டாய்… மூடிக்கிட்டு வேலையை பாக்குறியா?
காலையில் அலுவலகமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க, “One minute guys… Shall I have your attention?” என்ற Project Manager-ன் குரலை கேட்டு ஜெய் நிமிர்ந்து பார்த்தான். அனைவரும் தங்கள் வேலையை நிறுத்திவிட்டு திரும்பி பார்க்க, Project manager “இது விஜய்… நம்ம team-ல புதுசா சேர்ந்திருக்கார். நீங்க எல்லாரும் அவருக்கு உங்களோட support-ஐ குடுக்கனும்” என்று சொல்ல, விஜய் அனைவரையும் பார்த்து “Hi” என்று புன்னகையுடன் கையசைத்தான். ஜெய் எதிர்பார்த்தது போல விஜய்க்கு அவன் அருகில் உள்ள seat ஒதுக்கப்பட்டது….