P G 04. காதல் கம்மிநாட்டி…

P G 04. காதல் கம்மிநாட்டி…

இது Paying Guest தொடர்கதையின் 4-வது அத்தியாயம்.

முன் கதை சுருக்கம்...
வீட்டில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி அவினாஷை ரவியுடன் சேர்ந்து gym-க்கு போக வைக்கிறது. Gym, Workouts என்றாலே testosterone-ன் உற்பத்தியை கூட்டுவது தானே. Testo-ன் பிரவாகம் காமத்தையும் சுன்னியில் விரைப்பையும் கூட்ட, Gym locker room-ல் hot sex வைத்தது போதாமல் அந்த இரவு அவினாஷின் அறையில் ரவியும் அவினாஷும் த்கட்ட திகட்ட காமத்தில் திளைக்கின்றனர்.

வெள்ளிகிழமை மாலை.. சூரியன் மறைய ஆரம்பிக்க அந்த இருட்டை நகரத்து சோடியம் வேப்பை விளக்குகள் விரட்ட ஆரம்பித்திருந்தன. Company Bus ரவியையும் அவினாஷையும் உதிர்த்துவிட்டு சாலை போக்குவரத்தில் தத்தி தத்தி நகர, அதைவிட மெதுவாக ரவியும் அவினாஷும் தங்கள் Apartment-க்கு போகும் சாலையில் கைகளை கோர்த்தபடி நடந்தார்கள். வீட்டில் Public Display of Affection (PDA) எனப்படும் கை கோர்த்துக்கொள்ளுதல், கட்டிப்பிடித்தல் போன்ற செயல்களை வெளிப்படையாக செய்யமுடியாது என்பதால் இப்படி சாலையில் கைகளை கோர்த்துக்கொண்டு நடக்கும் நேரத்தை குறைக்காமல் enjoy செய்துக்கொண்டு நடப்பது வழக்கம். Flat Compound-க்குள் நுழைந்ததும் இருவரும் 2 அடி இடைவெளி விட்டே நடந்தார்கள். வீட்டு வாசலில் ரவி Calling bell-ஐ அழுத்த, ஓரிரு நிமிடங்கள் கழித்து கதவு திறக்கப்பட்டது. பட்டுப்புடவை சரசரக்க ரூபா கதவை திறந்தாள்.

“புடவை மாத்திட்டு இருந்தேன்… அதனால லேட் ஆயிடுச்சு.. Sorry!” – ரூபா ரவி கேட்கும் முன்பே பதில் சொல்லிவிட்டு உள்ளே நடக்க, ரவியும் அவினாஷும் தளர்வாக வீட்டுக்குள்ளே நுழைய, அவினாஷ் கதவை சார்த்திவிட்டு ஷூவை கழற்றினான்.

“இன்னைக்கு அனிதா குழந்தைக்கு பர்த்டே… மறந்துட்டீங்களா?”

“இல்லை இல்லை… ஞாபகம் இருக்கு. சிவா நேத்திக்கே WhatsApp Group-ல reminder அனுப்பிட்டான்…” ரவி சட்டையை formal pant-ல் இருந்து tuck off/out செய்துக்கொண்டே பதில் சொன்னான். ரூபாவின் முகத்தில் கருமையும் ஒருவித கடுகடுப்பும் பரவ ஆரம்பித்ததை ரவி கவனிக்க தவறவில்லை.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ சில posts

“சரி! நான் போய் குளிச்சிட்டு வர்றேன்… அவி! Party-க்கு நீயும் வர்றியாடா?” – ரவி சட்டை பட்டன்களை கழற்றியபடி குரல் கொடுத்தான்.

“இல்லைங்கண்ணா… ஆளுங்க தெரியாத பார்ட்டியிலே பே பேன்னு இருக்குறது மாதிரி தண்டனை எனக்கு வேற இல்லை… நீங்க போயிட்டு வாங்க…”

“வா! பார்ட்டியிலே மத்தவங்களை introduce பண்ணி வைக்கிறேன்…”

“எதுக்கு! இவனும் கெட்டுப்போறதுக்கா?” காஃபி கலந்துக்கொண்டிருந்த ரூபா முனுமுனுத்தது ரவியின் காதுகளுக்கு விழுந்திருக்கலாம்.

