அ.அ 22 புதிய பறவை
வீட்டில் குழந்தைகள் தூங்கப் போய்விட்டதாலும், டிவி அணைக்கப் பட்டுவிட்டதாலும் ஏற்பட்ட அமைதியை ஹாலில் பரவியிருந்த மெல்லிய இருட்டு இன்னும் கூடுதல் நிசப்தமாக்கியது. நான் கட்டிலில் மல்லாந்து படுத்தபடி விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தேன். என் விழியில் அசைவு