அ.கோ 4 நேருக்கு நேர்…

அ.கோ 4 நேருக்கு நேர்…

இது அழியாத கோலங்கள் தொடர்கதையின் 4-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
உயரமான Career aspiration-களுடன் திருமணத்தை பற்றி யோசிக்காத வீணா ஒரு எதிர்பாராத unprotected sex session-ல் கர்ப்பமாகிறாள். நிகிலும் வீணாவும் தாங்கள் வாங்கியுள்ள புது வீட்டுக்கு போகும் கையோடு கல்யாணமும் செய்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து, இருவரின் குடும்பங்களும் கோவிலில் சந்திக்கிறார்கள். அனைவரும் பேசிக் கொண்டிருக்கும்போது வீணாவின் தந்தை கணேசனின் mobile phone-ல் இருந்து வந்த Planet Romeo-வின் message tone நிகிலையும், கணேசனையும் கலவரப்படுத்துகிறது. பாம்பின் கால் பாம்பு அறியும் என்ற பழமொழி அந்த இடத்தில் நிஜமாகிறது...
I hate porn that starts off fucking... I need to know why they are fucking
சேரும் இடத்தை போல போகும் பயணமும் சுவாரசியமே...

மாலை 4:30 மணிக்கு அலுவலகத்தில் ஊழியர் கூட்டம் மெல்ல மெல்ல கறையத் தொடங்கியது. ஐந்து மணிக்கெல்லாம் இந்த இடம் வெறிச்சோடிவிடும். நிகில் தன் laptop bag-ஐ கையில் பிடித்துக்கொண்டு கம்பீரமாக நடக்கும் அழகே அழகு. உடற்பயிற்சியின் மூலம் அளவெடுத்து செய்தது போல உடம்பில் தேவைக்கு அதிகமாக ஒரு மி.மீ சதை கூட இல்லாமல் இருப்பதை அவனுடைய இரண்டாவது தோல் போல ஒட்டிக்கொண்டிருந்த formal suit மேலும் highlight செய்தது. நிகில் தன் access card மூலம் main entrance கதவை திறந்துக்கொண்டு வெளியில் வந்தான். சில மீட்டர்கள் தொலைவில் சாலையை ஒட்டியிருந்த bench-ல் கணேசன் உட்கார்ந்திருந்ததை பார்த்ததும் நிகிலின் நடையில் வேகம் குறைந்தது. நேற்று கோவிலில் Planet Romeo-வின் message tone மூலம் கணேசனும் நிகிலும் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட பிறகு எப்படியோ வீடு திரும்பும் வரை ஒருவரை ஒருவர் தவிர்த்துவிட்டார்கள்.

நிகிலை பார்த்ததும் கணேசன் எழுந்தார். நிகில், நீண்ட மூச்சு ஒன்றை இழுத்து விட்டுவிட்டு, நொடிப்பொழுதில் எதுவுமே நடக்காதது போல கணேசனை பார்த்து புன்னகை செய்தான். அவரை நோக்கி நடக்க, கணேசனும் நிகிலை நோக்கி வந்தார். “Hello Uncle! எங்கே இந்த பக்கம்?” என்று தன் அலுவலகத்தை திரும்பி பார்த்தான். “ஏதாவது investment planning-க்காக financial consultant பார்க்கனுமா?” என்று ‘இயல்பாக’ பேச, கணேசன் லேசாக தடுமாறினார். தன்னை பார்த்ததும் நிகில் கூனிக்குறுகி நிற்பான் என்று அவராக ஏதோ கணக்கு போட்டுவிட்டார்.

“இல்லை நிகில்… உன்னை பார்க்க தான் வந்தேன். உன் கிட்டே கொஞ்சம் பேசனும்… அப்படி Starbucks போய் உட்கார்ந்து பேசலாமா?” என்று கேட்க, நிகில் தோளை குலுக்கி சம்மதம் சொன்னான்.