மேலே படிக்கிறதுக்கு முன்னாடி random - ஆ ஒரு ஜாலி கேள்வி

உங்கள் gay sex partner உங்களை நண்பராக அங்கீகரிக்காமல் வெறும் sex-க்கு மட்டுமே பயன்படுத்துகிறார் என்று தோன்றுகிறது. என்ன செய்கிறீர்கள்?.

View Results

Loading ... Loading ...

ரூபா காஃபி கப்பை அவினாஷிடம் கொடுத்தபோது அவள் கடுப்பாக இருப்பதை அவினாஷால் உணர்முடிந்தது. பாத்ரூமில் ஷவர் திறக்கப்பட்ட சத்தத்தை உறுதி செய்துக்கொண்டு ரூபாவிடம் வந்து மெதுவான குரலில் “ஏங்க அண்ணி கோபமா இருக்கீங்க? அண்ணன் கூட ஏதாச்சும் சண்டையா? கதவை திறக்கிறப்போ கூட நல்லா தானே பேசிட்டு இருந்தீங்க?” என்று கேட்டான்.

“இந்த apartment-ல get together, party-ன்னாலே கடுப்பா இருக்கு… பார்ட்டி முடிஞ்சதும் கொஞ்ச பேர் பாட்டிலை திறந்துடுவாங்க… எந்த வீட்டுல விசேஷம்னாலும் அதை சொல்லிக்கிட்டு குடிக்க கும்பல் சேர்த்துடுவானுங்க… அந்த சிவா இருக்கானே.. அவன் தான் இங்கே தண்ணி சப்ளையர். ஏதாச்சும் காரணம் வச்சு தண்ணி பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ணிடுவான்… உங்க அண்ணனும் தண்ணியிலே நீச்சல் அடிச்சிட்டு நடக்க முடியாம தள்ளாடிட்டு வருவார்… எனக்கு ஏண்டா இப்படி பார்ட்டி வக்கிறாங்க, நம்மள கூப்பிடுறாங்கன்னு கோபமா வருது.. ஆனா நாம இருக்குறது apartment society-ல. மத்தவங்களை ஒதுக்கிக்கிட்டு நிம்மதியா இருந்துடமுடியுமா?” ரூபாவின் மூச்சு கோபத்தில் கொஞ்சம் வேகமாகவே வீசியது.

“என்னங்கண்ணி இதுக்கு போய் டென்ஷன் ஆயிட்டு… அண்ணன் என்ன எப்போ பார்த்தாலுமா தண்ணியடிக்கிறார்? எப்போவாச்சும் தானே? மிட்டு வளர வளர தானா விட்டுடுவார்… ரொம்ப ஆடுறவங்களுக்கு தான் ஆண்டவன் பொம்பள புள்ளைய குடுப்பான்… அடங்க சொல்லி”

“இல்லை அவி! எங்க மாமா ஒருத்தர் இப்படி தான் – social drinking-னு ஆரம்பிச்சார். அப்புற போக போக addict ஆகி, கடைசியிலே குடிச்சு குடிச்சே தானும் அழிஞ்சதும் இல்லாம சொத்தையும் அழிச்சு கடைசியிலே செத்துப்போனப்போ அவர் குடும்பமே நடுத்தெருவுலே நிக்கிற மாதிரி பண்ணிட்டார்.” லேசாக விசும்ப ஆரம்பித்த ரூபாவை அவினாஷ் தேற்றினான்.

சிறிது நேரத்தில் எல்லாம் மூவரும் வெளியேற வீட்டில் அமைதி குடியேறியது. அவினாஷ் டிவியில் இருந்த Netflix-ஐ திறந்து ஏதாச்சும் படம் பார்க்கலாமா என்று தேடினான். அவன் தேடியது போல ஒரு படம் மாட்டியதும் Sofa-வில் கால்களை நீட்டியபடி படம் பார்க்க ஆரம்பித்தான்.

எதிர்பார்த்தது போல இரண்டு-இரண்டரை மணி நேரத்தில் ரூபாவும், அரைத்தூக்கத்தில் மிட்டுவும் வீட்டுக்கு வந்தார்கள். ரூபா புடவை மாற்றிக்கொண்டு வரும்போது மிட்டு தூங்க ஆரம்பித்திருந்தாள். வெளியே வந்த ரூபா அடுப்பை பற்ற வைத்தாள்.

