக இருக்கிறார்கள் என்று. பின்னர் தான் புரிந்தது கே தன்மைக்கும், உடம்புக்கும் சம்பந்தம் இல்லை… ஆண்மை என்பது உடல் சம்பந்தப்பட்டது. ஓரின ஈர்ப்பு என்பது மனம் சம்பந்தப்பட்டது. அதுமட்டும் அல்லாது நல்ல உடற்கட்டு என்பது கவர்ச்சியையும் தாண்டி ஆரோக்கியத்துக்கு அவசியம். அதனால் தான் எனது கதாபாத்திரங்கள் எல்லாம் உடற்பயிற்சி செய்து ஆண்மை நிரம்பிய ஆனால் அதே சமயம் மனதளவில் ஒரேபால் ஈர்ப்பை விரும்பி ஏற்பவர்களாக உருவாக்கியிருக்கிறேன். மீண்டும் நான் முன்பே சொன்னது போல – எனக்கும் நல்ல உடற்கட்டு வேண்டும் என்ற நிறைவேறாத ஆசை / fantasy-ன் வெளிப்பாடும் கூட..

கேள்வி 5: உங்க தொடர்- கதிர்காம கதைகள்-ல வர்ற மாதிரி மேனேஜர் தன்னோட ஊழியரோட பேண்ட் ஜிப்புல கைவச்சா அது Sexual Harassment-ல வராதா?

பதில்: ஹி! ஹி! நான் ஏற்கனவே நிறைய தடவை சொன்ன மாதிரி எல்லாமே எல்லாரும் ‘நல்லவங்க’, ‘உடன்பட்டு உடலுறவுக்கு’ சம்மதிக்கிறவங்க என்ற யூகத்தின் அடிப்படையில் உருவான கற்பனைகள் தான். விருப்பத்தை மறைமுகமா தெரிவிச்சு, அதை அடுத்தவங்க உள்வாங்கிக்கிட்டு தகுந்த சமயம் வர்றப்போ ‘போடு’றதுன்னு இழுத்துட்டு போக எனக்கு பொறுமையில்லை… படிக்க கில்மாவா இருக்கா? உறுத்தாம இருக்கா… அது போதுமே.. 🙂

கேள்வி 4: உங்களை பற்றி சொல்லமுடியுமா?

பதில்: என்னை பற்றி சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை. நான் 30களில் உள்ள ஒரு ஈரினச்சேர்க்கையாள மென்பொறியாளன். பெண்ணோடு வெற்றிகரமான உடலுறவு கொள்வதால் என்னை ஈரனச்சேர்க்கை என்று அழைத்துக்கொண்டாலும், நான் என்னை ஒரு ஒளிவு ஓரினச்சேர்க்கையாளன் (Closeted Gay) என்று தான் வகைப்படுத்துகிறேன். இந்தியாவில் மட்டுமல்ல பல முன்னேறிய நாடுகளிலும் கூட கே-க்கள் உடம்பில் இளமையும், கவர்ச்சியும் இருக்கும்வரை மட்டுமே கலர்ஃபுல்லான வாழ்க்கை வாழ்கிறார்கள். அழகு குறைய,  தோல் சுருங்க ஆரம்பிக்க பெரும்பாலானவர்களின் வாழ்க்கை தனிமையானதும், துயரம் நிறைந்ததுமாகவே இருக்கிறது. அதனால் நான் எனது ஓரினச்சேர்க்கை விருப்பத்தை புறந்தள்ளிவிட்டு “சராசரி” மனிதனாக வாழ முயற்சித்து வருகிறேன். பொதுவெளியில் இவ்வளவு தகவல்கள் மட்டும் போதும் என்பது எனது கருத்து.

கேள்வி 3: இந்த கண்றாவியான வலைமனையை நடத்துவதன் நோக்கம் என்ன?