“காணேஷன்” என்று அந்த Barista இளம்பெண் கஷ்டப்பட்டு பெயரை படிக்க, கணேசன் எழுந்து சென்று இரண்டு உயரமான பேப்பர் கோப்பைகளில் Cappuccino-வையும், White Latte-வையும் எடுத்துக்கொண்டு வந்தார். கணேசன் ஒரு கோப்பையை நிகிலிடம் தள்ளினார். நிகில் கணேசனை பார்த்த பார்வையை விலக்காமலேயே தன் Cappuccino-வை உறிஞ்சினான். “சொல்லுங்க அங்கிள்! என்னவோ பேசனும்னு சொன்னீங்க…” என்று நிகில் தூண்ட, கணேசன் லேசாக தொண்டையை செருமி பேச்சை தயக்கத்துடன் ஆரம்பித்தார்.

“நிகில்… இந்த கல்யாணத்தை நிறுத்திடு. நான் வீணாவை சிட்னிக்கு கூட்டிட்டு போயிடுறேன். ஒருவகையிலே இது தான் எல்லாருக்கும் நல்லது” என்று கணேசன் குரலில் லேசாக பிசிறடித்தது. நிகில் முதலில் தடுமாறினாலும் பின்னர் சுதாரித்துக்கொண்டு “எல்லாருக்கும்னா? யாருக்கு அங்கிள்?” என்றான். கணேசன் “Call me Mr. Ganesan… என் பொண்ணோட வாழ்க்கை ஒரு நிழலோட இருக்கவேண்டாம்… கைக்குழந்தையோட இருந்தாலும் அவளை புரிஞ்சிக்கிற நிஜமான பையன் கிடைக்கிற வரைக்கும் வீணா என் கூடவே இருக்கட்டும்” என்றார்.

“Uncle… Sorry! Mr. Ganesan… இப்போ கல்யாணத்தை நிறுத்துற அளவுக்கு என்ன நடந்தது? நீங்க பாட்டுக்கு நிழலோட வாழவேணாம், நிஜம் வேணும்னு என்னென்னவோ சொல்லிட்டு இருக்கீங்க… Please don’t hold anything to your heart… put the cards open across the table” என்று நிகில் திடமாக கேட்டான். கணேசன் “அது ஏன்னு உனக்கே தெரியும்..” என்று தடுமாறினார். நிகில் “இவ்வளவு முக்கியமான விஷயங்களை வெறும் யூகங்களோட அடிப்படையிலே deal பண்ண முடியாது. எதுவா இருந்தாலும் நேரடியா சொல்லுங்க…” என்று எகிறி அடித்தான். கணேசன் தயக்கத்துடன் இங்கும் அங்கும் பார்த்துவிட்டு “என் பொண்ணை ஒரு Closet gay-வுக்கு கல்யாணம் பண்ணி குடுக்குறதுல விருப்பம் இல்லை…” என்றார்.

நிகில் “சரிங்க கணேசன்… உங்க இஷ்டப்படியே நான் போய் வீணா கிட்டே உங்க அப்பா என்னை கல்யாணத்தை நிறுத்திட சொன்னார். உன்னை நிஜமான ஆம்பளைக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு ஆசைப்படுறார்னு சொல்லிடுறேன்… இப்போ வீணா வந்து உங்க கிட்டே என்ன கேட்பா? காரணமே கேட்காம, ஏன் என்னான்னு கூட தெரிஞ்சுக்காம வீணா வயித்துல இருக்குற எங்க குழந்தையோட உங்க கூட வந்துடுவாளா?” நிகிலை தாக்க வந்த கணேசன் ஏகத்துக்கும் தாக்குதலுக்கு உள்ளாகி நிற்கிறார். நிகில் நேர்கொண்ட பார்வையை தாங்கமுடியாமல் சுற்றும் முற்றும் பார்வையை அலையவிட்டார்.