“என்னங்கண்ணி பண்றீங்க?”

“நாங்க party-லயே சாப்பிட்டாச்சு… உனக்கு டின்னர் பண்றேன்” – ரூபாவின் குரலில் களைப்பும் இயலாமையும் தூக்கலாக இருந்தது.

“வேணாம் அண்ணி.. நான் fridge-ல இருக்குற left overs-ஐ சூடு பண்ணி சாப்பிட்டுக்குறேன். நீங்க போய் தூங்குங்க..”

ரூபாவுக்கு ஓய்வை விட, ரவி தண்ணியடிக்க போய்விட்டான் என்கிற வருத்தத்தில் இருந்து தப்பிக்க ஒரு உறக்கம் தேவைப்பட்டது. “Good night அவி!” சொல்லிவிட்டு தன் அறைக்குள் மறைந்தாள். அவர்களது அறை விளக்கு அணைக்கப்பட்டது கதவிடுக்கில் இருந்த இருட்டில் தெரிந்தது.

சிறிது நேரத்தில் கதவு தட்டப்பட்டது. கதவை திறந்த அவினாஷுக்கு இன்ப அதிர்ச்சி. வாசலில் கையில் இருந்த பிரிக்கப்பட்ட Lays jumbo packet-ல் இருந்து ஒரு chips-ஐ எடுத்து கடித்தபடி ரவி நின்றிருந்தான். அவினாஷை பார்த்ததும் “எடுத்துக்கோ” என்பது போல Lays packet-டை அவினாஷிடம் நீட்டினான்.

ரவி உள்ளே வந்ததும் அவினாஷ் கதவை தாழ் போட்டுவிட்டு வந்தான். ரவி Sofa-வில் கால்களை விரித்து சரிந்து Lays Packet-டை மீண்டும் அவினாஷிடம் நீட்ட, அவினாஷ் சில சிப்ஸ்களை எடுத்துக்கொண்டு அவன் பக்கத்தில் உட்கார்ந்தான்.

“சரக்குக்குன்னு காசு குடுத்தாச்சு… இப்போ சரக்கடிக்கலை அதனால காசை திரும்ப குடுன்னு கேட்க முடியுமா? அதனால தான் பெரிய jumbo packet-ஆ பார்த்து தூக்கிட்டு வந்துட்டேன்” சத்தமாக சிரித்தான். ரவியின் சிரிப்பு அவ்வளவு அழகாக இருந்தது.

“ஏன் சரக்கடிக்கலை?” – அவினாஷ்.

ரவி அவினாஷின் கழுத்தில் கையை போட்டு இறுக்கி அவனை தன்னோடு சேர்த்து இழுத்தபடி “எனக்கு தனியா இருக்குற மாதிரி இருக்குறப்போ இப்படி தண்ணி பார்ட்டிக்கு போவேன். தண்ணியடிச்சிட்டு யார்கிட்டேயாச்சும் உளறிட்டு இருப்பேன். ஆனா இப்போ எனக்கு நீ இருக்கியே… இந்த நேரம் உன் கூட இருக்கனும்னு தோணுச்சு… உன் கூட spend பண்ற blissful moments-ஐ விட எனக்கு வேற பெரிய சந்தோஷம் இருக்கா என்ன? அதனால தான் எனக்கு சாராயம் வேணாம், அவினாஷோட இருக்குற நேரம் தான் வேணும்னு வந்துட்டேன்” ரவியின் சூடான் மூச்சுக்காற்று அவினாஷின் கன்னத்தில் அடிக்க, ரவியின் புடைத்த மூக்கு அவினாஷின் கன்னத்தில் அழுத்த, ரவியின் உதடுகள் ஒரு அழுத்தமான முத்தத்தை அவினாஷின் கன்னத்தில் வைத்தது.

அவினாஷ் ரவியின் கையை விலக்கி தன்னை விடுதலை செய்துக்கொண்டு “ரவிண்ணா… முதல்ல ரூமுக்கு போய் அண்ணிக்கிட்டே நீங்க தண்ணி அடிக்காம வீட்டுக்கு வந்துட்டீங்கங்கிறதை சொல்லுங்க… ரொம்ப சந்தோஷப்படுவாங்க…” அவினாஷ் ரவியை செல்லமாக தள்ள, ரவி எழுந்து போனான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Free Sitemap Generator
Scroll to Top