பதில்: கோடனுகோடி ஆண்களை போல எனக்கும் கலவி கற்பனைகள் உண்டு. அவை எனது சுயஇன்ப அனுபவங்களை மேம்படுத்துகின்றன. 99% படுக்கைகளில் நயன்தாராவும், அனுஷ்காவும், விஜய்யும் அஜித்தும் தான் புணர்கிறார்கள். அதாவது உடலுறவு கொள்ளும் 99% மக்கள் தாங்கள் உடலுறவு கொள்ளும்போது தங்களுக்கு பிடித்த ஆண்/பெண் – நடிகர்களுடன் உடலுறவு கொள்வதாக கற்பனை செய்துக்கொள்கிறார்கள். உடல் வேண்டுமானால் தங்கள் துணையுடதாக இருக்கலாம் ஆனால் “உண்மையான” உடலுறவு நடிகர்கள்/நடிகைகளோடு தான் நடக்கிறது. பலருக்கு தங்கள் கற்பனைகளை வெளியே சொல்ல முடிவதில்லை – தயக்கமோ / எழுதும் திறமையின்மையோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எனக்கு எழுத முடிவதால் அதை செய்கிறேன். “கண்றாவி” என்று சொல்பவர்கள் தான் இதை ரகசியமாக அதிகம் படிக்கிறார்கள்.

கேள்வி 2: இந்த கதைகள் உங்கள் சொந்த வாழ்க்கையில் நடந்தவைகளா?

பதில்: ஹா! ஹா! நடந்திருக்கலாம் என்று பேராசை தான் ஆனால் நான் ஒரு சாதாரண, அசுவாரசியமான boring வாழ்க்கையை வாழும் சராசரி ஆண். எனது கனவுகள் வேண்டுமானால் colourful-லாக, larger than life வகைகளாக இருக்கலாம் ஆனால் நிஜம் அதற்கு நேர்மாறானவை. சில கதைகளில் வரும் சம்பவங்கள் எனது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, பிட்டு படங்களாக உங்கள் முன்னே விரிந்திருக்கின்றன. எனவே உங்கள் கேள்விக்கு பதில் – வெகு சில சம்பவங்கள் நிஜமானவை.

கேள்வி 1: உங்களது பிளானெட் ரோமியோ, கிரைண்டர் செயலிகளின் முகவரி பகிரமுடியுமா?

பதில்: நன்றி! நான் இந்த செயலிகளில் எப்போதுமே தீவிரமாக இருந்ததில்லை. நான் அவற்றில் இணைந்தபோது என் போன்ற ஒரே பாலுணர்ச்சி / கண்ணோட்டம் கொண்ட நண்பர்கள் கிடைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு தான் இருந்தது. ஆனால் 99% உரையாடல்கள் – ASL?, Top/Bottom?, Have Place?, Will you suck? என்று மட்டுமே ஆரம்பிக்கின்றன. ஒரு சிலர் பேசி பேசி என்னை கவர்ந்து மேட்டர் முடிந்ததும் காணாமல் போய் / கண்டுகொள்ளாமல் கழற்றிவிட்டுவிட்டார்கள். அதனால் நொந்துப்போய் இந்த செயலிகளில் இப்போது முற்றிலுமாக இல்லை. அது மட்டும் இல்லாமல் எனக்கு காதல் செய்ய (உடலுறவு கொள்ள) தற்போது இருக்கும் மிகச்சில மனதுக்கு நெருக்கமான நண்பர்கள் மட்டுமே போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டதும் மற்றொரு காரணம். எப்போதாவது நாங்கள் சந்திக்கும்போது இயல்பாக முத்தங்கள் பரிமாறிக்கொள்வதும், கைகள் கோர்த்துக்கொண்டு பேசிக்கொண்டே கடலலையில் கால் நனைய நடப்பதும் மிக சந்தோஷமாக இருக்கிறது. இதுவே போதும். சிலசமயம் இவற்றையும் தாண்டி “அது” நடந்தால் அதை போனஸாக நினைத்து சந்தோஷம் அடைந்து நிறைவாக இருக்கிறேன். மற்றபடி “அது” எனது தேடல் இல்லை.


 

உங்களுக்கு புதிய கேள்விகள் இருந்தால் [email protected] என்ற email-க்கு அனுப்பவும்.

Free Sitemap Generator
Scroll to Top