“சொல்லுங்க கணேசன்… வீணா கிட்டே போய் எனக்கு Gay Dating app Planet Romeo-வுல இருந்து message வந்த tone சத்தத்தை கேட்டு நிகிலும் mobile phone-ஐ எடுத்து பார்த்தான். அதனால அவனும் gay… அவன் கூட வாழாதன்னு சொல்லப்போறீங்களா?” என்று நேரடியாக கேட்டான். கணேசன் கண்களில் கோபம் கொப்பளிக்க நிகிலை பார்த்தார். “உடனே வீணா கேட்பா… உங்களுக்கு ஏம்ப்பா Planet Romeo-ல இருந்து message வருது? நீங்க ஏன் அந்த Gay dating app-ஐ use பண்றீங்க? அப்போ இவ்வளவு நாள் நீங்க என் அம்மா கூட வாழ்ந்த வாழ்க்கை பொய்யா? அவளோட இந்த கேள்விகளுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க கணேசன்?” நிகில் களத்தில் நின்று ஆடினான்.

கணேசனின் நெற்றியில் வியர்வை முத்து முத்துகளாக துளிர்த்தது. நிகில் எழுந்து சென்று serving counter-ல் இருந்து சில tissue paper-களை உருவி வந்து கணேசனிடம் நீட்டினான். கணேசன் நிகிலை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் வியர்வையை துடைத்துக்கொண்டார். நிகில் “கணேசன்! ஒரு அப்பாவா உங்களோட கோபமும், பயமும் நியாயம் தான். ஆனா எந்த ஒரு விஷயத்தையும் தீர விசாரிக்காம முடிவெடுக்காதீங்க. உங்களை மாதிரியே நானும் message tone கேட்டதும் எடுத்து பார்த்தது ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி Planet Romeo-ல நானும் member-ஆ இருந்ததால…

“நான் மதுரையில படிக்கிறப்போ பசங்க பொண்ணுங்க கிட்டே பேசுனாலே அருவாள தூக்கிட்டு வந்துடுவாங்க… அப்படிப்பட்ட இடத்துல adoloscent பருவத்துல, coming of the age வயசுல, பசங்களுக்கு sexual urges வந்தா என்ன பண்ணுவாங்க? Masturbation-ஐ தாண்டி தேவடியா கிட்டே போறதுக்கு தைரியம் வேணும்… இல்லை பொண்ணுங்களை உஸார் பண்ணி lodge-க்கு கூட்டிட்டு போகுறதுக்கு தனி திறமை வேணும்… ஆனா சராசரி பையன் மாதிரி எனக்கு ரெண்டுமே இல்லை… அதனால இப்படி Gay app-ல என்னை மாதிரி மத்த பசங்க கூட hook up பண்ணி என்னோட காம இச்சைகளை தீர்த்துக்குட்டேன். அதனால என்னோட sexuality எல்லாம் மாறிடலை. வீணா சொல்லியிருப்பாளே… நாங்க முதல் முதல்ல meet பண்ணினது Tinder Dating App-ல தான். நானும் வீணாவும் கடந்த மூனு வருஷமா ஒன்னா தானே வாழ்ந்துட்டு இருக்கோம்… Work from home-ன்னு கிட்டத்தட்ட 24X7 கூடவே தான் இருக்கோம்…

நிகில் பரிவோடு கணேசனின் கையை பிடித்தான். அவர் விலக முயற்சிக்கவில்லை. நிகில் “கணேசன்… என்னோட வாழ்க்கையிலே Gay Phase-ங்குறது ஒரு கடந்த காலம். நான் பசங்க கூட hook up பண்ணினப்போ கூட என் நினைப்புல சினிமாவுலயோ இல்லை எங்கேயோ என் கவனத்தை ஈர்த்த யாரோ ஒரு பொண்ணு கூட தான் இயங்கிக்கிட்டு இருந்தேன். அதனால நான் என்னை gay-யா consider பண்ணிக்கிட்டதே இல்லை… சொல்லப்போனா அந்த personality doesn’t exist… ஆனா நீங்க தான் இன்னும் குழப்பத்துல இருக்கீங்க போல” என்று நைச்சியமாக பந்தை கணேசன் பக்கம் திருப்பிவிட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top