Federico Piras – திமிரும் அழகு தான்…
என்ன தான் இளமை என்பது மனசு சம்பந்தப்பட்ட விஷயம், age is just a number என்றெல்லாம் வசனம் பேசினாலும், இளமை, உடம்பில் அது படரவிடும் கவர்ச்சி என்பது மேலே சொன்ன statements-களை எல்லாம் தாண்டிய நிஜம் என்று எனக்கு உரைத்தது இந்த பையனை பார்த்த பிறகு தான். கிட்டத்தட்ட 6-7 வருடங்களுக்கு முன்பு Tumblr-ல் இவனை முதல் முதலில் பார்த்தபோது இவன் சரியான திமிர் பிடித்தவனாக இருப்பான் என்ற எண்ணம் தான் முதலில் தோன்றியது. நான் பலமுறை சொன்னது போல திமிருக்கு தனி கவர்ச்சி உண்டு. அதனால் தான் நாம் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் நிஜ வாழ்க்கையில் Bad boys-களிடம் மனதை பறிகொடுத்து, காயப்பட்டு விலகுகிறோம். இந்த பையன் எல்லா படங்களிலும் ஒரு attitude காட்டுபவனாக தோன்றியதும், அவன் photogenic உடம்பும் அவனுக்கு சேர்ந்த 381K followers-களில் என்னையும் இணைத்தது.











