பெயர் | காதல் - The Core | ||
---|---|---|---|
மொழி | Malayalam | ||
வெளியான வருடம் | 2023 | ||
வகை | Feature film | ||
தளம் | Theatrical Release | ||
YouTube-ல் கிடைக்கிறதா? | இல்லை | ||
நடிகர்கள் | மம்மூட்டி, ஜோதிகா | ||
இயக்குநர் | ஜியோ பேபி | ||
கதைச்சுருக்கம் | |||
Gay-க்களின் கதைகள், Coming Out பற்றிய கதைகள் எல்லாம் வெளிநாட்டவர்களுக்கானது, அப்படியே இந்தியாவில் வந்தாலும் ஹிந்தியில் மட்டுமே வரும், அதுவும் Metro-க்களில் வசிக்கும் இளைஞர்களை பற்றி, பணக்கார Gay-களை பற்றி மட்டுமே என்று இருக்கும் சூழ்நிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நடுத்தர வர்க்கத்து குடும்பத்தை சேர்ந்த 40களை தாண்டிய குடும்பஸ்தனான ஆணின் Coming Out கதை என்பது நிச்சயம் பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும். அதை விட பெரிய அம்சம் என்னவென்றால் அந்த கதாபாத்திரத்தை ஏற்றிருப்பது ஒரு முன்னணி கதாநாயகன். நம் திரையில் கதாநாயகன் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற image-ஐ பற்றி கவலைப்படாமல் மம்மூட்டி ஒரு closet homosexual கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது மட்டுமல்லாது அந்த படத்தை சொந்த காசில் தயாரித்திருப்பதை புரட்சி என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது? நேற்று (24/11/2023) அன்று வெளியான மம்மூட்டி, ஜோதிகா இணைந்து நடித்துள்ள “காதல் – The Core” என்ற திரைப்படம் நம் conservative ஆன தென்னிந்திய குடும்பங்களில் ஓரினச்சேர்க்கையாளர்களின் இருப்பை பற்றிய உரையாடலை நிச்சயம் வெளிக்கொண்டுவரும் என்பதில் சந்தேகமே இல்லை. தனக்கு திருமணமாக சில மாதங்களிலேயே தன் கணவனின் சமபாலீர்ப்பை பற்றி தெரிந்தும் ஏன் ஓமனா இத்தனை வருடங்கள் அமைதியாக இருந்துவிட்டு, இளமையை கழித்த பின்பு இப்படி விவாகரத்து கோருகிறார் என்ற கேள்வியில் படத்தின் உயிர்நாடி வெளிப்படுகிறது. ஓமனா அப்போது விவாகரத்து கோரியிருந்தால் அவரது ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றமாக வகைப்படுகிறது. அதனால் மேத்யூ கைது செய்யப்பட்டிருக்கலாம், அவரது வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் 2018-ல் சுப்ரீம் கோர்ட் ஓரினச்சேர்க்கை குற்றம் இல்லை என்று தீர்ப்பளித்த பிறகு விவாகரத்து கோருவதால் மேத்யூஸ் மீது குற்ற நடவடிக்கை பாயாது என்பதால், இப்போது ஓமனா விவாகரத்து கோருவதன் மூலம் தன் கணவன் மேத்யூஸ் மீதமுள்ள காலம் தன் நிஜ வாழ்க்கையை வாழட்டுமே என்று சொல்கிறார். சுப்ரீம் கோர்ட்டின் அந்த தீர்ப்பினால் விடிவு பெற்றது ஓரினச்சேர்க்கையாளர்கள் மட்டுமல்ல, அவர்களது துணைகளும் தான் என்றும் பாதிக்கப்பட்ட துணைகளின் வலியையும் பேசுகிறது இந்த காதல் – The Core. ஓமனா மேத்யூஸிடம் இருந்து விவாகரத்து பெற்ற பிறகு அவருக்காக தேர்தல் வேலைகளை இன்முகத்தோடு செய்கிறார்.
மலையாள படங்கள் என்றாலே இயல்பான நடிப்பு இருக்கும் என்று தெரியும். ஆனால் இதில் acting powerhouse ஆன மம்மூட்டியுடன் போட்டி போடாமல் அனாயாசமாக score செய்கிறார் ஜோதிகா. அந்த இறுகிய முகத்தின் பின்னால் உள்ள வலியை அழகாக பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறார் இந்த ஒரு காலத்து “overacting queen”. 17 வருடங்களுக்கு பிறகு ஜோதிகா மலையாள படத்தில் நடிக்கிறார் என்று கேள்விப்பட்டதும் நான் அது OTT Release plan-ன் பாகமாக, Pan India appeal-க்காக என்று நினைத்தேன். ஆனால் இப்போது அந்த ஓமனா கதாபாத்திரத்தில் ஜோதிகாவை தவிர வேறு யாரையும் நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. என்ன… அந்த பின்னணி குரல் தான் கொஞ்சம் ஒட்டவில்லை. ஆனால் கொஞ்ச நேரத்துக்கு பிறகு பழகிவிடுகிறது. அது போல மம்மூட்டியின் ‘நண்பர்’ தங்கனுடனான உறவின் ஆழம் பற்றிய கூடுதல் காட்சிகள் இல்லை என்பதால் மம்மூட்டியின் பக்கத்து தவிப்பு straight ஆட்களுக்கு பெரிதாக புரியாது. | |||
முன்னோட்டம் | |||