கா.ஒ.கா 10. எனக்கு Conversion Therapy…
இரவின் இருட்டை சாலையோர ஹாலோஜன் விளக்குகளின் ஆரஞ்சு நிற ஒளி விரட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் எங்கள் மனதில் இப்போது தான் இருள் படர ஆரம்பிக்கிறது. காதலித்தபோது உலகம் கண்ணுக்கு தெரியவில்லை. ஆனால் எதிர்பாராத பிரச்சனை வரும்போது சிறு தூசி கூட பாறையாக தெரிகிற